மக்கள் பணியை இலகுவாக்க இன்னும் பல உள்ளூராட்சிசபைகளை அமைக்குமாறு ரிஷாட் பாராளுமன்றில் கோரிக்கை.



சாய்ந்தமருது கோரிக்கைக்கு செவி சாய்த்தமைக்கு பைஸருக்கு நன்றி தெரிவிப்பு

-ஊடகப்பிரிவு

சாய்ந்தமருதுவை தனியான நகரசபையாக பிரகடப்படுத்துமாறு நாம் விடுத்த கோரிக்கைக்கு செவிசாய்த்து அதற்கான வாக்குறுதியை தந்துள்ளமைக்கு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதோடு கல்முனை மாநகரசபை உள்ளடங்கிய பிரதேசங்களிலும் அதனை அண்டியுள்ள இடங்களிலும் எந்தவொரு சமூகத்திற்கும் எந்தவோர் ஊருக்கும் பாதிப்பு வந்திடாத வகையில் கருமங்களை மேற்கொள்ளுமாறும் அவர் வேண்டினார்குறிப்பாக மருதமுனைக்கெ தனியான சபையொன்றையும் கல்முனையில் தமிழ் மக்கள் அதிகமாக வாழுமிடங்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்கான ஒரு சபையொன்றினையும் உருவாக்குமாறும் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள் விடுத்தார்.

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைஅதிகளவு சனத்தொகையையும் பரப்பளவையும் கொண்ட சபையாகும்எனவே அந்தப் பிரதேச சபையை புதுக்குடியிருப்புப் பிரதேச சபைஒட்டுச்சுட்டான் பிரதேசசபை என இரண்டாகப் பிரித்து இரண்டு சபைகளை ஏற்படுத்தி தருமாறும் வேண்டினார்.

அதே போன்று மன்னாரில் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட மாந்தை மேற்கு சபையைப் பிரித்து அங்கு இன்னுமொரு பிரதேச சபையாக மடுப்பிரதேச சபையை உருவக்குமாறும்முசலிப் பிரதேச சபையின் எல்லையில் இருக்கும் மறிச்சுக்கட்டியை பிரதேச சபையாக உருவாக்க நடவடிக்கைஎடுக்குமாறும் சிலாவத்துறையையும் அவை சார்ந்துள்ளஇடங்களையும் உள்ளடக்கி சிலாவத்துறை நகரசபையாகவும் பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

திருமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச சபைசாம்பூர்தோப்பூர் கிய பகுதிகளை உள்ளடக்கிய பெரிய பிரதேச சபையாகும்எனவே அங்கு மிழ் மக்களுக்கென தனியான ஒருசபையையும் தோப்பூர் மக்களுக்கு ஒரு பிரதேச சபையையும் மூதூரை நகர பையாகவும் ஆக்க வேண்டும் என்றார்.

குச்சவெளி பிரதேச சபையும் பாரிய நிலப்பரப்பைகொண்டதாக உள்ளதுபுல்மோட்டையையும் இந்தப் பிரதேசசபை தன்னகத்தே கொண்டுள்ளதால் அதனையும் இரண்டாகப் பிரித்து இரண்டு சபைகளை ருவாக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

அத்துடன் புத்தளம் மன்னார் வவுனியா ஆகிய நகர சபைகளை மாநகர சபையாக பிரகடனப் படுத்துமாறும் சம்மாந்துறைப்பிரதேச சபையை நகர சபையாக மாற்றுமாறும் அமைச்சர் வேண்டிக் கொண்டார்.

அது மாத்திரமன்றி கற்பிட்டி பிரதேச சபையை கற்பிட்டி நகரசபையாக மாற்றி அந்தப்பிரதேசத்திலுள்ள காயாமோட்டையை பிரதேச சபையாக மாற்றுமாறும் கோரினார்.

அமைச்சர் பைசர் முஸ்தபா வடக்குக் கிழக்கில் பாலங்கள் நிர்மாணிப்பதற்கு உதவியமைக்கும் அமைச்சர் ரிஷாட் தியுதீன் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்