இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை இரு அமைச்சர்களும் அதிரடி மறுப்பு


24.11.216
கௌரவ வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள், அண்மையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் இன விரோத செயல்களை எதிர்த்தும், அதனைக் கண்டித்தும் பேசியதோடு; 1000 வருடங்களுக்கு மேலான சிங்கள - முஸ்லிம் நட்புறவுக்கு பங்கம் விளைவிக்க இடம்கொடுக்க முடியாதென்றும், சகல விதமான தீவிரவாதங்களை கண்டித்தும், சிங்கள – முஸ்லிம் இன நல்லுறவு உறுதியான முறையில் கட்டி எழுப்பப்பட வேண்டுமெனவும் பாராளுமன்றத்தில் துணிந்து உண்மைகளை எடுத்துக் கூறி உரையாற்றியமைக்கு முஸ்லிம்கள் சார்பாக எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு, சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கௌரவ ராஜித சேனாரத்ன அவர்கள், நேற்று (23.11.216) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவுக்கும் செய்தியாளர்கள் மாநாட்டில், ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்றும், இலங்கையர்கள் 32 பேர் ஐ.எஸ். இல் உள்ளார்கள் என வெளியிடப்பட்ட கருத்து எவ்வித ஆதரமுமற்றதாகும் என்றும், பொறுப்போடும் உறுதியோடும் கூறியதோடு, வெளிநாடுகளில் இருந்துவரும் முஸ்லிம் விரிவுரையாளர்கள் எவ்வித சட்டவிரோதமான செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனவும் வற்புறுத்தி பகிரங்கமாகக் கூறியதற்கும் அதன் மூலம் சமூகங்களுக்கிடையில் ஏற்படவிருந்த பதட்டத்தை நீக்கியதற்கும் முஸ்லிம் சமூகம் சார்பாக எங்களுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எஸ்.சுபைர்தீன்
செயலாளர் நாயகம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

Comments

popular posts

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி சைரீன் இனாம் மெளலானா இந்தோனேசியாவில் தங்கப்பதக்கம் வென்று எம் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

புதிய அரசியல் கூட்டணி – சஜித் தலைவர் – சம்பிக்க பிரதித் தலைவர்