முஸ்லீம்கள்.நமக்கு ஹிலாரி வந்தால்தான் என்ன.ரம்ப் வந்தால்தான் என்ன?

இந்த முறை அமெரிக்காவில் யார் வெல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? நேற்றிரவு பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் கேட்டார்.
‘டொனால்ட் ட்ரம்ப்’ என்றேன்.நான் ஹிலாரி என்று கூறுவேன் என்று எதிர்பார்த்திருப்பார் போல.
“அவன் முஸ்லீம்களைப் பற்றி என்ன சொல்கிறான் என்று தெரிந்தும் ஏன் அவன் வரவேண்டும் என்கிறீர்கள்’’ என்று கேட்டார்.
அவருக்கு விளக்கினேன்.
“நாம் முஸ்லீம்கள்.நமக்கு ஹிலாரி வந்தால்தான் என்ன.ரம்ப் வந்தால்தான் என்ன.இருவரும் முஸ்லீம்களுக்கு எதிராகத்தான் செயற்படப்போகிறார்கள். இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கப்போகிறார்கள்.ஒரு முஸ்லீம் என்ற ரீதியில் இவர்கள் இருவரால் இஸ்லாத்திற்கு ராஜதந்திர ரீதியாக நன்மை பயக்கக்கூடியவர் யார் என்பதை நாம் ஆராய வேண்டும்.அது எனக்கு ரம்ப் போல் தெரிகிறது’’ என்றேன்.
‘’முஸ்லீம்கள் குடியேறுவதை மொத்தமாகத் தடுக்க வேண்டும் என்று சொல்லும் இவன் ஜனாதிபதியாக வருவதால் இஸ்லாத்திற்கு எப்படி நன்மை கிட்டும்” சற்று அவர் முகம் சிவந்தது.அரசியல் அடிப்படை தெரியாத ஒரு முட்டாளோடு பேசிக்கொண்டிருக்கிறோம் என்று என்னைப்பற்றி நினைத்திருப்பார் போல.
தொடர்ந்து விளக்கினேன்.
‘’ரோம சாம்ராஜ்யத்தில் கலிகுலா என்றொரு அரசன் இருந்தான்.ஒரு கேவலமான ஆட்சியாளன் அவன்.தன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவன்.தனக்காக கட்டடங்கள் கட்டிக்கொண்டும் தனது நெருக்கமானவர்களைக் கொலைகள் செய்து கொண்டு, திரிந்தவன்.ஊழல்,ரத்த உறவுகளோடு விபச்சாரம்,அதீதமான செலவீனம் என்று ரோம சாம்ராஜ்யத்தின் கஜானாவைக் காலி செய்தவன். இறுதியில் தன் சொந்தக் காவலர்களாலேயே அவன் கொல்லப்பட்டுவிட்டான். வரலாற்றாசிரியர்கள் அவனைப் பைத்தியக்காரன் என்கிறார்கள்.
டொனால்ட் ட்ரம்புக்கும் கலிகுலாவுக்கு அதிக வேறுபாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ட்ரம்ப் ஒரு கோமாளியாகப்பார்க்கப்பட்டவர்.முதல் சுற்றுலேயே தொலைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் இத்தனை தூரத்திற்கு வந்ததே ஆச்சரியம்.
அவர் ஒரு அதீத கோபக்காரர், நிதானமில்லாதவர்.அரசியல் அனுபவம் இல்லாதவர்.வெற்றிகரமாக ஒரு நிறுவனத்தை நடத்துவதால் நாட்டையும் நடத்தலாம் என்று நினைப்பவர்.ரெஸ்லிங்க்,பிளேபோய், என்று அனுபவிப்பவர்.’இவங்கா ட்ரம்ப்’ தனக்கு மகளாக இல்லாவிட்டால் தான் அவரோடு டேடிங் செய்திருப்பேன் என்று கூறியவர்.அழகில்லை என்று பெண் ஊழியர்களை விலக்கியவர்.
அத்தோடு அவர் ஒரு இனவாதி.கறுப்பர்களுக்கு எதிரானவர்.ஏற்கனவே அமெரிக்காவில் கறுப்பு-வெள்ளைப் பிரச்சினை நன்றாக தீப்பற்றி எரிகிறது.இவர் நிச்சயமாக அதற்கு எண்ணெய் ஊற்றுவார்.அது நன்றாகப் பற்றி எரியும்.ஒரு உள்நாட்டு கலகத்திற்கு அது இட்டுச் செல்லும்.
ஏற்கனவே மெக்ஸிகோவோடு அவர் பிரச்சினைப்பட்டிருக்கிறார்.பிரிட்டன் இவரை வெறுக்கிறது.இவரது வாயால் பல சர்வதேசப் பிரச்சினைகள் உருவாக வாய்ப்பிருக்கிறது.
வழமைக்குமாறாக ரஷ்யாவோடும் சீனாவோடும் ராஜ தந்திர உறவு வைத்துக்கொள்ள விரும்புகிறார்.இது அமெரிக்காவின் வெளிநாட்டு உறவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.பெண்களை மிகவும் இழிவாகப் பேசுகிறார். பெண்ணிலை வாத அமைப்புகள் எதிர்க்க ஆரம்பிக்கும். விட்டுக்கொடுக்காத பண்பு கொண்டவர் என்பதால் கலந்துரையாடல்களை விரும்பமாட்டார்.யார் எதிர்த்தாலும் முடிவுகளைத் தான்தோன்றித்தனமாக எடுக்க முனைவார்.அவருக்கு ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் ஆசை காட்டி ஒப்பந்தங்கள் செய்யும் போது முஸ்லீம்கள் மீதான வெறுப்பை யுத்தமாக மாற்றி லாபம் சேர்க்க நினைப்பார்.அமெரிக்காவின் பொருளாதாரம் வீழும்.அவர் தற்போது ஈரான் மீது காட்டும் ஒரு வெறுப்பு உண்மையாக இருந்தால் சுன்னி முஸ்லீம்களுக்கு அது சாதமாக முடியலாம்.
ஆனால் ஹிலாரி அப்படியல்ல.வழமையான ஜனநாயகக் கட்சிக்காரர்.இதுவரைக்கும் எந்த ஜனாதிபதியும் கொண்டிராத சர்வதேச அரசியல் அனுபவம் கொண்டவர்.அவர் தெரிவுசெய்யப்பட்டால் வழமையான ஒரு ஜனநாயக கட்சிக்காரர் ஆட்சி செய்வதைப் போல் ஆட்சிசெய்வார்.
ஆனால் ட்ரம்பிடம் இதுவரைக்கும் எந்த ஜனாதிபதி வேட்பாளரிடமும் வெளிப்படையாகத்தெரியாத முட்டாள்தனம் இவரிடம் தெரிகிறது.ஹிலாரியால் அமெரிக்க வழைமைபோல் இருக்கும்.ட்ரம்பால் அமெரிக்கா அழியும்.இப்பொழுது கூறுங்க ஒரு முஸ்லீமின் பார்வையில் எவர் வெல்ல வேண்டும்?
‘ஆனால் அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லீம்களுக்கு பிரச்சினை வருமே? என்றார் நண்பர் கவலையோடு.
‘’சிங்கத்தின் குகைக்குள் நிழல் சுகம் தேடிப்போய்விட்டு தன் காலை சிங்கம் கடித்துவிட்டது என்று மான் முறையிடுவது நியாயமில்லையே என்றேன்’’
அவர் கென்வின்ஸ் ஆகவில்லை.
Raazi Muhammadh Jaabir

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்