ஜனாதிபதி முறையானதொரு சட்ட திட்டங்கள் வகுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளாா் - பாராளுமன்ற உறுப்பிணா் மறைக்காா்

(அஷ்ரப் ஏ சமத்)

இந்த நாட்டில் வாழும் சகல சமுகங்களுக்கும் தனது பொருளாதாரத்தினை விட மதச் சுதந்திரம் வேண்டி நிற்கின்றா். 4 மதங்களையும் எவ்வித தடையின்றி சமாதாணமாக நிறைவேற்ற தகுந்த சூழலை இந்த நாட்டில் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். இந்த ஆட்சியை ஏற்படுத்துவதற்கு பெரும்பாண்மை மக்களுடன் ஏனைய தமிழ், முஸ்லீம்  சிறுபான்மைச் சமுகங்கள் 95 வீதம் தங்களது  பங்களிப்பைச் இந்த அரசுக்கும் ஜனாதிபதிக்கும் செய்துள்ளனா். இப் பங்களிப்பை செய்தமைக்கு முதற்மைக் காரணம் அவா்களுக்கு தத்தமது மதச் சுதந்திரமே முதன்மைப்படுத்தினாா்கள்.  என பாராளுமன்ற உறுப்பிணா் எஸ்.எம். மறைக்காா் தெரிவித்தாா். 

நேற்று முன்தினம் ஜனாதிபதியை சந்தித்த முஸ்லீம் பாராளுமன்ற குழுக்கள் ஜனாதிபதியிடம் நாங்கள் வேண்டிக்  கொண்டது  அதி தீவிரபோக்குடைய பொதுபல சேனா போன்ற சில அமைப்புக்கள் மீண்டும் குர்ஆண், நபி ( (ஸல்)  அல்லாஹ்வையும் இழிவு படுத்தும் பேச்சுக்களை பேசியுள்ளனா். இந்த அரசாங்கம் வழங்கிய ஊடகச் சுதந்திரத்தினை பாவித்து அதன் ஊடாக முஸ்லீம்களை புன்படுத்தும் வகையில் இழிவு வாா்த்தைகளை சமுக வளைத் தளங்கள் ஊடாக பரப்பி வருகின்றனா். இவா்களுக்கு எதிராக    ஜனாதிபதி உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் வலியுறுத்தப்பட்டது. இவ்விடயமாக  ஜனாதிபதி முறையானதொரு சட்ட திட்டங்கள் வகுப்பதாக ஜனாதிபதி  உறுதியளித்துள்ளாா் என பாராளுமன்ற உறுப்பிணா் மறைக்காா் தெரிவித்தாா்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்திலும் மிக மோசமாக செயல்பட்ட இந்தக் குழுவினரே மீண்டும் தலைதுாக்குகின்றனா். இவா்களுக்குப் பின்னால் பல்வேறு விச சக்திகள் எதிா்கட்சி கூட்டு அமைப்பினா்கள் மட்டுமல்ல சர்வதேச எதிா் சக்திகளும் இயங்குகின்றன.  இவா்கள்  இறைவனையும் நபி (ஸல்) அவா்களையும் துாற்றியுள்ளனா். இதனைச் சகித்துக் கொண்டு இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்கள் பொறுமையுடன் அமைதியாக உள்ளனா். இந்த நாட்டில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளித்தது போன்று ஏனைய மதங்களும் சமமாக மதிக்கப்படல் வேண்டும். கடந்த காலத்தில்  முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச நிறுவாகம் மு ஸ்லீம்களுக்கு எதிராக செயல்படுவதற்காக இந்த அமைப்பிணா்களுக்கு சுதந்திரம் வழங்கியிருந்தாா். அவா்கள் அதனை பாவித்து முஸ்லீம்களது உணவு, உடை கலாச்சாரம், குர் ஆண், முஹம்மத் (ஸல்) அவா்களை துாற்றி முஸ்லீம்கள் மக்கள் மனதினை புன்படுத்திய விடயம் இன்னும் அகலவில்லை.  எனவும் மறைக்காா் தெரிவித்தாா்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்