ரஊப் ஹக்கீமின் அவகாசம் முடிகின்றதுஇன்னும் ஒதுங்கவில்லையா நீ
பாதங்களில் அணிந்திருப்பவற்றை கன்னங்களுக்கு
ஓங்குவதை நாம்
வெறுக்கிறோம்

பிடிபிடியாய் அரிசி சேர்த்து
நேர்ந்த முட்டிக்குள்
வருடத்தை எல்லாம் ரமளான்களாக்கி
தவமிருந்து எம்முடையோர்
உயிரைக் குரிதியாய் பீறிட ஓடவிட்டு நோக்காடே வாழ்க்கையாக்கி
பெற்றெடுத்த செல்வ மரத்தை
ஆளுக்கு ஒருபுறமாய் கூறு போட்டுக்கிழித்து
அண்ணனுக்கும் மச்சானுக்கும் சொகுசுக்கட்டில்கள் செய்து மீதமுள்ள சொச்சத்தை கோடிகளுக்கு விற்று பூமியிலுள்ள சுவனங்களை எல்லாம்
உங்களுக்கு சொந்தமாக்கி
சதிகாரக்கூட்டத்தின் பொறாமை வலையில் தலைவனையும் பறி கொடுத்து,
எம் தேசியம்
நாதியில்லாத மக்களாய் நடுத்தெருவுக்கு வந்தது போதாதா
இ்னி ஒரு கணமும் அனுமதியில்லை
விட்டு விட்டு ஓடுங்கள்!
எம் உயிரினும் மேலான் உடன் பிறப்புக்களை நாம் பார்த்துக்கொள்கிறோம்
எமது இறைவன்
எல்லாம் வல்லோன்
அல்லாஹ்தஆலா
அவன் புறத்திலிருந்து தந்துள்ளான் ஞானத்தை
குர் ஆன் ஹதீஸ் எனும் ரூபங்களில்
என்ன பாஷையில் பேச விரும்புகிறீர்கள்
ஆண்டு முடித்த ஆங்கிலத்திலா
ஆழப்போகும் தமிழிலா?
எதுவானாலும் நாம்தயார்
எம்மிடம் இன்னுமொரு பாஷையும் உண்டு
உங்களால் பேச முடியாதது அது
உங்கள் தர்பார்களை தவிடு பொடியாக்கும் எம் தவப்பிராத்தனைகள் அவை!
எம் தேசியத்தின் ஒவ்வொரு கலங்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்துடிப்பு!
அரநாயக்க அந்தரங்கங்கங்களையும் ஆதாரத்துடன் கொண்டுவருவோம்
அதற்குமுன் வேரையும் அறுத்து
காயவைத்துப் பல்லுக்குத்திகள் செய்யும் கம்பேனிகளுக்கு சில்லறை விலைக்கு வித்துவிட விலைபேசிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம்
செத்தாலும் விடமாட்டோம்!
நம் பூர்வீகப்பூமியை
சாத்தான்களுக்கு விற்றுவிட
விட்டுவிடுவோமா
இடையில் புகுந்தவனே
உடுதுணியையும் எடுக்கவிடாமல்
விரட்டியக்கப்பட்டஎம் உறவுகள்
இன்னும் வீதிகளில் தூங்குகின்றனர்
மீதியிருக்கும் எம்மையும்
காசுக்கு வித்துவிடலாமென்று
கனவு காணாதே கயவனே
உயிருக்கு உயில் எழுதி முடித்தவர்கள் நாங்கள்
இந்தப்புலிகளும் சேனைகளும் ஒரு மூச்சுக்கு தாங்காது
மரணம் எமது சுவனத்துக்கு தடை என நம்புவோர் நாங்கள்
நீ எம்மாத்திரடமடா எங்களுக்கு
பேனையோடு முடித்துக்கொள்ள விரும்புகின்றோம்
சொல்லாமல் பாயைக்கட்டடா
நட்டிய எங்களுக்கு தெரியும்
வேரிலிருந்து இன்னுமோர் மீட்சி செய்ய
யாரடா நீ எம்மை ஆழ
நாம் ஆழப்பிறந்தவர்கள்
எம்மவனுக்கு மட்டுமே மந்தைகளாவோம்.
ஓடிவிடுங்கள்
கூட்டங்களோடு
அவசரமாய்
உங்கள் மானங்களை இன்னும் நாம் மதிக்கின்றோம்.
ஆயினும் வாக்குறுதிகள் நிபந்தனைக்கு உட்பட்டவை.
உன்னையே பதச்சோறாய் கணித்து
எம் தேசியம் காறி உமிழப்படுவதை இனி ஒரு கணமும் அனுமதிக்க முடியாது
உன்னை கல்லெறிந்து கொல்ல ஏலவே எமக்கு அனுமதியுண்டு அறிந்து கொள்!
ஓடிவிடுங்கள் அம்மணமாக்குப்படுமுன்!!
-வபா பாறுக் Face Book

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்