அலப்போ முஸ்லிம்களுக்காக நாம் பிரார்த்திக்க வேண்டும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 

சிரியாவின் அலப்போ பிராந்தியத்தில் உக்கிரம் அடைந்துள்ள போரில் சிக்கித்தவிக்கும் மக்களையும் குறிப்பாக குழந்தைகைளையும் பார்க்கும் போது வேதனை தாங்க முடியவில்லை என மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டிலிருந்து உள்நாட்டுப்போரினால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான அலப்போ மக்களுக்கு இந்த துயர சம்பவத்தில் நாம் நமது பிரார்த்தனைகளின் மூலம் நிச்சயம் பங்கெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முஸ்லிம்களாகிய நாம் ஐவேளை தொழுகையிலும் குறிப்பாக தஹஜ்ஜுத் தொழுகையிலும் இச் சம்பவங்களை தாங்கும் மனதையும், இவ் யுத்தத்தை எதிர்கொள்ளும் தைரியத்தையும், மரணித்தவர்களுக்கு ஷுஹதாக்களின் அந்தஸ்தும் வழங்க இறைவனிடம் இரு கரமேந்தி அம்மக்களுக்காக நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் இரஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்