Posts

Showing posts from January, 2017

ரணில் என்னை கைது செய்வார் உடனே சோனிகள் ரணிலை புகழ்வார்கள்

இது கற்பனைதான்... அதில் படிப்பினையும் உண்டு... ஞானசேரர்- வணக்கம் ஜனாதிபதி மைத்ரி அவர்களே..! ஜனாதிபதி மைத்ரி- வணக்கம் சங்கைக்குறிய ஆமதுரு அவர்களே..! ஞான- உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.. ஜனா- உங்களை சந்திப்பதில் நானும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகின்றேன். ஞான- இரட்டிப்பு மகிழ்ச்சி என்று ஏன் கூறுகின்றீர்கள்...? ஜனா- என்னை பதவியில் அமர்த்துவதற்கு நீங்கள் செய்த உதவியை மறக்க முடியுமா அதனால் கூறினேன்.... ஞான- இல்லையே முஸ்லிம்கள்தான் உங்கள் ஆட்சியை கொண்டுவர உதவினார்கள் என்று கூறுகின்றார்களே... ஜனா- சிரித்துவிட்டு....அது உண்மை தெறியாதவர்கள் கதைக்கும் கதை... நீங்கள் இல்லையென்றால் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக எங்களுக்கு வாக்களித்து இருப்பார்களா? ஞான- உண்மைதான் அதனை நீங்கள் நன்றி உணர்வோடு கூறுவதை மனதார ஏற்றுக்கொள்கின்றேன்.... ஜனா- உண்மையில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயத்துக்கு, மஹிந்த அன்று நடவடிக்கை எடுத்து உங்களை கைது செய்திருந்தால், நாங்கள் இன்று ஆட்சிக்கட்டிலில் இருக்கமுடியுமா?  அதற்கு மஹிந்தவுக்கும் நன்றி சொல்லவேண்டும்போல உள்ளது... ஞான- நீங்கள் சொல்வது த

நான் நாறவும், மக்கள் முன் தூய்மையாக நடிப்போரை நாறடிக்கவும் தயார்.

உண்மைகள் வெல்வதுமில்லை தோற்பதுமில்லை அவை நிரூபிக்கப்படுகின்றன ------------------------------------ அஸ்ஸலாமு அலைக்கும்! கடந்த ஞாயிறு அன்று நான் கலந்து கொண்ட "அதிர்வு " நிகழ்ச்சியில் என்னால் கூறப்பட்ட ஒரு துளி உண்மையின் வரலாற்றைக் கூடத் தெரியாதவர்களும், வேண்டுமென்றே என்னை ஏச ஆசைப்படுபவர்களும், எலி வால் பிடிக்கும் கோமாளிகளும், பழைய- புதிய "மரம் கொத்திகளும் " உடனடியாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முகப்புத்தகத்தில் பதிவதை நிறுத்தி தங்கள் முகங்களைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் உங்கள் முகங்களில் அடுப்பங்கரைச் சீலைத் துண்டுகளைப்போர்த்திக் கொண்டு மூக்கைப் பொத்தியபடி ஊர்களை விட்டு ஓடி ஒளிய வேண்டி வரும் என்பதையும் மன வருத்தமின்றி கூறி வைக்கிறேன். எப்போது இந்த மக்கள் விரோத சக்திகளை "கட்சிக்குப் பாதுகாப்பான" தருணம் ஒன்றில் மக்கள் முன் அம்பலப் படுத்த வேண்டும் என்று நினைக்கத் தொடங்கினேனோ அன்று தொட்டு சேர்க்கப்பட்ட பட்டவர்தனமான ஆவணங்கள் என்னிடம் உண்டு. இஸ்லாமிய மார்க்கத்துக்கும், முஸ்லிம் சமூகத்துக்கும், தனித்துவக் கட்சிக்கும், தத்தமது

கட்டுநாயக்க - அக்கரைப்பற்று புதிய பஸ் சேவைகள் ஆரம்பம்

     (  மினுவாங்கொடை நிருபர் )    கட்டுநாயக்க - விமான நிலையத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு, இருவழி புதிய பஸ் சேவைகளை, இ.போ.ச. திவுலப்பிட்டி மற்றும் அக்கரைப்பற்று டிப்போக்கள் இணைந்து , ஜனவரி மாதம் முதல் ஆரம்பித்துள்ளன.    தினமும் காலை 6.30 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து புறப்படும் பஸ் வண்டி, மினுவாங்கொடை, நிட்டம்புவ, கேகாலை, மாவனல்லை, கண்டி, மஹியங்கனை, அம்பாறை, சம்மாந்துறை,  காரைதீவு வழியாக அக்கரைப்பற்றைச் சென்றடையும். இதே நேரம், மற்றுமொரு பஸ் வண்டி, காலை 6.45 மணிக்கு அக்கரைப்பற்றிலிருந்து புறப்பட்டு, இதே வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும்.    இதன் ஒரு வழிக் கட்டணமாக 590 ரூபா அறவிடப்படும் என்றும், முன் கூட்டியே ஆசனப் பதிவுகளை, கட்டுநாயக்க மற்றும் அக்கரைப்பற்று பஸ் நிலையங்களில்  மேற்கொள்ள முடியும் என்றும் அக்கரைப்பற்று டிப்போ அத்தியட்சகர் எம். ஏ. இர்ஷாத் தெரிவித்தார்.    வைபவ ரீதியாக அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட புதிய இப் பஸ் சேவைகளின் மூலம், கட்டுநாயக்க வர்த்தக வலய தொழிலாளர்கள்  மற்றும் விமான நிலையப் பயணிகள், அறுகம்பை உல்லாசப் பயணிகள், பல்கலைக் கழக மாணவர்கள்

அமைச்சர் ரிசாத் உலமா கட்சித்தலைவர் மூலம் மஹிந்தவிடம் தூது என்பது அபாண்டமான செய்தி.

Image
மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்துக்கு உலமா கட்சித்தலைவர் தனது கட்சி சார்பாகவே சென்றாரே தவிர இதற்கும் அமைச்சர் ரிசாதுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என  உலமா கட்சித்லைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் தருகையில் அவர் கூறியதாவது, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தன்னை மன்னித்துக்கொள்ளும்படி உலமா கட்சித்தலைவர் மூலம் சொல்லியனுப்பியதாக சிலர் குறிப்பிட்டுள்ளமை மிகப்பெரிய அபாண்டமாகும். இவ்வாறு மஹிந்த பற்றி எத்தகைய கருத்தையும் இன்று வரை என்னிடம் அமைச்சர் ரிசாத் பேசவேயில்லை என்பதை இறைவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன். உண்மையில்; அமைச்சர் ரிசாத் பதியுதீன் பண்பட்ட, நல்ல அரசியல் சிந்தனைத்தெளிவுள்ள அரசியல்வாதியாகும். உலமா கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் ஒரு கட்சியாக இணைந்து அதன் உயர் பீடத்தில் இருந்தாலும் தனியான கட்சி என்ற வகையில் தனி சுதந்திரத்தை எமக்கு வழங்கியுள்ளார். இன்று வரை அவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் போகும் படியோ போக வேண்டாம் என்றோ ஒரு வார்த்தையும் எம்மிடம் கூறாத அளவுக்கு எமது கட்சிக்குரிய இறைமையை அவர் மதிக்கின்றார். இப்படிப்பட்ட பண்பட்ட அரசியல்வா

ஜனாதிபதி மைத்திரியின் ஏறாவூர் விஜயம் ஒரு ஏமாற்று.

Image
பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஏறாவூர் முஸ்லிம் மக்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனா ஏறாவூருக்கு விஜயம் செய்வது அம்மக்களை அப்பட்டமாக ஏமாற்றும் நடவடிக்கையாகும் என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்ததாவது, மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய பிரதேசமாக ஏறாவூர் உள்ளது. புலிகள் காலத்தில் மிக மோசமாக உயிர் உடமை என பாதிக்கப்பட்ட ஊர் ஏறாவூர். பயங்கரவாதம் இல்லாமல் இருந்திருந்தால் அரசியல்வாதிகளின் உதவியின்றியே வளம் சிறக்கக்கூடிய ஊராக ஏறாவூர் இருந்தது.  இம்மக்கள் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அமோகமாக வாக்களித்து மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் கட்சியின் தலைவர் அமைச்சரவை அமைச்சர்  என பெற்றும் இன்னமும் குறிப்பிடக்கூடிய அபிவிருத்தி பெறவில்லை. ஒழுங்கான தரமான பாடசாலைக்கட்டிடங்கள் கூட இல்லாத நிலையில் உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிநிதியாக இருந்த மாகாண சுபைர் சுபைர் சில விடயங்களை ஏறாவூக்கு செய்தார். அவரது

அல் - அமான் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டிகள்

                 (  மினுவாங்கொடை நிருபர் )                   மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலய இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள், (31) செவ்வாய்க் கிழமை பிற்பகல் ஒரு மணி முதல், கல்லொழுவை - அழுத் மாவத்தை, முனாஸ் ஹாஜி விளையாட்டுத் திடலில், வித்தியாலய அதிபர் எம்.எச்.எம். காமில் தலைமையில் இடம்பெறவுள்ளது.                   இஸ்தான்புல் ( பச்சை ), குருதுபா ( நீலம் ), பக்தாத் ( சிவப்பு ) ஆகிய இல்லங்களுக்கு இடையில் நடைபெறவுள்ள இவ்வில்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில், மினுவாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. டப்ளியூ. ஆர். பெரேரா பிரதம அதிதியாகவும் மற்றும்  கல்வி அதிகாரிகள், கல்விமான்கள் பலர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.         ( ஐ. ஏ. காதிர் கான் )

மௌலவி ஆசிரியா்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வியமைச்சா் உறுதியளித்திருந்தாா்.

Image
அஷ்ரப் .ஏ  சமத்)  பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான்.  பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் மற்றும் கல்வியமைச்சருடன் அண்மையில் நான்  கலந்துரையாடும்போது 300க்கும் மேற்பட்ட மௌலவி ஆசிரியா்கள் வெற்றிடம் நிலவி வருவதாகவும் இறுதியாக 2008ஆம் ஆண்டுக்குப்பிறகு முஸ்லீம் பாடசாலைகளில் மாா்க்கக் கல்வியை போதிப்பதற்கு  மௌலவி ஆசிரியா்கள் இல்லாமை பற்றி சுட்டிக்காட்டினேன். .  அதற்காக உரிய பரீட்சையை நடாத்துவதற்கும் உரிய தகமை, புள்ளி அடிப்படையில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வியமைச்சா் உறுதியளித்திருந்தாா். என பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் தெரிவித்தாா்.  மேற்கண்டவாறு மருதானையில் உள்ள அல் ஹிதாய பாடசாலையின்  நடைபெற்ற அகதியா 30வது ஆண்டு விழாவின் போது உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான்  தெரிவித்தாா்.  கொழும்பு மத்திய பிரதேசத்தினை அண்டி வாழும் சிங்கள தமிழ் முஸ்லீம் பாடசாலைகளில் கற்கும் 500க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவ மாணவிகளது மாா்க்கப் பாடாசலையான  அகதியா பாடசாலையின் 30வது ஆண்டு விழா இன்று (29)ஆம் திகதி மருதானை அல்-ஹிதாய பாடசாலையின்   பஹருதீன் ஹாஜ

காணாமல் போனவர்களைக் கண்டறிய விசேட திட்டம் அவசியம்

Image
    காணாமல் போனவர்களைக் கண்டறிய விசேட திட்டம் அவசியம் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு  ++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++ கடந்த காலங்களில் காணால் போனவர்களைக் கண்டறிய அரசு விசேட திட்டமொன்றை வகுக்க வேண்டும் என்பதுடன், காணாமல்போனவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டினைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-  யுத்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் - காணாமல்போயுள்ளனர். இவர்கள் தொடர்பில் நேர்மையான விசாரணைகளோ – தீர்மாங்களோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை.  அந்தக் குடும்பங்கள் தமது உறவுகள் இன்று வருவார்கள் - நாளை வருவார்கள் என்ற நம்பிக்கையுடனே வாழ்ந்து வருகின்றனர். காணாமல்போன பிள்ளையை நினைத்து தாயும், கணவனை நினைத்து மனைவியும், தந்தையை நினைத்து பிள்ளைகளும் ஏங்கிக் கத

விவசாய நடவடிக்கைகளில் நவீன உத்திகளைப் பயன்படுத்திமலர்ச்சியை ஏற்படுத்துவோம் - மன்னார் களஞ்சியசாலைத் திறப்புவிழாவில் அமைச்சர் ரிஷாட்.

Image
( அமைச்சின் ஊடகப்பிரிவு) விவசாய நடவடிக்கைகளிலே நவீன உத்திகளைப் புகுத்தி அந்தத் தொழிலை பாரிய இலாபமீட்டும் தொழிலாக மாற்றியமைப்பதே நல்லாட்சி அரசின் நொக்கமாகுமென்றும் அதற்காகவே அரசாங்கம் புதிய திட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். மன்னார் நானாட்டனில் நிதி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்க   தானியக் களஞ்சியத்தை நிதி அமைச்சர் ரவிகருணாயக்க இன்று மாலை ( 26. 01. 2017) திறந்து வைத்த நிகழ்வில் இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். சார்ள்ஸ் நிர்மலநாதன் எம் பி , அரசாங்க அதிபர் , கிராமிய அபிவிருத்தி வங்கித் தலைவர் உட்பட அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் இகலந்துகொண்டனர் விவசாயிகளின் வாழக் ; கையிலே வசந்தத்தை ஏற்படுத்தி அவர்களை வளமுள்ளவர்களாகவும் பலமுள்ளவர்களாகவும் மாற்றுவதற்காகவே இவ்வாறான ஒரு வேலைத் திட்டத்தை நாம் மன்னாரிலே ஆரம்பித்துள்ளோம். நெல்லுற்பத்தியிலே முன்னணி வகிக்கும் மன்னார் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் படுகின்ற அவஸ்தைகளையும் கஸ்டங்களையும் கடந்த காலங்களிலே அமைச்சரவைக் கூட்டங்களிலும் , பாராளுமன்றத்திலும்

காத்தான்குடி மண்ணின் முதல் சட்டக்கல்லூரி மாணவி பாத்திமா சிப்னா சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்

Image
இலங்கை சட்டக்கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடியின் முதலாவது பெண் என்ற பெருமைக்குரிய மொஹமட் காசிம் பாத்திமா சிப்னா, இன்று வியாழக்கிழமை சட்டத்தரணியாக உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.  காத்தான்குடி மூன்றைச் சேர்ந்த  மர்ஹ{ம் மொஹமட் காசிம் மற்றும் சல்மா பீவியின் புதல்வியான பாத்திமா சிப்னா 2013ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று சட்டக்கல்லூரிக்கு தெரிவாகியிருந்தார். இதன் மூலம் சட்டக்கல்லூரிக்கு காத்தான்குடியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் என்ற சாதனையும் - பெருமையும் பெற்றுக்கொண்டார்.  இன்று வியாழக்கிழமை கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வில், உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் முன்னிலையில் பாத்திமா சிப்னா சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் காத்தான்குடி ஹிழ்ரியா வித்தியாலயம், காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயம் மற்றும் காத்தான்குடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

கால் நடைகளின் நலன் பேணும் குழுவொன்றை அமைக்க அமைச்சர் முஸ்தபா கவனம்.

கால் நடைகளின்  நலன் பேணும் குழுவொன்றை அமைக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பயிஸர் முஸ்தபா அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று அமைச்சின் கேற்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். இக்கூட்டம் தெருநாய்கள் குறித்த வேலைத்திட்டம் ஒன்றினை திட்டமிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு , மாகாண சபை மற்றும் சம்மந்தப்பட்ட நிலதாரிகள் உள்ளடங்களாக குறித்த குழுவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொது மக்கள் மற்றும் கால் நடைகளின் நலன் பேணும் அமைப்புக்களின் கருத்துக்களை பெற்று குறித்த குழுவுக்கான பொறுப்புக்கள் பகிந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவும் பாடசாலை , வைத்தியசாலை , பஸ் தரிப்பிடங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அருகாமையில் நடமாடும் தெரு நாய்களினால் பொது மக்கள் அன்றாடம் பெரும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தினமும் உள்ளூராட்சி நிருவனங்களுக்கு முறைப்பாடுகள் வந்த வண்ணம் உள்ளன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பயிஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். குறித

மகிந்தவிடம் தோற்ற மைத்திரி

நல்லாட்சி அரசிலும் ஊழல் - ஆய்வில் தகவல், மகிந்தவிடம் தோற்ற மைத்திரி (விபரம் இணைப்பு) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் ஊழல்களை விட இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தான் அதிகம் என டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் மூலம் வெளிவந்துள்ளது. 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016ஆம் ஆண்டில் இலங்கையில் ஊழல் அதிகரித்துள்ளதாக டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. இப்புள்ளி விபரங்களின் படி, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை என டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி காலத்தில் உலக ஊழல் தரவில் 2014 ஆம் ஆண்டில் 175 நாடுகளுக்குள் இலங்கைக்கு 85 ஆவது இடத்தில் இருந்தது. எனினும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பொறுப்பேற்ற 2015 ஆம் ஆண்டில் 168 நாடுகளுக்குள் இலங்கைக்கு 83ஆவது இடமும் 2016 ஆம் ஆண்டில்

அனைத்து ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளதாக ஆலோசனை

2017 ஆம் ஆண்டு நிறைவுக்குள் இலங்கையின் அனைத்து ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் விசேட ஆலோசனையொன்றை முன்வைத்துள்ளார். அதன்படி 2018 ஆம் ஆண்டுக்கு முன்னராக சகல ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்பட்டு கல்வித்துறையில் பாரிய பயன் தரும் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இலங்கையில் தற்போதளவில் 1,093 பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரிய சேவையில் உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் 1,177 பட்டதாரி பயிலுனர்களை ஆரம்பக்கல்வி ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்றவர்களை வெற்றிடங்கள் அடிப்படையில் நியமனம் வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் மொழி மூலமான விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 3,482 ஓய்வுபெற்ற ஆசிரியர்களை சேவையில் சேர்த்துக் கொள்ளவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆசிரியர் ஆலோசகர்களுக்க

பொத்தானை பிரதேச பள்ளவாசல் - அரசும் ரஊப் ஹக்கீமும் இணைந்து மேற்கொள்ளும் ஏமாற்று நடவடிக்கை

பொத்தானை பிரதேச பள்ளவாசல் தொல்பொருள் திணைக்களத்துக்குரியதென்ற  முடிவை நீக்காமல் பள்ளிவாசலுக்கு வெளியார் செல்லும் தடையையும், பெயர் பலகையையும் மட்டும் நீக்குவதாக கூறுவது முஸ்லிம் காங்கிரசும்; தொல் பொருள்; திணைக்களமும் இணைந்து முஸ்லிம் மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்ததாவது, இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் முஸ்லிம் விரோத போக்கை கடைப்பிடிக்கிறது என்பதை கட்சி என்ற வகையில் உலமா கட்சி மட்டுமே பேசி வருகிறது. முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயங்களுக்கெதிராக உலமா கட்சி குரல் கொடுப்பதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் கொஞ்சமாவது சமூகம் பற்றி அக்கறை கொள்கின்றனர். இந்த வகையில் பொத்தானை பள்ளிவாயல் தொல்பொருள் திணைக்களத்துக்குரியது என அரசு பொதுபலசேனாவின் ஆலோசனையை பெற்று அறிவித்த போது அதனை பகிரங்கமாக கண்டித்த ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சியாகும். அதன் பின் மேற்படி பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த ரஊப் ஹக்கீம் விரைவில் மேற்படி பள்ளிவாயல் தொல்பொருள் திணைக்களத்திலிருந்து விடுவித்து தரப்படும்

இரணமடு பாலத்தை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் பைஸர் முஸ்தபா

இரணமடு பாலத்தை நேரில் சென்று பார்வையிட்ட  அமைச்சர் பைஸர் முஸ்தபா ( ஐ. ஏ. காதிர் கான் ) ஜனாதிபதி பதவியேற்று, இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள 2017 ஜனவரி 8 ஆம் திகதி முதல், பெப்ரவரி முதலாம் திகதி வரை, நாடளாவிய ரீதியில் பாரிய அபிவிருத்தித் திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வட மாகாண அபிவிருத்தித் திட்டப் பணிகள்,  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தலைமையில், 19 ஆம் திகதி வவுனியாவிலும், 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  வட மாகாண அபிவிருத்தித் திட்டப் பணிகளின் ஒரு அங்கமாக, இரணமடு பிரதேசத்தில் 40 மில்லியன் ரூபா செலவில்  அமைக்கப்பட்டு, தற்போது பூர்த்தியாகும் நிலையிலுள்ள பாரிய பாலத்தின் நிர்மாணப் பணிகளையும் அமைச்சர் நேரில் சென்று  பார்வையிட்டதுடன், பாலத்தின் ஆரம்ப நுழை வாயிலையும் சம்பிரதாயப்  பூர்வமாகத் திறந்து வைத்தார். பாலத்தின் எஞ்சிய வேலைகளைத் துரிதமாக முடிக்குமாறும் அமைச்சர்  அதிகாரிகளையும் பொறியியலாளர்களையும் பணித்தார். இதன்போது, இரணமடு நீர்ப்பாசனத் திட்டத்தின் பணிகளையும் அதிகாரிகள

ஜம்மியத்துல் உலமா பொதுபல சேனா பதில்

சிங்கள் கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா, இஸ்லாம் குறித்து பல கேள்விகளை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிடம் முன்வைத்திருந்தது. ஜம்மியத்துல் உலமா குறிப்பாக சிங்கள சகோதரர்கள் சகலரும் பார்க்கும் வகையில், தமது பதிலை சிங்கள மொழியில்  இணையத்தில் பகிரங்கமாக பதிவேற்றியுள்ளது. கீழ்வரும் லிங்கில் அதனை காணலாம்..! http://acju.lk/published/item/936-compilation-of-responses-to-the-baseless-allegations-towards-islam#

பிரித்தானியரால் தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்ட ஏழு முஸ்லிம்களையும் சுதந்திர வீரர்களாக பிரகடனப்படுத்துக!

Image
ஜனாதிபதியிடம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை   ++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++ பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக செயற்பட்ட காரணத்தினால் 1804ஆம் ஆண்டு தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்ட 7 முஸ்லிம்களையும், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய முஸ்லிம் தலைவர்கள் என வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எஎம்.ஹிஸ்புல்லாஹ் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.  பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக ஊவா, வெல்லஸ்ஸ பகுதிகளில் கிளர்ச்சி செய்த சிங்கள தலைவர்கள் 19 பேர் 1818 ஆம் ஆண்டு தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாசவின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவர்களுக்கு எதிரான பிரகடனம் ரத்து செய்யப்பட்டு போர்வீரர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.  இந்நிலையில், தேசத்துரோகிகளாக பிரித்தானிய ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ள 7 முஸ்லிம்களையும் தேசிய

ந‌ல்லாட்சிக்கு ஆத‌ர‌வ‌ளித்து ஏமாந்த‌ ஜேவிபி ஒப்பாரி.

2020ஆம் ஆண்டுக்கு முன்னர், சரியான வாய்ப்பொன்று கிடைக்குமாயின், தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குத் தயாராக உள்ளோம் என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மஹரகமையில், ஆரம்பிக்கப்பட்ட ஊக்குவிப்புச் சங்கத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, “மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு, பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு, நீதித்துறை ஆகியன  தண்டனை வழங்காவிடில், மக்களே தண்டனையை வழங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகங்களிலிருந்து மோசடிகள் துடைத்தெரியப்படல் வேண்டும். இது, எதிர்வரும் 2020ஆம் ஆண்டளவில் இடம்பெறவுள்ள தேர்தலுக்கு முன்னர் செய்யப்படுதல் வேண்டும். எவ்வாறாயினும், அதற்கு முன்னரும் இதைச் செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம். இந்த ஆட்சி, விரைவில் செல்வாக்கற்றுப் போகவுள்ளது. இது, மைத்திரிக்கோ ரணிலுக்கோ உள்ள பிரச்சினை கிடையாது. நாட்டின் சமூக முறைமை கீழிறங்கிப் போவதை, இது பிரதிபலிக்கின்றது. இது, இலங்கை அரசியலின் விதிமுறையாகும். மக்கள், இந்த நிலைமைக்கு முகங்கொடுத்தேயாக வேண்டும்” என்று,

எல்லை நிர்ணய அறிக்கை தயாரித்து முடிக்கும் வரை தூங்கிய அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் ரஊப் ஹக்கீம்

Image
எல்லை நிர்ணய அறிக்கை தயாரித்து முடிக்கும் வரை தூங்கிவிட்டு இப்போது மேற்படி அறிக்கையின் அடிப்படையில் உடனடி தேர்தல் நடத்துவது ஜனநாயக விரோதம் என  சில சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளமை உள்ளுராட்சி தேர்தலை நடத்தாமல் தொடர்ந்தும் இழுத்தடிக்கும் அரசாங்கத்தின்; ஜனநாயக விரோத போக்குக்கு விலை போவதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். இது சம்பந்தமாக ஊடகவியலாளரின் கேள்விக்கு அவர் மேலும் கூறுகையில், இந்த அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கு பயந்து அதற்கு சாட்டாக எல்லை நிர்ணய அறிக்கை தயாரிப்பதில் பலத்த சிக்கல்கள் உள்ளதாக தொடர்ந்து சொல்லி வந்தது. பின்னர் எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும் மிக விரைவில் அது அரசின் கையில் கிடைத்து விடும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தது. இந்த வேளைகளில் இது பற்றி காத்திரமான நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்த அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் ரஊப் ஹக்கீம் போன்றோர் தலைமையிலான சிறுபான்மை கட்சிகள், தற்போது எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் கையில் ஒப்பiடைக்கப்பட்ட பின் அருண்டெழுந்தவர்கள் போல் மேற்படி எல்லை நி

சாய்ந்தாமருதில் வீழ்ச்சியுற்றுள்ள கல்விநிலையை சீர்செய்ய அறைகூவல் விடுக்கிறார் ஹரீஸ்!!!

Image
-எம்.வை.அமீர் - ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது சாய்ந்தமருதின் கல்விநிலையானது பின்னோக்கிச் செல்வதாகவும் மிகவும் ஆபத்தான இவ்வாறானதொரு நிலையை சீர்செய்ய அனைவரும் இணைந்து செயற்பட ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுப்பதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். யஹ்யாகான் பௌண்டேசனின் ஏற்பாட்டில்  கடந்த  2016  ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் தேர்ச்சியுற்ற சாய்ந்தமருதைச் சேர்ந்த மாணவர்களை கௌரவித்து அம்மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஊக்குவிப்புப் பணம் வழங்கும் நிகழ்வும் சாய்ந்தமருது கல்விக்கோட்டத்துக்குள் கல்வியைத் தொடர உதவி தேவையுடைய மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வும் யஹ்யாகான் பௌண்டேசனின் ஆயுட்காலத் தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான  ஏ.சி. யஹ்யாகான் தலைமையில்  2017-01-21  ஆம் திகதி சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம

பாவனையாளர் அதிகார சபையில் 62 பேருக்கு அமைச்சர் றிஷாட் நியமனம்.

Image
சுஐப் எம் காசிம் மக்களின் நன்மை கருதி பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகளை மேலும் வலுவூட்டுவதற்கான பல்வேறு திட் டங்களை மேற்கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இவற்றின் ; மூலம் முழுமையான பயன் கிடைக்குமெனவும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள 62 பரிசோதகர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவம் இன்று காலை (2017.01.21) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சிந்தக்க எஸ் லொக்குஹெட்டி , அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன , பணிப்பாளர் நாயகம் ஜீவானந்த உட் ; பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் மேலும் கூறியதாவது அரசாங்கத் தொழில் கிடைத்து விட்டால் நமக்கு நிம்மதி. சொகுசாக இருந்து வாழ முடியும் என சிலர் எண்ணுகின்றனர். தொழில் கிடைத்ததிலிருந்து ஓய்வு பெறும்வரை இப்படியே சமாளித்து விட்டு பின்னர் பென்சன் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாமென்ற மனோபாவம் சிலரிடம் மேலோங்கியிருக்கின்றது. இன்னுமொரு சாரார்