முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம் தொடர்பான நகல் அறிக்கையில் கையெழுத்திட்டு முஸ்லிம்களின் பதுவாவை சுமக்க வேண்டாம்


முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம் சம்பந்தமாக திரு. சலீம் மர்சூபால் திருத்தப்பட்டுள்ள நகல் அறிக்கைக்கு அரசால் நியமிக்கப்பட்டுள்ள உப அங்கத்தவர்கள் எவரும் கையொப்பமிட வேண்டாம் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி அக்கட்சி குறிப்பிட்டுள்ளதாவது, முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம் தொடர்பான நகல் அறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதில் அரசால் நியமிக்கப்பட்டுள்ள 19 பேரினதும் கையொப்பம் இடப்பட்டதும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் கையளிக்கவுள்ளதாகவும் ஒய்வு பெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் தெரிவித்துள்ளார்.
ஜி எஸ் பி வரிச்சலுகைக்காக முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைக்க வேண்டாம் என  உலமா கட்சியும், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் அரசாங்கத்தை வேண்டிக்கொண்டிருந்தும், இதற்காக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பிலும், கிழக்கிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் மேற்படி திருத்தலுக்காக அரசால் நியமிக்கப்பட்ட உபகுழுவை அரசு ரத்துச்செய்யாமை என்பது ஐ தே க அரசின் முஸ்லிம் விரோத போக்கை காட்டுகிறது.
முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமா என்பது ஆராய்வதற்காக 2009ம் ஆண்டு திரு. சலீம் மர்சூப் தலைiயில் குழு நியமிக்கப்பட்டது. ஆனாலும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாததால் அது கிடப்பில் போடப்பட்டது. பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த போது முஸ்லிம் சட்டத்தை மாற்றம்படி முஸ்லிம் குஷ்பு முன்னணியொன்று அவரிடம் வேண்டிக்கொண்டதற்கிணங்க திருத்துவதற்கான முயற்சியில் அவரால் பரிய முணைப்பு முன்னெடுக்கப்பட்டது.
அப்போது அது பற்றி நடத்தப்பட்ட கருத்தரங்குகளில் உலமா கட்சி சார்பாக கலந்து கொண்ட நாம் திருத்தம் எதுவும் வேண்டியதில்லை என்றும் மாறாக மேலும் சில உரிமைகள்தான் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தோம். அத்துடன் அன்றைய நீதி அமைச்சரின் இந்நடவடிக்கை முஸ்லிம் தனியார் சட்டத்தை கொச்சைப்படுத்தும் செயல் என்பதை நாம் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எடுத்துக்கூறியதால் அது கைவிடப்பட்டிருந்தது.
பின்னர் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் முஸ்லிம்களின் எந்தவொரு உரிமையையும் வழங்குவதற்கு முன்வராமல் இருக்கும் உரிமையையும் இல்லாமல் செய்வதற்காக முஸ்லிம் சட்டத்திருத்தத்தை பாராளுமன்றத்தக்கு கொண்டு வர அமைச்சர் விஜேதாச மூலம் முயன்ற போது உலமா கட்சி அதனை கடுமையாக கண்டித்ததுடன் இதனை செய்ய வேண்டாம் என அவருக்கு நேரடியாக கடிதமும் எழுதியது.
இவ்வாறான நிலையில் ஐரோப்பிய நாடுகள் முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்றினால் ஜி எஸ் பி சலுகை தருவோம் என்று சொன்னதற்காக அரசு திருத்தங்களை மேற்கொள்ள அவசரமாக செயற்படுகிறது.  அண்மையில் பாராளுமன்றத்தில் இது பற்றி உரையாற்றிய நீதி அமைச்சர் விஜேதாச, முஸ்லிம் பெண்களின் திருமண வயது விடயத்தில் அரசு தலையிடாது என்றும் இதனை முஸ்லிம்கள் பார்த்துக்கொள்ளட்டும் என கூறியிருந்தார். அன்றைய அவரது உரையில் பல விடயங்கள் உளறல்களாக இருந்த போதும் இந்த வார்த்தை முஸ்லிம்களுக்கு மகிழ்வை தந்தது. ஆனாலும் முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த அரசால் அமைக்கப்பட்ட உப குழு கலைக்கப்படவில்லை. பின்னர் பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் நீதி அமைச்சரைக்கண்டு முஸ்லிம் தனியார் சட்டத்தை (இதனை ஷரீயா சட்டம் என விளங்கிக்கொண்டு) அதனை நீக்க வேண்டும் எள அவர்கள் கோரிக்கை விடுத்ததன் காரணமாக மீண்டும் சிங்கள இனவாதிகளை திருப்திப்படுhத்துவதற்காக அவசர அவசரமாக நகல் அறிக்கை தயார் செய்யப்பட்டு உப குழுவின் முன்பாக வைக்கப்படவுள்ளது.

ஆகவே இது விடயத்தில் முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் கட்சிகள், அமைப்புக்கள் மிகவும் அவதானமாக இருந்து இலங்கை முஸ்லிம்களின் எதிர்கால சந்ததிகளை உரிமையற்றவர்களாக ஆக்கும் முயற்சிக்கு துணை போக வேண்டாம் என கேட்டுக்கொள்வதுடன் மேற்படி உப குழுவில் உள்ள எவரும் இதில் கையெழுத்திட்டு முஸ்லிம்களின் பதுவாவை சுமக்க வேண்டாம் எனவும் முஸ்லிம் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

Comments

popular posts

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி சைரீன் இனாம் மெளலானா இந்தோனேசியாவில் தங்கப்பதக்கம் வென்று எம் மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

புதிய அரசியல் கூட்டணி – சஜித் தலைவர் – சம்பிக்க பிரதித் தலைவர்