செங்கலடி பகுதியில் பழமைவாய்ந்த பௌத்த விகாரை அழிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

செங்கலடி பகுதியில் பழமைவாய்ந்த பௌத்த விகாரைக்கு சொந்தமான இடத்தை புல்டோசர் கொண்டு அழிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்,

நான் நேற்று செங்கலடி பகுதியிலுள்ள பழமை வாய்ந்த பௌத்த வழிபாட்டுத் தலமொன்றுக்கு சென்றேன்.

அந்தக் காணியின் உறுதிப்பத்திரம் முஸ்லிம் ஒருவரால் தமிழர் ஒருவருக்கு விற்கப்பட்டு, முழுமையாக புல்டோசர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, அங்கிருந்த விகாரை பாதியளவில் அழிக்கப்பட்டு தள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, தகவலறிந்த பொலிஸார் அங்கு சென்று காவலரண் ஒன்றை அமைத்து, அது தொல்பொருள் பிரதேசம் என பெயரிட்டுள்ளனர்.

தொல்பொருள் பிரதேசம் என பெயரிட்டால் அந்தப் பகுதிகள் பாதுகாக்கப்படும். தொல்பொருள் சிறப்பு வாய்ந்த பிரதேசங்களை பாதுகாக்கும் பணிகளிலிருந்து தொல்பொருள் திணைக்களம் விலகிச் சென்றுள்ளது என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்