சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தினர் வெற்றி

( சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் )
சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக உதைப்பந்தாட்ட போட்டி அக்கழகத்தின் பொதுச் செயலாளர் அலியார் பைசர் தலைமையில் 04-11-2016 நேற்று சாய்ந்தமருது பௌஸி மைதானத்தில் விமர்சையாக இடம்பெற்றது.
இப்போட்டியானது சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தினருக்கும் காத்தான்குடி முஹைதீன் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் சுமார் 1000க் கனக்கான ரசிகர்களுக்கு மத்தியில் மிக விமர்சையாக இடம் பெற்றது.
விருவிருப்பாக சென்ற இப்போட்டியில் முதல்பாதியில் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் சார்பாக தில்பான் ஒரு கோலினை போட்டார் மேலும் போட்டி விருவிருப்பாக முதல் பாதி முடிவுற்றது பின்னர் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோலினை போடவில்லை இதனால் 1:0 என்ற கணக்கில் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தினர் வெற்றி பெற்றனர்.
இந்தப்போட்டியின் சிறந்த வீரராக MHM.Musfeek தெரிவு செய்யப்பட்டார்.
இப் போட்டிக்கு மத்தியஸ்தகர்களாக
1-SL.Yahiya Arafath
2-AM.Aasir
3-M.Hussain கடமையாற்றினார்கள்
இந்தப்போட்டிக்கு பிரதம அதிதியாக
தேசமானிய சாமசிறீ அல்ஹாஜ் MYM.Jahfer அவர்களும்
கௌரவ அதிதிகளாக
ஓய்வு பெற்ற அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரியும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் விளையாட்டு ஆலோசகருமான அல்ஹாஜ் MA.Nafar அவர்களும்
Sea Breeze நிறுவனத்தின் ஆலோசகர் AB.Jaleel அவர்களும்
விசேட அதிதிகளாக
ஈகிள் வேர்ல்ட் குரூப் (பிறைவட் லிமிடட்) இன் தலைவர் MMM.Arafath மற்றும் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் உபதலைவரும் பிளைங் கொர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஆயுட்கால செயலாளருமான SM.Khan ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தார்கள் மற்றும் ஆசிரியரும் ஊடகவியலாளருமான S. அஸ்ரப் கான் அவர்களும் கலந்து கொண்டனர்.
அறிவிப்பாளர்களாக
N.Sirajudeen .. JM.Rimsath அவர்களும் இணைந்து கொண்டார்கள்
இப்போட்டியானது Sea_Breeze நிறுவனத்தின் பூரன அணுசரணையில் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்