கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முன்னேற்றம் குறித்த அபிவிருத்திக் கலந்துரையாடல்
-எம்.வை.அமீர் -


கல்முனை மனித வள அபிவிருத்திக்கான அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் கல்முனை அஷ்ரப்ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்திகட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப்.ரகுமானுக்கும் இடையிலான நட்புறவு ரீதியான அபிவிருத்திக் கலந்துரையாடல் நிகழ்வு 21.11.2016 திங்கட்கிழமை வைத்திய சாலையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி அபிவிருத்திக் கலந்துரையாடல் நிகழ்வில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக அதன் தலைவர் அல்ஹாஜ். எஸ்.அப்துஸ் சமத் செயலாளர் அல்ஹாஜ். எஸ்.எல்.எம்.இப்ராஹீம் மற்றும் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் கல்முனைப் பிராந்தியத்திற்கான  சுகாதார வைத்திய அபிவிருத்திக்கான குழுவின் உறுப்பினர்களான வைத்திய கலாநிதிகள் சிரேஷ்ட வைத்தியர் எம்.எம்.ஜெசீலுல்  இலாஹி, சிரேஷ்ட வைத்தியர் ஏ.எல்.எம். பாரூக், சிரேஷ்ட வைத்தியர் எம்.எச்.எம். ரிஸ்பின், சிரேஷ்ட வைத்தியர் முகம்மது அமீன் போன்றோரும் மற்றும் கல்முனை மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பின் ஏனைய சிரேஷ்ட நிருவாக குழு உறுப்பினர்களும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சார்பாக அதன் வைத்திய அத்தியகட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப்.ரகுமான் மற்றும் அதன் நிருவாக கட்டமைப்பு தலைவர் சிரேஷ்ட வைத்திய கலாநிதி எம்.சி.எம். மாஹிர் மற்றும் ஏனைய வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களும் பங்குகொண்டிருந்தனர்.இந்நிகழ்வில் நிகழ்வில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன

1. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையானது அண்மைக்காலமாக பிராந்திய ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட டெங்கு நோய் பீடிக்கப்பட்ட சிறுவனின் மரணமும் அது தொடர்பிலான உண்மைக்கு புறம்பான செய்திகள், வாதப்பிரதிவாதங்கள் தொடர்பில் மக்களுக்கு யாதர்த்த நிலையை தெளிவுபடுத்தி உண்மையை உலகறியச் செய்யவேண்டியதன் அவசியம்.

2. வைத்தியசாலையைப் பற்றிய பிழையான கருத்துப்பரிமாறல்களும் அதன் அபிவிருத்திக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் விதத்தில் கால்புனர்ச்சியில் சிலர்விடும் அறிக்கைகளுக்கு தக்க பதிலடி வழங்கவேண்டிய அவசியம்.
3.  அம்பாறை மாவட்டத்தின் சிறந்த வைத்தியசாலையாக பெயர் பெற்ற இவ்வைத்தியசாலை இனமத பேதங்களுக்கு அப்பால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருகின்றது குறிப்பிடத்தக்கது இந் நிலையில் அதன் நற்பெயரையும் தரநிர்ணயத்தை உறுதி செய்து மக்களுக்கு தொடர்ச்சியான இன்றியமையாத சேவை வழங்கும் மத்திய கேந்திர நிலையமாக ஆக்குவதற்கான செயற்த்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
4. இப் பிராந்திய மக்களுக்குத் தேவையான விசேட சிகிட்சைப் பிரிவுகளை உருவாக்குதலும் குறிப்பாக நரம்பியல் பிரிவு (Neurology Unit) மற்றும் இருதய சத்திர சிகிட்சைப்பிரிவு (Cardiology Unit), CT Scan Unitஅதற்க்கான நிபுணத்துவமிக்க வைத்திய நிபுணர்களையும் உபகரணங்களையும்  அமைச்சரவை அங்கீகாரத்துடன் கொண்டுவருதல்.
5. வைத்திய சாலையின் அபிவிருத்தியின் சவால்களாக உள்ள விடயங்களை கண்டறிந்து உடன் சீர் செய்தல்
6. வைத்தியசாலையின் அபிவிருத்திக்குத் தடங்கல்களாக உள்ள புறக்காரணிகளை கண்டறிந்து அதை உடன் நிவர்த்தி செய்ய குழு ஒன்றை அமைத்தல்.

7. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்தியின் பங்காளர்களாக பிராந்தியத்தின் பொதுமக்களையும் இணைத்து செயர்ப்படுதல் இந் நிகழ்ச்சித் திட்டத்திற்கு கல்முனை மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பானது தனது பூரண ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் தொடர்ந்து வழங்கும்.

போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு பல்வேறு பட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்