Skip to main content

தோணா. முஸ்லிம் காங்கிரசினரின் ஏமாற்று வயிற்றுப்பிழைப்பு

சாய்ந்தமருது தோணா அபிவிருத்திப்பணி ஆரம்பமும் சந்தேகங்களும்!.....
-எம்.வை.அமீர்.-
தோணா, சிலருக்கு சோகம், பலருக்கு அரசியல், இதைவைத்து தொழில் செய்வோருக்கு தொழில், தாங்கள் மட்டுமே சுத்தமாக இருக்க வேண்டும் என்று இருப்போருக்கு இது குப்பைத்தொட்டி, மழைகாலங்களில் ஊர் நீரில் மூழ்காமல் இருக்க சிறந்த வடிகான், எல்லாவற்ரையும் விட கடந்த சுனாமி பேரலையின்போது ஊரில் ஒருசொட்டுத்தண்ணி இல்லாது கடல்நீரை வெளியேற்ற உதவிய முக்கிய நீரோடை.
நிந்தவூர் காரைதீவில் ஆரம்பித்து காரைதீவு மாளிகைக்காட்டை ஊடறுத்து சாய்ந்தமருது முகத்துவாரத்தினூடாக கடலை வந்தடையும் தோணாவின் அபிவிருத்தி என்பது, இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல தனிநபர்கள், உள்ளூர் சரவதேச தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரச நிதி என காலத்துக்குக்காலம் பல்வேறு ரூபங்களில் பணம் செலவழிக்கப்பட்டு பாதியில் விடப்பட்டது மட்டும்தான் இதுவரை நடந்துள்ள விடயங்களாகும்.
சாய்ந்தமருதுக்கு அபிவிருத்தி என்ற பட்டியல் எவ்வளவோ இருக்கின்ற போதிலும் அவைகளில் முக்கியமானதொரு அபிவிருத்தியான தோணாவின் பெயரால் திட்டமிடப்படாத வேலைத்திட்டங்களினால் தொடர்ந்தும் மக்களது வரிப்பணம் செலவிடப்படுவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். அண்மையில் கூட 30 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டன. இப்போதும் 162. மில்லியன் ரூபாய்கள் செலவிட.........
DECISIONS TAKEN BY THE CABINET OF MINISTERS AT ITS MEETING HELD ON 11-10-2016
07.    Control of floods and environmental pollution in Sainthamaruthu Divisional Secretary's Division in Kalmunai     (Document No – 18)
Residents in Sainthamaruthu Divisional Secretary's Division in Ampara District are affected by the floods in the lagoon annually. Absence of proper drains, some aquatic plants obstructing the flow of water, and waste disposal around the lagoon by residents have caused this situation. Accordingly, the proposal made by Hon. Rauff Hakeem, Minister of City Planning and Water Supply, to construct a barrier around the lagoon at an estimated cost of Rs. 162 million as a measure to these issues benefiting more than 10,000 people of 2,700 families, was approved by the Cabinet of Ministers.
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இப்போது குறித்த அபிவிருத்திப்பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வேலைத்திட்டங்களை முன்பு 30 மில்லியன்களைக் கொண்டு செலவுசெய்த இலங்கை காணி மீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (SLLDRC) பெற்றுள்ளதாகவும் அவர்கள் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கிவிட்டு கண்காணிப்புப்பணிகளை மட்டும் செய்வதாகவும் பேசப்படுகின்றன.
அபிவிருத்திகள் தொடரப்பட வேண்டும் அது வெளிப்படைத்தன்மையுடையதாக இருக்கவேண்டும் என்பது நடுநிலையாளர்களர்களது எதிர்பார்ப்பு. இதன் எதிரொலியாக சாய்ந்தமருது பொறியியலாளர் போரம் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய குழு ஒன்று 2016-12-17 அன்று சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளருடனான சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியது. குறித்த சந்திப்பின்போது இலங்கை காணி மீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் தோணா அபிவிருத்தித் திட்டங்களை கண்காணிக்கும் பொறியலாளர்களும் பங்குகொண்டிருந்தனர். அவர்களிடமிருந்தும்  தகவல்கள பெறப்பட்டன.
அபிவிருத்தியின் பெயரால் மக்களோ அல்லத்து இப்பிராந்தியமோ ஏமாற்றப்படுவதும், மக்களது வரிப்பணம் வீனடிக்கப்படுவதும் தடுக்கப்பட்டு எதிர்காலத்திலாவது வேலைத்திட்டங்கள் சரியானமுறையில் திட்டமிடப்பட்டு மேற்கோள்ளப்பட வேண்டும் என்பதே சாய்ந்தமருது பொறியியலாளர் போரம் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய குழுவின் பிரதான கோரிக்கையாக இருந்தது.
ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விளக்கங்களை கேட்டறியும் சந்திப்பு ஒன்றுக்கு சாய்ந்தமருது பொறியியலாளர் போரம் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய குழு பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபாவிடம் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்தே மேற்படி சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வின்போது சாய்ந்தமருதின் முன்னாள் பிரதேச செயலாளரும் தற்போதைய சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீமும் பங்குகொண்டு குறித்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் தான் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபாவின் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது பல்வேறு கருத்துப் பரிமாறல்களும் திருத்தங்களும் குறித்த ஒதுக்கீட்டுக்குள் இன்னும் பல திட்டங்களை முன்வைக்கமுடியும் என்ற ஆதங்கங்களும் முன்வைக்கப்பட்டன. குறுகிய கால இச்சந்திப்பின்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மெருகூட்டும் பொருட்டு வெளிப்படைத்தன்மையுடன் அபிவிருத்தித் திட்டங்களுக்கான திட்ட வரைபடங்களைப் பெற்று எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கு சாய்ந்தமருது பொறியியலாளர் போரம் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய குழு தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர அபிவிருத்தி, மற்றும் நீர்ப்பாசனம், நீர்விநியோக அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவர், அத்துடன் அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தியை மேற்கொள்ளும் இலங்கை காணி மீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளையும் சந்தித்து தங்களது தரப்பு நியாயங்களையும் முன்வைப்பது என்றும் தேவைப்படும் பட்சத்தில் சாய்ந்தமருது பொறியியலாளர் போரம் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய குழுவினரும் திட்டமிடல் பணிகளுக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

நிகழ்வின்போது குறித்த தோணா அபிவிருத்தித் திட்டத்தினை கடந்தகாலங்களில் திட்டமிட கல்முனை மாநகரசபையினூடாக பல முயற்சிகளை எடுத்திருந்த பொறியலாளர் ஏ.ஜெ.ஏ.எச்.ஜவ்ஸி, பொறியலாளர் அஸ்லாம் ஸஜா பொறியலாளர் எம்.சி.கே.நிஷாத், பொறியலாளர் எஸ்.எல்.ஏ.சாஜித், பொறியலாளர் எம்.எப்.மஹ்சூம், பொறியலாளர் எம்.எம்.எம்.ஏ.பாயிக், வைத்திய கலாநிதி என்.ஆரிப், உதவி திட்டமிடல் உத்தியோகத்தர் எம்.ஜௌபர், நிருவாக உத்தியோகத்தர் எம்.ரி. வாஹித், சாய்ந்தமருது சூறா சபையின் சார்பில் என்.நஹீம்,ஏ.சி.முஹம்மட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்புக்கு மேலதிகமாக சாய்ந்தமருது தோணாவுக்கு அருகில் வசிக்கும் சிலரிடம் வினவியபோது ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டமானது இம்முறையாவது முழுமைபெறவேண்டும் என்றும், குறித்த பணிகளுக்கு தங்களாலான உதவிகளையும் ஒத்துழைப்பு வழங்கவும் தயாராய் இருப்பதாகவும் குறிப்பிட்டதுடன் வேலைத்திட்டத்தை இலகுபடுத்த சாய்ந்தமருது, மாளிகைக்காடு பாலத்துக்கு அருகில் தற்காலிக தடுப்பு ஒன்றை அமைத்து வயல்களில் இருந்து வரும் வடிச்சல் நீரை காரைதீவு முகத்துவாரம் ஊடாக கடலுக்கு செலுத்த முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டதுடன் தோணா அபிவிருத்தித் திட்டத்துக்காக பாரிய நிதி ஒதுக்கீட்டினை செய்துதந்த  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர அபிவிருத்தி, மற்றும் நீர்ப்பாசனம், நீர்விநியோக அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் தலைவரால் பலமுறை வாக்களிக்கப்பட்டதுபோல் அமைச்சர் தனது நேரடி கவனத்தை குறித்த திட்டத்துக்கு செலுத்தி, வேலைத்திட்டம் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட தனது முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும்  என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுகின்றன.

 

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

 தொடர்ந்தும் அங்கு பேசும் போது,

கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்தியுடன…

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

The Founder President of Sri Lanka’s Confederation of Micro, Small and Medium Industries (COSMI) has been appointed as the Co-Chairperson of theLondon based Global Peace Institute (GPI)which conducts interdisciplinary research in several thematic fields including international relations and politics. By this high profile appointment made on 15 January, GPI seeks COSMI Founder President Nawaz Rajabdeen’s contributions to improve its training and research efforts. GPI is a think tank run by the UK based Global Peace Ins. (GPI) CIC, an independent non-profit, non-governmental organization. GPI works for global peace and resilience through peace education, dialogue, training, creating awareness and research. COSMI Founder President Rajabdeen, as an honorary member, is also tasked by GPI to promote its programs, add value to research work, and also will be required to attend various GPI events. “I am thankful to GPI for enlisting me for their ongoing and vast efforts” said COSMI Founder Pres…

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சிறுபான்மையினரின் வாக்குகளே
பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் !

சஜீத் − ரணில் பிரச்சினை
கூட்டனிக்கு பாதிப்பில்லை !!

நான் நிரபராதி என்பதை
சிங்கள மக்கள் உணர்வர் !!!

ஆட்சியில் இணையுமாறு அழைப்பு
வந்தால் தீர்மானிக்கலாம் !!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....

அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;

கேள்வி:
தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:
ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…