மான‌ம் ரோச‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் அர‌சை விட்டு வெளியேறி அர‌சுக்கு பாட‌ம் புக‌ட்டுவ‌ர்.

புலிக‌ள் பொது ம‌க்க‌ளின் வீடுக‌ளை பிடித்து வைத்திருந்தார்க‌ள் என்ப‌த‌ற்காக‌ அவ‌ற்றை கைப்ப‌ற்றிய‌ அர‌சும் அவ‌ற்றை பிடித்து வைத்திருப்ப‌து அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌மா என‌ அர‌ச‌ அமைச்ச‌ர் ம‌னோ க‌ணேச‌ன் கேட்டுள்ள‌த‌ன் மூல‌ம் அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்துக்கு துணை போகும் ஒருவ‌ராக‌ ம‌னோ க‌ணேச‌ன் த‌ன்னை இன‌ம் காட்டியுள்ளார்.

இந்த‌ ந‌ல்லாட்சி அர‌சாங்க‌த்தை கொண்டு வ‌ந்த‌வ‌ர்க‌ளில் அமைச்ச‌ர் ம‌னோ க‌ணேச‌னும் முக்கிய‌மான‌ ஒருவ‌ர். சிறுபான்மை ம‌க்க‌ளுக்கெதிராக‌ அநியாய‌ங்க‌ள் ந‌ட‌க்கும் போது அத‌ற்கெதிராக‌ ஒரு வார்த்தையேனும் பேசாம‌ல் மௌன‌மாக‌ இருந்த‌ ஒருவ‌ரை கொண்டு வ‌ருவ‌து சிறுபான்மை ம‌க்க‌ளை ஏமாற்றுவ‌தாகும் என‌ உல‌மா க‌ட்சி சொன்ன‌ வேளை அப்ப‌டிய‌ல்ல‌ என‌ சொன்ன‌வ‌ர்க‌ள் அர‌சுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டே அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் என‌ சொல்லிக்கொண்டிருப்ப‌த‌ன் மூல‌ம் இவ‌ர்க‌ள் த‌ம‌து சுய‌ந‌ல‌ன்க‌ளுக்காக‌ ம‌க்க‌ளை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்க‌ள்.

த‌ம்மால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம் சிறு பான்மை ம‌க்க‌ளை ஓர‌ம் க‌ட்டுகிற‌து என்ப‌தை ஏற்றுக்கொள்ளும் இவ‌ர்க‌ள் தொட‌ர்ந்தும் இந்த‌ அர‌சாங்க‌த்தில் ஒட்டியிருப்ப‌த‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ளே சொல்லும் அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்துக்கு தாமும் துணை போவ‌தை புரியாம‌ல்தான் இருக்கிறார்க‌ளா என்று கேட்கின்றோம்.
த‌ம‌து சுய‌ந‌ல‌ன்க‌ளுக்காக‌ அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் உள்ள‌ அர‌சின் அமைச்ச‌ராக‌ இருந்து கொண்டு அர‌சின் அனைத்து சிறுபான்மை விரோத‌ செய‌ல்க‌ளுக்கு அமைச்ச‌ர‌வையில் கையை உய‌ர்த்திக்கொண்டு வெளியில் முக‌நூல்க‌ளிலும் ஊட‌க‌ங்க‌ளிலும் அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் உள்ள‌தா என‌ கேட்டு தாங்க‌ள் சிறுபான்மை ம‌க்க‌ள் மீது ப‌ற்றுக்கொண்ட‌வ‌ர்க‌ள் போல் ம‌க்க‌ளிட‌ம் காட்டுவ‌தாக‌வே உல‌மா க‌ட்சி பார்க்கிற‌து.

மான‌ம் ரோச‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் அர‌சை விட்டு வெளியேறி அர‌சுக்கு பாட‌ம் புக‌ட்டுவ‌ர்.
ஆக‌வே  அமைச்ச‌ர் ம‌னோ க‌ணேச‌ன் அவ‌ர்க‌ள் அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் உள்ள‌தாக‌ அவ‌ர‌து ம‌ன்சாட்சி ஏற்றுக்கொள்ளுமாயின் அத்த‌கைய‌ அர‌சின் முட்டுக்கொடுப்பாள‌ராக‌ தான் இருப்ப‌தை அவ‌ர‌து ம‌ன‌சாட்சி ஏற்றுக்கொள்கிற‌தா என‌ கேட்கிறோம். அப்ப‌டி ஏற்றுக்கொள்ளுமாயின் இதுதான் த‌மிழ் பேசும் ம‌க்க‌ளுக்கு செய்யும் துரோக‌ம் என‌ உல‌மா க‌ட்சி சொல்லிக்கொள்கிற‌து.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்