Skip to main content

மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

  எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா

அம்பாறை மாவட்டத்தில் மாபெரும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா!...


-எம்.வை.அமீர் -

எதிர்வரும்  2016-11-13  மற்றும்  2016-11-14  திகதிகளில் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா தொடர்பாக பத்திரிகையாளர்களை தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு சாய்ந்தமருது பரடைஸ் வரவேய்பு மண்டபத்தில்  கடந்த 2016-10-30 ஆம் திகதி இடம்பெற்றது.
மிகக்கோலாகலமான முறையில் இடம்பெறவுள்ளதாக கூறப்பட்ட குறித்த நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் ,
கடந்த 50 வருடங்களுக்கு முதல் அதாவது 1966 ஜுலை 02 ஆம் திகதி  மருதமுனையில் பெருமானாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் குறித்த இஸ்லாமியதமிழ் இலக்கியமாநாடு முதன் முறையாக நடைபெற்றது. மருதமுனை அல் மனார் கல்லூரியில் உதவி ஆசிரியராகத் திகழ்ந்த செ.அ. ஷெய்யது ஹஸன் மௌலானா அந்தமாநாட்டின் வெற்றிக்காக உயிர் நாடியாக உழைத்தவர். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டின் முன்னோடி என்று கூட அவரை அழைக்கலாம். என்றும்
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வின் 50 வருடப் பூர்த்தியினை நாம் அடைந்திருக்கிறோம். என்பது முஸ்லிம் இலக்கிய உலகினது ஒருவரலாற்றுப் பதிவாக இருக்கிறது.
இத்தகையதொரு வரலாற்று அடையாளத்தினை அந்த மண்ணிலே அதனை வெற்றிகரமாக நடத்திமுடித்த ஷெய்யத் ஹஸன் மொலானா அவர்கள் தற்போது  எங்களோடு இருக்கும் இக்காலத்தில் அவரையும் அந்த நிகழ்வையும் நாங்கள் கௌரவப்படுத்தும் ஒரு கடப்பாடு எங்களுக்கு இருக்கிறது. என்றும்
அதனால் இந்த நிகழ்வினை 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற மருதமுனை மண்ணிலும் அதே பாடசாலையிலும் எதிர்வருகின்ற  நவம்பர் 13 ஆம் திகதி ஒரு இலக்கியப் பெருவிழாவாக  செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். அத்தோடு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பொன் விழாவாக நடைபெறும் இவ் இலக்கியப் பெருவிழாவில் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்பம்சமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் கவிஞர் திலகமுமான  பெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் நான் எனும் நீ கவிதை நூல் மீள் வெளியீடும் இடம் பெற இருக்கிறது. இதனை 14 ஆம் திகதி அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கிலும் நடத்த இருக்கிறோம்.
13.11.2016 ஆம் திகதி மருதமுனை அல்மனார் மத்தியகல்லூரியில் ஆய்வு அரங்கு, கவியரங்கு ஆகிய நிகழ்வுகள் அரங்கேற இருக்கிறது.
ஆய்வு அரங்கானது பேராசிரியர் ம.மு.உவைஸ் அரங்காக இஸ்லாமிய தமிழ் இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் என்ற தலைப்பில் ஓர் அரங்கும். இரண்டாவது முஸ்லிம் இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் எனும் தலைப்பில் மீராஉம்மா அரங்காகவும். மூன்றாவது முஸ்லிம் இலக்கியம் மரபும் நவீனமும் என்ற தலைப்பில் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அரங்காகவும் நிகழ்த்தப்படவிருக்கிறது.
அதேதினம் மாலை பொழுதில் பெரும் தலைவர் மர்ஹ{ம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அரங்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தலைமையில் கவியரங்கு நிகழ்வும் அரங்கேறுகிறது.
14.11.2016 ஆம் திகதி அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கத்தில் நான் எனும் நீகவிதை நூல் மீள் வெளியீடும், அழகிய தொனியில் அல்குர்ஆன் நிகழ்வும் இடம்பெற இருக்கிறது.
இவ்வாறான சிறப்பம்சங்களுடன் கூடிய இந்நிகழ்வுகளின் வரலாற்றுப் பதிவின் அடையாளம் தமிழ் பேசும் சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்படவேண்டும் என்றதேவை இருப்பதனைக் கருத்தில் கொண்டு அந்நாடுகளின் அறிஞர்கள் தலைவர்கள் கவிஞர்கள் இலக்கியவாதிகள் பலரும் இவ்விழாவிற்கு அழைக்கப்படவும் இருக்கிறார்கள். என்றும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச