சாய்ந்தமருது கிங் ஹோஸஸ் வெற்றிக்கிண்ணத்தை அக்கரைப்பற்று நோநேம் விளையாட்டுக்கழகம் சுவீகரித்ததுசாய்ந்தமருது கிங் ஹோஸஸ் வெற்றிக்கிண்ணத்தை அக்கரைப்பற்று நோநேம் விளையாட்டுக்கழகம் சுவீகரித்தது!......
-எம்.வை.அமீர்,யு.கே.காலிதீன்,எம்.ஐ.எம்.அஸ்கர்-
சாய்ந்தமருது கிங் ஹோஸஸ் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘கிங் ஹோஸஸ் வெற்றிக்கிண்ண’ அணிக்கு 7பேர்கள் விளையாடும், 5 ஓவர்களைக் கொண்ட  கிறிக்கட் சுற்றுப்போட்டியை கடந்த 7 நாட்களாக 48விளையாட்டுக்கழகங்களிடையே சாய்ந்தமருது பௌஸி விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் இரவு போட்டிகளாக நடைபெற்றது.
போட்டியின் இறுதிநாளான 2016-11-25 ஆம் திகதி அரையிறுதி போட்டிகளாக சாய்ந்தமருது டஸ்கஸ் விளையாட்டுக்கழகத்துக்கும் அக்கரைப்பற்று நோநேம் விளையாட்டுக்கழகத்துக்கு இடையிலும் சாய்ந்தமருது லம்கோ விளையாட்டுக்கழகத்துக்கும் மாவடிப்பள்ளி விளையாட்டுக்கழகத்துக்கு இடையிலும் நடைபெற்றது இப்போட்டிகளில் அக்கரைப்பற்று நோநேம் விளையாட்டுக்கழகமும் சாய்ந்தமருது லம்கோ விளையாட்டுக்கழகமும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.
வெற்றிக்கிண்ணத்துக்காக களமிறங்கிய இவ்விரு அணிகளும் கடைசிவரை விறுவிறுப்பான முறையில் விளையாடி இறுதியில் அக்கரைப்பற்று நோநேம் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
கிங் ஹோஸஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஏ.எல் முஹம்மட் தலைமையில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் பொலிஸ் தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.எம்.நவாஸ் பிரதம அதிதியாகவும் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் எம்.பஸ்மிர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டதுடன் இன்னும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றிகொண்ட கழகங்களுக்கு கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
மின்னொளியில் இடம்பெற்ற இப்போட்டிகளை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குழுமியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்