எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
-NJ NASEER-
இனவாதத்திற்கு இறையானவர்கள் நாங்கள், பலமுறை எழுத முயன்றும் தோற்றுப்போனோம்.
உணர்வுபூர்வமாக பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்.
உரிமையிருந்தும் உரக்கப்பேச முடியாமல் கண்முன்னே பாரபட்சம் காட்டப்பட்டு நாம் பல சந்தர்பங்களில் நிராகரிக்கப்பட்டோம். உயர்கல்வி கனவு உண்மையானதை எண்ணி சந்தோசப்பட்டதோடு என்னைப் போன்று கல்லூரிக்கு வரும்போது மற்றைய முஸ்லிம் சகோதரிகளும் பல்லாயிரம் கனவுகளோடு உள் நுழைந்தோம். எப்போதும் எந்த சந்தர்பத்திலும் நாம் எமது மார்க்கத்தையோ அல்லது கலாச்சாரத்தையோ விட்டுக் கொடுத்தது இல்லை.ஆண் பெண் வரையறைகளை மீறியதும் கிடையாது.
கல்வி இருக்கின்ற இடத்தில் பண்பாடு இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கின்றேன். ஆனால் பண்பாடு கல்வியால் வந்தது அல்ல என்பதை இங்கு கண்டு கொண்டேன், மனிதாபிமானமும் கூடவே. முன் உதாரணமாக திகல வேண்டியவர்களே இங்கு இனவாதம் போதிக்கின்றார்கள் என்றால் அவரகளுடைய சமூகத்தின் இளைய தலைமுறையின் நடவடிக்கை பற்றி நான் கூறவேண்டியதில்லை.
முக்காடு தலையை மூடியிருப்பதாய் காரணம் காட்டி எங்களில் திறமையானவர்கள் கூட நிராகரிக்கப்பட்டோம். காரணம் முக்காடு எம் கண் அசைவை மறைத்து விட்டதாம். முக்காடு போட்டது எம் தலைக்கு மட்டுமே கண்களுக்கு அல்ல.
>நாங்கள் முன் வரிசையில் உட்கார வேண்டியதில்லை என்பதை அவர்களே தீர்மானித்து விட்டார்கள்.
>அபாயவை காணும் போதெல்லாம் அவர்களுக்கு பேய் உலகத்தை காண்பதாய் இருக்கின்றதாம்.கலாச்சாரம் கல்லூரிக்குல் வேண்டாம் என்று பகிரங்கமாய் கூறி விட்டார்கள்.
>ஒவ்வொரு விரிவுரையின் போதும் ஏச்சுக்கள் மட்டுமே மிஞ்சிப் போனது
>எப்போதும் வெறுப்பை மட்டுமே எங்கள் மீது உமிழ்கின்றார்கள்.
>பதில் தெரிந்தும் நிர்ப்பந்தத்தின் பேரில பதில் கூற முடியாமல் தவித்தோம்.
ஜனநாயக நாட்டில் அரசாங்க கல்வி நிலையத்தில் கலாச்சார உடை அணிய உரிமை இன்றி தவிக்கின்றோம். முதல் வரிசை வேண்டாம் இரண்டாம் வரிசையில் கூட உட்கார உரிமை இன்றி தவிக்கின்றோம்.முக்காடு எம் அறிவை மறைக்கவில்லை அவயங்களை மாத்திரம் தான் மறைக்கின்றது.ஆனால் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். நாம் அவர்களோடு ஒருபோதும் பிரச்சனைப் படவில்லை.அவர்கள் கேட்டபோதெல்லாம் உதவினோம்.சிரிக்கும் போதெல்லாம் சிரித்தோம்.இப்போதெல்லாம் அந்த சிரிப்பில் பொய் இருப்பதாய் உணர்கின்றோம்.நாம் அவர்களுடைய உணர்வுகளை காயப்படுத்தவில்லை.ஆனால் இந்த நிமிடம் வரை காயப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம்.
எமது மார்க்கத்தை கொச்சைப்படுத்துவதும் உடையை கொச்சைப்படுத்துவதும் அவர்களுக்கு பொழுதுபோக்காய் போய்விட்டது.எங்களுக்கு மனங்களில் ஆறாத வடுக்களையும் ரணங்களையும் ஏற்படுத்தி விட்டது.இன்றுவரை எங்களை மாணவர்களாய் பார்க்கவில்லை முஸ்லீம்கள் என்ற முறையில் மாத்திரமே பார்கின்றார்கள்.முடிவாய் நான் கேற்கின்றேன்.
>கலை நிகழ்ச்சிகளும் வைபவங்களும் வரும்போது பணம் எனும் பெயரில் சமத்துவம் பார்க்கின்றவர்கள் எமது உரிமைகளில் சமத்துவம் பார்க்கத் தவறியது ஏன்??
>இலங்கை ஜனநாயக நாட்டில் முஸ்லிம்களாக பிறந்தற்காய் அடிப்படை உரிமைகள் கூட இல்லையா?
>இனவாதம் என்கின்ற கொடிய நோய்க்கு பலியானது இவங்கையின் நாளைய எதிர்காலமான மாணவர்களுமா?
>எங்களுக்கே உரிமைகள் பறிபோன நிலையில் வரும் தலைமுறையின் உரிமைகளை யாரிடம் போய்க் கேற்பது?
>எமக்காகா குரல் கொடுப்பவர்கள் யார்?வரும் தலைமுறையை காப்பவர்கள் யார்?
இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்குன்றான் என்ற ஒரு நம்பிக்கையில் மாத்திரமே பல சவால்களுக்கு மத்தியிலும கல்லூரியில் எம் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

Comments
Post a comment