அர‌சிய‌ல் க‌ட்சியொன்றை எப்ப‌டி கொண்டு செல்வ‌து என்ப‌து தெரியாத‌ த‌லைவ‌ர்

முஸ்லிம் காங்கிர‌சின் உய‌ர் பீட‌ கூட்ட‌த்துக்கு க‌ட்சியின் செய‌லாள‌ர் ஹ‌ச‌ன‌லி ச‌மூக‌ம‌ளிக்காமை என்ப‌து சிற‌ந்த‌தொரு அர‌சிய‌ல் ராஜ‌த‌ந்திர‌மாகும். ஏனென்றால் ஒரு க‌ட்சியின் உய‌ர் பீட‌ கூட்ட‌த்தை கூட்டும் அதிகார‌ம் செய‌லாள‌ருக்கே உண்டு. க‌ட்சிக‌ளின் யாப்புக‌ளில் எப்ப‌டி எழுத‌ப்ப‌ட்டிருந்தாலும் தேர்த‌ல் ஆணையாள‌ரைப்பொறுத்த‌ வ‌ரை இதுவே எழுத‌ப்ப‌ட்ட‌ ச‌ட்ட‌மாக‌ உள்ள‌து.

செய‌லாள‌ரால் உய‌ர் பீட‌ கூட்ட‌ம் கூட்ட‌ முடியாத‌ நிலைமையின் அவ‌ர‌து அனும‌தியுட‌ன் வேறு யாரும் கூட்ட‌லாம்.

ச‌ட்ட‌ம் இப்ப‌டியிருக்க‌ அர‌சிய‌ல் க‌ட்சியொன்றை எப்ப‌டி கொண்டு செல்வ‌து என்ப‌து தெரியாத‌ த‌லைவ‌ர் உய‌ர் பீட‌ கூட்ட‌ம் கூட்டும்ப‌டி செய‌லாள‌ருக்கு தொட‌ர்ச்சியாக‌ எழுத்து மூல‌ம் கோரிக்கை விடாம‌ல் க‌ட்சியின் உய‌ர் பீட‌ம் கூட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து. ச‌ட்ட‌ம் தெரியாத‌ போராளி கோமாளிக‌ளும் செல‌வு செய்து கொழும்பு வ‌ந்து ஏமாந்து போயுள்ள‌ன‌ர்.

த‌லைவ‌ரால் ச‌ட்ட‌த்துக்கு மாற்ற‌மாக‌ கூட்ட‌ப்ப‌ட்ட‌ கூட்ட‌த்துக்கு செய‌லாள‌ர் ச‌மூக‌ம‌ளிக்க‌ வேண்டிய‌ க‌ட‌ப்பாடு இல்லை.  உட‌ன‌டியாக‌ த‌லைவ‌ரும் ஹ‌ச‌ன‌லியும் இணைந்து த‌ற்போதும் செய‌லாள‌ர் அவ‌ர்தான் என‌ அறிவித்தால் அத‌னை தேர்த‌ல் ஆணையாள‌ர் ஏற்றுக்கொள்வார். அவ்வாறு நிக‌ழும் போது இத்த‌னை கால‌மும் ஒரு மொக்க‌ரைத்தான் தானைத்த‌லைவ‌ன் என‌ ந‌ம்பி ஏமாந்துள்ளோம் என்ப‌தை முஸ்லிம் காங்கிர‌ஸ் வாக்காள‌ர்க‌ள் தெரிந்து கொள்வார்க‌ள்.

அவ்வாறு க‌டித‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌டாவிட்டால் இது விட‌ய‌ம் நீதி ம‌ன்ற‌த்துக்கே செல்லும். அத‌ற்கு செய‌லாள‌ர் பொறுப்ப‌ல்ல‌, சுய‌ந‌ல‌, ப‌த‌வி வெறிபிடித்த‌ ஏமாற்றுத்த‌லைமையின் த‌ந்திர‌மே பொறுப்பாகும்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்