Skip to main content

மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

  எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா

ஹாபிஸ் நசிரின் உரையால் ஹக்கீமின் முக்கியத்துவம் கேள்விக்குறியாக்கி விட்டது


சாய்ந்தமருது கூட்டத்தில் பகிரங்கமாக முதலமைச்சர் அவர்கள் ஒரு விடயத்தை தெளிவாக மக்களுக்கு அறிவித்தார்..
ஹக்கீம் என்கின்ற இந்த தலைவர் இல்லாது விட்டாலும் கட்சி அழியாது, என்று ஹாபீஸ் நஸீர் கூறியவிடயமானது, ஹக்கீம் காங்கிரஸ் போரளிகளுக்கு ஒரு அடிதான்.
இந்த கூற்றை கி.மா.சபை உறுப்பினர் ஜவாத் அவர்களும் பகிரங்கமாக அறிவித்தார் என்பதை நாம் இந்த இடத்தில் புரிந்து கொள்ளவேண்டும்.
சில போராளிகள் கூறிவந்தார்கள்...
ஹக்கீம் இல்லாது விட்டால் கட்சி அழிந்து விடும் என்றும், ஹக்கீமால்தான் கட்சி உயிரோடு உள்ளது என்றும், அவர்கள் கூறிவருவது மட்டுமல்ல,
ஒருபடி மேலே சென்று ஹக்கீமுக்கு பதிலாக வேறு ஒரு தலைவரை உங்களால் காட்டமுடியுமா? என்றும் கேள்விவேறு கேட்கின்றார்கள்..
அந்த கேள்விக்கெல்லாம் ஒட்டு மொத்தமாக பதில் கிடைத்து விட்டது...
ஹக்கீம் இல்லாது விட்டாலும் கட்சி இயங்கும்.
அந்த இடத்துக்கு யார் வந்தாலும், போனாலும் கட்சியை யாராலும் அசைக்க முடியாது என்று கூறியவிடயம்.
ஹக்கீமின் முக்கியத்துவத்தை கேள்விக்குறியாக்கி விட்டது்.
ஆகவே, இந்த கட்சிக்கு ஹக்கீமால்தான் பிரச்சினை என்று கூறுபவர்கள், தலைவரை மாற்றுவதில் ஒரு பிரச்சினையும் வந்து விடாது என்று சூசகமாக ஹாபீஸ் நஸீர் அவர்கள் கூறியது சிந்திக்கவேண்டிய ஒன்றாகும்.
அதே நேரம்,   ரிஷாட் பதியுதீனைப் போல், இந்த கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து எம்.பிக்களை ஹக்கீமால் பெறமுடியுமா என்ற கேள்விக்கும் பதில் கிடைத்துவிட்டது.
ஏனென்றால், கட்சியினால்தான் ஹக்கீமுக்கு மறியாதை.!
கட்சி இல்லாது விட்டால் ஹக்கீமின் கதை அதோ கதிதான்...
என்ற விடயம் சூசகமான முறையில், ஹக்கீமுக்கு விடப்பட்ட ஒரு சவால்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
அதே நேரம், பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்களும் பல உண்மைகளை அவ்விடத்தில் கூறிச் சென்றார்.
நாங்கள் பதினாறு வருடங்களாக ஹக்கீம் தலைமையில் ஆளும் கட்சியிலும்,எதிர்க்கட்சியிலும் இருந்திருக்கின்றோம், ஆனால் நாங்கள் இதுவரை ஒன்றுமே சாதிக்கவில்லை என்பதும் உண்மைதான் என்றார்.
காரணம், நாங்கள் ஆளும் கட்சியில் இருந்திருந்தாலும் எங்களுக்கு எதுவிமான அதிகாரங்களும் கிடைக்கவில்லை.
அதிகாரங்கள் கிடைக்காமல் செய்வதில் சில அரசியல்வாதிகள், பஷில் ராஜபக்கவிற்கு பின்னால் இருந்து செயல்பட்டார்கள் என்றும் குறிப்பிட்டு ஆதங்கப்பட்டிருந்தார்.
அது மட்டுமல்லாமல் இந்த அரசாங்கத்திலும் எங்கள் தலைவருக்கு பிரயோசனமற்ற அமைச்சைத்தான் கொடுத்துள்ளார்கள்...
எங்கள் தலைவர் இந்த அமைச்சில் விருப்பமில்லாமல்தான் இன்றும் உள்ளார், என்றும் இந்த விடயத்தை பிரதமர் அவர்களிடம் தலைவர் கூறியபோது, அதற்கு பிரதமர் அவர்கள் சற்று பொறுமையாக இருங்கள் பார்ப்போம் என்றும் கூறினாராம், என்று பைசல் காசிம் அவர்கள் கூறி கைசேதப்பட்ட விடயம் கேட்பதற்கு கவலையாக இருந்தது.
ஆக, இந்த விடயத்தில் ரிஷாட் பதியுதீன்தான் பின்னால் இருந்து செயல்படுகின்றார் என்று மறைமுகமான முறையில் கருத்து தெறிவித்த பைசால் காசிம் அவர்கள், ரிஷாட்டின் திறமையையும், மு.காங்கிரஸ் தலைவரின் கையாலாகாத தனத்தையும்  சூசகமாக கூறிச்சென்றார்.
அதே நேரம் பைசல் காசிம் அவர்கள் சாய்ந்தமருது மக்களை பார்த்து,...பைசர் முஸ்தபா அவர்கள் நினைத்தால், அமைச்சரவைக்கு பத்திரத்தை சமர்பித்து ஒருநாளைக்குள் முடிக்க வேண்டிய வேலையை, இன்னும் அவர் ஏன் செய்யாமல் தாமதப்படுத்துகிறார் என்றும் கேள்வி எழுப்பினார்...
அந்த கேள்வியூடாக ஒரு உண்மையையும் அவர் அவ்விடத்தில் போட்டுடைத்தார். ஹக்கீம் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றும் நோக்கத்தோடுதான்,
பள்ளிவாசல் நிருவாகத்திடம், அது இலேசாக செய்யும் விடயமல்ல, நிறைய விடயங்களை அதற்கு செய்யவேண்டும் என்று கூறி பல ஆண்டுகளாக ஏமாற்றிவருவதும் பைசால் காசிமின் கூற்றில் இருந்து மெய்யாகின்றது.
பைசர் முஸ்தபா நினைத்தால் இலேசாக முடிக்கும் காரியம் என்று சொன்னால், ஏன்   கருஜெயசூரயாவை பயன்படுத்தி, ஹக்கீம் அவர்களால் இந்த விடயத்தை இலேசாக செய்து முடிக்க வில்லை, என்ற கேள்விக்கு இப்போது விடைகிடைத்து விட்டது.
அதே நேரம் ஜவாத் அவர்களும் மேடையில் பேசும்போது.. எங்கள் தலைவர் பொறுமை சாலி என்று கூறினார். ஏனென்றால்.
நான் ஒருமுறை உங்கள் எல்லோரையும் ஒன்றாக நிற்கவைத்து, ஒரு பொலிஸ்காரனின் துப்பாக்கியை வாங்கி சுட்டுத்தல்ல வேண்டும் என்று கூறினேன். அப்படி கூறிய என்னையே, கோபிக்காமல் சிரித்து பேசும் தலைவர்தான், இந்த  தலைவர் என்று கூறியவிதம்,...! ஹக்கீமை....அந்த நேரத்தில், (எவ்வளவு அடித்தாலும் வலிக்கவில்லை என்று கூறும்
"நகைச்சுவை நடிகர் வடிவேலை அந்த இடத்தில் ஞாபகப்படுத்தியது"
அதுமட்டுமல்ல, ஜவாத் அவர்கள் ஒருஇடத்தில் கூறினார்.
யார் வந்தாலும், போனாலும் எங்கள் கட்சியை எவராலும் அழித்து விடமுடியாது. இந்த கட்சிக்கு தலைவராக ஹக்கீம் இல்லாது விட்டாலும், கட்சியை யாரும் அழித்து விடவும் முடியாது.
"கட்சியினால்தான் தலைவர்களுக்கு மதிப்பே தவிர,
தலைவரினால் கட்சிக்கு ஒருபோதும் மதிப்புக் கிடையாது. அதனால் கட்சிதான் எங்கள் உயிர் என்ற கருத்துப்பட அவர் பேசிய விடயம் சற்று சிந்திக்கவேண்டிய விடயம்தான்....
ஆக மொத்தத்தில் இந்த சாய்ந்தமருது கூட்டம் பல உண்மைகளை கூறிச்சென்றது. என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பதே உண்மையாகும்...
எம்.எச்.எம்.இப்ராஹிம்
கல்முனை....

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச