Skip to main content

இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து

  இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து –  அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக

ஞானசார தேரரை உடனடியாக கைது செய்ய வேண்டும் - முஜீபுர் றஹ்மான்சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே இனமுறுகலை ஏற்படுத்தி வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்படும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரையும் அவரோடு இயங்கும் இனவாதக் குழுக்களையும்  கைது செய்வதற்கு அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பமான பொதுபலசேனா அமைப்பு, முஸ்லிம்களுக்கெதிரான மிக மோசமான வன்முறைகளை அரங்கேற்றியது. மஹிந்த அரசு பொதுபலசேனாவின் இந்த மோசமான செயற்பாட்டை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல் அவர்களின் இனவாத வன்முறை செயற்பாட்டுக்கு மறைமுகமாக அங்கீகாரத்தையும் வழங்கியது. 

முஸ்லிம்களுக்கு பலத்த சேதங்களையும், அழிவுகளையும் ஏற்படுத்திய அளுத்கம, பேருவளை கலவரங்களுக்கு காரண கர்த்தாவாகிய ஞானசார தேரர்மீது அப்போதைய மஹிந்த அரசு எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கைது செய்யப்படுவதற்கான தகுந்த ஆதாரங்கள் இருந்தும், ஞானசார தேரர் அன்று கைது செய்யப்படவுமில்லை. இன்று கூட ஞானசார தேரருக்கு எதிராக பல முறைப்பாடுகள் காவல்துறையிடம் பதியப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் பொலிஸார் மேற்கொள்வதாகத் தெரியவில்லை.
நாட்டில் சட்டம் சகலருக்கும் சமம் என்று போதிக்கப்படுகிறது. ஆனால் பொதுபலசேனா அமைப்பினரின் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளை தட்டிக்கேட்பதற்கோ, தடுத்து நிறுத்துவதற்கோ அந்த அமைப்பிற்கு எதிராக சட்டங்களை அமுல் படுத்துவதற்கோ இன்றும் கூட தயக்கம் காட்டப்படுகின்றமையே உணர முடிகிறது.

பௌத்த பிக்குகள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களின் அட்டகாசங்களை காவல்துறையினர் பார்த்துக்கொண்டு பாராமுகமாய் இருக்கின்றனர். காவல்துறையின் பொடுபோக்குத்தனமான இந்த செயற்பாடு, சட்டத்தின் நம்பகத்தன்மை நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதையே எடுத்துக்காட்டுகிறது. பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் பௌத்த பிக்கு மாணவர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் இனவாத ரீதியில் செயற்படும் பௌத்த பிக்குகளை பொலிஸார் ஒரு போதும் தாக்கவோ கைது செய்யவோ முற்படுவதில்லை.   

சிறுபான்மை மக்களை சீண்டும் தனது இனவாத சேட்டையை ஞானசார தேரரோடு இணைந்து மட்டக்களப்பு அம்பிட்டியே சுமணரத்ன தேரரும் ஆரம்பித்திருக்கின்றார். ஞானசார தேரர் இஸ்லாம் தொடர்பாகவும், முஸ்லிம்கள் தொடர்பாகவும், இஸ்லாமிய நம்பிக்கைகள் தொடர்பாகவும் மிக மோசமான வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்த விஷமத்தனமான கருத்துகள் மூலம் இனமுறுகல் ஒன்றுக்கு தூபமிட்டும் வருகிறார். 

நீதிமன்றத்திற்கும், சட்டத்துக்கும் கட்டுப்படாத இவரின் மோசமான செயற்பாடு இந்த நாட்டை மீண்டும் இனவாத வன்முறை என்ற அழிவுப் படுகுழிக்குள் தள்ளப்போகிறது.
ஞானசார தேரரும் அவரோடு இயங்கும் தீவிர இனவாத குழுவினரும் மட்டக்களப்புக்கு ஊர்வலமாக செல்வதை தடுத்து, நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது. சட்டத்தை துச்சமாக மதித்து செயற்படும் ஞானசார தேரர், நீதிமன்ற கட்டளையை அவமதித்தது மட்டுமல்லாமல்; காவல் துறையினர் முன்னிலையில் நீதிமன்ற ஆணையைக் கிழித்தெறிந்து சட்டத்தை அவமதிக்கும் செயலை பகிரங்கமாகவே செய்துள்ளார். பொலிஸார் இதற்காக எந்த நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

கடந்த தேர்தலில் நாட்டை சுமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் பால் இட்டுச்செல்வதற்கான நல்லாட்சியின் வாக்குறுதியை சீர்குலைக்கும் வகையிலேயே ஞானசாரதேரரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.  இனவாhதத்தை தோற்கடிக்கும் நோக்கில் உருவான நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றியை கேள்விக் குறியாக்கும் இனவாதிகளின் இந்த நடவடிக்கையை  அரசாங்கம் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. குற்றம் இழைப்பவர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு ஜனாதிபதியினதோ பிரதமரினதோ அல்லது பொலிஸ் மாஅதிபரினதோ அனுமதி தேவையில்லை. 

இனவாதிகள் இழைக்கும் குற்றங்கள் தொடர்பாக காவல்துறையினர்  அசமந்தமாக செயற்படுவது தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். சட்டங்களுக்குக்கோ, நீதி நியாயங்களுக்கோ கட்டுப்படாமல், இனங்களுக்கிடையே வன்முறையைத் தூண்டி வரும் ஞானசார தேரரையும் அவரோடு இயங்கும் இனவாத குழுக்களையும் உடனடியாக கைது செய்து சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட அரசாங்கம் முன்வர வேண்டும். 

குற்றம் இழைப்பவர்கள் யாராகினும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வழங்க வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் முஜீபுர் றஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச