Skip to main content

இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து

  இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து –  அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக

ஹக்கீமின் கூற்றானது காட்டிக் கொடுப்பாகவே பலராலும் நோக்கப்படுகிறது

அண்மைக் காலமாக அமைச்சர் ஹக்கீம் பொது பல சேனா அமைப்பும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தும் ஒரு எஜமானின் கீழ் இயங்குகின்றார்களா என்ற உணர்வு ஏற்படுவதாக கூறியிருந்த விடயம் மிகவும் சூடு பிடித்து காணப்பட்டது.இதனை பிடித்து கொண்டு தான் அமைச்சர் ராஜித சேனாரத்ன தங்களது அமைப்பின் செயலாளர் றாசிக்கை கோத்தபாயவின் கீழ் இயங்கும் ஒரு நபராக சித்தரித்ததாக ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் பகிரங்கமாகவே அறிக்கை ஒன்றில் கூறியிருந்தது.அமைச்சர் ஹக்கீமின் கூற்றுக்கும் அமைச்சர் ராஜிதவின் கூற்றுக்கும் இடையில் கன கச்சிதமான தொடர்பிருந்தமையை யாராலும் மறுக்க முடியாது.அமைச்சர் ஹக்கீமின் இக் கூற்றானது முஸ்லிம் சமூகத்திடையே நிகழ்ந்த ஒரு பெரும் காட்டிக் கொடுப்பாகவே பலராலும் நோக்கப்படுகிறது.இது தொடர்பில் மிகக் கடுமையான நடவடிக்கைகளில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவ் அமைப்பின் செயலாளரை சிறையில் இருந்து மீட்க வேண்டிய நகர்வுகளை கருத்திற் கொண்டு அவர்கள் அமைதி காப்பதாக அவர்களது சில உள் வீட்டு தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பானது இலங்கை முஸ்லிம்களிடத்தில் கணிசமான ஆதரவை கொண்ட அமைப்பாதலால் இது அமைச்சர் ஹக்கீமின் அரசியல் வாழ்வில் மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றே பெரிதும் கருதப்படுகிறது.இந் நேரத்தில் இதனை தூக்கிப் பிடித்து அமைச்சர் ஹக்கீமிற்கு சாட்டையடி கொடுக்க மு.காவின் தவிசாளர் கிளம்பியிருப்பதிலிருந்து இதன் மூலம் அமைச்சர் ஹக்கீமிற்கு ஏற்படக் கூட பாதிப்பை அறிந்து கொள்ளலாம்.SLTJ ஆனது சம்மாந்துறை,கொழும்பில் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான முஸ்லிம்கள் கலந்து கொண்டிருந்தனர்.இதனை அவதானித்த அமைச்சர் ஹக்கீம் எதிர்காலத்தில் இவ்வமைப்பு தனக்கு சவாலாக மாறிவிடும் என்பதால் முளையிலேயே கிள்ளி எறிய இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றார் என்பதே பலரது கருத்தாகும்.தமிழ் நாட்டில் TNTJ அமைப்பானது நேரடி அரசியல் செய்யாது போனாலும் மறைமுக அரசியலில் மிக முக்கிய பங்கு வகிப்பது யாவரும் அறிந்ததே.இது போன்று எதிர்காலத்தில் SLTJ யும் இலங்கையின் மறைமுக அரசியலுக்குள் வந்து தனக்கு சவாலாக வந்து விடும் என்பதே அமைச்சர் ஹக்கீம் போடும் கணக்காகயிருக்கலம்.

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தை அடக்க இது சந்தர்ப்பமல்ல என்பதே ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் கொள்கையில் உடன்படாத நடுநிலையாளர்களின் கருத்தாகவுள்ளது.இதற்கு ஏற்ப 2016-11-29ம் திகதி மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அப்துர் ராசிகின் வழக்கின் போது அவருக்கு எதிராக எந்த முஸ்லிம் சட்டத்தரணியும் ஆஜராகவில்லை.இதற்கு முன்னர் அசாத் சாலியால் சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.இவ்வாறு நடந்துகொண்டதன் மூலம் அவர்கள் தங்களது பிழைகளை ஒப்புக்கொண்டுள்ளனர்.இவர்கள் தங்களது பிழைகளை ஒப்புக்கொண்டதன் பின்னால் மக்கள் அழுத்தங்கள் தான் நிரம்பி காணப்படுகின்றன.

தற்போது அமைச்சர் ஹக்கீம் இவைகளிலிருந்து தப்பிக்க வேண்டுமாக இருந்தால் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும்.இது அவரது தன் மானத்திற்கு இழுக்கான செயலாகும்.தற்போது தங்களது தலைவர் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் விடயத்தில் அகப்பட்டுக்கொண்டார் என அறிந்த போராளிகள் தங்கள் தலைவரை காப்பாற்ற அப்துர் ராசிகின் வழக்கின் போது அவருக்கு எதிராக எந்த முஸ்லிம் சட்டத்தரணியும் ஆஜராக போதும் அமைச்சர் றிஷாத் சட்டத்தரணிகளை நியமித்ததாக கூவித் திரிகின்றனர்.அமைச்சர் ஹக்கீமிற்கு சவாலாக உள்ள அமைச்சர் றிஷாதும் இவ்விடயத்தில் ஹக்கீமின் நிலைப்பாட்டில் உள்ளார் எனக் காட்டினால் அமைச்சர் ஹக்கீம் தனது தலையை காப்பாற்றிக்கொள்ளலாம்.இது தான் அவர்களது கணக்கு.இது அவர்களது வங்குரோத்து அரசியலை புடம் போட்டுக்காட்டுகிறது.இது போன்ற மு.காவினரின் பல பேய் காட்டல்களை மக்கள் நன்கு அறிந்து கொண்டார்கள்.இப்றாஹிம் மன்சூர்,ஆசிரியர்,கிண்ணியா

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச