ர‌வூஃப் ஹ‌க்கீம் பாராளும‌ன்ற‌த்தில் பேசிய‌மை அதி உச்ச‌ ம‌ட‌த்த‌ன‌மாகும்

மிக‌ மோச‌மான‌ பொய்யான‌ த‌க‌வ‌ல்க‌ளை பேசிய‌ நீதி அமைச்ச‌ர் விஜ‌ய‌தாச‌  ராஜ‌ப‌க்ஷ‌வின்   கூற்றை மிக‌ச்சிற‌ந்த‌ உரை என்றும் ஊட‌க‌ங்க‌ளே அத‌னை ஊதிப்பெருப்பித்து விட்ட‌ன‌ என‌வும் முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ர‌வூஃப் ஹ‌க்கீம் பாராளும‌ன்ற‌த்தில் பேசிய‌மை அதி உச்ச‌ ம‌ட‌த்த‌ன‌மாகும் என‌ முஸ்லிம் உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.
இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து,

இல‌ங்கையிலிருந்து 33 பேர் ஐ எஸ்ஸில் இணைந்து கொண்ட‌ செய்தி என்ப‌து மிக‌ப்ப‌ழைய‌ ஊர்ஜித‌ப்ப‌டுத்த‌ப்ப‌டாத‌ செய்தியாகும். இத‌னை நீதிக்குப்பொறுப்பான‌ அமைச்ச‌ர் ஆராயாம‌ல் எழுந்த‌மான‌மாக‌ கூறிய‌து த‌வ‌று ம‌ட்டும‌ல்ல‌ இந்த‌ அர‌சை கொண்டுவ‌ர‌ 98வீத‌ம் ஒன்றுப‌ட்டு வாக்க‌ளித்த‌ முஸ்லிம்க‌ளை அவ‌மான‌ப்ப‌டுத்துவ‌தாகும்.
அதே போல் ஐ எஸ் என்ப‌து ஈராக் ம‌ற்றும் சிரியாவில் உள்ள‌ சில‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ ஆட்சியாகும்.  இவ‌ர்க‌ளின் ப‌குதியில் இருந்து எந்த‌வொரு அற‌பியும் இல‌ங்கை ம‌த்ர‌சாக்க‌ளில் க‌ல்வி க‌ற்பிப்ப‌தில்லை. மாறாக‌ ஐ எஸ்ஸை எதிர்க்கும் எகிப்திலிருந்தே சில‌ர் ஆசிரிய‌ர்க‌ளாக‌ க‌ட‌மையாற்றுகின்ற‌ன‌ர்.  இந்த‌ நிலையில் ம‌த்ர‌சாக்க‌ளில் ஐ எஸ்ஸில் ஆள் சேர்க்க‌ப்ப‌டுவ‌தான‌ பொய்யான‌ குற்ற‌ச்சாட்டு என்ப‌து பொதுப‌ல‌ சேனாவினால் ம‌ஹிந்த‌ கால‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாகும். அத‌னை அன்றே உல‌மா க‌ட்சி ம‌றுத்த‌துட‌ன் அத‌னை நிரூபிக்க‌ முடியுமா என‌ ச‌வால் விடுத்திருந்த‌து.

அத்துட‌ன் இத்த‌கைய‌ கூற்றுக்க‌ளை ம‌ஹிந்த‌ அர‌சும் ம‌றுத்திருந்த‌து.  ஆனால் பொது ப‌ல‌ சேனாவின் அன்றைய‌ க‌ருத்தை விழுங்கிய‌ அமைச்ச‌ர் விஜேதாச‌ இப்போது அத‌னை பாராளும‌ன்ற‌த்தில் வாந்தியாக‌ எடுத்துள்ளார்.

நீதி அமைச்ச‌ரின் உரையின் போது அத‌னை க‌ண்டிக்காத‌ முன்னாள் நீதி அமைச்ச‌ரும் இன்றைய‌ அர‌சின் ப‌ங்காளியான‌ அமைச்ச‌ர் ஹ‌க்கீம் பின்ன‌ர் பாராளும‌ன்ற‌த்தில் உரையாற்றும் போதாவ‌து நீதி அமைச்ச‌ரின் பிழைக‌ளை சுட்டிக்காட்டாது மிக‌ச்சிற‌ப்பான‌ உரை என்று சொன்ன‌தோடு ஊட‌க‌ங்க‌ள் மீது ப‌ழி போட்டுள்ளார். இது மிக‌ப்பெரிய‌ ம‌ட‌த்த‌ன‌மாகும்.

ஊட‌க‌ங்க‌ள் அமைச்ச‌ரின் உரையை வெளியிட்டிருந்த‌ன‌. அமைச்ச‌ர் சொல்லாத‌ எதையும் அவ‌ர்க‌ள் வெளியிட‌வில்லை. நீதி அமைச்ச‌ர் இத்த‌கைய‌ பொய்க‌ளை பேசாம‌ல் இருந்திருந்தால் அல்ல‌து ஹ‌க்கீம் அந்த‌ இட‌த்திலேயே அத‌னை க‌ண்டித்திருந்தால் ஊட‌க‌ங்க‌ள் அத‌னையும் செய்தியாக்கி நீதி அமைச்ச‌ரின் க‌ருத்து எடுப‌டாது போயிருக்கும். ஆனால் பாராளும‌ன்ற‌த்துக்கு தூங்க‌வும் சாப்பிட‌வும் ம‌ட்டுமே செல்லும் சில‌ முஸ்லிம் உறுப்பின‌ர்க‌ளால் இன்று முழு முஸ்லிம்க‌ளும் அவ‌மான‌ப்ப‌ட்டு நிக்கிறார்க‌ள். இத்த‌கைய‌ ம‌டைய‌ர்க‌ளைக்கொண்ட‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சி இன்ன‌மும் தேவையா என‌ முஸ்லிம்க‌ள் அவ‌சிய‌ம் சிந்திக்க‌ வேண்டும்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்