Skip to main content

இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து

  இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து –  அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமய விவகாரங்களுக்கு தலா 4% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


நாட்டில் அனைத்து இன மக்களும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்கு தற்போதுதான் ஆரம்பித்துள்ளார்கள். ஆகவே அவர்களின் பழைய கசப்பான நினைவுகளை மீட்டாத வகையிலும், அங்கு இனவாதம் தலைதூக்காத வகையிலும் இந்த நல்லாட்சி அரசாங்கம் திட்டங்களை வகுத்து மக்களின் சமய ரீதியான சுதந்திரங்களை முழுமையாகப் பாதுகாக்க உரிய வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி எனத உரையை ஆரம்பிக்கின்றேன்.
2017ஆம் ஆண்டுக்காக சமய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 2.3பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பௌத்த சமய விவகாரங்களுக்கு 82%, இந்து சமய விவகாரங்களுக்கு 9%, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமய விவகாரங்களுக்கு தலா 4% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  2015 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஒருவர் இல்லாத சந்தர்ப்பத்தில் கூட 157 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இன்று முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும் வெறுமனே 98 மில்லியன் ரூபா நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 60மில்லயன் ரூபா அல்லது 40% குறைக்கப்பட்டுள்ளமை இலங்கையில் சமய விடயத்தில் ஒரு பாரிய பாரபட்சமும், நீதியற்ற தன்மையும் நிலவுகின்றதை வெளிப்படுத்துகின்றது. 
இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் அவரவர்களின் சமய ரீதியான, கலை, கலாசாரா விடயங்கை இடையூறுகள் இன்றி பின்பற்றி இந்த நல்லாட்சி காலத்தில் ஒற்றுமையாக வாழ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இனவாத செயற்பாடுகளை இல்லாதொழிக்க உரிய சட்டநடவடிக்கைகள் தாமதமின்றி எடுக்கபடவேண்டும் என்று நான் இங்கே கேட்டுக் கொள்கின்றேன்.
இம்மாதம் 6 ஆம் திகதி ஆரம்பித்த ஜீ.சீ.ஈ சாதாரணதர பரீட்சையின் முதலாவது பாடத்திற்காக சென்ற முஸ்லிம் மாணவிகள்,முல்லைத்தீவு மாவட்டம் தண்ணீருற்று பாடசாலை, திருகோணமலை மாவட்டத்தின் முல்லிப்பொத்தானை பாடசலை பொன்ற பல இடங்களில் பர்தாக்களை கழட்டிவிட்டு வருமாறு அங்குள்ள அதிகரிகளினால் பணிக்கப்ட்டடுள்ளரர்கள். அதிகாரிகளிடம் காரணம் கேட்கப்பட்டபோது சுற்றுநிருபம் வந்துள்ளதாக தொிவித்துள்ளனர். எமது நாட்டில் இதுவரை காலமும் முஸ்லிம்கள் இவ்வாறுவழிநடாத்தப்படவில்லை அதனால் முஸ்லிம் மக்கள் பெரும் மனவேதனைக்கு உள்ளாகியுள்ளார்கள்.ஆகவே முஸ்லிம்களாகிய எங்களுக்கு எங்களுடைய மார்க்கம் சார்ந்த வழிமுறைகளை தடங்கள்களின்றி மேற்கொள்வதற்கு நடவடிக்கை இந்த நாட்டில் உறுதிசெய்யப்பட வேண்டும்.
பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்கள் இஸ்லாமிய தனியார்ச்சட்டத்தில் குறைகள் உள்ளனவென்று அரசியமைப்பின் உறுப்புரை 16(1)னை நீக்குமாறும் கோரி வருகின்றன. இந்தக் கோரிக்கை மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொழுத்துவதற்கு ஒப்பானதாகும்.
அரசியமைப்பின் உறுப்புரை 16(1) தான் முஸ்லிம்களின் திருமண விவாகரத்துச் சட்டத்திற்கும், தேச வழமைச் சட்டத்திற்கும், கண்டியத் திருமணச் சட்டத்திற்கும், விகாரைகளின் காணி உரிமைகளையும் உறுதிசெய்யும் ஒரு ஏற்பாடாகும். இது அலங்கையர்களாகிய எமது இறையான்மையை உறுதிசெய்யும் ஒரு உறுப்புரையாகும். இஸ்லாத்தின் இறுக்கமான ஒழுக்கக் கோட்பாட்டைச் சகித்துக்கொள்ள முடியாத சியோனிச மேற்குலக தீயசக்திகள் தன்னினப் புணர்ச்சியையும், விபச்சாரத்தையும், திருமணப் பந்தத்துக்கு அப்பாற்பட்ட உறவினையும் ஊட்டி வளர்க்க இஸ்லாமிய திருமணச் சட்டத்தினை அகற்றக்கோருவது எமக்குப் புரியாத விடயமல்ல.
இலங்கையிலுள்ள இஸ்லாமிய திருமணச்சட்டத்தில் இறைவனின் சட்டங்களும், மனிதன் இயற்றியச் சட்டங்களும் கலந்துள்ளன. இறைவனின் சட்டத்தில் கைவைக்க யாருக்கும் அதிகாரமில்லை.
காதிமார்களின் நியமனத்திற்கான தகைமைத் தேவைப்பாடுகள் அதிகரிக்கப்படல் வேண்டும். சில காதிமார்கள் பாதிக்கப்பட்ட பெண்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் மனோபாவத்துடனும் நடப்பதே இப்பிரச்சினைக்கான மூலக்காரணமாகும். வழக்கினை உட்கார்ந்து விசாரிக்கத் தெம்பில்லாத வயது முதிர்ந்த, இஸ்லாமியச் சட்டங்கள் பற்றிய அறிவோ கல்வி அறிவோ அற்ற சில காதிமார்கள் இப் பொறுப்பு வாய்ந்த அமானிதம் காக்கும் பொறுப்பிற்குத் தெரிவாகி அநியாயம் புரிந்து வருவது ஓர் அசிங்கமான உண்மையே.
சீதனம் அல்லது கைக்கூலி என்ற வாசகம் பதிவேட்டில் இடம்பெற்றிருப்பது உடனடியாக நீக்கப்படல் வேண்டும். இஸ்லாத்தில் சீதனம் இல்லை. பெண்ணுக்கு ஆண் தான் மஹர் கொடுக்க வேண்டும். இந்தச் சீதன ஏற்பாடு இஸ்லாமியப் பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பெரிய அநீதியாகும்.
பெண்களின் திருமணத்திற்கான ஆகக்குறைந்த வயது தொடர்பாக சமய, சமூகத் தலைமைகள் கலாந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஐக்கிய அமொிக்காவின் சில மாகாணங்களில் 14 வயது திருமண வயதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் திருமணத்திற்கு உடலால் மாத்திரம் அன்றி மனதாலும், சூழ்நிலையாலும் தயாராக வேண்டும். திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம், திருமணம் என்பது உடலுறவுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. அதில் மறுமணம், வாரிசுரிமை, குடும்பப் பராமரிப்பு, கணவனின் அமானிதப் பராமரிப்பு எனப் பல விடயங்களுள்ளன.
இஸ்லாத்தில் ஆண்கள் கள்ளத் திருமணம் செய்யவோ கள்ளத் தொடர்புவைத்திருக்கவோ முடியாது. ஆனால் பலதாரமணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை அறியாதவர்கள் இஸ்லாத்தைக் குறை கூறுகின்றனர். ஒருசிலரைப் பார்த்து இஸ்லாத்தை எடைபோடவேண்டும், குர்ஆனும் ஹதீதும் என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும்.
இஸ்லாத்தில் பலவந்தத் திருமணம் இல்லை. திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும்மென இஸ்லாம் கூறுகின்றது. இது தெரியாமல் இஸ்லாத்தினைக் குறைகூறும் இந்த அரைவேக்காடுகள் முதலில் தங்கள் தலைகளையும், மார்புகளையும் குர்ஆன் கூறுவது போல் மறைத்துக் கொள்ளட்டும். ஐநா சாசனங்கள் நிறைவேற்றப்பட 1400 வருடங்களுக்கு முன்னரே இஸ்லாத்தில் பெண்கள உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனக்குப் பிடிக்கவில்லை என்றால் அவள் தனது கணவனை விவாகரத்துச் செய்யும் உரிமையை பெண்களுக்கு முதலில் வழங்கிய மார்க்கம் இஸ்லாமாகும்.
இஸ்லாத்தில் பெண்களைப் பராமரிக்க வேண்டிய முழுப்பொறுப்பும் ஆணவனைச் சார்ந்ததாகும். பெண்கள் மாணிக்கங்களைப் போன்றும் மரகதங்களைப் போன்றும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். அறியாமைக்காலப் பெண்களைப்போல அந்நியருக்கு அழகை விற்க இஸ்லாம் பெண்களை அனுமதிக்கவில்லை எனவே இஸ்லாமியத் திருமணக் கூட்டத்தில் இறைவனின் சட்டங்களை மாற்ற எந்த ஒருவருக்கும் உரிமையில்லை, ஐநாவுக்கும் உரிமையில்லை.
இஸ்லாத்தின் ஒளியை வாயால் ஊதி அனைத்துவிட நினைக்கும் அற்பர்களுக்கு துனைபோகும் சமயத் தலைவர்களும், அரச சார்பற்ற நிறுவன ஆண்களும், பெண்களும் இறைவனைத் தனியே மஹ்ஷரில் சந்திக்கும் நாளை நினைத்து அஞ்சிக்கொள்ளட்டும்.


சுற்றுலாத்துறை
கௌரவ சபாநாயகர் அவர்களே!
2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளும் நாட்டின் உல்லாசப்பயணிகள் வருகையானது சுமார் 15 சதவீதத்தினால் அதிகாரித்துள்ளது. இது சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பெரும் வலுவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் இங்கையில் பாதுகாப்பாக வந்து போகக்கூடிய சூழ்நிலையும் தற்போது நிறைந்து காணப்படுகிறது. இது எம் அனைவருக்கும் பெருமிதமான ஓர் விடயமாகும்.
பின்னவலை, பேராதனை தாவரவியல் பூங்கா, கொழும்பு நூதனசாலை போன்ற  இலங்கையின் சுற்றுலாத்தளங்கள்  நாட்டின் சுற்றலாத்துறைக்கு பெரும் பங்களிப்புச் செய்கின்றன. அதுமட்டுமல்லாமல் இலங்கை நாட்டின் பெருமை மிக்க ஸ்தளங்களாகவும் காணப்படுகின்றன. அதுபோன்று வன்னி மாவட்டத்திலும் முக்கிய சுற்றுலாத்தளங்கள் விருத்திசெய்வதில் கூடிய கவனம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
முஸ்லிம் சமய கலாசார
முஸ்லிம் சமய கலாசார விடயங்களைப் பொறுத்தவரை வக்பு சபை அங்கத்தவர்கள் நியமணங்களில் கடந்த பல ஆண்டுகளாக அதிக அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதனையும் வக்பு சபை அங்கத்தவர்கள் அரசில்வாதிகளின் தலையீடுகளுக்கு ஏற்ப தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதனையும் அவதானிக்க முடிகிறது.
வக்பு நியாய சபை போன்றே வக்பு சபை அங்கத்தவர்களையும் உரிய தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு சுயாதீனமாக நீதிச் சேவை ஆணைக்குழுவின் கீழ் நியமிக்கப்படவேண்டும் என நான் கேட்டுக் கொள்வதுடன் சபை அங்கத்தவர்களின் கொடுப்பனவுகளையும் மறுபரிசீலணை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
·       வக்புசபையில்ஏராளமானவழக்குகள் நிலுவைலியிருக்கின்றன.
·       முன்னையஆட்சிகாலத்தில்வக்புசபையானதுதனதுஅதிகாரஎல்லைகளுக்குஅப்பால்சென்றுசெயற்பட்டசிலசந்தர்ப்பங்களும்உள்ளனஅவ்வாரானசெயற்பாடுகளும்நெறிப்படுத்தப்படவேண்டும்.
Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச