கொழும்பில் 175 பள்ளிவாசல்கள், இணைந்து நிறைவேற்றிய முக்கிய தீர்மானம்முஸ்லிம்
தனியார்
சட்­
டத்தில்
குர்ஆன்
மற்றும்
ஹதீ­
ஸுக்கு முரணான எந்தவொரு
திருத்தங்களும் மேற்கொள்ளப்படக்­
கூடாது என அரசாங்கத்தை வலியு­
றுத்தும் தீர்மானமொன்றினை
கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள்
சம்மேளனம் நிறைவேற்றியுள்ளது.
நேற்றுமுன் தினம் இரவு
கொழும்பு மருதானை ஸாஹிரா
பள்ளிவாசலில் நடைபெற்ற
கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள்
சம்மேளனத்தின் கூட்டத்திலே இத்தீர்­
மானம் மேற்கொள்ளப்பட்டதாக சம்மே­
ளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான்
தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள்
சம்மேளனத்தில் 12 பள்ளிவாசல்­
களின் சம்மேளனங்கள் அங்கம் வகிப்ப­
துடன் இவற்றில் சுமார் 175 பள்ளிவா­
சல்கள் உள்ளடங்குகின்றன.
நேற்று முன்தினம் நடைபெற்றகூட்­
டத்தில் பள்ளிவாசல்கள் சம்மேள­
னத்தைச் சேர்ந்த சுமார் 300 பிரதிநி­
திகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மேலும் நாட்டில் சமகா­
லத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக
கடும்போக்கு பேரினவாதக் குழுக்­
களினால் முன்னெடுக்கப்பட்டு
வரும் நடவடிக்கைகள் தொடர்பில்
ஆராயப்பட்டதுடன் பள்ளிவாசல்களின்
பிரதிநிதிகள் அவற்றை எவ்வாறு
எதிர்கொள்வது என்பது பற்றியும்
ஆராயப்பட்டது.
பள்ளிவாசல்களின் நிர்வாகிக­
ளுக்கு விழிப்புணர்வுகளை வழங்­
குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்­
டது.
தொடர்ந்தும் சந்திப்புகளை
மேற்கொண்டு பிரச்சினைகளை
ஆராய்ந்து தீர்வுகள் பெற்றுக்
கொள்வதெனவும்
தீர்மானிக்கப்பட்டது என்றும்
தெரிவித்தார்.
நாட்டில் சமூகத்துக்கு எதிரான அவ­
சர நிலைமைகள் மற்றும் பரப்பப்படும்
பொய் வதந்திகளின் போது செயற்ப­
டுவதற்கென ஒவ்வொரு பள்ளிவா­
சலில் இருந்தும் 3 பிரதிநிதிகள்
அடங்கிய குழுவொன்றும் நியமிக்­
கப்பட்டது.
புதிய அரசியல் அமைப்பு ஆக்­
கத்தில் முஸ்லிம் சமூகத்தின் பாரா­
ளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிப்ப­
டையாத வகையில் கவனம் செலுத்­
துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்வில் கொழும்பு மாவட்ட பள்ளி­
வாசல்கள் சம்மேளனத்தின் செய­
லாளர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்,
சாபிர் ஹாசிம், அஸ்லம் ஒத்மான்
ஆகியோரும் உரைநிகழ்த்தினர

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்