ஹென்றி மகேந்திரனின் கூற்று குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது - உலமா கட்சி

கல்முனை தொகுதியில் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்குவதோடு கல்முனை மாநகர சபையுடன் மேலும் இரு சபைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கருத்தை உலமா கட்சி வரவேற்பதுடன், இவ்வாறு பிரிக்காமல் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை மட்டும்; தரமுயர்த்த வேண்டும் என கூறும் ஹென்றி மகேந்திரனின் கூற்று குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் சுறுகையில்

சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கி கல்முனையை நான்காக பிரிக்கலாம் என்ற தீர்வை முதன் முதலில் உலமா கட்சியே முன் வைத்தது. அந்த வகையில் அமைச்சர் ரிசாத் பதியுதின் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையும், கல்முனை மாநகர சபையும், தமிழ் மக்களுக்கென ஒரு பிரதேச சபையும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அது பற்றி கருத்துத்தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் தமிழ்க்கிராமங்களை பிரிப்பதற்கு அனுமதிக்க முடியாது என்ற தோரணையில் இவற்றுக்கு தடை ஏற்படுத்தி தமிழ் பேசும் மக்களுக்கு மேலும் இரு பிரதேச சபைகள் கிடைப்பதை தடுக்கின்ற மோசமான செயலுக்கு துணை போவதுடன் இவ்வாறு பிரிக்காவிட்டால் சாய்ந்தமருது பிரதேச சபையும் கிடைக்காது என்பதால் அதற்கும் அவர் முட்டுக்கட்டை போடுகிறார். 

கல்முனை தேர்தல் தொகுதி என்பது சாய்ந்தமருதை விடுத்து பார்க்கும் போது முஸ்லிம்களும் தமிழர்களும் நிலத்தொடர்பற்ற பிரதேசத்திலேயே வாழ்கிறார்கள். அந்த வகையில் கல்முனையை நான்காக பிரித்து சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்குவதுடன் பிரதேச சபைகள் அறிமுகமாகு முன் கல்முனை பட்டிண சபை இருந்தது போன்று கல்முனை மாநகர சபையும், பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணையை இணைத்து தனியான பிரதேச சபையும், சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு கிராமங்களை உள்ளடக்கி தனியான பிரதேச சபையும், நற்பிட்டி முனை கிராம மக்கள் விரும்பினால் அவர்கள் சேனைக்குடியிருப்புடன் அல்லது கல்முனை மாநகர சபையுடன் இணையலாம் எனவும் உலமா கட்சி 2010ம் ஆண்டு முதல் கூறி வருகிறது. ஆனால் ஹென்றி மகேந்திரன் கூறுவது போல் சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்கி விட்டு ஏனைய அனைத்தும் கல்முனை மாநகர சபையாக இருக்க வேண்டும் என்றால் மருதமுனையில் வலுக்கும் பிரதேச சபை கோரிக்கைக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?


நீண்ட காலமான இப்பிரச்சினைக்கு ஒரு பக்க தீர்வை மட்டும் வழங்க முடியாது. அனைத்த தரப்புக்கும் தீர்வு வழங்குவதன் மூலமே தொடர்ந்தும இப்பிரச்சினைகள் எழ முடியாமல் இருப்பதை தடுக்கலாம். அத்துடன் இனங்களின் பெயரால் இந்த நாட்டில் பிரதேச செயலகங்கள் உருவாக்க முடியாது என்ற அடிப்படை கூட தெரியாதவராக ஹென்றி மகேந்திரன் இருப்பது கவலையானது. இந்த நிலையில் கல்முனை உப செயலகத்தை தமிழ் செயலகமாக தரமுயர்த்த கேட்பது வேடிக்கையானது மட்டுமல்ல, நாளை சிங்கள செயலகங்கள், முஸ்லிம் செயலகங்கள் என்ற கோரிக்கைகளுக்கும் இது வழி வகுக்கலாம்.

எம்மை பொறுத்தவரை கல்முனை தமிழ் கிராமங்களான பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு தமிழ் கிராம மக்கள் விரும்பினால் மேற்படி தமிழ் கிராமங்களை மட்டும் இணைத்து தனியான பிரதேச சபையும், மருதமுனை முஸ்லிம் ஊருக்கென தனியான பிரதேச சபை வழங்குவதுடன், கல்முனைக்குடி, இஸ்லாமாபாத், கல்முனை ஆகியவற்றை இணைத்ததாக கல்முனை மாநகர சபை அமையாலம். ஆனாலும் இத்தீர்வு இடியப்ப சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் தீர்வே பொருத்தமானதாகும்.

கல்முனை என்பது தனியான தமிழ் கிராமமல்ல, மாறாக தமிழர்களும் முஸ்லிம்களும் கலந்த பிரதேசமாகும். அத்துடன் கல்முனை நகரம் மற்றும் சந்தை என்பன தொண்ணூறு வீதம் முஸ்லிம்களின் பதிவில் உள்ள பிரதேசதாகும்.

ஆகவே பிரச்சினைகளுக்கான நல்லதொரு தீர்வை அமைச்சர் ரிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் வைத்திருப்பதை அனைவரும் ஏற்பதுடன் இதனை குழப்ப வேண்டாம் என ஹென்றி மகேந்திரனை கல்முனைத்தலைமையை கொண்ட ஒரேயொரு முஸ்லிம் கட்சி என்ற வகையில் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.  

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்