வேலியை மேய அழைக்கும் பயிர்கள்

நெடுங்கேணி பாடசாலை ஒன்றில் க.பொ. த. சாதாரணப் பரீட்சை எழுதும் மாணவியை வவுனியாவிலிருந்து சென்ற நபர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயன்றபோது பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று முறியடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று 11 முற்பகல் வவுனியா வடக்கு நெடுங்கேணி, சிவாநகர் பகுதியிலுள்ள காட்டுப்பகுதி ஒன்றிற்கு குறித்த பாடசாலை மாணவியை வருமாறு சந்தேக நபர் அழைத்துள்ளார். இதனையடுத்து மாணவி தனது நண்பியுடன் துவிச்சக்கர வண்டியில் சென்று குறித்த இளைஞனுடன் காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளார். இதனை அப்பகுதியில் இருந்து அவதானித்த பெண் ஒருவர் உடனடியாக நெடுங்கேணி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் இருமாணவிகள் குறித்த இளைஞனையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் காதலர்களென ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது
(அஸீம் கிலாப்தீன்)

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்