ஞானசாரவை கைது செய்வதில் நான் தடையாக இருக்க மாட்டேன்- ஜனாதிபதி..!!


¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

ஞானசாரவைக் காப்பாற்றும் எதுவித நடவடிக்கையையும் தான் ஒரு போதும் செய்யவில்லையென தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதிக்கிடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஞானசார கைது செய்யப்படாதிருப்பது ஜனாதிபதியின் உத்தரவுக்கமையவே என பேச்சு நிலவுவதாக அங்கு சுட்டிக்காட்டப்பட்டதற்கு பதிலளித்தே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கடிதம் ஒப்படைத்துள்ள போதிலும் நேரடி சந்திப்பில் ஐவர் கலந்து கொள்ளாத அதேவேளை இச்சந்திப்பில் வைத்து இன-பேதமற்ற நடவடிக்கை எடுக்க சட்ட-ஒழுங்கு அமைச்சருக்குத் தான் நேரடியாக உத்தரவிடுவதாகவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்