முஸ்லிம் காங்கிரஸ் என்பது வெறும் சலுகைகளுக்காகவும் மாலைகளுக்காகவும் ஆசைப்பட்ட கட்சி

32 வருடங்களாக முஸ்லிம் காங்கிரசில் இருக்கும் அதன் ஆரம்ப கால உறுப்பிளரும் செயலாளருமான ஹசனலியை நீக்கும் கள்ளத்தனமான நடவடிக்கைகளை கைவிடும்படி  அக்கட்சியின் ஆரம்ப கால போராளி என்ற வகையிலும் மறைந்த தலைவரின் கையினால் நியமிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரசின் இணைப்பாளராகவும் கடமையாற்றியவன் என்ற வகையில் கேட்டுக்கொள்கிறேன் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

உண்மையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு வியாபார கட்சியாக மாற்றி விட்டார் என்பதே உண்மையாகும்.  இதனை அறிந்தும் தெரிந்தும் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஹக்கீமின் அத்தனை கபடத்தனத்துக்கும் அக்கட்சியினர்; துணை போனது சமூகத்துரோகமாகும் என்பதை பல காலமாக சுட்டிக்காட்டி வரகிறோம்.  அதன் விளைவை இன்று ஹசனலியும்; அனுபவிக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் என்பது தனிப்பட்ட நபரின் சொத்தல்ல. எமது இரத்தங்களை குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களின் இரத்தம் சிந்தி வளர்க்கப்பட்ட கட்சி என்பதால் அக்கட்சித்தலைமையும் கூட இருப்பவர்களும் சமூகம் பற்றி சிந்திக்க வேண்டும்.

இன்று முஸ்லிம் காங்கிரஸ் என்பது வெறும் சலுகைகளுக்காகவும் மாலைகளுக்காகவும் ஆசைப்பட்ட கட்சியாகி விட்டது என ஹசனலி சொல்வதன் மூலம் 2002ம் ஆண்டு முதல் முஸ்லிம் காங்கிரசை எதிர்த்து நாம் செயற்படுவது மிகச்சரி என்பது நிரூபணமாவதுடன் உலமா கட்சி போன்ற முஸ்லிம் கட்சிகளின் ஸ்தாபகமும் மிகச்சரி என்பதுடன் அக்கட்சியின் பிழையான அரசியலை துணிச்சலுடன் சுட்டிக்காட்டும் கட்சியாக எம்மை ஆக்கிய இறைவனின் செயல் மகத்தானது.

ஆகவே ஹசனலியை ஓரம் கட்டுவதன் மூலம் கிழக்கின் மூத்த பழுத்த அரசியல்வாதிகளை ஒழித்துக்கட்டி கிழக்கை முற்றாக ஓரம்கட்ட முணையும் ஹக்கீமின் துரோகங்களுக்கு அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் இனியும் துணை போகாமல் கிழக்கில் ஏதாவதொரு ஊரில் உயர் பீட கூட்டத்தை கூட்டி புதிய தலைவரை தெரிவு செய்ய ஹசனலி உட்பட அனைவரும் நடவடிக்கை எடுப்பதே அவர் மறைந்த தலைவருக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் செய்யும் நன்றிக்கடனாகும் என தெரிவித்துக்கொள்கிறோம். 

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்