தேசியப்பட்டியல் சமாச்சாரம்! ஏமாற்றாதே! ஏமாறாதே!

-எம்.வை.அமீர் -

அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏற்பட்டுள்தாகக் கூறப்படும் பதவிநிலைப்போட்டிகள் காரணமாக ஏற்கனவே அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படும் என வாக்களிக்கப்பட்ட தேசியப்பட்டியல் விவகாரம் கைநழுவிப்போய் விடுமா?.. என்ற சந்தேகம் அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறானதொரு சூழல் ஏற்படும் பட்சத்தில் அட்டாளைச்சேனை மக்கள் தொடர்ந்தும் பொறுத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள் என்றும் அட்டாளைச்சேனை அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளன  தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான எ.ல் .ஹனீஸ்  தெரிவித்தார்.

கடந்த  காலங்களில் அட்டாளைச்சேனை மண் பல சந்தர்ப்பங்களிலும் அரசியல் ஏமாற்றுதலுக்கு உட்பட பிரதேசம், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸுக்கு ஆரம்ப காலம் தொட்டு இப்பிரதேசம் 95% வாக்களித்தும் வந்துள்ளது. இருந்த போதிலும் அட்டாளைச்சேனைக்கு,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களால்  தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதிநித்துவம் தருவதாக    
அட்டாளைச்சேனை மண்ணிலும் ,ஏனைய ஊர்களிலும் பகிரங்கமாக வழங்கிய வாக்குறிதி இது வரையும் வெறும்  வாக்குறுதியாகவே உள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் அட்டாளைச்சேனை மக்களின் உணர்வுகளை மதித்து நடப்பார் என்று தான் பெரிதும் நம்புவதாகவும், அதுவரையும் மக்கள் சற்று பொறுமைகாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளன  தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான எ.ல் .ஹனீஸ், இது விடயத்தில் அட்டாளைச்சேனை மக்கள் மிகவும் விழிப்புடனும், எதிர்பார்ப்புடனும் இருப்பதாகவும் தெரிவித்தார்.


தேசியப்பட்டியல் விடயத்தில் அட்டாளைச்சேனை அனைத்து பள்ளிவாயல் நிர்வாகிகள் ,மரைக்கார் சபையினர், புத்திஜீவிகள், கல்விமான்கள் , வர்த்தக சங்க பிரதிநிதிகள், இளைஞர் அமைப்புக்கள் ,துறைசார் நிபுணர்கள், ஊரிலுள்ள அரசியல் வாதிகள் அனைவரையும் ஒருங்கே இணைத்து, அட்டாளைச்சேனை பெரிய பள்ளி வாசலில் ஊரினுடைய நலன் கருதி முக்கிய தீர்மானம் ஒன்றை விரைவில் மேட்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார் .

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்