குருநாகல், நிக்கவரெட்டிய பிரதேச ஜும்மா பள்ளிவாயல் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்

ரிம்சி ஜலீல்


நேற்றிரவு குருநாகல், நிக்கவரெட்டிய பிரதேச ஜும்மா பள்ளிவாயல் மீது
விஷமிகளால்  பெட்ரோல் குண்டு தாக்குதல் நடைபெற்றதாக அறிய முடிகிறது.

5 போத்தல்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு சுமார் 2 மணியளவில் இடம்பெற்ற
இந்த தாக்குதல் நடத்தபட்டுள்ளது.

இந்த விடையம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி
ஜவஹர்ஷா உரிய தரப்பினரை தொடர்புகொண்டு விடயங்களை கையாண்டு வருகிறார்
அத்துடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கவனத்திற்க்கு இந்த விடையம்
கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பள்ளிவாசலின் உடைமைகள் சில சேதமாகி உள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்ட
பெட்ரோல் குண்டுக்கு பயன்படுத்தப்பட்ட போத்தல்களை கைப்பற்றி மேலதிக
விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்