உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப்பொன்விழா மாநாடு - 2016 இம்மாதம் 11, 12, 13 ஆம்திகதிகளில்(சுஐப். எம். காசிம்)
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப்பொன்விழா மாநாடு இம்மாதம் 11 ஆம், 12 ஆம், 13 ஆம் திகதிகளில் கொழும்பு-7 சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மன்றமண்டபத்தில் நடைபெறுகிறது. இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வின் தொடக்க விழா எதிர்வரும் 11 ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 04 மணி முதல்இரவு 08 மணிவரை அல்ஹாஜ் சூர்மௌலானா அரங்கில் இடம் பெறவுள்ளது.
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் காப்பியக்கோ. ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்தவிழாவில்பிரதம அதிதியாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும், சிறப்பு அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்சிரஸ் தலைவர் அமைச்சர், ரிஷாத்பதியுதீன், மக்கள் காங்கிரசின் தவிசாளர் பிரதி அமைச்சர் அமீர்அலி, தமிழ்நாடு மனித நேயமக்கள்கட்சித்தலைவர் எம். .  ஹிருல்லாஹ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
வரவேற்புரையை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் பொருளாளர் கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் அவர்கள்நிகழ்த்துகின்றார்.
தொடக்கவுரையை அமைச்சர் ரிஷாத்பதியுதீனும், தலைமையுரையை காப்பியக்கோ. ஜின்னாஷரிபுத்தீனும் ஆற்றுகின்றனர். ஆசி உரைகளை மலேசியாவைச்சேர்ந்த மௌலானா முகம்மது அப்துல்காதிர் அல்காதிரிஅவர்களும், சங்கைக்குரிய தொலஸ்வல தம்மிக தேரோஅவர்களும், அருட் திரு பாஸ்டர் ஜோன்லோகநாதன்அவர்களும், இந்து மதகுருக்கள் சங்கத்தின் தலைவர் சிவஸ்ரீகே. வைத்தீஸ்வரகுருக்கள் அவர்களும் வழங்குகின்றனர்.
சிறப்புரைகளை தமிழ்நாடு தொண்டு இயக்கத்தின் தலைவரும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவருமான பேராசிரியர் சே. மு. முகம்மது அலி அவர்களும் தமிழ்நாடு தமிழ் பல்கலைக்கழகத்துணை வேந்தர் பேராசிரியர் . பாஸ்கரன் அவர்களும் நிகழ்த்துகின்றனர்.
இந்த தொடக்க விழாவின் சிறப்பம்சமாக மாநாட்டு மலர்வெளியிட்டு வைக்கப்படுகின்றது. இந்த சிறப்புமலரை அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடமிருந்து புரவலர் ஹாஷிம் உமர் பெறுகிறார். அதன் பின்னர் ஆய்வுக்கோவையை பிரதி அமைச்சர் அமீர்அலியிடமிருந்து காஸிம் பரீட் ஜாபர்தீன்பெறுகிறார். தொடர்ந்து விருது வழங்கல் இடம்பெருகின்றது. அதன் பின்னர் அதிதிகளில் ஒருவரான பேராசிரியர் எம். எச் ஜவாஹிருல்லாஹ் உரையாற்றுகிறார். பிரதமர் ரணில்விக்ரமசிங்கவின் உரையை அடுத்து நன்றியுரையுடன் முதல்நாள் தொடக்க விழா இனிதே நிறைவு பெறுகிறது. நன்றியுரையை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகயவத்தின் உபசெயலாளர் கவிஞர் நியாஸ். . சமத் பகர்கின்றார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்