இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக
இலங்கையின் கல்வித்துறை அபிவிருத்தியில் பங்கு கொள்வது தொடர்பாக மலேசியாவின் “International University of Malaya – Wales ” மற்றும் “Vision College” ஆகிய
பல்கலைகழகங்கள் “மட்டக்களப்பு கெம்பஸ்” தலைவரும் புனர்வாழ்வு மற்றும்
மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வு டன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டது.
இன்று செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் “International University of Malaya – Wales ” பணிப்பாளர் ஆந்தோனி மைக்கல் மற்றும் “Vision College” நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆண்ரியன் தோன்ங்; உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். .
இதன்
போது, இலங்கையின் கல்வித்துறை அபிவிருத்தியில் பங்கு கொள்வதற்கு இவ்விரு
பல்கலைகழகங்களும் விருப்பம் தெரிவித்ததுடன், மட்டக்களப்பு கெம்பஸ{டன்
துறைசார்ந்த உறவுகளை பேணுவது தொடர்பிலும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
Comments
Post a comment