ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
-எம்.வை.அமீர் வங்களாவடி நிருபர்-
சாய்ந்தாமருதில்
கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாகிஸ்தான் இளைஞர்
கவுன்சிலின் அனுசரணையுடன் தேசிய ஜனநாயக
மனித உரிமைகள் கட்சியால் (NDPHR), கற்றல்
உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு றியாளுல் ஜன்னா வித்தியாலயத்தில் 2016-11-09 ஆம் திகதி அதிபர் எம்.ஐ.சம்சுடீன் தலைமையில் இடம்பெற்றது.
தேசிய ஜனநாயக
மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபாக தலைவர் முஹைதீன் பவா பாகிஸ்தான் இளைஞர் கவுன்சிலுடன்
உரையாடியதன் பயனாக குறித்த உதவிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இங்கு
உரையாற்றிய றியாளுல் ஜன்னா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.சம்சுடீன்,
கற்றலை முன்கொண்டுசெல்ல அவசியமாக இருக்கும் கற்றல் உபகரணங்களை இவ்வாறான
மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வானது இம்மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகுந்த
உதவியாக இருக்கும் என்றும் இவ்வாறான உதவிகளை பெற்றுக்கொடுத்த கனவான் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபாக
தலைவர் முஹைதீன் பவாவுக்கு இம்மாணவர்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்
என்றும் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றப்படும் இவ்வாறான பணிகள் மாணவர்களுக்கு மிகுந்த
பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டில்
மாணவர்கள் பயன்பெறக்கூடிய குறித்த பொதிகள் வழங்கும் நிகழ்வில் முஹைதீன் பவா
சார்பில் ஊடகவியலாளர் எம்.வை.அமீர் பங்குகொண்டதுடன் முஹைதீன் பவாவின் செய்தியும்
அங்கு வாசிக்கப்பட்டது. இதில் நாட்டினதோ அல்லது பிரதேசத்தினதோ வளர்ச்சி என்பது எத்தனை
வீதம் கல்வியில் முன்னேற்றமடைந்துள்ளது என்பதைக்கொண்டே நிர்ணயிக்கப்படுவதாகவும்
பிராந்தியத்தை அபிவிருத்தி செய்ய கற்றல் விடயங்களில் மாணவர்கள் முழுமூச்சுடன்
செயற்படவேண்டும் என்றும் கல் எறிவது என்றாலும் பறவைகளை நோக்கியில்லாது விமானங்களை
நோக்கியதாக தூர நோக்குடையதாக இருக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இவ்வாறான பல
உதவு திட்டங்களை செய்வதற்கு தான் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
நிகழ்வில் பிரதி
அதிபர், பாடசாலை அபிவிருத்திசபை உறுப்பினர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும்
கலந்துகொண்டிருந்தனர்.
Comments
Post a comment