அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எதிரான கருத்துக்ககளை முற்றாக மறுக்கிறார் வைத்திய அத்தியட்சகர் றஹ்மான்!


-எம்.வை.அமீர்,யு.கே.காலிதீன், எஸ்.எம்.எம்.றம்ஸான்-
அண்மைக்காலமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எதிராக சில ஊடகங்களிலும் முகநூல்கள் வயிலாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு, வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப்f. றஹ்மான் தலைமையில் 2016-11-15 ஆம் திகதி இடம்பெற்றது.
இப்பிராந்தியத்தில் பாரியளவில் முன்னேற்றம் கண்டுவரும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முன்னேற்றத்தை சகித்துக்கொள்ள முடியாத சிலராலேயே இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், சில தினங்களுக்கு முன்னர் Cerebral Encephalitis என்ற மிக அபூர்வமான டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனுக்கு, வைத்தியசாலை சிகிச்சை வழங்கவில்லை என்ற குற்றங்களை முன்வைப்பதாகவும் இவைகள் அனைத்தும் உண்மைக்குப்புறம்பானவை என்றும் தெரிவித்தார்.
2014 முதல் இன்றுவரை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டெங்கு நோயாளிகளில் ஒருவர் மட்டுமே இறந்துள்ளதாகவும், 2016 ஆண்டில் இன்றுவரை 292 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு அவர்களில் அநேகர் சிகிச்சை பெற்றுச்சென்றுள்ளதாகவும் இதில் குறித்த சிறுவனது சகோதரர்கள் இருவர் கூட அடங்குவதாகவும் குறித்த சிறுவனுக்கு சிறுபிள்ளை வைத்திய நிபுணர் எஸ்.என்.விதுராங்க சேரம் தலைமையில், வைத்தியர்கள்  குழாமினால் அதிஉச்ச வைத்திய முன்னெடுப்புகள் செய்யப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது  போன்று வைத்திய நிபுணர் பிரசன்னமாகியிருக்க வில்லை என்ற குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாகவும் தெரிவித்தார்.
சிறுவனின் இழப்பு தாங்க முடியாத ஒன்றுதான் என்று தெரிவித்த டாக்டர் றஹ்மான், இச்சிறுவனின் உயிரைத் தக்க வைப்பதற்காக அதிக சிரத்தையுடன் முயற்சி மேற்கொண்டதாகவும் முடியாமல் போனது கவலையான விடயம் என்றும் தெரிவித்தார்.
சிறுவன் கடந்த 4 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அனுமதிக்கப்பட்ட தினம் முதல் ஆறு நாட்களும் இரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் குறித்த பரிசோதனை எதிலுமே சிறுவனுக்கு டென்கினால் வரக்கூடிய உயர் பாதிப்பு சம்மந்தமான ஆதாரங்கள் காணப்படவில்லை என்றும், ஆதாரங்கள் எதுவுமில்லாமல் மேலதிக சிகிச்சைகள் செய்வது நோயாளிக்கு மேலதிக பாதிப்பை ஏற்படுத்தும் (உயிரிளப்பைக்கூட ஏற்படுத்தலாம்)  என தெரிவித்த டாக்டர் றஹ்மான்,     9 ஆம் திகதிவரை  சிறுவனுக்கு, இணைந்த வைத்திய உதவி வழங்கப்பட்டதாகவும், மிகுந்த அவதானிப்பில் வைக்கப்பட்டதாகவும் 9 ஆம் திகதி வரை சிறுவனுக்கு ஆபத்தான நிலை இருக்கவில்லை என்றும் திடீரென்று 9 ஆம் திகதி உயர் காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டதாகவும், அப்போது இப்பிள்ளைக்கு மூளையில் அமுக்கம் கூடியதால் இப்பிரச்சினை வந்திருக்கலாம் என சந்தேகித்து CT பரிசோதனைக்காக  மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு, இந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் மூன்று திறமையான வைதியர்களுடன் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அங்கு மேற்கொள்ளப்பட்ட மேலதிக பரிசோதனைகளின்போது சிறுவனுக்கு டெங்குடன் தொடர்புடைய அபூர்வமான மூளைஅலர்ச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இவ்வாறன நோயினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான காப்புமுறை இதுவரை இல்லை என்றும் தெரிவித்தார்.  
இப் பத்திரிகையாளர் சந்திப்பின்போது சிறுபிள்ளை வைத்திய நிபுணர் எஸ்.என்.விதுராங்க சேரம், சிறுவனுக்கு வழங்கப்பட்ட வைத்திய உதவிகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
மிகவும் பயங்கரமான இதுபோன்ற நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற பயங்கரமான இன்நுளம்புகள் உருவாகாக்கூடிய பிரதேசங்களை சுத்தமாக வைப்பதனூடாகவே சாத்தியமாகும் என்று தெரிவித்த அவர், இதற்காக ஒவ்வொருவரும் அர்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கிணறுகளில் இவ்வாறான டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவைகளையும் முகாமை செய்யவேண்டும் என்றும் குறிப்பாக மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் நீர் தேங்கி நிக்கக்கூடிய அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சிலரால் வைத்தியசாலைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அத்தியட்சகர் றஹ்மான், தான் வைத்திய அத்தியட்சகராக கடமையேற்றது முதல் நிர்வாகம் உள்ளிட்ட ஒவ்வொரு விடயத்திலும் உண்ணிப்பான அவதானத்தை செலுத்தி வருவதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு விடயங்களிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு அதற்க்கான செயற்பாடுகளும் இடம்பெறுவதாகவும் இங்கு அரசியல் தலையீடு உள்ளதாக கூறப்படும் கருத்துக்களையும் மறுதலித்தார். ஏதாவது குறைகள், சந்தேகங்கள்  அல்லது கருத்துக்கள் இருப்பின் தன்னுடன் நேரடியாகவே பேசமுடியும் என தெரிவித்த அத்தியட்சகர், உண்மையற்ற விடயங்களை வெளியிடுவதை தவிர்ப்பதனூடாக வைத்தியசாலையின் முன்னேற்றத்து ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது வைத்திய நிபுணர்களான பி.கே.ரவீந்திரன் மற்றும் பந்துல சிறிசேன ஆகியோரும் பிரசன்னமாகி கருத்துக்களை தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்