BREAKING NEWS

முஸ்லிம்க‌ள் ஒன்றிணைந்து ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வை வ‌ட‌க்குக்கு அழைத்து பேச‌ வைக்க‌ வேண்டும்

பேரின‌வாதிக‌ளின் நிக‌ழ்ச்சி நிர‌லை இன்றைய‌ ஜ‌னாதிப‌தியும் பிர‌த‌ம‌ரும்  க‌ன‌ க‌ச்சித‌மாக‌ கொண்டு செல்கிறார்க‌ள் என்ப‌த‌யே ஜ‌னாதிப‌தியின் வில்ப‌த்து ச‌ம்ப‌ந்த‌மான‌ அறிவித்த‌ல் காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து. அக்க‌ட்சி மேலும் தெரிவித்த‌தாவ‌து

90ம் ஆண்டு வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ள் அன்றைய‌ ஐ தே க‌ ஆட்சியின் போது புலிகளால் அனைத்த உறிஞ்ச‌ப்ப‌ட்டு வெளியேறிய‌ இட‌ங்க‌ள் 20 வ‌ருட‌ங்க‌ளில் காடாகிப்போன‌து என்ப‌தை நாடு அறியும். இந்த‌ நிலையில் வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ள் மஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வின் சிற‌ந்த‌ வ‌ழி ந‌டாத்த‌லில் யுத்த‌ம் நிறைவு பெற்ற‌பின் தாம் வ‌ழ்ந்த‌ இட‌ங்க‌ளுக்கு மீண்ட‌ போது அவை காடாக‌ காட்சிய‌ளித்த‌ன‌. இத‌ன் கார‌ண‌மாக‌ பெசில் ராஜ‌ப‌க்ஷ‌வின் உத‌வி மூல‌ம் முஸ்லிம்க‌ள் அவ‌ற்றை துப்ப‌ர‌வு செய்து கொஞ்ச‌ப்பேர் மீள் குடியேறிய‌ போதும் அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள் அற்ற‌ நிலையிலேயே வாழ்வை ஆர‌ம்பித்த‌ன‌ர்.
இந்நிலையில் முஸ்லிம்க‌ள் மீள் குடியேறுவ‌தை த‌டை செய்ய‌ வேண்டும் என்ற‌ வெளிநாட்டு ட‌ய‌ஸ்போராக்க‌ளின் வேண்டுத‌லை க‌ட‌ந்த‌ அர‌சின் அமைச்சில் இருந்த‌ ச‌ம்பிக்க‌ போன்ற‌வ‌ர்க‌ள் பொதுப‌ல‌ சேனாவை ப‌ய‌ன் ப‌டுத்தி வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ளை அச்சுறுத்தின‌ர். இத‌ற்கு ப‌க்க‌ ப‌ல‌மாக‌ சில‌ ஊட‌க‌ங்க‌ளும் இன‌வாதிக‌ளுக்கு துணை போகின‌.  ஆனாலும் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ அர‌சு மேற்ப‌டி இன‌வாதிக‌ளை க‌ண்டு கொள்ள‌வில்லை.

இந்த‌ உண்மைக‌ளை உண‌ராத‌ இல‌ங்கை வாழ் முஸ்லிம்க‌ள் உண‌ர்ச்சியை ம‌ட்டும் பாவித்து எடுத்த‌ முடிவு கார‌ண‌மாக‌ ம‌ஹிந்த‌ தோற்க‌டிக்க‌ப்ப‌ட்டு ந‌ல்லாட்சி கொண்டுப் வ‌ர‌ப்ப‌ட்டு அந்த‌ அர‌சு இன்று மீண்டும் வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ளை அக‌திக‌ளாக்கும் பிர‌க‌ட‌ன‌மே ஜ‌னாதிப‌தியின் வில்ப‌த்து பிர‌க‌ட‌ன‌மாகும்.

ஆக‌வே ஜனாதிப‌தி அவ‌ர்க‌ள் இது விட‌ய‌த்தை முஸ்லிம்க‌ளின் அர‌சிய‌ல் த‌லைமையான‌ அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீனுட‌ன் இணைந்து பேசி வில்ப‌த்து பிர‌க‌ட‌ன‌த்தை மீள் ப‌ரிசீல‌னை செய்ய‌ வேண்டும். இல்லாவிட்டால் வ‌ட‌மாகாண‌ முஸ்லிம்க‌ள் ஒன்றிணைந்து ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வை வ‌ட‌க்குக்கு அழைத்து இது விட‌ய‌த்தை அவ‌ரிட‌ம் விள‌க்கி இத‌ன் உண்மைத்த‌ன்மையை அவ‌ர் பேச‌ வைக்க‌ முய‌ற்சிக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி வ‌ட‌மாகாண‌ முஸ்லிம் சிவில் ச‌மூக‌த்தை கேட்டுக்கொள்கிற‌து என‌ உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்தில் புத்தாண்டு கொண்டாடலாம் ! மௌலவி முபாறக்

https://www.facebook.com/srilanka.thawheeth?fref=nf


ஸ்ரீ லங்கா உலமா கட்சிக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வுக்குமிடையில் சிநேகபூர்வமான சந்திப்பு


ஸ்ரீ லங்கா உலமா கட்சிக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) வுக்குமிடையில் சிநேகபூர்வமான சந்திப்பு நடைபெற்றது. இதன் போது ஸ்ரீ ல தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அதன் தலைவர் A.M.  ரியால், பொதுச்செயலாளர் அப்துர்ராஸிக், துணை தலைவர் பர்ஸான்,துணை செயலாளர்களான ரஸ்மின், ஹிஷாம், முயீன் ஆகியோரும் உலமா கட்சி சார்பில் அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி, இணைச்செயலாளர் இஸ்ஸ்தீன் (முன்னாள் கொழும்பு மாநகர உறுப்பினர்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த முனையும் முஸ்லிம்களுக்கெதிரான அரசின் சதிக்கெதிராக ஸ்ரீ த ஜமாஅத் மேற்கொண்ட ஜனநாயகரீதியிலான ஆர்ப்பாட்டங்களுக்கு உலமா கட்சித்தலைவர் தமது கட்சி சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். அத்துடன் இவ்வாறான மார்க்க ரீதியிலான அமைப்புக்கள் அனைத்தும் சமூக பிரச்சினைகளின் போது மௌனமாக இருக்கும் போது ஸ்ரீ தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே அக்கறை காட்டியமை அவர்களின் சமூக அக்கறையை காட்டுகிறது எனவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து இலங்கை அரசியலின் சம கால நிலைமை, சமூகத்தின் எதிர் காலம், தேர்தல் முறை மாற்றத்தில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பாதிப்பு போன்ற பல விடயங்கள் சிநேகபூர்வமாக கலந்துரையாடப்பட்டன.


ஜனாதிபதி ஊடகப்பிரிவு இனவாதிகளின் கருத்துக்களை பிரசாரம் - முஜீபுர் றஹ்மான்

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இனவாதிகளின் கருத்துக்களை பிரசாரம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் குறறம் சாட்டியுள்ளார்.

கடந்த வாரம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போது பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரதேரர் முஸ்லிம்கள் தொடர்பாக  ஒரு   மோசமான இனவாதக் கருத்தை கருத்தை வெளியிட்டுள்ளார்.


நல்லிணக்கத்தைத் தகர்க்கும் இந்த மோசமான கருத்து அடங்கிய வீடியோவை ஜனாதிபதி ஊடகப்பிரிவு சகல ஊடகங்களுக்கும் வழங்கியிருந்தது. ஒரு சிறுபான்மை இனத்தின் மீது அபாண்டமாக வெளியிடப்பட்ட கருத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு மக்கள் மயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முஜீபுர் றஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

முஜீபுர் றஹ்மான் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.


                                                                                                                                        29.12.2016
திரு. மைத்திரிபால சிரிசேன
அதிமேதகு ஜனாதிபதி,
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு
கொழும்பு 01.

அதிமேதகு  ஜனாதிபதி அவர்களுக்கு,

இனவாதிகளின் கருத்துக்களை பிரசாரம் செய்யும் தாங்களின் ஜனாதிபதி ஊடக பிரிவு தொடர்பாக

கடந்த 22.12.2016 அன்று, தொல்பொருள் பெருமதிவாய்ந்த வரலாற்றுத் தளங்களைப் பாதுகாப்பது தொடர்பாக தாங்களின்; உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் முஸ்லிம்கள் தொடர்பாகவும் மற்றும் இஸ்லாமிய போதனைகள் தொடர்பாகவும் உண்மைக்கு புறம்பான இனவாதக் கருத்துக்களை உங்கள் முன்னிலையில் வெளியிட்டிருந்தார்.

இந்நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக மோசமான நச்சுக்கருத்துக்களை பரப்பி வரும்  ஞானசார தேரர் தொல்பொருள் பெருமதிவாய்ந்த வரலாற்றுத் தளங்களை அழிப்பதற்கு முஸ்லிம்களுக்கு இஸ்லாம் போதனை செய்வதாக அபாண்டமான இனவாத ரீதியிலான கருத்தை  வெளியிட்டிருந்தார்.

இந்த நாட்டில் வாழும் ஒரு சிறுபான்மை இனத்திற்கெதிராக ஞானசார தேரரினால் தாங்களின் முன்னிலையில் முன்வைக்கப்பட்ட இந்த நச்சுக் கருத்து  அடங்கிய வீடியோ பதிவை தாங்களது ஜனாதிபதி ஊடகப் பிரிவு சகல ஊடகங்களுக்கும் வெளியிட்டும் இருக்கிறது. தாங்கள் இந்நாட்டில் நல்லிணக்கம் கொண்ட நல்லாட்சியை உருவாக்க செயலாற்றும் இத்தருணத்தில் தாங்களது ஊடகப் பிரிவு நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் ஞானசார தேரரின் இனவாதக் கருத்தை நல்லாட்சியின்  அரசாங்க வளங்களைப் பயன்படுத்தி  அரச அங்கீகாரத்தோடு  மக்கள்      மயப்படுத்திக்கொண்டிருக்கிறது.

தாங்களது ஊடகப் பிரிவு வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ இனவாதிகளுக்கு உறுதுணையாய் அமையப்போகிறது என்பது   மட்டும் தெளிவாகிறது. நல்லாட்சிக்கும் நல்லிணக்கத்திற்கும் பொருத்தமில்லாத  இந்த செயற்பாடு தொடர்பாக  உங்கள் ஊடகப் பிரிவு மீது விசாரணை  ஒன்றை மேற்கொள்ளுமாறும் தயவாய் வேண்டுகிறேன்.


இவ்வண்ணம்
முஜீபுர் றஹ்மான்
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்,
கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவ

சமூகஜோதி எம்.ரீ அப்துல் கபூர் ஜே.பி - கலா பூஷண அரச விருதுஇலங்கை நாட்டின் கலைத்துறைக்கு உன்னதமான சேவையாற்றிய கலைஞர்களை கௌரவித்து “கலாபூஷணம்” அரசவிருது வழங்கும் வைபவம் அண்மையில் கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவின்போது நிந்தவூர் - 13ம் பிரிவிவைச் சேர்;ந்த சமூகஜோதி எம்.ரீ அப்துல் கபூர் ஜே.பி அவர்கள் “கலா பூஷண அரச விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தேசிய ரீதியில் பல்வேறுபட்ட சமூக நல அமைப்புகளில் முக்கியஸ்தராக இருந்து செயல்பட்டுவரும் இவர் அம்பறை மாவட்ட இஸ்லாமிய இளைஞர் சமூக நலப் பேரவையின் ஸ்தாபகத் தலைவராகவும், சிரேஷ்டபிரஜைகள் சம்மேளத்தின் கௌரவச் செயலாளராகவும் இருந்து வருகின்றார்.
நிந்தவூர் மத்தியஸ்த சபை அ.மா. ஊடக வியலாளர் போரம், அ.மா தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை, முஸ்லிம் மீடியா போரம் (கொழுமபு) அகில இன நல்லுறவு ஒன்றியம் (ரத்தினபுரி) சிரேஷ்ட பிரஜைகளின் தேசிய ஒன்றியம் (கொழும்பு) ரத்தின தீபா பவுண்டேஷன் ஊடகம் (கண்டி) என்பனவற்றின் கௌரவ உறுப்பினராகவும் இருந்துவரும் எம்.ரீ.ஏ. கபூர் அவர்கள் சிரேஷ்ட ஊடக வியலாளரும் ஒரு சமாதான நீதவானுமாவார்.
இவரது நீண்ட கால சமூக நல சேவைகள் சமாதான முயற்சிகள் மற்றும் இன ஒற்றுமைபோடு ஊடகத்துறைக்கு இவர் ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டுமுகமாக “சமுக நிலா”“சமுக ஜோதி”“சாமஸ்ரீ தேச சக்தி”“ரத்தின தீபம்”“தேசாபிமானி ஊடக விபூஷணம்” போன்ற பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சய்ந்தமருது ARM பாலர் பாடசாலையின் கலை நிகழ்வும் பட்டமளிப்பு விழாவும்( சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் )

இன்று சாய்ந்தமருது பிரதேசத்திலே மிவும் பிரசித்தம் வாய்ந்த பாடசாலையான ARM பாலர் பாடசாலையின் கலை நிகழ்வும் பட்டமளிப்பு விழாவும் மிக மிரம்மாண்டமான முறையில் சய்ந்தமருது LEE MERIDIAN HALL ல் இடம்பெற்றது.

இந்த ARM பாலர் பாடசாலையானது சுமார் 15 ஆண்டுகள் பழமையானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பல நுட்பங்களை கையாண்டு பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தி வருகின்றனர், இதில் இந்த வருடத்தில் சுமார் நுாற்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் கல்வி பயின்றனர் அதில் சுமார் 85 பிள்ளைகள் 2017 ம் ஆண்டில் முதலாம் தரத்தில் கல்வி பயில இந்த பாலர் பாடசாலை ஊடாக அனுப்பப்படும் ஒரு நிகழ்வாக இது இடம்பெற்றது

இந்நிகழ்வில் ARM பாலர் பாடசாலை மாணவர்களது உணர்வு பூர்வமான கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

அந்தவகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் அவர்கள் கலந்து கொண்டார்கள் அதனோடு சிறப்பு அதிதிகளும் கலந்து கொண்டனர்

இன்னும் ARM பாலர் பாடசாலையின் ஆசிரியர்களும் , மாணவர்களின் பெற்றோர்களும் , மாணவர்களும் , மற்றும் பல பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் முதலாம் தரத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு பிரதம அதிதி அவர்களால் பட்டமளிப்பு நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் பிரதம அதிதி அவர்களும் கெளரவிக்கப்பட்டார்கள்

கல்முனைகுடி வாழ் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்


( சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் )

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நாடு பூராகவும் டெங்கு நுளம்பின் பாதிப்பு அதிகளவாக காணப்படுகின்ற இந்த வேளையில் கல்முனை பிரதேசத்திலும் அதிகளவானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப் பட்டு அதர்க்கான சிகிச்சைகளை பெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ( 27 ) கல்முனைக்குடி பிரதேசத்தின் அனைத்து இடங்களிலும் மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் ஒன்று கல்முனை மாநகர சபை மற்றும் அனைத்து விளையாட்டு கழகங்களின் சார்பாக இடம்பெற உள்ளது.

இந்த டெங்கு நுளம்பு ஒழிக்கும் செயற்திட்டத்தில் பொது மக்களாகிய நீங்கள் உங்களது வீடுகளில் உள்ள டெங்கு நுளம்பு பெருகும் இடங்களான 

தேங்கி நிற்கும் சுத்தமான நீரில் டெங்கு நுளம்புகள் முட்டையிடுகின்றன. 
உதாரணமாக குறும்பை மட்டைகள், யோகட் கோப்பைகள், டயர்கள், பூச்சாடிகள், வடிகான்கள் 
போன்ற மேலே குறிப்பிட்ட பொருட்களை சுத்தம் செய்து அந்த கழிவுப் பொருட்களை நாளை ( 27 ) ம் திகதி உங்கள் வீதிகளில் வரும் விசேட டெங்கு பரவும் கழிவுப் பொருட்களை சேகரிக்கும் வாகணத்தில் போடுமாறு வேண்டிக்கொள்ளப் படுகிரீர்கள் .

குறிப்பு  எக்காரணம் கொண்டும் ஏனைய குப்பைகளை விசேட வட்டியில் போட வேண்டாம் .

தகவல் 
சுகாதார வைத்திய அதிகாரி 
கல்முனை தெற்கு

ஒரு ஹதீத் முரண்பட்டதாக தெரிந்தால் என்ன செய்வது? الموطأ – مالك بن أنس –
مرسل عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ
n قَالَ تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ موطأ مالك - (ج 5 / ص 371)

(2) المستدرك – الحاكم النيسابوري –
1- عن ابن عباس ، أن رسول الله
n خطب الناس في حجة الوداع ، فقال : «..يا أيها الناس إني قد تركت فيكم ما إن اعتصمتم به فلن تضلوا أبدا كتاب الله وسنة نبيه n المستدرك للحاكم - (ج 1 / ص 306)

2- عن أبي هريرة ، قال : قال رسول الله
n: « إني قد تركت فيكم شيئين لن تضلوا بعدهما : كتاب الله وسنتي ، ولن يتفرقا حتى يردا علي الحوض » المستدرك على الصحيحين للحاكم - (ج 1 / ص 307)

(3) السنن الكبرى – للبيهقي –
1- عن ابن عباس ان رسول الله
n خطب الناس في حجة الوداع فقال يا أيها الناس أنى قد تركت فيكم ما ان اعتصمتم به فلن تضلوا ابدا كتاب الله وسنة نبيه السنن الكبرى للبيهقي - (ج 10 / ص 114)

2- عن أبى هريرة قال قال رسول الله
n إنى قد خلفت فيكم ما لن تضلوا بعدهما ما أخذتم بهما أو عملتم بهما كتاب الله وسنتى ولن تفرقا حتى يردا على الحوض السنن الكبرى للبيهقي - (ج 10 / ص 114)

(4) سنن الدارقطني –
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
n« خَلَّفْتُ فِيكُمْ شَيْئَيْنِ لَنْ تَضِلُّوا بَعْدَهُمَا كِتَابَ اللَّهِ وَسُنَّتِى وَلَنْ يَتَفَرَّقَا .. ». سنن الدارقطني - (ج 10 / ص 407)

(5) مسند - البزار –
عَن أبي هُرَيرة ، قال : قال رَسُول اللهِ
n: إني قد خلفت فيكم اثنين لن تضلوا بعدهما أبدا كتاب الله وسنتي ولن يتفرقا ... مسند البزار / ح - ص - (ج 15 / ص 385)

ورواه الترمذي (3786) والطبراني في "الأوسط" (4757) من طريق زَيْد بْن الحَسَنِ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ به بلفظ : ( يَا أَيُّهَا النَّاسُ إِنِّي تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا: كِتَابَ اللَّهِ، وَعِتْرَتِي أَهْلَ بَيْتِي )

நபி சல்லல்லாஹ{ அலைஹி வசல்லம் அவர்களின் ஒரு ஹதீத் முரண்பட்டதாக தெரிந்தால் என்ன செய்வது?

நான் உங்கள் மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச்செல்கிறேன். அவற்றை பற்றி பிடித்துக்கொண்டால் வழி தவறமாட்டீர்கள். அவை குர்ஆனும் எனது சுன்னாவுமாகும் என நபியவர்கள் கூறிய ஹதீத சரியானது.
அதே போல் அவை குர்ஆனும் அஹ்லுல் பைத்துமாகும் என்றும் முஸ்லிமில் வந்துள்ளது.
இது ஒரு முரண்பாடாக தெரிந்த போதிலும் இங்கு இஸ்லாத்தின் ஓர் அடிப்படையை தெரிந்து கொண்டால் இதில் முரண்பாடு இல்லை என தெரிந்து கொள்ளலாம். அதாவது, இஸ்லாம் தனி மனிதர் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒன்றல்ல. மாhறக வஹியின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ஒரு மனிதன் மாhக்கம் என பின்பற்றுவது குர்ஆனையும் நபியவர்களின் வாழ்க்கையையுமேயாகும். இவை தவிர எந்தவொரு மனிதனையும் மார்க்கம் என பின்பற்ற முடியாது என்பதே இஸ்லாத்தின் அடிப்படை. இதனால்த்தான் எனது மகள் பாத்திமா களவெடுத்தாலும் அவர் கையை வெட்டுவேன் என நபியவர்கள் கூறினார்கள். பாத்திமா ரழி நபியவர்களின் அஹ்லுல் பைத் என்ற நிலையில் அவர் பாவமே செய்யாதவர் என்ற நிலையில் இருந்திருந்தால் நிச்சயம் நபியவர்கள் பாத்திமாவை உதாரணம் காட்டியிருக்க மாட்டார்கள்.
ஆக, ரசூலுள்ளாஹ்வினால் பூரணப்படுத்தப்பட்ட மார்க்கம் என்பது வஹியில்தான். அந்த வஹி என்பது குர்ஆன் நபியவர்களின் வாழ்வு. அதுவே ஒரு முஸ்லிமின் வழி தவறப்படமாட்டாத வழி காட்டி.

அதே போல் நபியவர்களின் அஹ்லுல்பைத்கள் அந்த இரண்டையும் முன் வைத்து மார்க்கத்தை போதித்தால் அதனை பின் பற்றலாம். இல்லாத விடத்து அவர்களை பின் பற்ற அனுமதியில்ல்லை. அஹ்லுல் பைத்தை சிறப்பாக்கி நபியவர்கள் கூறியுள்ளது போல் தனது ஏனைய சஹாபாக்களின் சிறப்புக்கள் பற்றி அதை விட அதிகமாக சொன்ன ஹதீதுகள் ஏராளம் உள்ளன. அவர்களையும் தனி மனிதர்களாக பின் பற்ற நமக்கு அனுமதி இல்லை. மாhக்கம் என வரும் போது மனிதர்கள் ஆளுக்கொரு கருத்தை சொல்வார்கள். இத்தகைய முரண்பாடின்போது இந்த நிலையில் குர்ஆன் ஹதீத் பக்கமே மீள வேண்டும் என்ற நபியின் கருத்தே இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணில்லாததாக உள்ளது.
அத்துடன் நபியவர்களை நேரடிடியாக பார்த்த அஹ்லுல்பைத்தை சேர்ந்தவர்கள் எவரும் சிறந்த உலமாக்களாக இருக்கவில்லை. இதில் அலி ரழி அவர்கள் வீரத்துக்கு பெயர்போன ஒருவராக அறியப்பட்டாரே தவிர நபியவர்களின் இமாமத்தின் வாரிசாக கருதப்படவில்லை. அபு பக்கர் ரழியே இமாமத்தின் வாரிசாக நபியவர்களால் பல சந்தர்ப்பங்களில் காட்டப்பட்டுள்ளார்கள்.

ஆக இதில் எது சரி என வாதிக்கப்போனால் இதில் கரை சேர மடியாது. இந்த நிலையில் இன்றைய உலகில் நபியின் அஹ்லுல் பைத் என்று எவரும் ஆதார பூர்வமாக இல்லை. ஆனால் கர்ஆனும் சுன்னாவும் நம்மிடையே இன்னமுமு; உள்ளது. ஆகவே அவ்விரண்டை மட்டும் மார்க்கமாக ஏற்போம். மற்ற எவரும் எவையும் எமக்கு தேவையில்லை.
-முபாறக் அப்துல் மஜீத்

கலாநிதி றியாஸின், “இன்ரவியூ டெக்னிக்ஸ் அன்ட் ஸ்கில்” எனும் புத்தக வெளியீடு!

-எம்.வை.அமீர் -
பல்வேறு பயனுள்ள புத்தகங்களை வெளியிட்டுவரும் சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர், சமூக சிந்தனையாளர், கலாநிதி. எஸ்.எல்.றியாஸ் எழுதிய “Interview  Techniques and Skills”  எனும் புத்தகத்தின் மீள்வெளியீடு கல்முனை ஆஸாத் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் 2016-12-24 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எச்.எம்.நிஜாம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றசாக் அவர்களும் கௌரவ அதிதியாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் ஆகியோரும்  பங்குகொண்டிருந்தனர். இன்றைய காலத்துக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் குறித்த புத்தகத்தின் அறிமுகத்தை கிழக்குப்பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பி.ரி.ஏ.ஹசன் அங்கம் அங்கமாக பல்வேறு விளக்கங்களுடன் வழங்கினார்.
நூலின் முதல் பிரதியை நூலாசிரியரின் தந்தை சுலைமாலெப்பை அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வின்போது கல்வியலாளர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டு நூலைப்பெற்றுக்கொண்டனர்.

முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டம்


முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டம் என்ற பெயரில் வெளிநாட்டு சியோனிசத்தின் உதவியுடன் சில முஸ்லிம் (?) பெண் அமைப்புக்கள் இலங்கையின் திருமண சட்டத்தில் மாற்றங்கள் தேவை என வலியுறுத்தி வருவதை காண்கிறோம்;. இதன் ஒரு கட்டமாக அண்மைய நவமணி  பத்திரிகையில்  ப்லோரின் காசிம் மர்சூக் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம் வெளி வந்துள்ளது.
பொதுவாக இலங்கை முஸ்லிம் சமூகம் தமிழ் மொழியில் பேசுகின்ற சமூகமாகும். தமிழ் மொழி தெரியாதவர்களால் இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகளையும் பிரச்சினைகளையும் உண்மையாக உணர்ந்து கொள்ள முடியாது என்பதை இக்கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்கிறோம். தமிழில் வந்துள்ள மொழி பெயர்ப்புக்கு நாம் இதனை தமிழில் எழுதுவதால் மேற்படி கட்டுரை முஸ்லிம்களை வழி கெடுக்க கூடாது என்பதற்கான நன்மையை தரலாமே தவிர சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கு கூட இதனை புரிந்து கொள்ள முடியும் என்பது சந்தேகமே.
முஸ்லிம் திருமண சட்டம் என்பது இலங்கை முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவிக்கும் ஒன்றாகும். இதனை நமது மூதாதையர் வெள்ளித்தட்டில் பெற்ற தரவில்லை. பாரிய பல போராட்டம், அழகிய அணகுமுறைகள் மூலமே பெற்றுத்தந்தார்கள். அதில் எந்தவித மாற்றத்துக்கும் இடமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். பொதுவாக நாட்டின் எந்த சட்டமாக இருந்தாலும் அதனை மக்கள் சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை என்பதை நாமறிவோம். அதன் காரணமாகவே நீதி மன்றங்களில் வழக்குகள் நிறைந்தள்ளன.
முஸ்லிம் அல்லாதாரின் திருமண சட்டத்தின் படி பெண்ணின் திரமண வயத 18 என்று இருப்பதற்காக அவர்கள் மத்தியில் விவாகரத்துக்கள் இல்லாமல் போய் விட்டதா? ஜீவனாம்ச வழக்குகள் இல்லாமல் போய் விட்டதா?
இஸ்லாமிய சட்டங்கள் ஈமானுடன் தொடர்பு பட்டவையாகும். அதனை சரியாக அமுல் படுத்தாமல் துஷ்பிரயோகங்கள் செய்தால் மறுமையில் அதற்குரிய தண்டனை உண்டு என்ற ஈமானியத்தோடு தொடர்பு பட்டவையாகும். இலங்கையில் உள்ள முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்ற வேண்டும் என்பது கடந்த 7 வருடங்களாக எடுக்கப்படும் முயற்சி என கட்டுரையாளர் கூறுவதிலிருந்து கடந்த 70 வருடங்களாக இச்சட்டத்தினால் முஸ்லிம்கள் பாதிக்கப்படவில்லை என்பது தெரிகிறது. அவ்வாறு முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டடிருந்தால் இதனை மாற்றும்படி எப்போதோ பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டிருக்கும்.

நாம் அறிந்த வரை முஸ்லிம் திருமண சட்டத்தில் மாற்றம் தேவை என எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் இது வரை பாராளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லை என்பதால் இது ஒரு பிரச்சினைக்குரிய விடயமே இல்லை என தெளிவாகிறது. இச்சட்டங்களை மாற்ற வேண்டும் என முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறப்பினர்கள் சிலரே குரல் எழுப்புவதன் மூலம் இது வெள்ளாடு நனைகின்றது என ஓநாய் கவலைப்படுவதாகத்தான் கருதப்படும். இத்தகைய ஓநாய்கள் ஊளையிடுவதற்கு முஸ்லிம் சமூகத்தில் உள்ள இஸ்லாத்தை படிக்காமல் ஐரோப்பாவை மட்டும் படித்த முஸ்லிம்  குஷ்பு பெண்கள் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
முஸ்லிம் திருமண விவாகரத்து சட்ட மாற்றத்தை ஜி எஸ் பி பிளஸ்ஸ{டன் சம்பந்தப்படுத்த முடியாது என கட்டுரையாளர் கூறுகிறார். ஐரோப்பிய நாடுகள் முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்றினாலேயே ஜி எஸ் பியை தர உடன் பட்டுள்ளதாக அமைச்சரவை அமைச்சர் ஒருவரே பகிரங்கமாக சொல்லும் போது அப்படியில்லை என இவர் சொல்வதிலிருந்தே இவர் உண்மையை மறைத்து முஸ்லிம்களை வழிகெடுக்க முணைகிறார் என்பது தெளிவாகிறது.
முஸ்லிம் பெண்களின் வயதை இஸ்லாம் மிகத்தெளிவாக குர்ஆனில் கூறுகிறது. “அநாதைகளை அவதானித்து வாருங்கள். அவர்கள் திருமண வயதை அடைந்த பின்னர் பகுத்தறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால் அவர்களுடைய பொருள்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்” - குர்ஆன் 4:6
இந்த வசனத்தின் படி பெண்ணின் திருமண வயது என்பதை தம்யீஸ் எனும் பகுத்தறிவு என்பதை குர்ஆன் சொல்லியுள்ளது.  ஓர் ஆண் பருவ வயதை அடைகிறான் என்றால் அவன் ஸ்கலிதம் அடைவது கொண்டு ஆரம்பமாவது போல் ஒரு பெண் பருவ வயதை அடைவது என்பது அவள் மாத விடயாயை காண்பதாகும். இவ்வாறு ஒரு பெண் பருவ வயதை அடைந்ததும் அவளில் பல மாறுதல்கள் இயற்கையாக உருவாகும். அவள் அந்நிய ஆணைக்கண்டதும் நாணிக்கோணுவதன் மூலம் அவள் பகுத்தறிவை அடைந்து விட்டாள் என்பது பொருள். இந்;நிலையை அநேக பெண்கள் 13 வயதிலும் சிலர் 16 வயதிலும் அடைவர். ஒரு பெண் இந்த வயதில்த்தான் பருவமடைவாள் என்று எவராலும் குறிப்பிட்டு சொல்லவே முடியாது என்பதால் குர்ஆனும் சொல்லவில்லை. சில வேளை இது விடயத்தில் குர்ஆன் வயதை குறிப்பிட்டிருந்தால் இன்று குர்ஆன் வசனம் வேத வாக்காக பார்க்கப்பட்டிருக்காது.

அதே போல் திருமண வயதை அடைந்த முஸ்லிம் பெண்ணிடம் அனமதி கோர வேண்டும் என்று இலங்கை சட்டத்தில் இல்லாவிடினும் அவ்வாறு அனமதி கேர வேண்டும் என்பதை அனைத்து பெற்றோர்களும் தெரிந்து நடைமுறைப்படுத்துகிறார்கள். கன்னிப்பெண்ணின் சம்மதம் என்பது அவளது மௌனம் எனவும், விதவை பெண்ணின் சம்மதம் அவள் ஆம் என சொல்வதுமாகும் என நபியவர்கள் தெளிவாக சொல்லியுள்ளார்கள். இதனை முஸ்லிம் சமூகம் சரியாகவே நடைமுறைப்படுத்தகிறது. கள்ளக்காதலன் வைத்திருக்கும் பெண்களுக்கத்தான் இது பிரச்சினையே தவிர அள்ளாஹ்வுக்கும் பெற்றோருக்கும் கட்டுப்பட்ட ஒழுக்கமள்ள முஸ்லிம் பெண்ணுக்கு இது பிரச்சினையெ அல்ல.
இப்படியிருக்க கட்டுரையாளர் டியுனிசியாவில், இந்தோனிசியயவில், அல்ஜீரியாவில் முஸ்லிம் பெண்களின் 16 வயது திருமண கட்டுப்பாட்டை காட்டுகிறார். எங்களுக்கு ஆதாரம் குர்ஆனும் ஹதீதுமே தவிர நாடுகள் அல்ல. அப்படி பார்த்தால் அதே டியுனிசியாவில் விபச்சாரத்துக்கு அனமதிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆணும் பெண்ணும் விரும்பினால் அவர்கள் காதலர்களாக வாழலாம் என்பதற்கான அனுமதி உள்ளது. அல்ஜீரியாவிலும் அப்படித்தான். இந்தேனிசியாவிலும் பல காலம் இப்படித்தான் இருந்தது. இப்போது குர்ஆன் ஹதீத் பற்றிய தெளிவு அங்கு வருவதால் சில நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
திருமண வயது பல தார மணம் போன்றவற்றில் சில வெளிநாடுகளை காட்டும் இவர்கள் ஏன் சஊதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளைக்காட்டுவதில்லை? அந்த நாட்டின் சட்டம் ஐரோப்பாவுக்கு பிடிக்காது என்பதால் அதனை காட்ட இந்த முஸ்லிம் பெண்கள் முன்;வருவதில்லை.

ஆக இஸ்லாமிய திருமண சட்டத்தில் மாற்றம் தேவை என ஆராயவேண்டுமாயின் குர்அன் ஹதீதை வைத்தே ஆராய வேண்டுமே தவிர நாடுகள், முஸ்லிம் அல்லாதவர்களின் கருத்துக்கள், நடிகைகள் போன்ற முஸ்லிம் பெயர் தாங்கி விபச்சாரிகளின் கருத்துக்களை வைத்து ஆராய முற்படுவது தவறாகும்.

இலங்கையின் முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்தும் பாராளுமன்ற குழுவுக்கு முஸ்லிமல்லாத இரண்டு பெண் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் இது விடயத்தில் சியோனிச கரங்கள் உள்ளதை காணலாம். குர்அன் ஹதீதுடைய சட்டங்கள் சரியா பிழையா என ஆராய முஸ்லிமல்லாத பெண்கள் நியமிக்கப்பட்டிருப்பது முழு முஸ்லிம்களையும் அவமதிக்கும் செயலாகும். இத்தகைய குழுவை நீக்க வேண்டும் என உலமா கட்சி மட்டுமே வலியறுத்தி வருகிறது. இவ்வாறு முஸ்லிம் அல்லாத பெண்கள் நியமிக்கப்பட்டமைக்கு காரணம் முஸ்லிம் பெண் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இல்லை என சொல்லி சமாளிக்கிறார். இது முட்டாள்தனமான வாதமாகும். முதலில் இச்சட்டங்களை மாற்ற வேண்டும் என மொத்த முஸ்லிம் சமூகமும் கேட்டதா? அல்லது யாராவது ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறப்பினராவது இதற்கான பத்திரம் சமர்ப்பித்தாரா? அப்படியிருக்கும் போது இத்தகைய உபகுழுவின் தேவை என்ன? முஸ்லிம் பெண் பாராளுமன்றத்தில் இல்லாவிட்டால் அப்படி என்ன தேவை உள்ளது. அப்படித்தான் தேவை இருந்தால் மௌலவியா முடித்த பெண்களை இணைத்திருக்கலாம். அவர்கள் பாராளுமன்ற உறப்பினர்கள் இல்லையே என வாதிடுவதாயின் திருத்தத்துக்கு  தலைமை தாங்கும் சலீம் மர்சூப் கூட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் திருமண சட்டத்தின்படி வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடக்கின்றன. முஸ்லிம் பெண்கள் கல்வியில் அக்கறை கொள்ளும் இக்காலத்திற்கு முன் இளம் பராயத்திலேயே திருமணம் செய்;தனர். அண்மைய 30 வருடங்கள் வரை இவ்வாறுதான் நடை பெற்றன. அவர்கள் இள வயதில் திருமணம் முடித்தார்கள் என்பதற்காக விவாகரத்துக்கள் அதிகம் நடக்கவில்லை. மாறாக பத்து பதினைந்து பிள்ளைகள் பெற்று வளமாக வாழ்ந்தார்கள். மருதமுனையை சேர்ந்த பிரபல கவிஞர் ஒருவருக்கு பதினாறு பிள்ளைகள். அப்படியாயின் அத்தம்பதிகள் மிக இள வயதிலேயே திருமணம் முடித்தார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். அத்துடன் பிள்ளைகள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்குவதன் மூலம் இள வயது திருமணமே சமூகத்துக்கு ஆரோக்கியமானது என்றும் புரிந்து கொள்கிறோம்.

இன்று உள்ளங்களை பார்ப்பதை விட சடவாதமே பெரிதாகி போனதால் இள வயது திருமணங்கள் அருகிவிட்டன. பெண்கள் 18 வயது வரை கல்வி கற்பதால் 99 வீதமான பெண்கள் இருபது வயது தாண்டியே மண முடிக்கிறார்கள். இவர்களில்தான் அதிக விவாகரத்துக்களையும் சீசர் குழந்தைகளையும் காண்கிறோம்.
இன்று முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் திருமண பிரச்சினை என்பது இளவயது திருமண பிரச்சினை அல்ல. மாறாக முப்பது வயது தாண்டியும் திருமணம் முடிக்காத பெண்கள் தொகை அதிகரித்துள்ளதே பிரச்சினையாக உள்ளது. அத்துடன் இள வயது திருமணத்தை விட இள வயதில் ஓடிப்போகும் பிரச்சினைதான் அதிகம் உள்ளது. இதற்குத்தான் தீர்வு என்ன ஆராய வேண்டுமே தவிர இலங்கை திருமண சட்டத்தில் பெண்களின் வயதை திருத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
எம்மை பொறுத்தவரை முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெற்ற முஸ்லிம் கட்சிகள் முப்பது வயதாகியும் திருமணம் முடிக்காமல் இருக்கும் பெண்களை கணக்கிட்டு அவர்களுக்கான வாழ்வாதாரங்களை வழங்கி திருமணம் முடித்து வைக்க முன்வர வேண்டும் என்பதை சொல்லி வருகிறோம்.

சிலர் இலங்கை திருமண சட்டத்தில் முஸ்லிம் பெண்கள் கட்டாயம் 13 வயதில் திருமணம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது போல் கருத்துக்களை முன் வைக்கின்றனர். குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்கள். இவ்வாறு இவர்கள் பேசக்காரணம் இந்த குஷ்பு முஸ்லிம் முன்னணியை சேர்ந்த இஸ்லாம் புரியாத முஸ்லிம் பெண்கள் முன் வைத்த கருத்துக்கள்தான்.

அத்துடன் இஸ்லாமிய சட்டத்தில் ஆணாதிக்க முறை உள்ளதாக கட்டுரையாளர் குறிப்பிடுவதன் மூலம் இவர் முஸ்லிமா என்ற சந்தேகம் வருகிறது. இஸ்லாத்தில் ஆணுக்குரிய அந்தஸ்தை அவனுக்கும் பெண்ணுக்குரிய அந்தஸ்தை பெண்ணுக்கும் தாராளமாக வழங்கியுள்ளது. இருவருக்கம் சமவுரிமை என்பது இஸ்லாத்தில் இல்லை. மாறாக சில விடயங்களில் ஆணுக்கு முன்னுரிமையும், சில விடயங்களில் பெண்ணுக்கு முன்னுரிமையும் கொடுத்துள்ளது. வீட்டின் பொருளாளதார நிர்வாகத்தை, நாட்டை, சட்டங்களை அமுல்படுத்தவதில் ஆணுக்கு முன்னுரிமை கொடுத்துள்ள இஸ்லாம் தாய் என்ற பெண்ணுக்கு ஆணை விட மும்மடங்கு அதிக உரிமையை கொடுத்துள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் சமவுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதுதான் இஸ்லாத்தின் சிறப்பாகும். தயவு செய்து இஸ்லாத்தை ஐரோப்பாவோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என கேட்கிறோம்.
இறுதியாக
முஸ்லிம் திருமண சட்டத்தில் எக்காரணம் கொண்டும் கைவைக்கக்கூடாது என்பதே எமது கருத்தாகும். அப்படித்தான் திருத்தம் வேண்டி ஆராய்வதாயின் அதனை அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் தலைமையில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் பதிவு பெற்றுள்ள மௌலவிமார் தலைமையிலான இயக்கங்கள் மட்டும் இணைந்து ஆராய வேண்டும். இதில் குர்ஆன் ஹதீதை அறபு மொழி மூலம் விளங்கக்கூடிய மௌலவியா பெண்கள் சிலரையும் இணைத்துக்கொள்ளலாம். அதற்கு மாறாக குர்ஆன் ஹதீதை அறபு மொழி மூலம் விளங்க முடியாத சட்டத்தரணிகளோ, பெண்களோ மாற்றுமத பெண்களோ எக்காரணம் கொண்டும் சேர்த்துக்கொள்ளப்படக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். காரணம் முஸ்லிம் திருமண சட்டங்கள் குர்ஆன் ஹதீத் அடிப்படைமயிலானவையே தவிர ஐரோப்பா தந்த சட்டங்கள் அல்ல.
அத்துடன் இன்று நமக்கிருக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இனவாதம் அதிகரித்த நாட்டு நிலையில் முஸ்லிம் திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டு வர இடமளித்தால்  நாளை அவற்றை முழுமையாக ஒழிப்பதற்குக்கூட இடமளித்தவர்களாவோம் என்பதை எச்சரிக்கிறோம்.
மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
கபூரி, நத்வி, இமாம் இப்னுசுஊத் பல்கலைக்கழக பட்டதாரி,
மதீனாவில் அச்சிடப்பட்ட அல்குர்ஆன் தமிழ் தர்ஜமா மொழி பெயர்ப்பாளர்
தலைவர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் உலமா கட்சி
20.12.2016
இக்கட்டுரை கடந்த வெள்ளியன்று நவமணி பத்திரிகையில் பிரசுரமானது.


உலக அரபு மொழி தினம் கொழும்பு சாஹிராக் கல்லுாாியில்(அஷ்ரப். ஏ. சமத்)

உலக அரபு மொழி தினம் கொழும்பு சாஹிராக் கல்லுாாியில்  கபுர்  மண்டபத்தில்     நடைபெற்றது. இவ் நிகழ்வு கல்லுாாி அதிபா் றிஸ்வி மரிக்காா் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக தென் கிழக்கு பல்கலைக்கழக  உபவேந்தா் பேராசிரியா் எம்.எம்.எம். நஜிம் கலந்து கொண்டாாா். 

கௌரவ அதிதியாக  ஜாமியா நளீமியாவின்  சிரேஸ்ட விரிவுரையாளா் கலாநிதி எச்.எல்.எம் ஹரிஸ் ஆகியோா் கலந்து கொண்டு கல்லுாாியில் மாணவா்களுக்கிடையில் நடாத்தப்பட்ட அரபு மொழி தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணா்வா்களுக்கு தங்கப்பதக்கம், மற்றும் விருதுகள் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.


Arabic Language Interactive Forum of the Zahira College Colombo had organized World Arabic Language Day and Prize Giving ceremony was held at the College Ghaffoor Hall recently. 

It was held under the patronage of Principal Trizviiy Marikkar. South Eastern University Vice Chancellor Prof. M.M.M. Najim was present as a chief guest and guest of honour Jamiah  Naleemiah Institute Senior Lecturer Dr. H.L.M. Haris were presented certificates and gold medals to the winner of the Arabic Day contest.
Senior Vice Principal Ananda Ponnemperuma , Vice Principals A.M.M. Mihilar, S.T.M. Rauff, and members of the Board of Governors, teachers, parents and students were present at this ceremony

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின் மாபெரும் டெங்கு ஒழிப்பு


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின் மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம்
( சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் )

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின் சார்பாக இன்று ( 24 ) நடைபெற்ற மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

இதன் போது டெங்கு நோயின் இருந்து பாதுகாக்கும் முறைகள் பற்றி பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. மேலும் டெங்கு நுளம்புகள் பெருகும் குப்பைகளை காரைதீவு நகரசபை குப்பை வண்டிகள் மூலம் அகற்றப்பட்டன.

மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இவ் வேளைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய காரைதீவு நகரசபை, பொதுசுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு SLTJ சாய்ந்தமருது கிளையினர்  மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்

இனவாதாங்களை தூண்டும் செயல்கள் -அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர்

சப்னி அஹமட்- 
னவாதாங்களை தூண்டும் செயல்கள் முஸ்லிம் மக்கள் உள்ளபிரதேசங்களில் இடம்பெற்றாலும் மக்கள் எப்போதும் வழிப்புணர்வுகளுடன் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு முஸ்லிம், தமிழ், சிங்கள வேறுபாடுகள் இல்லாமல் நாம் ஒற்றுமையுடன் நல்ல மனப்பாங்குடன் இருக்க வேண்டும். அது போல் இலங்கை இனவாதம் அற்ற சூழலை உருவாக்க நாம் அனைவரும் முன்வரவதுடன் அதெற்கேற்றாப்போல் நமது ஒற்றுமையுடனான மனப்பாங்கினை உருவாக்க வேண்டும்  என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கம்பஹா ,மினுவான்கொட அல்-கமர் பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்வும் நேற்று (24) மினுவான்னொட கல்லெலுவ அல்-அமான் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்.

நாம் ஒற்றுமையுடன் நல்லதொரு பிரதேசங்கள் இருக்கின்றோம் குறிப்பாக இவ்வாறான கல்லுவ போன்ற பிரதேசங்கங்களில் மூன்று மக்களும் சூழ்ந்து ஒற்றுமையாக வாழ்கின்றோம் அவ்வாறாக வாழ்கின்ற நாம் எமக்கெதிராக சில இனவாத செயற்பாடுகள் இடம்பெறுகின்றது ஆகவே அதையெல்லாம் இவ் காலகட்டத்தில் சிறந்து முறையிலும், நல்லதொரு திட்டங்கள் ஊடகாவும் கையாளவேண்டும்.

குறிப்பாக இவ் நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டது இவ்வாரான இனவாத செயற்பாடுகளில் இருந்து தவிர்ந்து நல்லதொரு சமூதாயத்தையும், இனவாதம் அற்ற சூழலையும், நல்லதொரு பொருளாதார சூழலலையும் உருவாக்குவதே அத்தகையே செயற்பாட்டினையே எமது நல்லாட்சி மேற்கொண்டுவருகின்றது. ஆனால் சில இனவாதங்களை தூண்டும் சில செயற்பாடுகள் இடம்பெறுகின்றது. அதற்கான தீர்வுகளையும் எமது நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும், தலைவர் ரவூப் ஹக்கீமும் இணைந்து பல திட்டங்களை மேற்கொண்டு அவ்வாறான இனப்பிரச்சினைகளை தீர்த்துவருகின்றனர்.

முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் ஒரு சில இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ள இனவாதிகளினால் முயற்சி செய்கின்றனர், ஆகவே அதற்கேற்றாற்ப்போல் நமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். அது போல் கம்பஹா மாவட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மிகவும் 250அளவிலான கொடுப்பணவுகள் மாத்திரமே வழங்கப்படுவதினால் ஆசிரியர்கள் பெரும் கஸ்டங்களுக்கு மத்தியில் செயற்படுகின்ரனர். ஆகவே அதற்கான கடிதத்தினை இவ்மாகாண சபை முதலமைச்சருக்கும் அனுப்பவுள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய ஷூறா சபை உருவாக்கப்பட்டதில் எந்தப் பயனும் இல்லை -SLTJ

@ SLTJ  நாட்டில் உருவாக்கப் போகின்ற மாற்றங்கள் என்ன?

எங்களுடைய அடிப்படை நோக்கம் மார்க்க ரீதியாக இந்த சமூதாயத்தில் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இயக்கங்களாலும் கொள்கைகளாலும் வேறுபட்டிருந்தாலும் சமூதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
ஒற்றுமை என்பது இந்த சமுதாயத்திற்கு மிக முக்கியமானது. ஆனால் இயக்க வேறுபாடுகளை அப்படியே தக்க வைத்துக் கொண்டு ஒற்றுமையை ஏற்படுத்துவதென்பது சிரமமானது. அதேபோன்று இயக்க வேறுபாட்டில் அல்லது முரண்பாடுகளில் இருந்து கொண்டே ஒற்றுமையாக இருப்பதென்பதும் சாத்தியமான விடயம் அல்ல.
நாங்கள் அல்-குர்ஆன் ஹதீஸை மக்களுக்கு எத்திவைக்கின்ற பணியை முன்னெடுத்து வருகின்றோம். அதுதான் ஒரு முஸ்லிமின் முதன்மைப் பணியாகும். எனவே, சொல்ல வேண்டிய விடயங்களை  பக்குவமாகவும், பணிவாகவும் மக்களுக்கு எத்திவைக்க வேண்டியது எமது கடமை என்பதால் அதனை நாங்கள் செய்து வருகின்றோம். கொள்கை ரீதியாக முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்த முடியுமாக இருந்தால் அது காலா காலமாக நிலைத்து நிற்கின்ற ஒற்றுமையாக இருக்கும். இது இலகுவானதொரு விடயம் அல்ல.
வெறுமனே இந்த சமூதாயம் ஒற்றுமைப்பட வேண்டுமென பேச்சுக்களில் மாத்திரம் நின்றுவிடாமல் கொள்கை ரீதியாக முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். அவ்வாறான ஒற்றுமைதான் உண்மையான ஒற்றுமையாகவும் நிலையான ஒற்றுமையாகவும் இருக்கும்.
எமது அமைப்பு 2005 இல் உருவாக்கப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நிறைய அமைப்புக்கள் காணப்பட்டாலும் தஃவா வேலையை செய்யவில்லை. தௌஹீத் ஜமாஅத்தினுடைய உண்மையான நோக்கத்தினை குறித்த பெயர் தாங்கிய அமைப்புகள் செய்யாததன் காரணமாக நாங்கள் கொள்கை ரீதியாக இந்த சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படத் தீர்மானித்தோம். அதனடிப்படையில் செயற்பட்டும் வருகின்றோம்.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்திற்கும் (SLTJ) தமிழ் நாட்டு தௌஹீத் ஜமாஅத்திற்குமிடையில் (TNTJ) உள்ள தொடர்புகள் பற்றி?
நிர்வாக ரீதியாக எமக்கும் அவர்களுக்குமிடையில் எந்தத் தொடர்பும் இல்லை. எமது அமைப்பு இந்த நாட்டில் சுதந்திரமாக இயங்குகின்ற அமைப்பாகும். அதேநேரத்தில் கொள்கை ரீதியாக மார்க்க ரீதியான விடயங்கள், பிரச்சினைகள், ஆய்வுகள் போன்ற விடயங்களில் தமிழ்நாட்டு தௌஹீத் ஜமாஅத்தோடு ஒரே மேசையில் உட்கார்ந்து கலந்துரையாடியே தீர்மானத்திற்கு வருகின்றோம். ஏனென்றால் அவர்கள் ஆய்வு ரீதியாக மார்க்க விடயங்களை அணுகுவதில் முதன்மையானதொரு அமைப்பாகக் காணப்படுகின்றார்கள்.
ஒரு மார்க்கப் பிரச்சினை தொடர்பில் இதுவும் சரி, அதுவும் சரி என்ற மழுப்புகின்ற தீர்வுகளை அவர்கள் எடுப்பதில்லை. மாற்றமாக தீர்க்கமான முடிவுகளை எடுத்து மக்களை தெளிவுபடுத்துவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. அந்த வகையில் கொள்கை ரீதியாக யாருக்கும் அஞ்சாமல் விட்டுக் கொடுப்புகளுக்கு இடமில்லாமல் பணத்திற்கு விலை போகாமல் செயற்படுகின்ற அமைப்பென்பதால் நாங்கள் அவர்களோடு சேர்ந்து செயற்படுகின்றோம். ஆனால் அவர்கள் சொல்பவற்றை கண்மூடித்தனமாக பின்பற்ற மாட்டோம்.
நிர்வாக விடயங்களில் அவர்களை பின்பற்றாவிட்டாலும் 30 வருடங்களுக்கு மேலாக களத்திலே வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்ற ஒரு அமைப்பென்ற வகையில் அவர்களுடைய ஆலோசனைகள் எமக்கு மிக முக்கியமானவையாகக் காணப்படுகின்றன. உதாரணமாக, வெளிநாட்டு அரசாங்கத்தினதோ அல்லது நிதி நிறுவனங்களினதோ பணத்தை எடுப்பதில்லை என்பது தமிழ்நாட்டு தௌஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு. அதனை நாங்களும் பின்பற்றுகின்றோம். காரணம் எங்களுடைய தஃவாவினுடைய தூய்மையை பாதுகாக்கும் அரணாக அது காணப்படுகின்றது.

@ மௌலவி பாஸில் பாறூக் அவர்கள் ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் SLTJஇற்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என்று ஒரு பத்திரிகை நேர்காணலில் கூறியிருக்கின்றார். ஜம்இய்யதுல் சபையுடனான உங்களுடைய தொடர்புகள் எவ்வாறு காணப்படுகின்றன?

முதலாவது ஜம்இய்யதுல் உலமா சபையுடன் நாங்கள் கொள்கை ரீதியாக வேறுபட்டிருக்கின்றோம். ஜம்இய்யதுல் உலமா சபையானது நூற்றுக்கு நூறு வீதம் முஸ்லிம் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் அறிஞர்களைக் கொண்ட ஒர் அமைப்பல்ல. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்பது ஒரு அமைப்பினுடைய பெயரே தவிர முழுக்க முழுக்க இலங்கையிலுள்ள அறிஞர்கள் அனை வரையும் உள்ளடக்கிய உத்தியோகபூர்வ மான சபை அல்ல.
மார்க்க ரீதியாக எங்களுக்கும் அவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. நாங்கள் வஹியை மாத்திரமே பின்பற்றுகின்றோம். ஆனால் அவர்கள் மத்ஹப்கள், ஸஹாபாக்களின் கூற்றுக்கள், இஜ்மா, கியாஸ் என்பவற்றையும் பின்பற்றுகின்றனர். எனவே, அவர்களுக்குக் கீழால் மார்க்க அடிப்படையில் ஒரு போதும் சேர்ந்து செயற்பட முடியாது. என்றாலும் சமுதாயப் பிரச்சினைகள் என்று வருகின்றபோது அனைத்து அமைப்புகளோடும் சேர்ந்து செயற்படுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

@ இலங்கையில் ஜம்இய்யதுல் உலமா, தேசிய ஷூறா சபை, முஸ்லிம் கவுன்ஸில் போன்ற முக்கியமான முஸ்லிம் தலைமை அமைப்புகள் காணப்படுகின்றன. ஜம்இய்யதுல் உலமா சபையுடன் உங்களுக்கு முரண்பாடுகள் காணப்பட்டாலும் ஏனைய இரண்டு அமைப்புகளுடனான உறவுகள் பற்றி…

மார்க்க ரீதியாக அகீதாவோடு முரண்பட்ட எவருடனும் எம்மால் சேர்ந்து செயற்பட முடியாது. ஆனால் சமுதாய விடயங்களில் தேசிய ஷூறா சபையோடு சேர்ந்து செயற்படத் தயார். என்றாலும் ஷூறா சபை உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறை வேறவில்லை. இலங்கை முஸ்லிம்களின் அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்து ஒரு பிரச்சினை ஏற்படுகின்றபோது அதற்குத் தீர்வு காணும் நோக்கில்தான் அது உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட பின்னரும் ஜம்இய்யதுல் உலமா சபை இருக்குமாக இருந்தால் தேசிய ஷூறா சபை உருவாக்கப்பட்டதில் எந்தப் பயனும் இல்லை என்பதே நிலைப் பாடாகும்.
தற்போது இலங்கை முஸ்லிம்களுக்கு மூன்று தலைமைத்துவ அமைப்புகள் காணப்படுகின்றன என்றால் தீர்மானங்கள் எட்டப்படுகின்றபோது பல்வேற பிரச்சினைகள் எழும். எனவே, சமுதாயப் பிரச்சினைகள் என்று வரும்போது ஓர் அமைப்பின் கீழ் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து அமைப்புக்களும் வரவேண்டும். அப்போது தான் சரியான தீர்வைக் காண முடியும். அப்படி அனைவரும் இணைவார்களாக இருந்தால் நாங்களும் அந்தத் தலைமை அமைப்போடு இணைந்து செயற்படத் தயாராகவே இருக்கின்றோம்.

@ முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்தில் ஏனைய வெளி சக்திகளின் தலையீடு இருக்கக் கூடாது என்பதில் முஸ்லிம் சமூகம் தெளிவாக இருக்கின்றது. இதே நிலைப்பாட்டில் இருக்கும் நீங்கள் ஏன் தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டீர்கள்?

2013 ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கெதிராக பௌத்த இனவாத அமைப்புக்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தியபோது ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஆகியன இணைந்து அனைத்து முஸ்லிம்  அமைப்புகளையும் கொழும்பு ரன்முத்து ஹோட்டலில் ஒன்று கூட்டின. அதில் நாமும் கலந்து கொண்டோம். அக்கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சினைகளை பொறுமையான முறையிலும் பக்குவமான முறையிலும் கையாள வேண்டும் எனவும் ஒரு ஊடக மாநாட்டைக் கூட்டி தெளிவுபடுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் முடிவுசெய்யப்பட்டது.
அந்தக் கூட்டத்திற்குப் பிறகு எத்தகைய செயற்பாடுகளையும் குறித்த தலைமை அமைப்புகள் முன்னெடுக்கவில்லை என்பது எமக்கு மிகவும் கவலை அளித்தது. அவர்களை பலமுறை தொடர்பு கொண்ட போதிலும் எத்தகைய பதிலும் வரவில்லை. எனவேதான் நாங்கள் முஸ்லிம் சமுதாயம் சார்ந்த பிரச்சினைகளை தனியாகவே எதிர்கொள்வது என்று முடிவெடுத்தோம். என்றாலும் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற போது ஏனைய முஸ்லிம் அமைப்புகள் எம்மை அழைத்தால் அவர்களோடு சேர்ந்து செயற்படுவதற்கு இன்னமும் தயாராகவே இருக்கின்றோம்.
முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தம் 7 வருடங்களுக்கு மேலாக இழுபறிக்குள்ளாகியிருப்பதற்கு மிக முக்கிய காரணம் ஜம்இய்யதுல் உலமா சபை என அந்தக் குழுவிலுள்ள முக்கியமான உறுப்பினர் ஒருவரே தெரிவித்திருக்கின்றார். எனவே தான் ஜம்இய்யதுல் உலமா சபையை  நம்பி எந்தப் பிரயோசனமும் இல்லை. இதனால்தான் தனியாகவே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்னால் ஏனைய அமைப்புகள் எங்களை அழைத்து நாம் அனைவரும் ஒன்றாக இந்த விடயத்தை கையாள்வோம் என்று சொல்லியிருந்தால் கூட நாங்கள் அதற்கு இணங்கியிருப்போம். ஆனால் இந்த விடயத்தில் யாருமே கவனத்தில் எடுக்கவில்லை.
ஆர்ப்பாட்டமென்பது ஜனநாயகத்தின் முக்கிய கருவி. எமது அடிப்படையான விடயங்களை வென்றெடுப்பதற்கான ஒரே வழி இதுதான். இதைப் புரிந்துகொள்ள முடியாத தலைமைகளை இனியும் எம்மால் நம்ப முடியாது. ஏற்கனவே நாங்கள் இந்த அமைப்புகளால் ஏமாற்றப்பட்டுள்ளோம். ஒரு முஃமின் இரு தடவைகள் ஏமாற மாட்டான். எனவேதான் நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை தனியாகவே முன் னெடுத்தோம். தனியாக செயற்படுவதை விட சேர்ந்து செயற்படுவதுதான் சிறந்த வழி என்பது எமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இந்த நாட்டில் முஸ்லிம் தலைமை அமைப்புகள் சேர்ந்து செயற்படத் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.

@ நீங்கள் அண்மையில் கைதுசெய்யப்படுவதற்கான காரணம் என்ன?

மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு தேரரை திட்டினோம் என்ற காரணத்தை சொல்லியே வழக்குத் தொடுத்தார்கள். ஆனால் இவர்கள் என்னை உண்மையிலேயே பௌத்த மதத்தை அல்லது தேரரை திட்டினேன் என்ற காரணத்தை வைத்து கைதுசெய்யவில்லை. இவர்கள் என்னை அரசியல் தேவையொன்றிற்கா கவே கைது செய்தார்கள். டான் பிரசாத்  பல காலமாக இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதத்தை பரப்பிக் கொண்டிருக்கின்ற இனவாதி. அவனை அரசாங்கம் கைதுசெய்யவில்லை. எமது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோரை தாக்குவோம் என்று அவன் பகிரங்கமாக எச்சரித்தால் நாம் பொலிஸாரிடம் முறையிட்டோம். அந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவன் கைதுசெய்யப்பட்டான். இந்தக் கைதுக்கு நாங்கள்தான் காரணமென முஸ்லிம் அரசியல்வாதிகளும் அமைப்புகளும் பெருமையாக உரிமை கொண்டாடுகின்றார்கள்.
இதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இவனை கைதுசெய்தால் சிங்கள மக்கள் கொந்தளிப்பார்கள். எனவே மக்களை சமாதானப்படுத்துவதற்காக அப்துர் றாஸிக்கையும் கைதுசெய்ய வேண்டுமென அமைச்சர் சாகல ரத்தனாயக்க பிரதமரிடம் குறிப்பிட்டிருந்தார். எனவே ஒரு பௌத்த இனவாதியை கைதுசெய்வதற்காக அரசினால் பலிக்கடாவாக்கப்பட்டவனே நான். ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே நான் கைதுசெய்யப்பட்டேன். இது கண் டிக்கதக்க ஒரு விடயம். நல்லாட்சி அரசாங் கத்தின் நல்லதொரு அறிகுறியாக இது விளங்கவில்லை.

@ நீங்கள் ஒரு பௌத்த மதகுருவை நிந்தித்தமை குறித்து என்ன சொல்ல வருகிறீர்கள்?

ஒரு மதகுரு என்பவர் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும். மதகுரு ஒருவர் சிறுவர் துஷ்பிரயோகம் செய்தால் அவரைக் கண்டிக்க கூடாது அல்லது கைது செய்யக் கூடாது என்ற சட்டம் இருக்கின்றதா? மதகுரு இவ்வாறான பாவங்களை செய்தால் ஏனைய மனிதர்களை விட அவருக்குத்தான் கூடிய தண்டனை வழங்க வேண்டுமென்பது மனித இயல்பு. அவர்கள் மதகுரு என்ற போர்வையில் தூசனம் பேசுவார்கள், மிரட்டுவார்கள், கொலை செய்வோம் என்பார்கள், நாட்டை விட்டு விரட்டுவோம் என்பார்கள். அதை நாங்கள் கண்டிக்கக் கூடாது என்றால் இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் என்பது பொய்த்து விட்டது என்றுதான் அர்த்தம். நாங்கள் ஒரு மதகுருவை திட்டவில்லை. இந்த நாட்டில் இனவாதத்தைக் கக்கிய ஒரு நபரைத்தான் திட்டினோம், விமர்சித்தோம்.

@ தனது மானத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஞானசார தேரர் வழக்குக் தொடுத்திருந்தாரா?

அவர் எனக்கெதிராக எந்த வழக்கும் கொடுக்கவில்லை. இது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இடம்பெற்ற கைதுதான் என் பதை மீண்டும் தெளிவாக சொல்கிறேன்.

@ SLTJ அமைப்பிற்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாயவுக்கும் தொடர்பு இருப்பதாக ராஜித சேனாரத்ன அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு எதிராக SLTJ அமைப்பு எத்தகைய மறுப்பையும் தெரிவிக்கவில்லையே?

அமைச்சர் ராஜிதவின் கருத்தை மறுத்து எமது அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. ராஜித சொன்னது போல எனக்கும் NIB இற்கும் தொடர்பு இருப்பதாக இருந்தால் ஆதாரங்களைக் கொண்டு வந்து நிரூபிக்க வேண்டும். வாய்க்கு வந்தபடி யாரும் எதையும் சொல்லலாம் ஆனால் அதனை உண்மைப் படுத்துவதற்கு ஆதாரங்கள் மூலமாக நிரூபிக்க வேண்டும்.
NIB இல் நான் வேலை செய்ததாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் அது என்ன தப்பு என்று கேட்கின்றேன். அது அரசாங்கத்தினுடைய ஒரு திணைக்களம். நான் அல்கைதாவுடனோ அல்லது LTTE உடனோ அல்து ISIS உடனோ தொடர்பு வைத்திருந்தால் அது பாரதூரமானதொரு விடயம். அது விமர்சிக்கப்பட வேண்டியதுதான். NIB உடன் கூட நான் தொடர்புபட்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை.
மஹிந்தவிற்கோ கோத்தாபாயவிற்கோ வால் பிடிக்க வேண்டிய எந்த அவசியமும் எனக்குக் கிடையாது. குறிப்பாக கோத்தபாயதான் இந்த பொதுபலசேனாவை உருவாக்கியவர் என்று பொது இடங்களில் விமர்சித்திருக்கின்றோம். எங்களுக்கும் NIB இற்கும் இடையிலான ஒரே தொடர்பு அவர்கள் எங்களுடைய அமைப்பு தொடர்பான விடயங்கள் சந்தேகங்களை எங்களிடம் வினவுகின்றபோது அதனை நாங் கள் தெளிவுபடுத்துவது மாத்திரமே.

@ மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள். குறிப்பாக முஸ்லிம் அமைப்புகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. இதனால் அனைத்து அமைப்புகளுக்கும் அச்சத்திற்கு மத்தியிலேயே இயங்கின. என்றாலும் நீங்கள் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் சுதந்திரமாக இயங்கினீர்கள் ஏதாவது சலுகைகள் வழங்கப்பட்டனவா?

2015 நவம்பர் மாதத்தில் நாங்கள் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு வெளி யீட்டு விழாவை நடாத்தினோம். இது நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே இடம்பெற்றது. எனவே நல்லாட்சியில் தான் நாங்கள் சுதந்திரமாக இயங்கினோம். மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலும் நாங்கள் எங்களுடைய செயற்பாடுகளை சுதந்திர மாகவே முன்னெடுத்துச் சென்றோம்.
எங் களைப் பொறுத்தவரையில் யாருடைய ஆட்சிக்காலமாக இருந்தாலும் எங்களுடைய செயற்பாடுகளை சட்டத்திற்கு உட்பட்ட வகையில் முன்கொண்டு செல்வோம். கடந்த ஆட்சியில் தம்புள்ள பள் ளிக்கெதிராக பிரச்சிணை ஏற்பட்டபோது ஆர்ப்பாட்டம் செய்தோம். அதுபோன்று மஹிந்தவின் காலத்தில் ஜெனீவா பிரேர ணைக்கு எதிராக இன்னொரு ஆர்ப்பாட்ட மொன்றை செய்தோம். அப்போது மஹிந்த விற்கு ஆதரவாக செயற்படுகின்றோம்  என நினைத்துக் கொண்டார்கள்.
அந்த இடத்தில் நாங்கள் மஹிந்தவை பார்க்கவில்லை. நாட்டைத்தான் பார்த் தோம். எங்களுடைய நாட்டை சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிவதற்கு ஒரு போதும் விடமாட்டோம். அந்த அடிப் படையில்தான் GSP+ சலுகைக்காக எமது முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்  கள் மேற்கொள்ளப்படுவதனை விட மாட் டோம். அமைப்பு ரீதியாக நாங்கள் எந்த ஆட்சியாளர்களுக்கும் ஆதரவு செலுத்து வதுமில்லை எதிர்ப்புத் தெரிவிப்பது மில்லை. இந்த அடிப்படையில் செயற்படக் கூடிய அமைப்பு அரசியல்வாதிகளின் நிக ழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்பட்டது என்பத னை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

@ தற்போது நாட்டில் இடம்பெற்று வருகின்ற இனவாத செயற்பாடுகளை எந்தக் கண்ணோட்டத்தில் நோக்குகிறீர்கள்?

இனவாதம் இந்த நாட்டில் தலைதூக்கி  இருக்கின்றது என்பது தெட்டத்தெளிவு. இது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இடம்பெறுகின்றது. இதற்கு வெளிநாட்டு சக்திகள் உதவி செய்வதாகவும் தகவல்கள் இருக்கின்றன. ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியமால் இருக்கின்றது. உதாரணமாக நோர்வே அரசாங்கம் முழுக்க முழுக்க பொதுபல சேனாவிற்குப் பின்னால் செயற்படுகின்றது. இதனை நிரூபிப்பதற்கு எம்மிடம் ஆதாரமில்லை. நாங்களும் அதற்கான ஆதாரங்களை சேகரிப்பதற்கு முயற்சித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் கோத்தாபாய ஆகியோரும் பொதுபலசேனாவிற்கு பின்னால் இருக்கின்றனர் என்ற சந்தேகமும் எமக்குக் காணப்படுகின்றது.

@ இறுதியாக உங்களுடைய சிறை வாழ்வு பற்றி எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?

சிறைவாழ்வை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். தஃவா களத்திலுள்ள ஒவ்வொரு தாஈயும் மறுமையை இலக்கை கொண்டு செயற்படுகின்ற ஒவ்வொரு முஸ்லிமும் சுகபோகமான முறையில் தஃவா பண்ண முடியாது. பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதையும் தவிர்க்க முடியாது.

செங்கலடி பகுதியில் பழமைவாய்ந்த பௌத்த விகாரை அழிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

செங்கலடி பகுதியில் பழமைவாய்ந்த பௌத்த விகாரைக்கு சொந்தமான இடத்தை புல்டோசர் கொண்டு அழிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்,

நான் நேற்று செங்கலடி பகுதியிலுள்ள பழமை வாய்ந்த பௌத்த வழிபாட்டுத் தலமொன்றுக்கு சென்றேன்.

அந்தக் காணியின் உறுதிப்பத்திரம் முஸ்லிம் ஒருவரால் தமிழர் ஒருவருக்கு விற்கப்பட்டு, முழுமையாக புல்டோசர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, அங்கிருந்த விகாரை பாதியளவில் அழிக்கப்பட்டு தள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, தகவலறிந்த பொலிஸார் அங்கு சென்று காவலரண் ஒன்றை அமைத்து, அது தொல்பொருள் பிரதேசம் என பெயரிட்டுள்ளனர்.

தொல்பொருள் பிரதேசம் என பெயரிட்டால் அந்தப் பகுதிகள் பாதுகாக்கப்படும். தொல்பொருள் சிறப்பு வாய்ந்த பிரதேசங்களை பாதுகாக்கும் பணிகளிலிருந்து தொல்பொருள் திணைக்களம் விலகிச் சென்றுள்ளது என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.

பேரினவாத இயக்கங்கள் அரசின் மடியில் பங்காளிகளாக.


கடந்த ஆட்சியில் பொதுபல சேனாவின் காரியாலயத்தை ஹாமதுருமார்கள் அழைப்பை ஏற்று பௌத்தர் என்ற வகையில் அதனை கோத்தாபய திறந்து வைத்ததை கடுமையாக குற்றம் சாட்டிய முஸ்லிம் சமூகம் இப்போது ஐக்கிய தேசிய கட்சியின் நீதி அமைச்சர், பொதுபல சேனா, சிங்ஹ லே, ராவண பலய என அனைத்து இனவாத இயக்கங்களையும் தனது மடியில் வைத்துக்கொண்டு திரிவதை  முஸ்லிம் சமூகம் பாராட்டுகின்றதா? என உலமா கட்சித்தலைவர் கேள்வி எழுப்பினார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொதுபல சேனா நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து விட்டது என்பதே உண்மை. நீதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் அணுக்கிரகம் ஞான சார தேரருக்கு கிடைத்திருப்பதால் இனி அவர் வீதியில் இறங்கி சத்தமிட மாட்டார் என்றும் அவரும் அரசாங்கத்துடன் இருப்பதால் முஸ்லிம்களுக்கெதிரான அனைத்து விடயங்களும் இனி அரச அணுசரணையுடன் நடக்கும் என கடந்த வாரம் நாம் கூறியிருந்தோம். நாம் சொன்னது போன்று இப்போது அரசின் அமைச்சர் நேரடியாக பொதுபல சேனாவுக்கு உதவுவதை காண்கிறோம். அந்த வகையில் அனைத்து பேரினவாதிகளும் நீதி அமைச்சரால் அரச மரியாதையுடன் மட்டக்களப்புக்கு அழைத்துச்செல்லப்பட்டு வந்துள்ளனர். மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பும் ஐ தே க மற்றும் ஹெல உறுமயவின் திட்டத்தை சிறப்பாக செய்தமைக்காக ஞானசாரவுக்குரிய இத்தகைய பரிசு கிடைத்துள்ளது.

கடந்த ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷ ஞானசாரவுக்கு நேரடியாக உதவாத நிலையிலும் அவர் அவர்களை கட்டுப்படுத்தாமைக்காக நாம் குற்றம் சொன்னோம். ஆனால் முஸ்லிம்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற இந்த அரசாங்கம் ஞானசாரவை பங்காளியாக வைத்துக்கொண்டு செயற்படுகிறது. அரசுடன் அவர்கள் இணைய வேண்டுமென்பதற்காக டயஸ் போராவின் தரகராக செயற்படும் கொழும்பு முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் ஜம்இய்யத்துல் உலமாவையும் அழைத்துக்கொண்டு நீதி அமைச்சருடன் பேச்சு வார்த்தைக்கு போனதை சந்தர்ப்பமாக பாவித்து ஞானசாரவுடனும் பேச வேண்டுமென கூறி அவரோடும் பேசி அவரை அரச ஒத்துழைப்பில் இயங்க வைத்துள்ளனர். இத்தகைய சதிக்கு துணை போன கொழும்பு முஸ்லிம் அரசியல்வாதி பற்றி சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே முஸ்லிம் சமூகம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். நமது உரிமைகள், வாழ்விடங்கள் ஒவ்வொன்றாக பறிபோவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன. இந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரலாக செயற்படும் எம்மை பலப்படுத்த முன்வருவதன் மூலம் ஓரளவாவது நமது எதிர்பப்பை காட்ட முடியும் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.

அடுத்த வருடம் முதல் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு பல சலுகைகள் - பைசர்
எந்த அரச அதிகாரியும் முச்சக்கர வண்டி சாரதிகளையோ அல்லது உரிமையாளர்களையோ அச்சுறுத்துவதையோ அசிரத்தைக்குள்ளாக்குவதையோ நான் ஊரு போதும் விரும்பவில்லை இதனை நான் அனுமதிக்கவும் மாட்டேன் அவ்வாறு அதிகாரிகள் நடந்து கொள்ள முனையவும் கூடாது, இவ்வாறு நாதாந்த கொள்ளும் அதிகாரிகளை நான் கண்டிப்பதோடு இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா கொழும்பில் அமைச்சின் கேட்போர்கூடத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களோடு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடலில் 6 முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கங்கள் கலந்து கொண்டதுடன், அவர்கள் எதிகொள்ளும் பல தரப்பட்ட பிரச்சசினைகள் தொடர்பாக அமைச்சரிடம் முறையிட்டனர்.

அமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு உள்ள பிரச்சசினைகளை அரசியலுக்கு அப்பால் இருந்து தீர்க்க வேண்டும். எமது அமைச்சின் கீழ் இயங்கும் உள்ளோராட்சி மன்றங்களின் ஊடாக இதற்கான பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுத்து செல்லப்படுகிறது, நாங்கள் கதைப்பதை விட செயலில் இறங்குவதே மேல். எனவே முச்சக்கர வண்டி சங்கங்களை ஒனறிகணைத்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிகவும் சிறந்தது. முச்சக்கரவண்டி தொடர்பான சகல பிரச்சசினைகளையும் ஆராய்வதுடன் மாத்திரம் நின்று விடாமல் இதற்கான எதிர்கால தீர்வுகள் என்ன என்பது பற்றியும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவுடனும் கலந்தாலோசிக்க உள்ளேன். எனவே முச்சக்கர வண்டி சாரதிகளும் உரிமையாளர்களும் இவ்விடயத்தில் சலசலனங்களை ஏட்படுத்திக்கொள்ள தேவையில்லை என தெரிவித்தார்.

எனவே முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் தங்கள் கடமைகளை மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நிறைவேற்ற வேண்டும். மக்களது பாது காப்பு தொடர்பில் மிகவும் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்ள வேண்டும் , குறிப்பாக பயனாளிகளுக்கு வீண் சிரமங்களை ஏட்படுத்ததா வகையில் அவர்களுடன் மிகவும் அந்நியோன்னமாக நடந்து கொள்ள வேண்டும் இதனையே மக்களும் எதிர்பார்த்து நிற்கினர் என்கிறார்.

இக்கலந்துரையாடலில் பொது அடுத்த வருடம் முதல் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டம், வாழ்க்கை காப்புறுதி, வங்கி கடனுதவி, குடும்பங்களில் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான சுய தொழில் முயட்சிகளுக்கான ஊக்குவிப்பு ஆகியன பற்றி விரிவாக ஆராய பட்டதுடன் இது தொடர்பில் அமைச்சரும் கோவத்தில் எடுத்து செயற்படுவதாக தெரிவித்தார்.

இதேவேளை தொழில் சார் முச்சக்கர வண்டிகளை அடையாளம் காணவும், பாதுகாப்பு கருதியும் தரமான அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை எதிர்காலத்தில் வழங்கவும் ஆல் அடையாளத்தை உறுதிப்படுத்தும் அட்டைகளை வழங்கவும் இதன் பொது தீர்மானிக்கப்பட்டது.

I.A.Cadir khan

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar