வளர்த்த கடா மார்பில் பாய்ந்தால், யாரிடம் சொல்லி மாழுவது அப்படியா?


மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிங்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக அவரது ஆட்சியில்   முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போதும், இனவாதிகள் பள்ளிவாயல்களை தகர்த்து துள்ளி விளையாடிய போதும், அவர்களின் வன்முறையையும் வன்மமான பேச்சுக்களுக்கும் மஹிந்த அனுமதி வழங்கி வேடிக்கை பார்க்கிறார் என்று, மேடைக்கு மேடை கூவிய தலைவர்கள், தற்போது ஒன்பது கண்களும் அடைத்தவர்கள் போல்,  இந்த நல்லாட்சி அரசில் இனவாதிகளின் கீழ்தரமான செயல்களுக்கு மஹிந்ததான் காரணமென விரல் நீட்டுவது வெட்கம் கெட்ட செயல் என அவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடிகளாவது கூறவில்லையா? என கேள்வி எழுகிறது.
அன்று மஹிந்த அரசாங்கத்தில் ஒரே ஒரு ஞானசார தேரர் மாத்திரம்தான் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார். இன்று தேசிய அரசாங்கம் என்றும் நல்லாட்சி என்றும் ஜனாபதியும் பிரதமரும் மாறிமாறி போட்டி போட்டுக்கொண்டு வெளிநாடு பறந்து திரிகிறார்களே தவிர, நாட்டையும் நாட்டுமக்களையும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் ஆயிரம் ஞானசாரக்கள்  விசம்பாம்புகளாக வளர்ந்து நிற்பதை கவனிக்க தவறிவிட்டார்கள்.
தாங்களும் சேர்ந்து செய்த அதிகார துஷ்பிரயோகங்களுக்கு மஹிந்தவின் சர்வதிகார ஆட்சிதான் காரணம் என்று பெயர் வைத்தவர்கள், இன்று பாராளுமன்றத்திற்குள்ளும் வந்து முஸ்லிங்களை இழிவு படுத்துவதை நமது 22 முஸ்லிம் ஜனாசாக்கள் பார்த்துக்கொண்டும் அவர்களின் சிங்கார கதைகளை கேட்டுக்கொண்டும் இருந்து விட்டு  ஊராய் ஊராய் வந்து நின்று சத்தம் போட்டு பேசுவதால் கேட்டுக்கொண்டு இருக்கும் எங்களை மடையர்கள் என இந்த தலைவர்கள் நினைப்பது அவர்களின் அப்பாவித்தனத்தனம் என்றே சொல்லவேண்டியுள்ளது.
முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்களின் உரிமைக்காகவும் மக்களை ஒன்று திரட்டி அறவழியில் போராட்டம் நடத்திய சகோதரர் அப்துல் ராஷிக்கின் கைதை இனவாதமாக தூபமிட்டுக் காட்டும் மிகப்பெரிய இனவாதிகளைத்தான் முஸ்லிம் சமூகம், தலைவர்கள் என தோலில் சுமக்கிறதா என்ற ஐயம் இப்போது எழுந்துள்ளது.
முஸ்லிம்கள் பல இயக்கங்களாக பிரிந்து நின்றாலும் அல்லாஹ், ரசூல், என்று வந்தால், எல்லோரும் ஒற்றுமையுடன் செயற்படுவார்கள் என்ற மிகப்பெரிய அச்சம் பேரினவாதிகள் மத்தியில் இருந்து வந்தது. அனால் அந்த அச்சத்தை இல்லாமல் செய்து இனவாதிகளுக்கு, முஸ்லிம் இனத்தையே காட்டிக் கொடுத்தவர்களையும், அதற்காக இதுவரை எதிர் குரல் கொடுக்காத இயக்க தலைவர்களும் அரசியல் தலைவர்களையும், ஞானசாரவுடன் கூ ஒப்பிட முடியாத கயவர்கள் என்றுதான் கூற வேண்டும்.
இனவாதத்தை அழிக்கும் ஒரு இயந்திரமாக இந்த நல்லாட்சி இருக்கும் என்ற நம்பிக்கையில் சிறுபான்மையர் மக்களின் கிளர்ச்சியால் வளர்க்கப்பட்ட நல்லாட்சியில் அரக்கர்களும் அசுரர்களும் இனவாதத்தால் ரத்தம் குத்திப்பார்ப்பதை வேடிக்கை பார்க்கும் தலைவர்களே!
வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தால் யாரிடம் சொல்லி மாழுவது என்ற பழங்கால கதை பேசாமல் பதவிகளுக்காக பிரிந்து சென்ற நீங்கள் சமூகத்திற்காய் ஒற்றுமைப்பட்டு குரல் கொடுங்கள்.
நீங்கள் வீழ்ந்தாலும்
சமூகம் வாழும்...
அஹமட் புர்க்கான்
கல்முனை....

Comments

popular posts

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதியர்கள் போராட்டம்

Allocation of Varnam Tv Ramazan Ifthar programme not suitable - Al Haj M.B.Hussain Farook

සායින්දමරුදු ජනතාව පෙරමුණට සහයෝගය ලබාදීමට ඉදිරිපත්විය යුතුය