இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக
புதிய மூன்று மாடிக்கட்டடத்துக்கும்
அமைச்சர் கபீர் அடிக்கல் நட்டிவைப்பு
(நஸீஹா ஹஸன்)
நாட்டின்
முன்னணி முஸ்லிம் தேசிய பாடசாலையான மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் "ஸாஹிரா
2020| திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
அந்தவகையில் பாடசாலையின் நீண்டநாள் தேவையாக இருந்த
பஸ் கொள்வனவு மற்றும் நவீன வசதிகள் கொண்ட மூன்று மாடிக் கட்டடத் தொகுதி
என்பன தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
கல்லூரிக்குத்
தேவையான பஸ்ஸை மாவனல்லை, தனாகம பகுதியைச் சேர்ந்த ஹாஜியானி கே.எம்.நபீஸா
உம்மா என்பவர் கொள்வனவு செய்து அன்பளிப்புச் செய்துள்ளார்.
4.2
மில்லியன் ரூபா பொறுமதியான குறித்த பஸ் வண்டியை உத்தியோகபூர்வமாகக்
கையளிக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது பஸ்ஸ{க்கான சாவி கல்லூரி அதிபர் சட்டத்தரணி எம்.எம்.எம்.ஜவாட் (நளீமி)யிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்,
ஐ.தே.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாஷீம், முன்னாள் சிரேஷ்ட
அமைச்சர் அதாவுட செனவிரத்ன, கல்லூரி பழைய மாணவர் சங்கம், கல்லூரி
அபிவிருத்திக் குழு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து
சிறப்பித்தனர்.
இதேவேளை, கல்லூரியின் எதிர்காலத் தேவை கருதி
பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிய மாடிக்கட்டடங்களை நிர்மாணிக்கும்
அதிபர் ஜவாட்டின் திட்டத்தின் கீழ் அண்மையில் அகற்றப்பட்ட கல்லூரியின்
பழைய கட்டடத்துக்கு மாற்றீடாக அவ்விடத்தில் மேலதிக கணினி அறை மற்றும்
வாசிகசாலை போன்ற நவீன வசதிகளைக் கொண்ட மூன்றுமாடிக் கட்டடத் தொகுதிக்கான
அடிக்கல் நட்டுவைக்கும் நிகழ்வும் குறித்த தினம் அமைச்சர் கபீர் ஹாஷிமின்
பங்குபற்றலுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment