முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டம்


முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டம் என்ற பெயரில் வெளிநாட்டு சியோனிசத்தின் உதவியுடன் சில முஸ்லிம் (?) பெண் அமைப்புக்கள் இலங்கையின் திருமண சட்டத்தில் மாற்றங்கள் தேவை என வலியுறுத்தி வருவதை காண்கிறோம்;. இதன் ஒரு கட்டமாக அண்மைய நவமணி  பத்திரிகையில்  ப்லோரின் காசிம் மர்சூக் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம் வெளி வந்துள்ளது.
பொதுவாக இலங்கை முஸ்லிம் சமூகம் தமிழ் மொழியில் பேசுகின்ற சமூகமாகும். தமிழ் மொழி தெரியாதவர்களால் இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளையும் பிரச்சினைகளையும் உண்மையாக உணர்ந்து கொள்ள முடியாது என்பதை இக்கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்கிறோம். தமிழில் வந்துள்ள மொழி பெயர்ப்புக்கு நாம் இதனை தமிழில் எழுதுவதால் மேற்படி கட்டுரை முஸ்லிம்களை வழி கெடுக்க கூடாது என்பதற்கான நன்மையை தரலாமே தவிர சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கு கூட இதனை புரிந்து கொள்ள முடியும் என்பது சந்தேகமே.
முஸ்லிம் திருமண சட்டம் என்பது இலங்கை முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவிக்கும் ஒன்றாகும். இதனை நமது மூதாதையர் வெள்ளித்தட்டில் பெற்ற தரவில்லை. பாரிய பல போராட்டம், அழகிய அணகுமுறைகள் மூலமே பெற்றுத்தந்தார்கள். அதில் எந்தவித மாற்றத்துக்கும் இடமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். பொதுவாக நாட்டின் எந்த சட்டமாக இருந்தாலும் அதனை மக்கள் சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை என்பதை நாமறிவோம். அதன் காரணமாகவே நீதி மன்றங்களில் வழக்குகள் நிறைந்தள்ளன.
முஸ்லிம் அல்லாதாரின் திருமண சட்டத்தின் படி பெண்ணின் திரமண வயத 18 என்று இருப்பதற்காக அவர்கள் மத்தியில் விவாகரத்துக்கள் இல்லாமல் போய் விட்டதா? ஜீவனாம்ச வழக்குகள் இல்லாமல் போய் விட்டதா?
இஸ்லாமிய சட்டங்கள் ஈமானுடன் தொடர்பு பட்டவையாகும். அதனை சரியாக அமுல் படுத்தாமல் துஷ்பிரயோகங்கள் செய்தால் மறுமையில் அதற்குரிய தண்டனை உண்டு என்ற ஈமானியத்தோடு தொடர்பு பட்டவையாகும். இலங்கையில் உள்ள முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்ற வேண்டும் என்பது கடந்த 7 வருடங்களாக எடுக்கப்படும் முயற்சி என கட்டுரையாளர் கூறுவதிலிருந்து கடந்த 70 வருடங்களாக இச்சட்டத்தினால் முஸ்லிம்கள் பாதிக்கப்படவில்லை என்பது தெரிகிறது. அவ்வாறு முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டடிருந்தால் இதனை மாற்றும்படி எப்போதோ பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டிருக்கும்.

நாம் அறிந்த வரை முஸ்லிம் திருமண சட்டத்தில் மாற்றம் தேவை என எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் இது வரை பாராளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லை என்பதால் இது ஒரு பிரச்சினைக்குரிய விடயமே இல்லை என தெளிவாகிறது. இச்சட்டங்களை மாற்ற வேண்டும் என முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறப்பினர்கள் சிலரே குரல் எழுப்புவதன் மூலம் இது வெள்ளாடு நனைகின்றது என ஓநாய் கவலைப்படுவதாகத்தான் கருதப்படும். இத்தகைய ஓநாய்கள் ஊளையிடுவதற்கு முஸ்லிம் சமூகத்தில் உள்ள இஸ்லாத்தை படிக்காமல் ஐரோப்பாவை மட்டும் படித்த முஸ்லிம்  குஷ்பு பெண்கள் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
முஸ்லிம் திருமண விவாகரத்து சட்ட மாற்றத்தை ஜி எஸ் பி பிளஸ்ஸ{டன் சம்பந்தப்படுத்த முடியாது என கட்டுரையாளர் கூறுகிறார். ஐரோப்பிய நாடுகள் முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்றினாலேயே ஜி எஸ் பியை தர உடன் பட்டுள்ளதாக அமைச்சரவை அமைச்சர் ஒருவரே பகிரங்கமாக சொல்லும் போது அப்படியில்லை என இவர் சொல்வதிலிருந்தே இவர் உண்மையை மறைத்து முஸ்லிம்களை வழிகெடுக்க முணைகிறார் என்பது தெளிவாகிறது.
முஸ்லிம் பெண்களின் வயதை இஸ்லாம் மிகத்தெளிவாக குர்ஆனில் கூறுகிறது. “அநாதைகளை அவதானித்து வாருங்கள். அவர்கள் திருமண வயதை அடைந்த பின்னர் பகுத்தறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால் அவர்களுடைய பொருள்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்” - குர்ஆன் 4:6
இந்த வசனத்தின் படி பெண்ணின் திருமண வயது என்பதை தம்யீஸ் எனும் பகுத்தறிவு என்பதை குர்ஆன் சொல்லியுள்ளது.  ஓர் ஆண் பருவ வயதை அடைகிறான் என்றால் அவன் ஸ்கலிதம் அடைவது கொண்டு ஆரம்பமாவது போல் ஒரு பெண் பருவ வயதை அடைவது என்பது அவள் மாத விடயாயை காண்பதாகும். இவ்வாறு ஒரு பெண் பருவ வயதை அடைந்ததும் அவளில் பல மாறுதல்கள் இயற்கையாக உருவாகும். அவள் அந்நிய ஆணைக்கண்டதும் நாணிக்கோணுவதன் மூலம் அவள் பகுத்தறிவை அடைந்து விட்டாள் என்பது பொருள். இந்;நிலையை அநேக பெண்கள் 13 வயதிலும் சிலர் 16 வயதிலும் அடைவர். ஒரு பெண் இந்த வயதில்த்தான் பருவமடைவாள் என்று எவராலும் குறிப்பிட்டு சொல்லவே முடியாது என்பதால் குர்ஆனும் சொல்லவில்லை. சில வேளை இது விடயத்தில் குர்ஆன் வயதை குறிப்பிட்டிருந்தால் இன்று குர்ஆன் வசனம் வேத வாக்காக பார்க்கப்பட்டிருக்காது.

அதே போல் திருமண வயதை அடைந்த முஸ்லிம் பெண்ணிடம் அனமதி கோர வேண்டும் என்று இலங்கை சட்டத்தில் இல்லாவிடினும் அவ்வாறு அனமதி கேர வேண்டும் என்பதை அனைத்து பெற்றோர்களும் தெரிந்து நடைமுறைப்படுத்துகிறார்கள். கன்னிப்பெண்ணின் சம்மதம் என்பது அவளது மௌனம் எனவும், விதவை பெண்ணின் சம்மதம் அவள் ஆம் என சொல்வதுமாகும் என நபியவர்கள் தெளிவாக சொல்லியுள்ளார்கள். இதனை முஸ்லிம் சமூகம் சரியாகவே நடைமுறைப்படுத்தகிறது. கள்ளக்காதலன் வைத்திருக்கும் பெண்களுக்கத்தான் இது பிரச்சினையே தவிர அள்ளாஹ்வுக்கும் பெற்றோருக்கும் கட்டுப்பட்ட ஒழுக்கமள்ள முஸ்லிம் பெண்ணுக்கு இது பிரச்சினையெ அல்ல.
இப்படியிருக்க கட்டுரையாளர் டியுனிசியாவில், இந்தோனிசியயவில், அல்ஜீரியாவில் முஸ்லிம் பெண்களின் 16 வயது திருமண கட்டுப்பாட்டை காட்டுகிறார். எங்களுக்கு ஆதாரம் குர்ஆனும் ஹதீதுமே தவிர நாடுகள் அல்ல. அப்படி பார்த்தால் அதே டியுனிசியாவில் விபச்சாரத்துக்கு அனமதிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆணும் பெண்ணும் விரும்பினால் அவர்கள் காதலர்களாக வாழலாம் என்பதற்கான அனுமதி உள்ளது. அல்ஜீரியாவிலும் அப்படித்தான். இந்தேனிசியாவிலும் பல காலம் இப்படித்தான் இருந்தது. இப்போது குர்ஆன் ஹதீத் பற்றிய தெளிவு அங்கு வருவதால் சில நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
திருமண வயது பல தார மணம் போன்றவற்றில் சில வெளிநாடுகளை காட்டும் இவர்கள் ஏன் சஊதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளைக்காட்டுவதில்லை? அந்த நாட்டின் சட்டம் ஐரோப்பாவுக்கு பிடிக்காது என்பதால் அதனை காட்ட இந்த முஸ்லிம் பெண்கள் முன்;வருவதில்லை.

ஆக இஸ்லாமிய திருமண சட்டத்தில் மாற்றம் தேவை என ஆராயவேண்டுமாயின் குர்அன் ஹதீதை வைத்தே ஆராய வேண்டுமே தவிர நாடுகள், முஸ்லிம் அல்லாதவர்களின் கருத்துக்கள், நடிகைகள் போன்ற முஸ்லிம் பெயர் தாங்கி விபச்சாரிகளின் கருத்துக்களை வைத்து ஆராய முற்படுவது தவறாகும்.

இலங்கையின் முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்தும் பாராளுமன்ற குழுவுக்கு முஸ்லிமல்லாத இரண்டு பெண் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் இது விடயத்தில் சியோனிச கரங்கள் உள்ளதை காணலாம். குர்அன் ஹதீதுடைய சட்டங்கள் சரியா பிழையா என ஆராய முஸ்லிமல்லாத பெண்கள் நியமிக்கப்பட்டிருப்பது முழு முஸ்லிம்களையும் அவமதிக்கும் செயலாகும். இத்தகைய குழுவை நீக்க வேண்டும் என உலமா கட்சி மட்டுமே வலியறுத்தி வருகிறது. இவ்வாறு முஸ்லிம் அல்லாத பெண்கள் நியமிக்கப்பட்டமைக்கு காரணம் முஸ்லிம் பெண் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இல்லை என சொல்லி சமாளிக்கிறார். இது முட்டாள்தனமான வாதமாகும். முதலில் இச்சட்டங்களை மாற்ற வேண்டும் என மொத்த முஸ்லிம் சமூகமும் கேட்டதா? அல்லது யாராவது ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறப்பினராவது இதற்கான பத்திரம் சமர்ப்பித்தாரா? அப்படியிருக்கும் போது இத்தகைய உபகுழுவின் தேவை என்ன? முஸ்லிம் பெண் பாராளுமன்றத்தில் இல்லாவிட்டால் அப்படி என்ன தேவை உள்ளது. அப்படித்தான் தேவை இருந்தால் மௌலவியா முடித்த பெண்களை இணைத்திருக்கலாம். அவர்கள் பாராளுமன்ற உறப்பினர்கள் இல்லையே என வாதிடுவதாயின் திருத்தத்துக்கு  தலைமை தாங்கும் சலீம் மர்சூப் கூட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் திருமண சட்டத்தின்படி வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடக்கின்றன. முஸ்லிம் பெண்கள் கல்வியில் அக்கறை கொள்ளும் இக்காலத்திற்கு முன் இளம் பராயத்திலேயே திருமணம் செய்;தனர். அண்மைய 30 வருடங்கள் வரை இவ்வாறுதான் நடை பெற்றன. அவர்கள் இள வயதில் திருமணம் முடித்தார்கள் என்பதற்காக விவாகரத்துக்கள் அதிகம் நடக்கவில்லை. மாறாக பத்து பதினைந்து பிள்ளைகள் பெற்று வளமாக வாழ்ந்தார்கள். மருதமுனையை சேர்ந்த பிரபல கவிஞர் ஒருவருக்கு பதினாறு பிள்ளைகள். அப்படியாயின் அத்தம்பதிகள் மிக இள வயதிலேயே திருமணம் முடித்தார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். அத்துடன் பிள்ளைகள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்குவதன் மூலம் இள வயது திருமணமே சமூகத்துக்கு ஆரோக்கியமானது என்றும் புரிந்து கொள்கிறோம்.

இன்று உள்ளங்களை பார்ப்பதை விட சடவாதமே பெரிதாகி போனதால் இள வயது திருமணங்கள் அருகிவிட்டன. பெண்கள் 18 வயது வரை கல்வி கற்பதால் 99 வீதமான பெண்கள் இருபது வயது தாண்டியே மண முடிக்கிறார்கள். இவர்களில்தான் அதிக விவாகரத்துக்களையும் சீசர் குழந்தைகளையும் காண்கிறோம்.
இன்று முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் திருமண பிரச்சினை என்பது இளவயது திருமண பிரச்சினை அல்ல. மாறாக முப்பது வயது தாண்டியும் திருமணம் முடிக்காத பெண்கள் தொகை அதிகரித்துள்ளதே பிரச்சினையாக உள்ளது. அத்துடன் இள வயது திருமணத்தை விட இள வயதில் ஓடிப்போகும் பிரச்சினைதான் அதிகம் உள்ளது. இதற்குத்தான் தீர்வு என்ன ஆராய வேண்டுமே தவிர இலங்கை திருமண சட்டத்தில் பெண்களின் வயதை திருத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
எம்மை பொறுத்தவரை முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெற்ற முஸ்லிம் கட்சிகள் முப்பது வயதாகியும் திருமணம் முடிக்காமல் இருக்கும் பெண்களை கணக்கிட்டு அவர்களுக்கான வாழ்வாதாரங்களை வழங்கி திருமணம் முடித்து வைக்க முன்வர வேண்டும் என்பதை சொல்லி வருகிறோம்.

சிலர் இலங்கை திருமண சட்டத்தில் முஸ்லிம் பெண்கள் கட்டாயம் 13 வயதில் திருமணம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது போல் கருத்துக்களை முன் வைக்கின்றனர். குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்கள். இவ்வாறு இவர்கள் பேசக்காரணம் இந்த குஷ்பு முஸ்லிம் முன்னணியை சேர்ந்த இஸ்லாம் புரியாத முஸ்லிம் பெண்கள் முன் வைத்த கருத்துக்கள்தான்.

அத்துடன் இஸ்லாமிய சட்டத்தில் ஆணாதிக்க முறை உள்ளதாக கட்டுரையாளர் குறிப்பிடுவதன் மூலம் இவர் முஸ்லிமா என்ற சந்தேகம் வருகிறது. இஸ்லாத்தில் ஆணுக்குரிய அந்தஸ்தை அவனுக்கும் பெண்ணுக்குரிய அந்தஸ்தை பெண்ணுக்கும் தாராளமாக வழங்கியுள்ளது. இருவருக்கம் சமவுரிமை என்பது இஸ்லாத்தில் இல்லை. மாறாக சில விடயங்களில் ஆணுக்கு முன்னுரிமையும், சில விடயங்களில் பெண்ணுக்கு முன்னுரிமையும் கொடுத்துள்ளது. வீட்டின் பொருளாளதார நிர்வாகத்தை, நாட்டை, சட்டங்களை அமுல்படுத்தவதில் ஆணுக்கு முன்னுரிமை கொடுத்துள்ள இஸ்லாம் தாய் என்ற பெண்ணுக்கு ஆணை விட மும்மடங்கு அதிக உரிமையை கொடுத்துள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் சமவுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இஸ்லாத்தின் சிறப்பாகும். தயவு செய்து இஸ்லாத்தை ஐரோப்பாவோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என கேட்கிறோம்.
இறுதியாக
முஸ்லிம் திருமண சட்டத்தில் எக்காரணம் கொண்டும் கைவைக்கக்கூடாது என்பதே எமது கருத்தாகும். அப்படித்தான் திருத்தம் வேண்டி ஆராய்வதாயின் அதனை அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் தலைமையில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் பதிவு பெற்றுள்ள மௌலவிமார் தலைமையிலான இயக்கங்கள் மட்டும் இணைந்து ஆராய வேண்டும். இதில் குர்ஆன் ஹதீதை அறபு மொழி மூலம் விளங்கக்கூடிய மௌலவியா பெண்கள் சிலரையும் இணைத்துக்கொள்ளலாம். அதற்கு மாறாக குர்ஆன் ஹதீதை அறபு மொழி மூலம் விளங்க முடியாத சட்டத்தரணிகளோ, பெண்களோ மாற்றுமத பெண்களோ எக்காரணம் கொண்டும் சேர்த்துக்கொள்ளப்படக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். காரணம் முஸ்லிம் திருமண சட்டங்கள் குர்ஆன் ஹதீத் அடிப்படைமயிலானவையே தவிர ஐரோப்பா தந்த சட்டங்கள் அல்ல.
அத்துடன் இன்று நமக்கிருக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இனவாதம் அதிகரித்த நாட்டு நிலையில் முஸ்லிம் திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டு வர இடமளித்தால்  நாளை அவற்றை முழுமையாக ஒழிப்பதற்குக்கூட இடமளித்தவர்களாவோம் என்பதை எச்சரிக்கிறோம்.
மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
கபூரி, நத்வி, இமாம் இப்னுசுஊத் பல்கலைக்கழக பட்டதாரி,
மதீனாவில் அச்சிடப்பட்ட அல்குர்ஆன் தமிழ் தர்ஜமா மொழி பெயர்ப்பாளர்
தலைவர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் உலமா கட்சி
20.12.2016
இக்கட்டுரை கடந்த வெள்ளியன்று நவமணி பத்திரிகையில் பிரசுரமானது.


Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்