அரசியலமைப்பு திருத்தம் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்பட சு.க. ஒருபோதும் இடமளிக்காது


இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு
-----------------------------------------------------------------------------------------

நாட்டின் தேவைக் கருதி மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு திருத்தம் வடக்கு, கிழக்கு மற்றும் அதற்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு  பாதிப்பு ஏற்படாத வகையிலேயே மேற்கொள்ளப்படும் எனவும், சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திருத்தத்துக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது எனவும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களாக எஸ்.பி.திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, அநுர யாப்பா, பைசர் முஸ்தபா, ஏ.எச்.எம்.பௌசி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அஸ்கிரிய மகாநாயக்க மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்து புதிய அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள சமகால பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர். 
இக்கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்;.ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனங்களுக்கிடையிலான பிரச்சினை, அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட சமகால அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், நாட்டின் தேவைக் கருதி மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது. 
நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் சிறுபான்மை சமூகங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள அரசியல் உரிமைகள் - அதிகாரங்கள் - சலுகைகள் என்பன புதிய அரசியலமைப்பில் அதோபோன்று பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு சமூகத்தை பாதிக்கும் வகையில் அரசியல் தீர்வு எட்டப்படுமாயின் அது நிரந்தர தீர்வாக அமையப்போவதில்லை. 
வடக்கு –கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உடன்பாடில்லை. அத்துடன், இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தாத வகையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அரசியலமைப்பு அமைய வேண்டும். 
இந்த நாட்டிலே மூன்று இனங்களும் ஒற்றுமையோடு வாழவேண்டும், நாட்டில் புதிய பிரச்சனைகளை உருவாக்காமல்,  இருக்கின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற எமது கட்சி நிலைப்பாட்டை இக்கலந்துரையாடலின் போது நாங்கள் தெளிவுபடுத்தினோம். இதனை வரவேற்ற மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள், சிறுபான்மை மக்களது உரிமைகள் அரசியலமைப்பில் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்கள். 
 அரசியலமைப்பு திருத்தம் வடக்கு, கிழக்கு மற்றும் அதற்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு  பாதிப்பு ஏற்படாத வகையிலேயே மேற்கொள்ளப்படும. மாறாக சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திருத்தத்துக்கும் நாங்கள் இடமளிக்கமாட்டோம் என சு.க. குழு அவரிடம் உறுதியளித்தது. – என்றார்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்