சூரா ச‌பை யாரை ஏமாற்றுவ‌த‌ற்காக‌.

நாட்டின் இன்றைய‌ நிலையில் முஸ்லிம்க‌ள் பொறுமையாக‌வும், துஆவுட‌னும் இருக்க வேண்டும் என‌ தேசிய‌ சூரா ச‌பை கூறியுள்ள‌து.
இத‌னைச்சொல்ல‌ சூரா என்ற‌ அமைப்பு தேவைதானா என‌ கேள்வி எழுகிற‌து. இந்த‌ வார்த்தைக‌ளை அ இ ஜ‌மிய்ய‌த்துல் உல‌மா இதை விட‌ அழ‌கிய‌ வார்த்தைக‌ளில் சொல்வார்க‌ள்.

தேசிய‌ சூரா ச‌பை என்ப‌து ம‌ஹிந்த‌ கால‌த்தில் முஸ்லிம்க‌ள் எதிர் நோக்கிய‌ பிர‌ச்சினைக‌ளின் போது இன‌வாத‌ பிர‌ச்சினைக‌ளுக்கெதிராக‌ பேச‌ உல‌மா ச‌பை த‌ய‌ங்கிநின்ற‌ போது த‌ம்மால் முடியும் என‌ சில‌ரால் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து. அப்போதே நாம் கூறினோம் இதுவும் ப‌த்தோடு ப‌தினொன்றுதானே த‌விர‌ இத‌னால் எந்த‌ ஆரோக்கிய‌மான‌ ந‌ன்மையும் ச‌மூக‌த்துக்கு கிடைக்காது என்று. அத்துட‌ன் அவ‌ர்க‌ளின் கூட்ட‌த்திலேயே நாம் ஒன்றை தைரிய‌மாக‌ கூறினோம். இத்த‌கைய‌ ச‌பைக‌ள் அர‌சை காக்காய் பிடிக்கும் ச‌பைக‌ளாக‌வே இருக்கும் என்றும் முஸ்லிம் ச‌மூக‌த்தின் அர‌சிய‌ல் பிர‌ச்சினைக்கான‌ தீர்வு என்ப‌து  உல‌மாக்க‌ள் த‌லைமையிலான‌ அர‌சிய‌ல் க‌ட்சியை ப‌ல‌ப்ப‌டுத்துவ‌துதான் என்று. இத‌னை நாம் அன்று ம‌ஹிந்த‌வின் கால‌த்திலேயே சொன்னோம்.

எம‌து முக‌த்துக்கு நேரான‌ க‌ருத்தை ஜீர‌ணிக்க‌ முடியாத‌ தேசிய‌ சூரா ச‌பை அன்று முதல் அவ‌ர்க‌ளின் கூட்ட‌ங்க‌ளுக்கு அழைப்ப‌தை த‌விர்ந்து கொண்டார்க‌ள். அத‌ன் மூல‌ம் மாற்றுக்க‌ருத்துக்கு இட‌ம் கொடுக்காத‌ அவ‌ர்க‌ளின் சுய‌ந‌ல‌ன் தெரிந்த‌து.

பொறுமையாக‌ இருக்க‌ சொல்லுத‌ல், குனூத் ஓத‌ சொல்லுத‌ல் என்ப‌வ‌ற்றை  உல‌மா ச‌பை மிக‌ சிற‌ப்பாக‌வே செய்கிற‌து. அத‌னையே சூரா ச‌பையும் செய்வ‌து என்றால் இப்ப‌டியொரு ச‌பை யாரை ஏமாற்றுவ‌த‌ற்காக‌.

இன‌வாதிக‌ளின் இந்த‌ அட்ட‌காச‌ம் நாட்டில் இன‌ப்பிர‌ச்சினையை உருவாக்கி ப‌த‌ட்ட‌த்தை உண்டு ப‌ண்ணுவ‌த‌ற்கே என்ற சூரா ச‌பையின் க‌ருத்து உண்மையான‌து. அதையே நாமும் சொல்கிறோம். ஆனால் ஆட்சி மாற்ற‌த்துக்காக‌ இவ்வாறு செய்கிறார்க‌ள் என்ப‌து சூறா ச‌பையின் க‌ற்ப‌னையாகும். அவ்வாறு ஆட்சி மாற்ற‌த்துக்காக‌வே பொது ப‌ல‌ சேனா இவ்வாறு செய‌ற்ப‌டுகிறார்க‌ள் என்றால் ம‌ஹிந்த‌ கால‌த்திலும் இவ்வாறு அவ‌ர்க‌ள் ந‌ட‌ந்து கொண்ட‌து ம‌ஹிந்த‌வின் அர‌சை மாற்ற‌த்தான் என‌ சூரா ச‌பை ஏற்றுக்கொள்கிற‌தா?

உண்மையில் இத்த‌கைய‌ இன‌வாதிக‌ள் பின்னால் சியோனிச‌மும் ட‌ய‌ஸ்போராக்க‌ளுமே இருக்கிறார்க‌ள்.  அவ‌ர்க‌ள் ம‌ஹிந்த‌ அர‌சை வீழ்த்த நினைத்தார்க‌ள். வீழ்த்தினார்க‌ள்.  அத‌ன் பின் முஸ்லிம் சிங்க‌ள‌ பிர‌ச்சினையை உருவாக்கி அந்த‌ கோலால‌த்தில் வ‌ட‌க்கையும் கிழ‌க்கையும் இணைக்க‌ முய‌ற்சிக்கிறார்க‌ள். சிங்க‌ள‌ பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ பேசாம‌ல் த‌மிழ‌ர்க‌ளுட‌ன் கிழ‌க்கை இணைப்போம் என‌ முஸ்லிம்க‌ளை சொல்ல‌ வைப்ப‌த‌ற்காக‌ எடுக்கும் முய‌ற்சிக‌ளாகும்.

இவ‌ற்றை அர‌சிய‌ல் க‌ள‌த்தில் இல்லாத‌ தேசிய‌ சூரா ச‌பை போன்ற‌வ‌ற்றால் உண‌ர‌ முடியாது என்ப‌து எம‌க்கு தெரியும்.

-முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி.
த‌லைவ‌ர்
முஸ்லிம் உல‌மா க‌ட்சி

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்