ரிஷாட்டின் தீர்வு நகர்வுகள் இருபுறமும் கூரான கத்தியைப் போன்றிருக்கின்றது – சேகு இஸ்ஸதீன்


(முஸ்லிம்காங்கிரஸின்ஸ்தாபகத்தவிசாளரும், முன்னாள்அமைச்சருமான சிரேஷ்டசட்டத்தரணியுமான சேகுஇஸ்ஸதீன் (வேதாந்தி) முஸ்லிம் சமஷ்டி என்ற தொனிப்பொருளில் 48 பக்கங்களைக் கொண்ட நூலொன்றை வெளியிட்டுள்ளார்.
வட கிழக்கு தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவும் முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பிலும் அவர்தனது அனுபவங்களையும் யதார்த்தநிலையையும் அந்தநூலில் அக்குவேறுஆணிவேறாக வெளிப்படுத்தியுள்ளார்.
முஸ்லிம்சமஷ்டி என்றநூலில் மக்கள்காங்கிரஸ் தலைவர் ரிஷாட்பதியுதீனின் அரசியல் நிலைப்பாடுகளை அவர் இவ்வாறு விளக்குகிறார்)
- சுஐப்எம்காசிம்

கிழக்குப்பிரிவினைவாத அடுத்த பேச்சாளர் அகில இலங்கைமக்கள் காங்கிரசின்தலைவர் அமைச்சர்றிசாட் பதியதீன்தான். தானே ஒருஅகதியான அமைச்சர்றிசாட் பதியுதீன் வடமாகாண முஸ்லிம் அகதிகளுக்கு ஆற்றியுள்ள அபிவிருத்திப்பணிகள் யாராலும் செய்ய முடிந்திராதவை. அது மட்டுமல்லாது வில்பத்து விடயத்தில் அவர்காட்டிய அக்கறையும் அதுபற்றிய அவரது அறிவும், விவேகமும், வீறாப்பும், போராட்ட குணாம்சமும் முஸ்லிம்களின் மனதில் அவரை ஒரு உயர்ந்தஸ்தானத்திலேயே வைத்திருக்கிறது.
வட மாகாணத்தை மையப்படுத்தி அவர்உருவாக்கியுள்ள அகிலஇலங்கை மக்கள்காங்கிரஸ் இன்றுநாடு பூராகவும், குறிப்பாக கிழக்கிலும் பிரபல்யம் அடைந்து வருகிறது. முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்தைக்குறிவைத்து றிசாட் காய்களை நகர்த்துவதாக கசிந்துள்ள செய்தி முஸ்லிம்காங்கிரசை எரிச்சலுக்குள்ளாக்கி இருப்பது தெரிகிறது. றிசாட்டினதும் றஊப்ஹக்கீமினதும் முஸ்லிம்அரசியல் தலைமைத்துவத்துக்கான போட்டியில் வடகிழக்கு முஸ்லிம்தேசிய இனப்பிரச்சினை பின்தள்ளப்பட்டுவிடும் என்பதுதெரிகிறது.
றிசாட்டின் கிழக்குப்பிரிவினைவாதத்திலுள்ள நியாயங்கள், சவால்களை சந்திக்க தயாராக உள்ளவையாகவே தெரிகின்றன. வட கிழக்கு தேசிய இனப்பிரச்சினை தொடர்பான தமிழ்தேசியக்கூட்டமைப்பின் உள்ளக்கிடக்கையும், வடமாகாணசபை 22.04.2016 இல்முன்வைத்துள்ள தீர்வு வரைபுகளும் றிசாட்டை மோசமாக ஏமாற்றியிருப்பது மட்டுமல்லாமல், எரிச்சலையும் அதிகரித்திருக்கின்றன. அவையே றிசாட்டின் பிரிவினைக்கோஷத்திற்கும் உந்து சக்தியாகவும் அமைந்தன.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்