அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் ஞானசார தேரரும், அம்பிட்டிய சுமணரத்தின விகாராதிபதியும் மட்டக்களப்பில்

அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும்
ஞானசார தேரரும், அம்பிட்டிய சுமணரத்தின விகாராதிபதியும் மட்டக்களப்பில் முக்கிய கலந்துரையாடல்
%%%%%%%%%%%%%%%%%%%
இன்று காலை மட்டக்களப்பு மங்களராமய விகாரையில், அமைச்சர் விஜேதாசவும், ஞானசார தேரரும், சுமணரத்தின தேரரும் கூட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
இக்கூட்டத்தில் கிழக்கில் வாழும் சிங்கள சமூகத்தின் முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.
வடகிழக்கில் சிங்கள மக்கள் சிறுபான்மையினராக வாழ்கிறார்கள். இச்சிறுபான்மையிரின் மீறப்படும் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான குரலை எழுப்ப வேண்டும் என கூட்டத்தில் முடிவடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்கள் சிறுபான்மையாக வாழ்வதாகவும், அவர்கள் தமக்கு உரிமைகள் தேவை எனவும் குரல் கொடுத்து செயல்படுவதைப் போல நாமும் வடகிழக்கில் செயல்பட வேண்டும் என அங்கு பேசப்பட்டுள்ளது. விசேடமாக மட்டக்களப்பில் சிங்களவர் மிகச் சிறுபான்மையாக வாழ்கிறார்கள், இவர்களின் உரிமைக் குரலாகவே சுமணரத்தின தேரர் இயங்குகிறார்,அவர் இனவாதம் பேசவில்லை என்று அமைச்சராலும், ஞானசார தேரராலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ் காலத்தின் தேவை கருதி, சிங்கள பௌத்த பேரரசியல் சக்திகளும், பெருமத சக்திகளும் இணைந்து அவர்களுக்கு சாதகமான ஒரு புதிய வியூகத்தை ஏற்படுத்தி செயல்படத் தொடங்கிவிட்டனர் எனத் தெரிகிறது.
சுதந்திரத்துக்கு பிற்பட்ட இலங்கையில், தேசத்தின் நலன் என்பது பெருந்தேசிய நலன்தான் என்று முக்கால் நூற்றாண்டுகளாக செயற்பட்டு வருகிற சிங்கள மேலாதிக்க சிந்தனையில் இந்த நவீன காலத்திலும் மாற்றமேற்பட வழியே இல்லை என தீர்மானம் எடுக்கவேண்டியுள்ளது.

Basheer Segu Dawood

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்