இனவாத கருத்துகளுக்கு எதிராக புதிய சட்டமூலத்தை உருவாக்குமாறு நீதி அமைச்சருக்கும் பணிப்புரை

---------------------------------------------
-அஷ்ரப் ஏ சமத்-
நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது அமைச்சர்கள் அதிகாரிகள் அனைவரதும் அனைத்து கருத்துகளையும் செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக தயவு தாட்சண்யம இனமத பேதங்கள் பார்க்காமல நடவடிக்கை எடுக்க போலிஸ் மாதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இரண்டு மணித்தியாலங்களாக நடைபெற்றுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்கள விஜேதாச ராஜபக்ச சம்பிக்க ரணவக்க மனோ கணேசன்  ரவுப் ஹக்கீம் ரிசாத் பதுர்தீன் சாகல ரத்நாயக்க சுவாமிநாதன்  ருவன் விஜயவர்த்தன எம்பி ரத்தன தேரர் ஜனாதிபதி செயலாளர் பொலிஸ் மாஅதிபர் முப்படை தளபதிகள் சட்ட ஒழுங்கு அமைச்சு செயலாளர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர்களும்  கலந்துக்கொடுண்டுள்ளனர்.

முகநூல் கணக்குகள் மூலமும் இணையதளங்கள் மூலமும் இனவாத கருத்துகளை செய்திகளாகவோ கருத்து பதிவுகளாகவோ செய்பவர்களை கண்காணித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொழிட்நுட்ப பொறிமுறை ஒன்றை உருவாக்க வழி செய்யுமாறும ஜனாதிபதி தன் செயலாளருக்கு பணித்துள்ளார்

அத்துடன் இனவாத கருத்துகளுக்கு எதிராக புதிய சட்டமூலத்தை உருவாக்குமாறு நீதி அமைச்சருக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

புதிய சட்டமூல வரைபு தயாராகி கொண்டு இருப்பதாகவம் அதுவரையில் இப்போது இருக்கும் குற்றவியல் தண்டணை கோவை சட்ட மூலத்தின் அடிப்படையிலும் ஓராண்டு சிறைத்தண்டனை வரை வழங்க முடியும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.

புதிய சட்டம் வரும்வரை காத்து இருக்காமல உடன் செயல்படும்பட ஜனாதிபதி பொலிஸ் மாதிபருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்