ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கிழக்கில் பாரிய ஆர்ப்பாட்டத்தை செய்தமை பாராட்டுக்குரியதாகும்ஐரோப்பாவுக்கு அடிமைப்பட்டு முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த நல்லாட்சி அரசு முயற்சி செய்யும் போது இதனை தடுக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜமிய்யதுல் உலமாவும், ஏனைய சமய சார்பு இயக்கங்களும் மௌனமாக இருக்கும் போது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சினையின் பாரதூரத்தை புரிந்து இதற்கெதிராக கிழக்கில் பாரிய ஆர்ப்பாட்டத்தை செய்தமை பாராட்டுக்குரியதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி மேலும் தெரிவித்ததாவது,

கொழும்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம் திருமண சட்டத்தில் அரசாங்கம் கைவைப்பதை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டம் செய்த போது அதனை வெளிப்படையாக ஆதரித்தது உலமா கட்சியே. அதே போல் இவ்வாறு அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஏன் கிழக்கு முஸ்லிம்களால் முடியாதா எனவும் உலமா கட்சி கேட்டிருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கிழக்கில் சம்மாந்துறையில் பாரிய, அமைதியான ஆர்ப்பாட்டத்தை செய்தமைக்காக நாம் எமது பாராட்டை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.

முஸ்லிம்களின் இந்த ஜனநாயக எதிர்ப்பை அரசாங்கம் கருத்திக்கொண்டு முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைப்பத்தை முற்றாக நிறுத்த வேண்டும் என உலமா கட்சி அரசை வலியுறுத்துகிறது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் தேவைப்பட்டால் அதை முஸ்லிம்களின் சமய தலைவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அரசு இதில் தலையிடுவது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை எதிர்காலத்தில் இல்லாமல் செய்ய அரசு எடுக்கும் வெள்ளோட்ட முயற்சியாகவே நாம் பார்க்கிறோம். கடந்த அரசில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அதனை எதிர்த்த ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சியே. எமது எதிர்ப்பை ஏற்று அம்முயற்சியை கைவிட்டமைக்காக மஹிந்தவுக்கு நாம் இந்த இடத்தில் நன்றி கூறுகிறோம்.

மீண்டும் இந்த அரசு ஐரோப்பிய நாடுகளின் சதிக்கு பணிந்து முஸ்லிம் சட்டத்தில் கை வைக்க முயற்சி செய்கிறது
இதற்கெதிராக பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசாத நிலையில் உலமா சபையும் திருத்தத்துக்கான உப குழுவை அரசு நியமித்ததை வரவேற்ற தவறு காரணமாகவுமே இதில் உலமா கட்சியும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் தலையிட வேண்டியேற்பட்டது.

கொழும்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னரே ஜமி இய்யத்துல் உலமா முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த முயட்சியை கண்டித்து அண்மையில் அறிக்கை விட்டிருந்தது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமா அத்தின் ஆர்ப்பாட்டம் இனவாதத்தை தோற்றுவிக்கும் என சில முஸ்லிம்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால் இது வரை இனவாதம் இல்லாமலா நாடும் அரசும் இருக்கிறது?

யாரும் சிங்கள மக்களுக்கு உரிமை வழங்க வேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. முஸ்லிம்கள் உரிமையில் கை வைக்காதே என்றுதான் சொல்கிறோம். இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் அரசுக்கெதிரானவையே தவிர எந்த இனத்துக்கும் எதிரானதல்ல என்பதை மக்கள் அறிவர்.
அத்துடன் சமய ரீதியிலான ஜமாஅத்துக்கள் அனைத்தும் வாய் மூடி மௌனமாக இருக்கும் போது சமீப கால வரலாற்றைக்கொண்ட ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூக அக்கறையை பாராட்டாதவர் முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக மாட்டார்.

ஆகவே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த சதிகளுக்கெதிரான ஜனநாயக போராட்டத்துக்கு ஏனைய முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்