ஜ‌னாதிப‌தி செய‌ல‌க‌ம் ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும்.

ம‌த‌குருக்க‌ளுட‌னான‌ ஜ‌னாதிப‌தியின் ச‌ந்திப்பின் போது இஸ்லாமிய‌ ம‌த‌த்தின் சார்பில் மௌல‌வி அல்லாத‌ பொது ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொண்ட‌மையும் ப‌ல‌ வ‌ழ‌க்குக‌ளை க‌ண்டுள்ள‌ பௌத்த‌ம‌த‌ தேர‌ரையும் இணைத்துக்கொண்ட‌மை ந‌ல்லாட்சியின் மிக‌ மோச‌மான‌ வ‌ர‌லாற்றுத்துரோக‌மாகும் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ள‌தாவ‌து

ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ ஆட்சிக்கால‌த்தில் ஞான‌சார‌ என்ப‌வ‌ர் எவ்வ‌ள‌வோ துள்ளிக்குதித்தார். ஆனால் ம‌ஹிந்த‌ அவ‌ரையோ அவ‌ர‌து கோரிக்கைக‌ளையோ க‌ண‌க்கில் எடுக்க‌வில்லை. ஜ‌னாதிப‌தி மாளிகையில் ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ளுடன் ப‌ல‌ ச‌ந்திப்புக்க‌ள் இட‌ம் பெற்றுள்ள‌ன‌. இவை எதிலும் ஞான‌சார‌ ம‌த‌ குருக்க‌ளுக்கு ச‌ரி ச‌ம‌மாய் அழைக்க‌ப்ப‌ட‌வில்லை.
ஆனால் இந்த‌ அர‌சு அவ‌ரை த‌லையில் தூக்கி வைத்திருப்ப‌த‌ன் மூல‌ம் ஞான‌சார‌வுக்கு பின்னால் மைத்ரியும் ர‌ணிலும் இருக்கிறார்க‌ள் என்ற‌ எம‌து நீண்ட‌ கால‌ ச‌ந்தேக‌த்துக்கு வ‌லுச்சேர்க்கிற‌து.

அத்தோடு ஜ‌னாதிப‌தியுட‌னான‌ ம‌த‌த்த‌லைவ‌ர்க‌ளுட‌னான‌ ச‌ந்திப்புக்கு இஸ்லாமிய‌ ம‌த‌ குருக்க‌ளை ஏற்பாடு செய்யும்ப‌டி ஜ‌னாதிப‌தி செய‌ல‌க‌ம் முஸ்லிம் ச‌ம‌ய‌ க‌லாசார‌ அமைச்சிட‌ம் வின‌விய‌ போது மௌல‌வி அல்லாதோரையும் மேற்ப‌டி அமைச்சு நிய‌மித்த‌மை மூல‌ம் முஸ்லிம் ச‌ம‌ய‌ அமைச்ச‌ருக்கு மௌல‌விமார் என்றால் யார் என்று தெரிய‌வில்லையா என‌ கேட்கிறோம். சூறா ச‌பைத்த‌லைவ‌ர் ஒரு மௌல‌வி அல்ல‌. தொப்பி தாடி வைத்த‌வ‌ரெல்லாம் ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ள் என‌ மேற்ப‌டி அமைச்சு எண்ணிக்கொண்டிருக்கிற‌தா?

ஆக‌வே இது விட‌ய‌த்தில் ஜ‌னாதிப‌தி செய‌ல‌க‌ம் ம‌த‌ குருமாருட‌ன் இன‌வாதியை அழைத்த‌மை அனைத்து ம‌த‌ குருமாரையும் புண்ப‌டுத்துவ‌தாக‌ அமைவ‌தால் இத‌ற்காக‌ ஜ‌னாதிப‌தி செய‌ல‌க‌ம் ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும். அதே போல் மௌல‌விமார்க‌ளுக்கு ப‌திலாக‌ பொது ம‌க்க‌ளை போலியாக‌ அனுப்பி வைத்த‌மைக்காக‌ முஸ்லிம் ச‌ம‌ய‌ க‌லாசார‌ அமைப்பும் ம‌ன்னிப்பு கோர‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுக்கிற‌து.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்