தோப்பூரில் 77 வீடுகளும்; சம்மாந்துறை பிரதேசத்தில் 24 வீடுகளும் முஸ்லிம் எய்ட் இனால் கையளிக்கப்பட்டன.

அஸீம் கிலாப்தீன்)
மிகவும் வறியபின்தங்கிய விளிம்பு நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை கையளிக்கும் இரண்டு நிகழ்வுகள் இன்று (8)  நடைபெற்றுள்ளன. முஸ்லிம் எய்ட் இனால் அமைக்கப்பட்ட 24 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறையில் காலை 9:30 மணியளவிலும் 77 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு தோப்பூர் கிராமத்தில் பிற்பகலிலும் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மலையடிக் கிராமம்கல்லரைச்சல்தென்னம்புள்ள கிராமம்கருவாட்டுக் கல் கிராமங்களைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கும் தோப்பூர் உப பிரதேச செயலப் பிரிவில் அடங்கும்  பாலதோப்பூர்தோப்பூர். அல்லை நகர் மேற்கு மற்றும் கிழக்குஇக்பால் நகர்ஆசாத் நகர்,ஜின்னா நகர்பாரதிபுரம்    கிராமங்களைச் சேர்ந்த 77குடும்பங்களுக்கும் மேற்படி வீடுகள் வழங்கப்பட்டன.
  
பாரம்பரிமான இக்கிராமங்கள் யுத்தம் மற்றும் குறை அபிவிருத்தி காரணமாக பல ஆண்டுகள் பாதிக்கப்பட்ட கிராமங்கள் ஆகும். மேற்படி கிராமங்களில் வாழும் மிகவும் வறிய மக்கள் பிரிவினருக்கே இவ்வீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. விதவைகள்விசேட தேவையுடையவர்கள்நலிவுற்ற குடும்பங்கள் பல இத்திட்டத்தில் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

பிரதேச செயலர்கள்பிரதேச செயலக ஊழியர்கள்முஸ்லிம் எய்ட் இலங்கைக்கான பணிப்பாளர்நலன் விரும்பிகள்சமய,சமூகத் தலைவர்கள்சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இக் கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்