ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
-எம்.வை.அமீர் -
GSP+ சலுகையைப் பெறுவதற்காக அமுலில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக அரசு முனைப்புக்களை மேற்கொள்வதாகவும் குறித்த மாற்றத்தை தாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை என்பதை வலியுறுத்தியும் சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் 2016-11-11 ஆம் திகதியன்று மாபெரும் கண்டனப் பேரணியை எஸ்.எல்.ரி.ஜே. என்ற முஸ்லிம் அமைப்பு நடத்தியது.
ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்ட பேரணியில் “இலங்கை அரசே! இலங்கை அரசே! கைவைக்காதே கைவைக்காதே முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்காதே!” அரசியல் யாப்பு உறுதிப்படுத்திய முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்காதே!, எச்சரிக்கை! எச்சரிக்கை! நல்லாட்சியே எச்சரிக்கை! முஸ்லிம் உரிமையில் மூக்கை நுழைக்கும் நல்லாட்சியே எச்சரிக்கை! எங்கள் உரிமையை பறிக்க நினைத்தால் எழுந்து நிற்போம் இமய மலையாய்! ஆர்ப்பரிப்போம் கடலலையாய்! மஹிந்தவை வீழ்த்தியது போன்று மைத்திரி ஆட்சிக்கும் முடிவு கட்டுவோம் என்பன போன்ற பாதாதைகள் ஏந்தியிருந்ததுடன் உரத்தகுரலில் கோஷங்களும் எழுப்பப்பட்டன.
Comments
Post a comment