அறைகுறை ஆடையுடன் அலையும் பெண்களுக்கு கடும் எச்சரிக்கை ( சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் )

மனிதன் இன்று வித விதமாய்வண்ண வண்ணமாய் உடுத்து நெகிழும் ஆடைக்குத்தான் என்னே மவுசு!  உண்மையில் ஆடை அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடையாகும். ஆடை மட்டும் இல்லாதிருந்தால் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசமின்றி போயிருக்கும்.
ஆதமுடைய மக்களே! நிச்சயமாக நாம் உங்களுடைய மானத்தை மறைக்கக் கூடிய ஆடையையும் அலங்கார ஆடைகளையும் உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றோம்.        (அல்குர்ஆன் 7:26)

இன்றைய நவீன காலம் அனைத்து தவருகளுக்கும் அடித்தளம் என்பதில் ஐயமில்லை...

இன்றைய நவீன காலத்தினை சரியாக உற்று நோக்கி பாருங்கள் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் , கற்பழிப்புகள் , சிறுவர் துஸ்பிரயோகங்கள் விபச்சாரங்கள் இன்னும் பலவற்றிக்கு பிரதான காரணமாக இருப்பது இன்றைய பெண்கள் . பெண்கள் என்றால் ஒட்டுமொத்த பெண்களையும் குற்றம் சாட்டவில்லை ஒழுக்கமான , மானமறியாதை உள்ள , கண்ணியமிக்க எத்தனையோ பெண்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு மத்தியில் சொல்லபோனால் அவர்களை கலங்கப்படுத்தும் வகையில் சில பெண்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

அப்படியானவர்களைப் சரியாக பார்த்தால் அறைகுறை ஆடைகளை அணிந்து தன் கணவனுக்கு மட்டும் காட்டவேண்டிய ( அவ்ரத்) களை அதாவது உடல் அழகினை அன்னிய ஆண்களுக்கு காட்டும் விதமாக அறைகுறை ஆடையுடன் அலையும் பெண்கள் எத்தனையோ பேர் இப்படியான பெண்களினால் தான் பெண்கள் துஸ்பிரயோகங்கள் ஏற்படுகின்றன என்பதனை அனைவரும் அறிவோம்.

இவர்கள் இப்படியாக அறையும் குறையுமாக அலைவதனால் ஆண்களின் ஆசைகள் துண்டப்படுகின்றன. இவ்வாரு ஆசையில் விழுந்த ஆண்கள் என்ன செய்கின்றனர் தங்களது இச்சைகளை எப்படியாவது தீர்த்துக் கொள்ள பார்க்கின்றனர் அதர்க்காக கற்பழிப்பு , பெண்கள் துஸ்பிரயோகம் , விபச்சாரம் போன்ற பல வளிகளை நாடுகின்ரான். இதனால் சமுகமும் சீர்கெட்டு விடுகிரது.

இதர்க்குதான் இஸ்லாம் கண்ணியமான முறையில் ஆடை அணிய சொல்கிரது. ஆண்கள் முழங்காலுக்கும் தொப்புளுக்கும் இடையேயுள்ள மேனியை மறைப்பதும், பெண்கள் முகத்தையும் இரு மணிக் கட்டுகளையும் தவிர உள்ள முடியும், நகமும் உட்பட மேனி முழுவதையும் மறைப்பது வாஜிபாகும். மேனி தெரியாத கெட்டியான துணியால் மறைத்திட வேண்டும் இஸ்லாம் சொல்வதனைப் போல் ஆடை அணிந்தால் அதாவது (ஹபாயா) உடல் அங்கங்கள் வெளியில் தெரியாத , இருக்கம் இல்லாத , தளர்வான , பெண்களின் உடம்பினை முற்றாக மறைக்கக் கூடிய ஆடைகளை அணிவதனால் ஒரு ஆண் பார்ப்பானா? அப்படித்தான் பார்த்தாளும் அவனது உணர்ச்சி துாண்டப்படுமா? என்பதனை சிந்தித்து செயற்படுங்கள் .

கண்னியமாக இஸ்லாம் சொல்வதனைப் போன்று ஆடை அணிவதனால் பல சமுக சீர்கேடுகளையும் மற்றும் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதை விட்டு விட்டு இஸ்லாம் சொல்வதனைப் போன்று ஆடை அணிய கூடாது அறைகுறை ஆடைகளை அணிந்து தான் பெண்கள் அலைந்து திரிய வேண்டும் அப்போது தான் எங்களுக்கு பார்ப்பதர்க்கு வசதியாக இருக்கும் என்றால் பெண்கள் துஸ்பிரயோகத்தினை துண்டும் முதல் ஆள் நீங்கள் தான்.....

அறைகுறை ஆடையுடன் அலையும் பெண்கள் ( சகோதரிகள் ) சற்று சிந்தித்த பார்க்க வேண்டும் நீங்கள் எந்த மதத்தினை சார்ந்தவர்களாக இருந்தாளும் எந்த மொழியினை பேசுபவர்களாக இருந்தாளும் இருக்கமான உங்கள் உடல் அழகினை வெளியில் காட்டுகின்ற ஆடைகளை அணிவதனை முற்றாக தவிர்த்து விடுங்கள் இல்லை இல்லை நாங்கள் அப்படித்தான் இது எங்கள் சுதந்திரம் என்றால் உங்களை எங்களை படைத்த அல்லாஹ் கூறும் எச்சரிக்கையினைப் பாருங்கள்.....


எச்சரிக்கை :

ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “நரகவாசிகளினின்றும் இரு கூட்டத்தார்கள். அவர்களை (இன்னும்) நான் காணவில்லை. (இனிவரும் காலங்களில் தோன்றுவார்கள்) 1) மாட்டு வால்களைப் போன்று சவுக்குகள் வைத்துக் கொண்டு அதைக் கொண்டு மக்களை அடித்துத் துன்புறுத்துவார்கள் (கொடுங்கோலர்கள்) (2) ஆடை அணிந்த (போதிலும்) நிர்வாணமாக இருக்கும் பெண்கள் (அவர்கள் ஆண்களை தங்களின் பால்) ஈர்க்கக் கூடியவர்களாகவும் தாங்களும் (அவர்களின் பால்) ஈர்ப்பாகக் கூடியவர்களாகவும் இருப்பர். அவர்களின் தலைகளை ஒட்டகத் திமிழ்களைப் போன்று வைத்திருப்பர். இவ்விரு கூட்டத்தாரும் சுவர்க்கத்தில் நுழையமாட்டார்கள். மேலும் சுவர்க்கத்தின் வாடையைக் கூட அடைய மாட்டார்கள். (நூல் : முஸ்லிம்)
கணவனைத் தவிர்த்து மற்ற ஆடவர்களுக்கு தமது அலங்காரம் தெரியுமளவு உடை உடுத்தும் பெண்களும் பெயருக்கு புர்கா (பர்தா) போட்டுக் கொண்டு தலையில் ஒன்றுமில்லாமல் சுற்றும் இளைஞிகளும் இந்த எச்சரிக்கையான ஹதீஸை அறிந்து உணர்வு பெறவேண்டும்.

ஹள்ரத் முஆத் இப்னு அனஸ் (ரலி) அவர்கள் தனது தந்தை கூறியதை கூறினார்கள் : “யார் வசதியிருந்தும் அல்லாஹ்விற்காக பணிவாக இருக்கவேண்டும்  என்று (பெருமையான பகட்டான) ஆடைகளை அணிவதை தவிர்த்துக் கொள்கிறாரோ மறுமை நாளில் இறைவன் அனைத்து படைப்பினங்கள் முன்னிலையில் அவரை அழைத்து அவர் விரும்பும் ஆடையை அவருக்கு அணிவிப்பான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.  (நூல் : திர்மிதி)

அதற்காக பெருமை யடிக்கும் நோக்கத்தில் ஆடை அணியக்கூடாது. ஹள்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “யார் இந்த உலகத்தில் பிரபல்யமான (பகட்டான) ஆடை அணிகிறாரோ மறுமையில் இறைவன் அவருக்கு இழிவின் ஆடையை அணிவிப்பான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.  (நூல் : அஹ்மது) 

அல்குர்ஆன் வசனங்கள் மூலமும் நபிகளார்(ஸல்) அவர்களின் வாக்குகளாலும் தெளிவாக கூறப்பட்டிருப்பதற்கேற்ப ஒவ்வொரு பருவமடைந்த பெண்ணும் கை, முகம் தவிர்த்து ஏனைய பகுதிகளை மகரமற்ற ஆண்கள் முன்னிலையில் மறைத்தல் கடமையாகும். ஆடையானது தோல் தெரியும் அளவிற்கு மெல்லியதாகவோ உடற்கட்டமைப்பை வெளிக்காட்டும் வகையிலோ இருத்தலாகாது. மணிக்கட்டு வரையிலான கை, முகம்; தவிர்த்து, கழுத்து, முடி உட்பட பெண்ணின் முழு உடம்பும் ‘அவ்ரா” ஆகும் (யுறசயா) (மறைக்கப்படவேண்டிய பகுதிகளாகும்).

சூரா அந்நு}ரில் அல்லாஹ்(சுபு) விவரிக்கின்றான்

“இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.” (24:31)

ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் எங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல.' (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்)

'நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய ஆடைகளை அணியும் ஆண்களையும், ஆண்களுக்குரிய ஆடைகளை அணியும் பெண்களையும் சபித்தார்கள்.' (அபூதாவுத், இப்னுமாஜா, ஹாகிம்)

'மூவர் சுவனம் புகமாட்டார்கள். அல்லாஹ் மறுமையில் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்கள் யாரெனில்) தனது பெற்றோருக்கு அநியாயம் செய்தவன், ஆண்களைப் போன்று நடந்து கொள்ளும் பெண், தனது மனைவி விபசாரத்தில் ஈடுபடுவதை அங்கீகரித்து அதற்கு ஒத்தாசையாக இருப்பவன் ஆகியோராவார்.'
(அஹ்மத், இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்)

 'நீர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்கக்கூடாது, திருடக் கூடாது, விபசாரத்தில் ஈடுபடக் கூடாது, நீர் உமது குழந்தைகளைக் கொல்லக் கூடாது, அவதூறு கூறலாகாது, ஓலமிட்டு அழுது புலம்பக் கூடாது, நீர் ஜாஹிலிய்யத்தில் போல 'தபர்ருஜ்' எனும் அழகையோ கவர்ச்சியையோ வெளிக்காட்டக் கூடாது.' (அஹ்மத்)

இங்கு நபி (ஸல்) அவர்கள் பெரும் பாவங்களின் வரிசையில் 'தபர்ருஜ்'யைக் குறிப்பிட்டிருப்பதைக் காணமுடிகிறது. 

"நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (அல் குர்ஆன் 33:59)"


ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பட்டை எடுத்து தனது வலது கையிலும் தங்கத்தை எடுத்து தமது இடது கையிலும் வைத்துக் கொண்டு இவ்விரண்டும் எனது உம்மத்தினரில் ஆண்களுக்கு ஹராமாகும்” என்று கூறினார்கள்.   (நூல் : அபூதாவூத்)

இவ்வளவு எச்சரிக்கைக்கு மத்தியிலும் நீங்கள்  உங்கள் ஆடை விசயத்தில் அலச்சியம் காட்டினால் உங்களைப் போல் மடையர்கள் யார் இருக்க முடியும்

சிந்தியுங்கள்.....

எழுத்து : முஹம்மட் றின்ஸாத்

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்