BREAKING NEWS

வளர்த்த கடா மார்பில் பாய்ந்தால், யாரிடம் சொல்லி மாழுவது அப்படியா?


மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிங்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக அவரது ஆட்சியில்   முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட போதும், இனவாதிகள் பள்ளிவாயல்களை தகர்த்து துள்ளி விளையாடிய போதும், அவர்களின் வன்முறையையும் வன்மமான பேச்சுக்களுக்கும் மஹிந்த அனுமதி வழங்கி வேடிக்கை பார்க்கிறார் என்று, மேடைக்கு மேடை கூவிய தலைவர்கள், தற்போது ஒன்பது கண்களும் அடைத்தவர்கள் போல்,  இந்த நல்லாட்சி அரசில் இனவாதிகளின் கீழ்தரமான செயல்களுக்கு மஹிந்ததான் காரணமென விரல் நீட்டுவது வெட்கம் கெட்ட செயல் என அவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடிகளாவது கூறவில்லையா? என கேள்வி எழுகிறது.
அன்று மஹிந்த அரசாங்கத்தில் ஒரே ஒரு ஞானசார தேரர் மாத்திரம்தான் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார். இன்று தேசிய அரசாங்கம் என்றும் நல்லாட்சி என்றும் ஜனாபதியும் பிரதமரும் மாறிமாறி போட்டி போட்டுக்கொண்டு வெளிநாடு பறந்து திரிகிறார்களே தவிர, நாட்டையும் நாட்டுமக்களையும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் ஆயிரம் ஞானசாரக்கள்  விசம்பாம்புகளாக வளர்ந்து நிற்பதை கவனிக்க தவறிவிட்டார்கள்.
தாங்களும் சேர்ந்து செய்த அதிகார துஷ்பிரயோகங்களுக்கு மஹிந்தவின் சர்வதிகார ஆட்சிதான் காரணம் என்று பெயர் வைத்தவர்கள், இன்று பாராளுமன்றத்திற்குள்ளும் வந்து முஸ்லிங்களை இழிவு படுத்துவதை நமது 22 முஸ்லிம் ஜனாசாக்கள் பார்த்துக்கொண்டும் அவர்களின் சிங்கார கதைகளை கேட்டுக்கொண்டும் இருந்து விட்டு  ஊராய் ஊராய் வந்து நின்று சத்தம் போட்டு பேசுவதால் கேட்டுக்கொண்டு இருக்கும் எங்களை மடையர்கள் என இந்த தலைவர்கள் நினைப்பது அவர்களின் அப்பாவித்தனத்தனம் என்றே சொல்லவேண்டியுள்ளது.
முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்களின் உரிமைக்காகவும் மக்களை ஒன்று திரட்டி அறவழியில் போராட்டம் நடத்திய சகோதரர் அப்துல் ராஷிக்கின் கைதை இனவாதமாக தூபமிட்டுக் காட்டும் மிகப்பெரிய இனவாதிகளைத்தான் முஸ்லிம் சமூகம், தலைவர்கள் என தோலில் சுமக்கிறதா என்ற ஐயம் இப்போது எழுந்துள்ளது.
முஸ்லிம்கள் பல இயக்கங்களாக பிரிந்து நின்றாலும் அல்லாஹ், ரசூல், என்று வந்தால், எல்லோரும் ஒற்றுமையுடன் செயற்படுவார்கள் என்ற மிகப்பெரிய அச்சம் பேரினவாதிகள் மத்தியில் இருந்து வந்தது. அனால் அந்த அச்சத்தை இல்லாமல் செய்து இனவாதிகளுக்கு, முஸ்லிம் இனத்தையே காட்டிக் கொடுத்தவர்களையும், அதற்காக இதுவரை எதிர் குரல் கொடுக்காத இயக்க தலைவர்களும் அரசியல் தலைவர்களையும், ஞானசாரவுடன் கூ ஒப்பிட முடியாத கயவர்கள் என்றுதான் கூற வேண்டும்.
இனவாதத்தை அழிக்கும் ஒரு இயந்திரமாக இந்த நல்லாட்சி இருக்கும் என்ற நம்பிக்கையில் சிறுபான்மையர் மக்களின் கிளர்ச்சியால் வளர்க்கப்பட்ட நல்லாட்சியில் அரக்கர்களும் அசுரர்களும் இனவாதத்தால் ரத்தம் குத்திப்பார்ப்பதை வேடிக்கை பார்க்கும் தலைவர்களே!
வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தால் யாரிடம் சொல்லி மாழுவது என்ற பழங்கால கதை பேசாமல் பதவிகளுக்காக பிரிந்து சென்ற நீங்கள் சமூகத்திற்காய் ஒற்றுமைப்பட்டு குரல் கொடுங்கள்.
நீங்கள் வீழ்ந்தாலும்
சமூகம் வாழும்...
அஹமட் புர்க்கான்
கல்முனை....

முஸ்லிம் தனியார் சட்டம் . சிங்கள பெண் எம்.பி

நாட்டின் புலனாய்வு – பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு மாத்திரமே தெரியும் என்ற நிலைப்பாட்டில் அவர் உள்ளார். அவர் தொடர்பிலோ அல்லது அவரது கருத்து தொடர்பிலோ எனக்கு  கருத்துத் தெரிவிக்க முடியாது என நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். அவருடனான நேர்காணலை இங்கு தருகின்றோம்.

நேர்காணல்:- மாவனல்லை ராயிஸ் ஹஸன்

எங்கள் தேசம்:- முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் அமைச்சரவைக் குழு மற்றும் 2009ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி சலீம் மர்சூக் தலைமையிலான குழு ஆகிய இரு குழுக்கள் ஆராய்ந்து வருகின்றன. இச்சட்டம் எவ்வாறு திருத்தியமைக்கப்படும்?

விஜேதாஸ ராஜபக்ஷ: முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இதனை சீர்த்திருத்துமாறு மகளிர் அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சில முஸ்லிம் அமைப்புக்களும் நீண்டகாலமாக கோரிக்கைவிடுத்து வந்துள்ளன. ஆனால், ஏனைய சட்டமூலங்களைப் போன்று இதனை எம்மால் கையாள முடியாதுள்ளது. எனவே, இந்த விடயத்தில் முஸ்லிம் உலமாக்கள் மற்றும் நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் ஆலோசனை- அறிக்கைகளுக்கு அமையவே எமது அடுத்த கட்ட நடடிக்கையினை மேற்கொள்வோம். மதம் சார்ந்த ஒரு நடவடிக்கை என்பதால் இதனை அவர்களிமேயே நாங்கள் கையளித்துள்ளோம். இது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழுவில் 5 முஸ்லிம் எம்.பிக்கள் உள்ளனர். பெண்கள் மற்றும் சிறுவர்களது பிரச்சினை சார்ந்த விடயங்கள் தொடர்பில் ஆராயும் போது பெண்கள் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் இரண்டு சிங்கள பெண் எம்.பிக்களும் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அத்துடன் 2009ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி சலீம் மர்சூக் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவும் இந்த விடயத்தை ஆராய்ந்து வருகின்றது. அக்குழுவில் முஸ்லிம் உலமாக்கள், புத்திஜீவிகள், மகளிர் அமைப்பு பிரதிநிதிகள் என ஏராளமானவர்கள் உள்ளனர்.

இந்த விடயம் மிகவும் கவனமாக கையாளவேண்டியுள்ளதால் இந்த இரு குழுக்களினதும் இறுதி அறிக்கை கிடைத்த பின்னரே நாங்கள் எமது நடவடிக்கைகளை ஆரம்பிப்போம். இது தொடர்பில் எனது தனிப்பட்ட கருத்துக்களை நான் தெரிவிக்கவிரும்பவில்லை. அது வேறுவிதத்தில் திரிவுபடுத்தப்பட்டு விடும்.

எங்கள் தேசம்:- நீங்கள் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்த கருத்து முஸ்லிம் தரப்பினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் போது நீங்கள் இஸ்லாமிய இயக்கங்கள், ஐ.எஸ் மற்றும் சர்வதேச பாடசாலைகள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மைத்தன்மை என்ன?

விஜேதாஸ ராஜபக்ஷ: நான் யாருக்கும் இடையூறுகளை ஏற்படுத்த வேண்டுமென்றோ அல்லது உள்நோக்கத்துடனோ அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றவில்லை. நடைமுறையில் உள்ள பிரச்சினைகளையே நீண்ட நேரம் பேசியிருந்தேன். ஆனால், அதில் இந்த மூன்று விடயங்களை மாத்திரமே அனைவரும் பேசுபொருளாக்கினர். எனினும், இவை புதியவிடயங்கள் அன்று ஏற்கனவே பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட விடயங்களே. இந்நாட்டில் சிங்கள – முஸ்லிம், சிங்கள – தமிழ், தமிழ் – முஸ்லிம் மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டுமாயின் அம்மக்களிடையே நிலவுகின்ற சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும். நான் குறிப்பிட்ட இந்த விடயங்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஆழமாக பரப்பப்பட்டு வந்த அம்மக்கள் உறுதியான நம்புகின்ற விடயங்களே.
இதனை நான் பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்காவிட்டால் இந்த விடயங்கள் மக்கள் மனங்களிலேயே ஆழமாக பதியப்பட்டு விடும். இதனால் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்க்கும் நிலையே உருவாகும்.

ஐ.எஸ் அமைப்பில் இலங்கையர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்துள்ளதாக சிங்கள மக்கள் மத்தியில் பொய்பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டள்ளன. அதால் அம்மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதேபோன்று, சிங்கள தேசியவாத அமைப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும் அதனால் எதிர்காலத்தில் தமது பள்ளிவாசல்கள் மற்றும் வியாபார நிலையங்கள் அழிகப்படுவதற்கான அபாயம் உள்ளதாகவும் முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, இந்த இருதரப்புக்குமிடையில் அவநம்பிக்கை, ஒருவர் இன்னொருவரை சந்தேகத்துடன் பார்க்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை பகிரங்கமாக பேசாது மறைத்து மறைத்து வைத்தால் 1983 கலவரம் போன்று ஏற்பட்டுவிடும். நான் இரு தரப்பையும் ஓரிடத்துக்கு கொண்டுவருவதற்காகவும், சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காகவும் இதனை பகிரங்கமாக பேசினேன்.

தற்போது நான் அவ்விரண்டு தரப்புடனும் பேசி ஒரே நிலைப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளேன். அதன் பின்னர், “வீதி இரங்குவதாலோ இனவாதத்தினாலோ எதனையும் வெல்ல முடியாது. புரிந்துணர்வுடனேயே உரிமைகளை வெல்ல முடியும்” என பொதுபல சேனா அறிவித்திருந்தது.

எங்கள் தேசம்:- இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்பில் நீங்கள் வெளியிட்டிருந்த கருத்துக்கு முஸ்லிம் தரப்பு கடும் எதிர்ப்பினை வெளியிட்டு ள்ளது அல்லவா?

விஜேதாஸ ராஜபக்ஷ: நான் தெரிவித்த கருத்தில் எந்த தவறும் இல்லை. இதனை நடுநிலையான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்கள் என எண்ணுகின்றேன். முஸ்லிம் மக்களிடையே தப்லீக், ஜமாஅத்தே இஸ்லாமி, தவ்ஹீத் என ஏராளமான இயக்கங்கள் உள்ளன. சில சில விடயங்களில் அவர்களுக்கிடையில் கொள்கை வேறுபாடுகளும் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் முஸ்லிம் இயக்கங்களிடையே சண்டை – சச்சரவுகள் ஏராளம் ஏற்பட்டுள்ளன. இதன் போது சில இடங்களில் கொலைச்சம்பங்களும் பதவாகியுள்ளன. இது தொடர்பான முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.

இவ்வாறான பிரச்சினைகள் அனைத்து முஸ்லிம்களிடையேயும் உள்ளதாக நான் கூறவில்லை. ஆனால், சில தரப்பினரிடையே இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன.

அரசின் நிலைப்பாடு மற்றும் என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் நாட்டில் இனங்களுக்கிடையில் மாத்திரமல்ல சமாதானம் – நல்லிணக்கம் இருக்க வேண்டும். மாறாக, அந்ததந்த இனங்களுக்குள்ளும் சமாதானம் நிலவ வேண்டும். அவர்களுக்கிடையில் பிரிந்து சண்டைப் பிடிப்பார்களாயின் அது நாட்டின் முன்னேற்றத்துக்கும் – அபிவிருத்திக்கும் தடையாக அமையும்.

எங்களுக்கு அனைவரினதும் பாதுகாப்பு முக்கியம். அந்த அடிப்படையிலேயே நான் அவ்வாறான கூற்றினை தெரிவித்திருந்தேன். இது தொடர்பில் பொறுப்புள்ள முஸ்லிம் தலைவர்கள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என நம்புகின்றேன்.
எங்கள் தேசம்:- சர்வதேச பாடசாலைகள் தொடர்பில் நீங்கள் வெளியிட்ட கருத்து உண்மையானது என்றால் சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமல்லவா?
விஜேதாஸ ராஜபக்ஷ: சர்வதேச பாடசாலைகளுக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் – போகின்றவர்கள் தொடர்பில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சந்தேகங்கள் உள்ளன.
தற்போது எகிப்துடன் ஒப்பந்தம் அடிப்படையில் இவ்வாறு சிலர் இலங்கை வருகின்றனர். ஆனால், அவர்கள் மத விடயங்களை போதிக்கவே வருகின்றார்கள் என முஸ்லிம்தரப்பு எனக்கு விளக்கம் வழங்கியிருந்தனர். ஆனால், இது தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கனவே பல சந்தேகங்கள் உள்ளன. அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
இது தொடர்பில் சரியான விளங்களைள முன்னிறுத்தி இரகசியமாக செய்வதை தவிர்ந்து பகிரங்கமாக செய்தால் சந்தேகங்கள் – பிரச்சினைகளை தவிர்ந்து கொள்ளலாம்.
எங்கள் தேசம்:- நீங்கள் ஐ.எஸ். தொடர்பில் வெளியிட்ட கருத்தானது புலனாய்வு பிரிவின் தகவல் அல்ல எனவும், அரசின் நிலைப்பாடு அல்ல என்றும் அது உங்களது தனிப்பட்ட கருத்தே எனவும் அமைச்சர் ராஜித குறிப்பிட்டிருந்தார் அல்வா?
விஜேதாஸ ராஜபக்ஷ: நாட்டின் புலனாய்வு – பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு மாத்திரமே தெரியும் என்ற நிலைப்பாட்டில் அவர் உள்ளார். அவர் தொடர்பிலோ அல்லது அவரது கருத்து தொடர்பிலோ எனக்கு கருத்துத் தெரிவிக்க முடியாது. அவர் கூறுவது போன்று ஆட்சி செய்தால் சிறப்பாக அமையும் (சிரிக்கிறார்…)

நான் ஏன் அரசியலுக்கு வந்தேன் ...! ஏன் கட்சி மாறினேன்...!

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் .


(Why I Joined Politics (SLMC) and converted to ACMC Party)
*****************************************************************************

நான் பல வருடங்களாக கல்வித்துறையில் பல சேவைகளை புத்தள மாவட்டத்திட்கு செய்து வந்துள்ளேன்.

எமது புத்தள மாவட்டத்திலே உண்மையிலேயே ஒழுங்கான ஒரு அரசியல் வாதி இல்லை
என்ற பலரின் குமுறலை கேட்டுருக்கிறேன்.

மேலும் புத்தள மாவட்டத்திலே ஒரு சில நேர்மையான அரசியல் வாதிகளே இருக்கின்றனர். மற்றவர்களை பற்றி நான் சொல்ல தேவை இல்லை.

எமது மக்கள் படுகின்ற பல கஷ்டங்களை அவதானித்தேன்.

அபிவிருத்திகளை செய்ய வேண்டுமானால்
அரசியல் அதிகாரம் தேவை என்பதையும்  உணர்தேன்.

சிறுவயதிலிருந்து SLMC கட்சியின் பொருந்தலைவர் M H M அஷ்ரப் அவர்களின் பல உரைகளை கேட்டு அந்த கட்சியின் விசுவாசியானேன்.
இதுதான் என்னை SLMC கட்சியில் இணைவதற்கு ஊன்றுகோளாக இருந்தது.

ஆகவே 2013 ம் ஆண்டு புத்தள மாவட்ட மாகாண சபைத்தேர்தலிலே SLMC கட்சியில் போட்டியிட்டு, 2 மாதங்களே பிரச்சாரம் செய்து 2450 வாக்குகள் பெற்று புத்தள நகரத்திலே SLMC கட்சியில் அதி கூடிய வாக்குகளை நான் பெற்றேன் .

15 வருடங்கள் அரசியல் அனுபவமான SLMC கட்சியின்
உறுப்பினர் ஒருவரே 3950 வாக்குகளால் மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

என்னை தோற்கடிக்கவே St.Andres கல்லூரியிலே பல எண்ணப்படாத வாக்குகள் ஒளித்துவைக்கப்பட்டது. அந்த வாக்குகள் சாலைகள் எனக்கு அதிகம் கிடைத்த சாலைகளேயாகும்.
(இதற்கான பல ஆதாரங்கள் இன்னும் என்னிடம் உள்ளன.)

அந்த காலப்பகுதியில் ACMC கட்சி புத்தள மாவட்டத்தில் போட்டியிடவில்லை.

நான் கொழும்பிலும் பல கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் 2014 ம் ஆண்டு கொழும்பிலும் என்னை தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளை பெற்றுத்தருமாறு கட்சி வேண்டிக்கொண்டது.

45 நாற்காள் பிரச்சாரம் செய்து 48 பேர்கள் போட்டியிட்டதில் - 13 வது இடத்தை பிடித்து
கணிசமான வாக்குகளை கட்சிக்கு பெற்றுக்கொடுத்து
ஒரு மாகாண சபை உறுப்பினரையும் பெற்றுக்கொண்டோம். (ஆதாரங்கள் என்னிடம் உள்ளன)

இவ்வாறு SLMC கட்சிக்கு பல திட்டங்கள் , ஒரு பாராளுமன்ற தேர்தல், ஒரு ஜனாதிபதி தேர்தல் என, அவர்களுக்கு ஆதரவாகவும்  இருந்தேன்.

சென்ற வருடங்களில் புத்தள மாவட்டத்திற்கு சில  அபிவிருத்திகள் வருவதற்கும் எதோ ஒருவகையில் நானும் காரணமாகவே இருந்துளேன்.
இதனை SLMC கட்சிக்காரர்களால் மறுக்க முடியாது.

SLMC யிலிருந்து அதிரடியாக
வெளியேறுவதற்கான 10 காரணங்கள் :
*********************************************************
1. November 11, 2016 புத்தளத்தில் நடந்த நிகழ்வுக்கு என்னை அழைக்காமல் நிராகரித்தமை.
(No any Invitations, Verbally or by written, no any SMS even)

2. November 11, 2016 புத்தளத்தில் நடந்த நிகழ்வில் , SLMC தலைவரின் உரையில் வேறொரு கட்சித்தலைவறையும் ஏனைய பல இஸ்லாமிய சகோதரர்களை கேவலமாக தூற்றியமை.

3. புத்தள மாவட்டத்திட்கு பல திட்டங்களையும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும்
முறையாக கையளித்தும் - எதையுமே கணக்கெடுக்காதமை.

4. போக்குவரத்து அமைச்சின் புத்தள மாவட்ட இணைப்பாளர் என்ற போலியான ஒரு
பதவியை தந்து ஏமாற்றியமை.

5. SLMC புத்தள கிளையில் கல்வி பகுதியை தருவதாக பல ஆண்டுகள் ஏமாற்றியமை..

6. SLMC புத்தள கிளையில் பல கருத்து முரண்பாடுகள் உள்ளவர்கள் , வெவ்வேறாக
    செயல்படுகின்றமை , குழிபறிக்கின்றமை.

7. SLMC புத்தள கிளை மிக முக்கிய கூட்டங்களுக்கு என்னை அழைக்கத்தமை.

8. SLMC தலைவர் வருடத்திற்க்கு ஒருமுறை வந்து எமது மக்களையும்  ஏமாற்றியமை.

9. உடைந்து வரும் கட்சியை புனர்நிர்மாணம் செய்யத்தமை.

10. SLMC தலைவரை அவசரத்திற்கு கூட தொடர்பு கொள்ள முடியாமை.

ஆகவே இந்த மேலுள்ள காரணங்களின்
விரக்தியில் நான் இருந்த போது ...
**********************************************************
புத்தளத்தில் என் வாழ்நாளில் காணாத பல அபிவிருத்திகளையும் , ஒரு இலவச பாராளுமன்ற பிரதிநிதியையும் வழங்கிய என் பாடசாலை நண்பராகிய அமைச்சர் Rishard Badiyutheen உடன் இணைந்து ACMC கட்சியினை பலப்படுத்தி கஷ்டத்தில் வாழும் எமது புத்தள மாவட்ட மக்களுக்கு இன்னும் பல சேவைகளை
செய்யலாம் என்று என் பிறந்த நாள் தினம் (25 November) முடிவெடுத்து, எந்தவித உடன்பாடுகளோ அல்லது பண பரிமாற்றங்களோ இன்றி இணைந்துகொண்டேன் - வல்லாஹி.

அதுமட்டுமல்ல SLMC யின் இன்னும் 10 முக்கிய கட்சி அங்கத்தவர்கள்  ACMC யுடன் வெகு விரைவில் இணைவார்கள் என்ற விடயத்தையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இப்படிக்கு
இல்ஹாம் மரைக்கார் 

அரசியலமைப்பு திருத்தம் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்பட சு.க. ஒருபோதும் இடமளிக்காது


இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு
-----------------------------------------------------------------------------------------

நாட்டின் தேவைக் கருதி மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு திருத்தம் வடக்கு, கிழக்கு மற்றும் அதற்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு  பாதிப்பு ஏற்படாத வகையிலேயே மேற்கொள்ளப்படும் எனவும், சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திருத்தத்துக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது எனவும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களாக எஸ்.பி.திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, அநுர யாப்பா, பைசர் முஸ்தபா, ஏ.எச்.எம்.பௌசி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அஸ்கிரிய மகாநாயக்க மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்து புதிய அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள சமகால பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர். 
இக்கலந்துரையாடல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்;.ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனங்களுக்கிடையிலான பிரச்சினை, அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட சமகால அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், நாட்டின் தேவைக் கருதி மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது. 
நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் சிறுபான்மை சமூகங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள அரசியல் உரிமைகள் - அதிகாரங்கள் - சலுகைகள் என்பன புதிய அரசியலமைப்பில் அதோபோன்று பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு சமூகத்தை பாதிக்கும் வகையில் அரசியல் தீர்வு எட்டப்படுமாயின் அது நிரந்தர தீர்வாக அமையப்போவதில்லை. 
வடக்கு –கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உடன்பாடில்லை. அத்துடன், இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தாத வகையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அரசியலமைப்பு அமைய வேண்டும். 
இந்த நாட்டிலே மூன்று இனங்களும் ஒற்றுமையோடு வாழவேண்டும், நாட்டில் புதிய பிரச்சனைகளை உருவாக்காமல்,  இருக்கின்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற எமது கட்சி நிலைப்பாட்டை இக்கலந்துரையாடலின் போது நாங்கள் தெளிவுபடுத்தினோம். இதனை வரவேற்ற மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள், சிறுபான்மை மக்களது உரிமைகள் அரசியலமைப்பில் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்கள். 
 அரசியலமைப்பு திருத்தம் வடக்கு, கிழக்கு மற்றும் அதற்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு  பாதிப்பு ஏற்படாத வகையிலேயே மேற்கொள்ளப்படும. மாறாக சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திருத்தத்துக்கும் நாங்கள் இடமளிக்கமாட்டோம் என சு.க. குழு அவரிடம் உறுதியளித்தது. – என்றார்

மாற்றம் வேண்டும் !

#வீரகேசாியில் #இன்று எழுதிய கட்டுரை....ஒரு வீட்டிலுள்ள கிணற்றில் பூனையொன்று விழுந்து இறந்து விட்டது. அதனால் வீட்டுக்காரருக்கு பெரும் அசூசையாகிப் போனது. உடனே தான்சார்ந்த மதப் போதகரிடம் போய் இவ்விடயத்தைச் சொன்னார். அவர் '50 வாளி தண்ணீரை இறைக்குமாறு' அறிவுரை கூறினார். அவ்வாறே வீட்டுக்காரரும் செய்தார். ஆனால் நாற்றம் போகவில்லை. திரும்பவும் போய் சொன்னார். அப்போது '100 வாளி தண்ணீரை இறைத்து கொஞ்சம் குளோரின் போடுங்கள்' என்றார் போதகர். ஆனால் அப்படிச் செய்தும் நாற்றம் போகவில்லை. பிறகு நீர் இறைக்கும் வாளியை மாற்றிப் பார்த்தார்கள். எதுவுமே சரிவரவில்லை. வீட்டுக்காரர் கடுங்கோபத்துடன் மார்க்க போதகரிடம் போய், முழு விபரங்களையும் மீண்டும் சொன்னார். அப்போது, ஏதோ சிந்தனை வந்தவரான போதகர் வீட்டுக் காரரிடம் கேட்டார், 'அது சரி, பூனையை வெளியில் எடுத்து விட்டீர்களா?' என்று.

இப்படித்தான் இலங்கை அரசியலின் நிகழ்கால நிதர்சனமும் இருந்;து கொண்டிருக்கின்றது. ஆட்சியில் 'மாற்றத்தை' ஏற்படுத்துவதாகச் சொல்லி நாம் வாளிகளை மாற்றிக் கொண்டிருக்கின்றோம் அல்லது நீரை மட்டும் இறைத்துக் கொண்டிருக்கின்றோம். அதற்குக் காரணமான பூனை இன்னும் அப்படியே உள்ளே கிடப்பதால் அதாவது இன ரீதியாக சிந்திக்கும் மனநிலையில் மாற்றம் ஏற்படாமையால் தேசிய நீரோட்டம் தூய்மையானதாக மாற்றம் பெறவில்லை.

மாறாத காட்சி

மாற்றம் ஒன்று தேவை என்ற புரட்சிகரமான கோசத்தை சந்தைப்படுத்தி நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறியது. ஆனால் ஆட்சிமாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போன்ற நிலைமைகளே தொடர்கின்றன. இது முஸ்லிம்களிடையே கடுமையான மனக்கிலேசங்களை தோற்றுவித்துள்ளது. தமிழர்களும் இவ்வாறான ஒரு மனத்தாங்கலுக்கு உட்பட்டிருக்கின்றனர். உண்மையாகவே இவ்விடயம், சகோதர இனவாஞ்சையுள்ள சிங்கள மக்களுக்கும் ஒரு நெருடலாகவே இருக்கின்றது. ஆனால்.... யார் என்ன நினைத்தாலும் கடும்போக்கு சக்திகள்  தங்களுடைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முனைப்புடனேயே இருக்கின்றன.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியும் அப்போது அதிகாரத்தில் இருந்தவர்களுமே இலங்கையில் நவீனகால இனவாதத்துக்கு ஆசீர்வாதம் வழங்கினார்கள் என்ற நிலைப்பாட்டின் பிரகாரம் சிறுபான்மை மக்கள் ஒன்றிணைந்து ஆட்சியையே மாற்றியமைத்தனர். ஜனாதிபதி, பிரதமர் உள்ளடங்கலாக முக்கிய பொறுப்புக்களில் இருந்த பலர் மாற்றப்பட்டனர். ஆனால், ஒரு அரசாங்கம் என்பதும் அதன் ஆட்சி நிர்வாகத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் என்பதும் இவர்களை மட்டுமே உள்ளடக்கியதல்ல.

அது, அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர்கள், அமைப்புக்கள், வெளிநாட்டு சக்திகள், சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர், சாதாரண அரசியல்வாதிகள், மக்கள் என ஏகப்பட்ட தரப்பினரை உள்ளடக்கிய ஒரு பெரிய கட்டமைப்பாகும். அந்த வகையில் இலங்கையில், அரச இயந்திரத்தின் அடிப்படைகள்  மாற்றப்பட்டுள்ளன. ஆனால், மற்றைய எல்லா உதிரிப் பாகங்களும் பழயவையாகவே இருக்கின்றன. நல்லாட்சி என்ற சுலோகத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் இனவாதிகளும், சிறுபான்மை மக்களை ஒடுக்க வேண்டுமென நினைப்பவர்களும், பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சிறுபான்மையின செயற்பாட்டாளர்களும் இன்னும் தம்மை மாற்றிக் கொண்டதாக தெரியவில்லை. அதுவே இன்றைய அமைதியின்மைக்கு அடிப்படைக் காரணம் எனலாம்.

காலகாலமாக, ஆட்சி மாற்றத்தை விரும்பும் சக்திகள் முஸ்லிம்களையும் தமிழர்களையும் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தி அதனை கனகச்சிதமாக செய்து வந்திருக்கின்றன. 2001ஆம் ஆண்டு மாவனல்லை கலவரத்தின் பின்னர் சந்திரிக்காவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும், 2013 அளுத்கம கலவரத்திற்கு பிறகு மஹிந்த வீழ்த்தப்பட்டதும் இங்கு நினைவுகொள்ளத் தக்கது. அந்த தொடரில் இப்போதிருக்கின்ற அரசாங்கத்தை சிக்கலில் மாட்டுவதற்கான உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலின் வெளிப்பாடே இப்போது ஏற்பட்டிருக்கின்ற இன முரண்நிலைகள் என்று பரவலாக அனுமானிக்கப்படுகின்றது. இதில் உண்மை இல்லாமலுமில்லை.

தளம்பலை ஏற்படுத்தல்

தமிழர்களிடையே சிற்சில உள்ளக கருத்து முரண்கள் இருந்தாலும் அரசியல் ரீதியாகவோ வேறு அடிப்படையிலோ அவர்களை குழப்ப முடியாத அளவுக்கு ஓரளவுக்கு பக்குவப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் முஸ்லிம்களை எப்போதும் தளம்பல் நிலையில் வைத்திருக்கக் கூடிய சூழல் இருக்கின்றது. அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் அதைச் செய்யலாம். இதை மேற்குறிப்பிட்ட சக்திகள் அறிந்து வைத்திருக்கின்றன. அந்த வகையில் நோக்கினால், மேற்கத்தேயத்திற்கு சார்புப் போக்குடையவர் என்று குறிப்பிட முடியாத தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சியில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய தேவை சில வெளிநாட்டு சக்திகளுக்கு இருப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.

மைத்திரிக்கு வாக்களித்தவர்களும், மிக இலகுவாக தளம்பல் நிலைக்கு கொண்டு வரக்கூடியவர்களுமாக இருக்கின்ற முஸ்லிம்களை தூண்டிவிடுவதன் மூலம் அந்த அதிர்வுகளை உண்டுபண்ணி, ஆட்சியின் ஸ்திரத்தன்மையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த தரப்புக்கள் முயற்சிக்கின்றார்களோ என்ற வலுவான சந்தேகத்தை அவர்கள் எழுப்புகின்றனர்.

எது எப்படி இருந்தாலும், அண்மைக்கால நிலைவரங்களை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை என்பதே சிறுபான்மையினருக்கு விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதுமட்டுமன்றி சில ஆளும்தரப்பு அரசியல்வாதிகள் மற்றும் அதிகார தரப்பினரினது செயற்பாடுகள் மிக மோசமான முன்னுதாரணங்களாக தெரிகின்றன. நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இனவாத நிலைமைகளுக்கு ஊக்கமருந்து கொடுப்பது போல அமைகின்றன.
இந்தப் பின்னணியில், எல்லா இனங்களையும் சமத்துவமாக கருதி சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் பாரிய சிக்கல்நிலை தோன்றியிருக்கின்றது. இதற்குக் காரணம்,

அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ள ஆட்சியாளர்களை மாற்றிவிட்டோம். ஆனால் ஆட்சிக் கட்டமைப்பின் அடிமட்டம் வரையுள்ள மற்றைய தரப்பினரில் பலர் இன்னும் பழைய குட்டையில் ஊறியவர்களாகவே இருக்கின்றனர். அவர்களது மனநிலையில் மாற்றம் ஏற்படாத காரணத்தினாலேயே, இந்த சதிகளை எல்லாம் முறியடிக்கும் முயற்சிகள் வெற்றியளிக்காமல் போய்க் கொண்டிருக்கின்றன.

2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது புதிய ஜனாதிபதியும் பிரதமரும் நல்லதொரு மாற்றத்திற்கான சிந்தனையுடன் நல்லாட்சியை நிறுவினர் என்பதை யாரும் மறுக்கவியலாது. ஆனால், இனவாத போக்குடைய, முன்னைய அரசின் செல்லப் பிள்ளைகளாக இருந்த பலருக்கு நல்லாட்சியிலும் பதவிகளும் அதிகாரங்களும் வழங்க வேண்டியேற்பட்டது. முன்னைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அந்த ஆட்சியின் விசுவாசிகள் என பலதரப்பட்டோர் அரச நிர்வாகக் கட்டமைப்பின் ஒவ்வொரு பிரிவிலும் பணியில் இருக்கலாம். ஆட்சி மாறியதால் இவர்களது மனநிலையும் மாறும் என்று எதிர்பார்க்க முடியாது. இப்படியிருக்கையில், நல்ல சிந்தனைகளை மக்கள் மயப்படுத்துவதும், இலங்கையை இனவாதம் அற்ற நாடாக மாற்றுவதும் குறுகிய காலத்திற்குள் நடந்துவிடக் கூடிய அபூர்வ மாற்றம் அல்ல.

சீசனுக்கான கோஷம்

சிங்கள கடும்போக்கு சக்திகளின் சிந்தனை இன்னும் மாற்றமடையவில்லை. இச் சக்திகள் காலத்துக்கு காலம் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இலக்குவைத்து அடக்குமுறைகளை முடுக்கிவிடுகி;ன்றன. இவ்வாறான அடக்குமுறையின் வெளிப்பாடே ஆயுத மோதலாக வெடித்து, முப்பது வருடம் நீடித்தது. அதேபோல் அதற்கு முன்னரும் பின்னரும் முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட கலவரங்களும் கருத்தியல் யுத்தங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முஸ்லிம்களுக்குள் ஆயுதக் குழுக்கள் இருக்கின்றன என்றும், முஸ்லிம்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றும் ஒரு பிரிவினர் கோஷமெழுப்புவது புதிதல்ல.

மார்க்கத்தை கடைப்பிடிக்குமாறு முஸ்லிம்களை அழைக்கும் பணியில் ஈடுபடுகின்றவர்களை சில கடும்போக்காளர்கள் 25 வருடங்களுக்கு முன்னரே அடிப்படைவாதிகள் என்று கருதினர்;. 15 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஜிகாத் அமைப்பு இருப்பதாக கதை பரப்பினார்கள். இப்போது மீண்டும் இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் இருக்கின்றது என்று கூறுகின்றார்கள். அதாவது 15 அல்லது 20 வருடங்களுக்கு ஒருமுறைதான் இவ்வாறான கோஷங்களை பேரினவாத சக்திகள் தூக்கிப் பிடிக்கின்றன. இடைப்பட்ட காலத்தில் அதைப் பற்றி பேசவே மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்கு அது தேவையாக இருப்பதில்லை. ஆனால், அப்படியொரு தேவை இன்று
வந்திருக்கின்றதோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆனால், இதற்கான ரிஷிமூலங்கள், இதன் பின்னாலுள்ள சதித்திட்டங்கள் பற்றியெல்லாம் அறிந்திருக்கக் கூடிய அரசாங்கம் இதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதில் மெத்தனப் போக்கை காட்டுவதும், சில போதுகளில் இனவாதிகளின் வாய்க்கு அவல் கொடுக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதும் முஸ்லிம்களுக்கு மிகுந்த மன உழைச்சலை ஏற்படுத்தியிருக்கின்றது. சிங்கள பெரும்பான்மை நாடொன்றில் துறவிகளை பிடித்து சிறையில் அடைப்பதில் பாரிய சிக்கல்கள் இருக்கின்றன. என்றாலும், அதன் தீவிரத் தன்மையையாவது வெற்றிகரமாக கட்டுப்படுத்தவில்லை என்பதே முஸ்லிம்களின் கவலையாகும்.

இதேபோன்று, அண்மைக்காலத்தில்  அரசாங்கம் பலஸ்தீனத்தில் உள்ள ஒரு பள்ளிவாசல் தொடர்பான யுனெஸ்கோ வாக்களிப்பில் இலங்கை எடுத்த நிலைப்பாடு, அதற்குப் பின்னர் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பாராளுமன்ற உரை என்பன முஸ்லிம்களை சந்தோசப்படுத்தும் நடவடிக்கைகளாக அமையவில்லை. அரசாங்கத்தில் உள்ள ஒரு தரப்பினரின் மனநிலை இன்னும் மாறவில்லையோ என்ற நியாயமான சந்தேகத்தை இது ஏற்படுத்தியிருக்கின்றது.

நீதி அமைச்சரான விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றில் உரையாற்றுகையி;ல், சட்டம் எல்லோருக்கும் சமமாக பிரயோகிக்கப்படும் என்று மிகவும் காத்திரமான கருத்தை முன்வைத்தார். அத்துடன் இலங்கையின் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் வரை ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்திருப்பதாக கூறியுள்ளார். இங்கு பல முஸ்லிம் அமைப்புக்களின் பெயரைக் குறிப்பிட்டு உரையாற்றிய அமைச்சர், ஒரு கடும்போக்கு சிங்கள அமைப்பின் பெயரையும் சபையில் குறிப்பிடவில்லை. இப்பேச்சு பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து 'நான் மக்களை அறிவூட்டுவதற்காகவே அவ்வாறு கூறினேன்' என்று அமைச்சர் தன்னிலை விளக்கம் அளித்திருக்கின்றார்.

அத்துடன் எல்லா தரப்பினருடனும் சந்திப்புக்களையும் மேற்கொண்டுள்ளார். ஆயினும், நாட்டின் உயரிய சபையில் சர்வதேச பயங்கரவாதிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முடிச்சுப்போடும் விதத்தில் நீதியமைச்சரே பேசியிருக்கின்றமை பல்வேறு விமர்சனங்களுக்கு காரணமாகியுள்ளது. நல்லாட்சியிலும் அரசியல்வாதிகளின் மனோநிலை மாற்றமடையவில்லையா என்ற சந்தேகத்தை இவ்வுரை ஏற்படுத்திற்று.

எவ்வாறிருப்பினும், இலங்கையர் எவரும் ஐ.எஸ். இயக்கத்தில் இல்லை என்றும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அமைச்சர் ராஜித சேனாரட்ன அறிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு பேரவையின் குரலாக அமைச்சர் வெளியிட்டுள்ள இக்கருத்து முஸ்லிம்களின் மனக்  காயத்திற்கு ஒத்தடம் கொடுத்துள்ளதுடன், தேவையற்ற குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது எனலாம்.

அடுத்தடுத்த நிகழ்வுகள்

இதுஇவ்வாறிருக்க, கண்டியில் ஒன்றுகூடிய பௌத்த கடும்போக்கு அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியது. இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். அதேநாள் இரவு பெபிலியானவில் உள்ள பிரபல வர்த்தக நிலையம் தீப்பிடித்தது. இத் தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும் கூட, அந்த ஓரிரு தினங்களில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளை கோர்வையாக நோக்கினால், எல்லாம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.

 இப்படியாக அதிகமான இனவெறுப்பு சம்பவங்கள் அண்மைக்காலத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே தொடர்கின்றது.
இதற்குக் காரணம், ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் அரச இயந்திரத்தின் அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் மனோநிலையிலும் அதிகார வர்க்கம், சாதாரண உத்தியோகத்தர்கள், மற்றும் சட்டத்தை அமுல்படுத்துகின்ற கடைநிலை உத்தியோகத்தர்களின் மனோநிலையிலும் அவர்களுக்கு கட்டளை வழங்கும் மேலதிகாரிகளின் மனதிலும் மாற்றம் ஏற்படாமை என்றால் மிகையில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் மாற்றப்பட்டு விட்டார்கள். ஆனால், கீழுள்ளவர்களில் கணிசமானோர் இன்னும் இனங்களை பிரித்து நோக்குகின்ற மனநிலையிலேயே இருக்கின்றனர் என்பதன் வெளிப்பாடகவே இதை கணிக்க முடிகின்றது.

அரசாங்க கட்டமைப்பில் மட்டுமன்றி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையேயும் போதியளவுக்கு மனநிலை மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. குறிப்பாக, சிங்கள மக்களில் ஒரு குறிப்ப்pட்டளவானோரே கடும்போக்கு இயக்கங்களுக்குப் பின்னால் இருக்கின்றனர் என்பதை, முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். கணிசமான பௌத்த பிக்குகள் வீதிக்கு இறங்கி சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கின்றார்கள். சாமான்ய சிங்கள மக்கள் முஸ்லிம்களின் நியாயங்களை ஏற்றுக் கொள்கின்றார்கள். இதனை கருத்திற் கொண்டு முஸ்லிம்கள் செயற்பட வேண்டும். மிக முக்கியமாக, நமது சமூகம், இனம் என்ற அடிப்படைகளில் சிந்திப்பது போலவே இலங்கை பிரஜை என்ற தேசிய உணர்வையும் எல்லா இனங்களும் வளர்க்க வேண்டியுள்ளது.

அதேபோன்று நீதியமைச்சரின் கருத்தை மறுத்துரைத்துள்ள அரசாங்கம், இலங்கையில் தீவிரவாதம் இருந்தால் அதை இல்லாதொழிப்பதற்கு நியாயமான எந்த நடவடிக்கையையும் எடுக்கலாம். அதைவிடுத்து, அப்பாவி முஸ்லிம்களை ஆயுத குழுக்களுடன் இணைத்துப் பேசவும் ஏனைய இனங்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கவும் வழியேற்படுத்திக் கொடுக்கக் கூடாது. அதேபோல் சட்டம் எல்லோருக்கும் சமம் என்பதை செயலில் காட்ட வேண்டும்.

அரசாங்கம் என்னதான் கொள்கை வகுத்தாலும் எல்லா மட்டங்களிலும் மனநிலை மாற்றம் ஏற்படாத வரை இனவாதம் அற்ற சூழலையும் சட்டத்தின் நடுநிலைப்பார்வையையும் நிலைநாட்டுவது சிரமமாகவே இருக்கும். ஜனாதிபதியும், பிரதமரும் வந்து ஒவ்வொருவரது நடவடிக்கையையும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. மாறாக, அவரவரின் மனங்களில் இருந்து இன, மத ரீதியான பாகுபாடுகள் மற்றும் இனவாத கசடுகள் களையப்பட வேண்டும்.

முதலில், தேசிய அரசியல் மற்றும் சமூக நீரோட்டத்தில் கிடக்கின்ற இந்த மனநிலையை, அதாவது 'பூனையை' வெளியில் எடுக்க வேண்டியுள்ளது.
#
-ஏ.எல். நிப்றாஸ் (வீரகேசரி 27.11.2016)

அஷ்ரஃபின் புதிய முகம் றாஸிக்

BASHER SEGU DAVOOD
*******************"**************
எண்பதுகளில் முஸ்லிம்கள் வடகிழக்கில் வன்முறகளால் அடக்கி ஒடுக்கப்பட்டு நாளாந்த வாழ்வுகூட முடக்கப்பட்டு ஆளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் ஒரு சிறு குழுவின் தலைவராய் திகழ்ந்த அஷ்ரஃப் தனது சமூகம் கோழைகளின் கூடாரமாக இருக்க அனுமதிக்க முடியாது என எண்ணி குரல் கொடுக்க தொடங்கியதன் விளைவுதான் இன்று இலங்கையில் இருக்கும் தலை நிமிர்ந்த முஸ்லிம் சமூகமாகும்.
அவர் சமூகத்துக்கு தைரியமூட்டுவதற்காக தான் மௌத்தாக தயாரானார். ஈமானோடும் வெறுங்கையுடனும், குரலில்ஆயுதம் ஏந்தி போராடக் களமிறங்கினார்.கைகளில் ஆயுதமும், மனங்களில் வன்மும் ஏந்தியோரால் முஸ்லிம்கள் வீதியோரங்களிலும், வயல் வரப்புகளிலும் வீட்டு வளவுகளுக்குள்ளும் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்த காலமது.
தனது உயிருக்கு நிச்சயம் ஆபத்து என்று தெளிவாக உணர்ந்திருந்த போதும்
1) "என்னைப் படைத்த றப்புவை தவிர எவருக்கும் அஞ்சேன், முஸ்லிம்களும் அஞ்சக்கூடாது"
2) எந்தப் பைத்தியகாரன் வந்து கடையை மூடுமாறு துண்டுப் பிரசுரம் வினியோகித்தாலும் கடைகளை மூடுவதற்கு நாம் என்ன கோழைகளா?
3) மௌத்து மனிதருக்கு ஒரு முறைதான் வரும், பீஸபீல் மரணம் சொர்க்கத்தை பரிசளிக்கும்.மக்களே பயம் வேண்டாம் .
4)பிரபாகரனின் களுத்தைக் கடித்தவனாக மரணிக்க விரும்புகிறேன்.
ஆகிய கருத்துக்களை மேடைகளிலும், நாடாளுமன்றத்திலும் முழங்கினார்.
சமூகம் தைரியத்தை நெஞ்சத்துள் நிறைத்துக் கொண்டது.

90 களில் மேலும் உக்கிரமாக முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது அஷ்ரஃப் மேலும் திடமானார், தைரியத்தை ஊட்டினார்.

தற்போது ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஒரு வன்முறைக்கு முகம் கொடுக்க நேருமோ என நினைக்கும் அளவுக்கு இலங்கையின் அரசியல், சமூகக் களங்கள் இன, மத, வெறுப்பேற்றலுக்குள் வீழ்ந்து களங்கப்பட்டு கிடக்கிறது. கலங்கிய குட்டையில் பல சக்திகள் மீன் பிடிக்க வலைகளோடு அலைகின்றன.

இந்த நெருக்கடியான சூழலில் சமூகத்தை தைரியமூட்டும் வேலையை SLTJ றாஸிக் செய்வது போல் ஒரு தோற்றப்பாடு தெரிகிறது.
அவர் கைது செய்யப்பட்டுள்ளமை முஸ்லிம் இளைஞர்களுக்குள் அவரை ஒரு கதாநாயகனாகவும் ஆக்கிவிட்டுள்ளது, விடுதலை செய்யப்படும் போது சிறைமீண்ட செல்வராகவும், சமூகத்துக்காக தன்னை தத்தம் கொடுக்கவும் தயாரான தியாகியாகவும் ஒரு புடம் போடப்பட்டவராகவே வெளிவருவார்.

இன்றைய முஸ்லிம் அரசியலில் இளமையானதும், தைரியமானதுமான கருத்துக்கள் தேவைப்படுகிற காலம் இது. மீதமிருக்கும் முதிர்ந்த முஸ்லிம் அரசியலுக்கு இப்புதிய சூழல் காயடிக்கவும் கூடும்.

மார்க்க ரீதியாக SLTJஉடன் உடன்படும் முஸ்லிம்கள் இலங்கையில் குறைவாகவே உள்ளனர், ஆனால் அவர்களின் அரசியலில் உடன்படும் முஸ்லிம் இளைஞர்கள் அதிகரித்து வருகிறார்கள். விசேடமாக கிழக்கில் மீண்டும் 80களில் நிலவிய ஒரு தைரிய சஞ்சாரம் ஊடறுப்பது தெரிகிறது.
 முன்னைய காலங்களில் இளம் பிள்ளைகள் வாப்பா, உம்மாவின் மனோநிலைக்கு ஏற்ப தீர்மானம் எடுக்கும் வழமை இருந்தது, இப்போதெல்லாம் தம் இளம் பிள்ளைகளின் மனோநலைக்கு ஒவ்வும் தீர்மானங்களையே பெற்றோர் எடுக்க காண்கிறோம்.

 எண்பதுகளில் அஷ்ரஃபின் அரசியல் முன்னெடுப்புகளை இன்று அரங்கில் காணக்கிடைக்கிறது , அதனை கருத்தியல் ரீதியாக தற்போது முன்னெடுப்பவர் அப்துல் றாஸிக் ஆகும்.

இவ்வெப்பக் காலநிலை இன்று முஸ்லிம்களுக்குள் இருக்கும் நமக்கு "மாற்றுத் தலைமை இல்லை என்கிற மூட நம்பிக்கையை" ஆவியாக்கவும் வாய்ப்புண்டு.

இயேசு கடவுளா? மனிதரா?

உலகின் இரு பிரதான மதங்கள் இயேசுவைப் பற்றி புகழ்ந்து கூறுகின்றது.அது  இஸ்லாமும்,கிறிஸ்தவமுமாகும்.இஸ்லாம் இயேசு ஒரு இறைத் தூதர்.அவர் ஒரு மனிதர்  என்கிறது.கிறிஸ்தவமோ அவர் கடவுள் என்கிறது.உண்மையில் இயேசு கடவுளா? மனிதரா? குர்ஆனின் கூற்று சரியா? கிறிஸ்தவர்களின் நம்பிக்கை சரியா? சத்தியத்தை பைபிளிலிருந்து காண்போம்.
1.இயேசு கடவுளல்ல அவர் ஒரு மனிதரே.

”தேவன் ஆவியாயிருக்கிறார்”(யோவான் 4:24)
”நீங்கள் அவர் சத்தத்தை கேட்டதுமில்லை,அவரது ரூபத்தை கண்டதுமில்லை.”(யோவான் 5:37)
”அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும்,ராஜாதி ராஜாவும்,கர்த்தாதி கர்த்தாவும்,ஒருவராய் சவாமையுள்ளவரும்,சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும்,மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும்,காணக்கூடாதவராயுமிருக்கிறார்.”(திமோத்தேயு 6:15,16)
இவ்வுலகில் யாரும் இறைவனைக் கண்டதில்லை.காணக்கூடிய ஒருவர் எவ்வாறு கடவுளாக இருக்க முடியும்?

2.இயேசு இறைவனால் அனுப்பப்பட்ட தூதரே.

” இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.” (யோவான் 5:37)

”என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ”(யோவான் 5:24)

” என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.’ ‘(யோவான் 5:37)

இந்த  வசனங்கள் இயேசுவே கடவுளாக வரவில்லை.அவரை தேவன்தான் அனுப்பினார் என்பதை தெளிவாக அறிவிக்கிறது.அது மட்டுமல்லாமல் என்னை அனுப்பியவர் பிதா என்றும்,பிதாவை யாரும் கண்டதில்லை என்றும் கூறுவதிலிருந்து  இயேசு கடவுளல்ல.கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்தான் என்பதையும் கடவுளை காணமுடியாது என்பதையும் இயேசு கூறும்போது அவர் எவ்வாறு கடவுளாக இருப்பார்?

3.இயேசு சுயமாய் எதுவும் செய்யவில்லை.

” நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. ” (யோவான் 5:30)

இந்த வசனம் இயேசு சுயமாக  எதையும்  செய்யவில்லை.தேவனின் உதவியினாலேயே அற்புதங்களை செய்தார் என்பதை உணர்த்துகிறது.இயேசுவே கடவுளாக இருந்தால் அவர் தானே அனைத்தையும் செய்ததாக அல்லவா கூறியிருப்பார்?.என்னை அனுப்பின பிதாவின் சித்தத்தின்படியே தான் அற்புதங்களை செய்ததாக கூறுவதிலிருந்து பிதா வேறு,  இயேசு வேறு என்பது புலப்படவில்லையா?

4.இயேசுவிடம் பிரார்த்தித்தால் பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றிபெற முடியாது.

”பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது  நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது  நாமத்தினாலே பிசாசுகளை துரத்தினோம் அல்லவா? உமது  நாமத்தினாலே அநேக அற்புதங்களை செய்தோம் அல்லவா என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை.அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று  போங்கள் என்று அவர்களுக்குச் சொல்வேன்.” (மத்தேயு -7:21-23)”

இயேசுவை நோக்கி பிரார்த்தித்தவர்களின் நிலையை இயேசு எவ்வளவு தெளிவாக விளக்குகிறார்.தன்னை நோக்கி பிரார்தித்தவர்களை அக்கிரமக்காரர்கள் என்று  நியாயத்தீர்ப்பு நாளில் கூறிவிடுவேன் என்பதை இயேசுவே கூறியுள்ளார்.இன்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிப்பவர்களே சற்று சிந்தியுங்கள்.இயேசு கடவுளாக இருந்திருந்தால் இவ்வாறு கூறுவாரா? அவருக்கு மேல் ஒரு கடவுள் இருக்கிறார்.அவர்தான் தேவன்,கர்த்தர்,அல்லாஹ் என்று பல மொழிகளில் அழைக்கப்படும் ஏக இறைவன் என்பதை நீங்கள் உணரவில்லையா?

இதே கருத்தை தருகின்ற   குர்ஆன் வசனத்தையும் ஞாபகமூட்டுகிறோம்.
”மர்யமுடைய மகன் ஈஸாவே, ‘அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்’ என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?’என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், ‘நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்.  என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;.நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்’ என்று அவர் கூறுவார்.(5:116)

”நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), ‘என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்’
என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும்,  நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்”. (5:117)

5.இயேசுவுக்கே நியாயத்தீர்ப்பு நாள் எப்போது என்று தெரியாது.

”அந்த நாளையும், அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்: பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.”(மத்தேயு – 24:36)

பிதாவைத் தவிர வேறு யாருமே அந்த நாளை (நியாயத்தீர்ப்பு நாளை) அறியமாட்டார்கள் என்று இயேசுவே கூறியுள்ளார்.இயேசு கடவுளாக இருந்தால் அதை அவர் அறிந்திருப்பாரல்லவா?

6.இயேசுவும் கடவுளையே வணங்கினார்.

”சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: பிதாவே! இந்தப்பாத்திரம் என்னைவிட்டு  நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று  ஜெபம்பண்ணினார்.”(மத்தேயு – 26:39)

இயேசுவும் தேவனிடமே பிரார்த்தித்துள்ளார்.அவரால் சுயமாக எதையும் செய்ய முடியாது.தேவனிடம் பிரார்த்தித்தே காரியங்களை செய்தார் என்பதை மேற்கூறப்பட்ட பைபிள் வசனத்திலிருந்து தெளிவாக  விளங்கலாம்.இயேசுவே கடவுளாக இருந்தால் அவர் வேறு யாரிடமும் பிரார்த்திக்கவேண்டிய அவசியம் இல்லையே?

சுத்தமான குடிநீரைப் பெற்றுத்தாருங்கள் ரிஸ்வி ஜவஹர்ஷாவிடம் நமுவாவ மக்கள் கோரிக்கை

..
.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ரிம்சி ஜலீல்-

நிகவரட்டிய நமுவாவ பகுதியில் நேற்று (25) சுத்தமான குடிநீரைப்
பெற்றுக்கொள்வது சம்மந்தமான கோரிக்கை நிகழ்வு ஒன்று நிகவெரட்டிய நமுவாவ
ரஹ்மானிய்யா ஜும்மாப் பள்ளியில் நடைபெற்றது.

சுத்தமான குடிநீரை தமது ஊருக்குப் பெற்றுத்தருமாறும் நீர் சம்மந்தமான
குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்க்காக குழாய் கிணறு மற்றும் "ஏரோபிளான்ட்"
குடிநீரை சுத்தம் செய்யும் கருவியைப் பெற்றுக்த்தருமாறு பள்ளித் தலைவர்
மற்றும் ஊர் மக்கள் வேண்டிக் கொண்டதற்க்கினங்க ஸ்ரீ.ல.மு.க மாகாணசபை
உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா தான் அது தொடர்பான நடவடிக்கை எடுப்பதாக
தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீ.ல மு.க மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா
குளியாப்பிட்டிய பி. உ இல்ஹாம் சத்தார் நீர்வளங்கள் அமைச்சின் அமைப்பாளர்
ஷாம் மௌலானா சமூக சேவையாளர் ராபிஃ மற்றும் ஊர் மக்கள் பலரும்
கலந்துகொண்டதுடனர்

சாய்ந்தமருது கிங் ஹோஸஸ் வெற்றிக்கிண்ணத்தை அக்கரைப்பற்று நோநேம் விளையாட்டுக்கழகம் சுவீகரித்ததுசாய்ந்தமருது கிங் ஹோஸஸ் வெற்றிக்கிண்ணத்தை அக்கரைப்பற்று நோநேம் விளையாட்டுக்கழகம் சுவீகரித்தது!......
-எம்.வை.அமீர்,யு.கே.காலிதீன்,எம்.ஐ.எம்.அஸ்கர்-
சாய்ந்தமருது கிங் ஹோஸஸ் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘கிங் ஹோஸஸ் வெற்றிக்கிண்ண’ அணிக்கு 7பேர்கள் விளையாடும், 5 ஓவர்களைக் கொண்ட  கிறிக்கட் சுற்றுப்போட்டியை கடந்த 7 நாட்களாக 48விளையாட்டுக்கழகங்களிடையே சாய்ந்தமருது பௌஸி விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் இரவு போட்டிகளாக நடைபெற்றது.
போட்டியின் இறுதிநாளான 2016-11-25 ஆம் திகதி அரையிறுதி போட்டிகளாக சாய்ந்தமருது டஸ்கஸ் விளையாட்டுக்கழகத்துக்கும் அக்கரைப்பற்று நோநேம் விளையாட்டுக்கழகத்துக்கு இடையிலும் சாய்ந்தமருது லம்கோ விளையாட்டுக்கழகத்துக்கும் மாவடிப்பள்ளி விளையாட்டுக்கழகத்துக்கு இடையிலும் நடைபெற்றது இப்போட்டிகளில் அக்கரைப்பற்று நோநேம் விளையாட்டுக்கழகமும் சாய்ந்தமருது லம்கோ விளையாட்டுக்கழகமும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.
வெற்றிக்கிண்ணத்துக்காக களமிறங்கிய இவ்விரு அணிகளும் கடைசிவரை விறுவிறுப்பான முறையில் விளையாடி இறுதியில் அக்கரைப்பற்று நோநேம் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
கிங் ஹோஸஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஏ.எல் முஹம்மட் தலைமையில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் பொலிஸ் தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.எம்.நவாஸ் பிரதம அதிதியாகவும் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் எம்.பஸ்மிர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டதுடன் இன்னும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றிகொண்ட கழகங்களுக்கு கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
மின்னொளியில் இடம்பெற்ற இப்போட்டிகளை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குழுமியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம் தொடர்பான நகல் அறிக்கையில் கையெழுத்திட்டு முஸ்லிம்களின் பதுவாவை சுமக்க வேண்டாம்


முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம் சம்பந்தமாக திரு. சலீம் மர்சூபால் திருத்தப்பட்டுள்ள நகல் அறிக்கைக்கு அரசால் நியமிக்கப்பட்டுள்ள உப அங்கத்தவர்கள் எவரும் கையொப்பமிட வேண்டாம் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி அக்கட்சி குறிப்பிட்டுள்ளதாவது, முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம் தொடர்பான நகல் அறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதில் அரசால் நியமிக்கப்பட்டுள்ள 19 பேரினதும் கையொப்பம் இடப்பட்டதும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் கையளிக்கவுள்ளதாகவும் ஒய்வு பெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் தெரிவித்துள்ளார்.
ஜி எஸ் பி வரிச்சலுகைக்காக முஸ்லிம் திருமண சட்டத்தில் கை வைக்க வேண்டாம் என  உலமா கட்சியும், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் அரசாங்கத்தை வேண்டிக்கொண்டிருந்தும், இதற்காக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பிலும், கிழக்கிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் மேற்படி திருத்தலுக்காக அரசால் நியமிக்கப்பட்ட உபகுழுவை அரசு ரத்துச்செய்யாமை என்பது ஐ தே க அரசின் முஸ்லிம் விரோத போக்கை காட்டுகிறது.
முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமா என்பது ஆராய்வதற்காக 2009ம் ஆண்டு திரு. சலீம் மர்சூப் தலைiயில் குழு நியமிக்கப்பட்டது. ஆனாலும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாததால் அது கிடப்பில் போடப்பட்டது. பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த போது முஸ்லிம் சட்டத்தை மாற்றம்படி முஸ்லிம் குஷ்பு முன்னணியொன்று அவரிடம் வேண்டிக்கொண்டதற்கிணங்க திருத்துவதற்கான முயற்சியில் அவரால் பரிய முணைப்பு முன்னெடுக்கப்பட்டது.
அப்போது அது பற்றி நடத்தப்பட்ட கருத்தரங்குகளில் உலமா கட்சி சார்பாக கலந்து கொண்ட நாம் திருத்தம் எதுவும் வேண்டியதில்லை என்றும் மாறாக மேலும் சில உரிமைகள்தான் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தோம். அத்துடன் அன்றைய நீதி அமைச்சரின் இந்நடவடிக்கை முஸ்லிம் தனியார் சட்டத்தை கொச்சைப்படுத்தும் செயல் என்பதை நாம் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எடுத்துக்கூறியதால் அது கைவிடப்பட்டிருந்தது.
பின்னர் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் முஸ்லிம்களின் எந்தவொரு உரிமையையும் வழங்குவதற்கு முன்வராமல் இருக்கும் உரிமையையும் இல்லாமல் செய்வதற்காக முஸ்லிம் சட்டத்திருத்தத்தை பாராளுமன்றத்தக்கு கொண்டு வர அமைச்சர் விஜேதாச மூலம் முயன்ற போது உலமா கட்சி அதனை கடுமையாக கண்டித்ததுடன் இதனை செய்ய வேண்டாம் என அவருக்கு நேரடியாக கடிதமும் எழுதியது.
இவ்வாறான நிலையில் ஐரோப்பிய நாடுகள் முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்றினால் ஜி எஸ் பி சலுகை தருவோம் என்று சொன்னதற்காக அரசு திருத்தங்களை மேற்கொள்ள அவசரமாக செயற்படுகிறது.  அண்மையில் பாராளுமன்றத்தில் இது பற்றி உரையாற்றிய நீதி அமைச்சர் விஜேதாச, முஸ்லிம் பெண்களின் திருமண வயது விடயத்தில் அரசு தலையிடாது என்றும் இதனை முஸ்லிம்கள் பார்த்துக்கொள்ளட்டும் என கூறியிருந்தார். அன்றைய அவரது உரையில் பல விடயங்கள் உளறல்களாக இருந்த போதும் இந்த வார்த்தை முஸ்லிம்களுக்கு மகிழ்வை தந்தது. ஆனாலும் முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த அரசால் அமைக்கப்பட்ட உப குழு கலைக்கப்படவில்லை. பின்னர் பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் நீதி அமைச்சரைக்கண்டு முஸ்லிம் தனியார் சட்டத்தை (இதனை ஷரீயா சட்டம் என விளங்கிக்கொண்டு) அதனை நீக்க வேண்டும் எள அவர்கள் கோரிக்கை விடுத்ததன் காரணமாக மீண்டும் சிங்கள இனவாதிகளை திருப்திப்படுhத்துவதற்காக அவசர அவசரமாக நகல் அறிக்கை தயார் செய்யப்பட்டு உப குழுவின் முன்பாக வைக்கப்படவுள்ளது.

ஆகவே இது விடயத்தில் முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் கட்சிகள், அமைப்புக்கள் மிகவும் அவதானமாக இருந்து இலங்கை முஸ்லிம்களின் எதிர்கால சந்ததிகளை உரிமையற்றவர்களாக ஆக்கும் முயற்சிக்கு துணை போக வேண்டாம் என கேட்டுக்கொள்வதுடன் மேற்படி உப குழுவில் உள்ள எவரும் இதில் கையெழுத்திட்டு முஸ்லிம்களின் பதுவாவை சுமக்க வேண்டாம் எனவும் முஸ்லிம் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.

2015 தொடக்கம் சிறிலங்காவில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு எதிராக 132 வன்முறைச் சம்பவங்களும் முஸ்லீம்களுக்கு எதிராக 141 வன்முறைச் சம்பவ2015 தொடக்கம் சிறிலங்காவில் வாழும் முஸ்லீம்களுக்கு எதிராக 141 வன்முறை

குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தமானது மே 2009ல் நிறைவுக்கு வந்தது. இந்த யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில்  மக்களுக்கு எதிராக சில பௌத்த பிக்குகளால் இனவாதம் கலந்த வசைமொழிகள் பேசப்பட்டதானது நாட்டில் எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளது.

தமிழ் கிராம சேவகர் ஒருவரை  பௌத்த பிக்கு ஒருவர் இனத்துவேசம் நிறைந்த கெட்ட வார்த்தைகளால் திட்டி அவரை எச்சரிக்கின்ற அந்தக் காட்சியை, காவற்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காது,வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதை உள்ளடக்கிய காணொலி ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோன்று ‘சிங்களவர்களின் மீட்பர்’ எனத் தன்னைத் தானே கூறிக்கொண்ட ஒருவர் கைதுசெய்யப்பட்ட போது,  அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்த மதகுரு ஒருவர் இந்த ஆர்ப்பாட்டம் இரத்தக்களரிக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை செய்த பிறிதொரு சம்பவமும் நடந்துஉள்ளது.

இவ்வாறான இனவாதத் தாக்குதல்கள் மதம் என்பதற்கு அப்பால் இனவாதத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த தமிழர்கள், இந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் என அனைவரும் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுகின்றனர்.

சிறிலங்காவின் 20 மில்லியன் மக்கள் தொகையில் 70 சதவீதமானவர்கள் பௌத்தர்களாவர். அத்துடன் 13 சதவீதத்தினர் இந்துக்களாகவும், கிட்டத்தட்ட 10 சதவீதத்தினர் முஸ்லீம்களாகவும் உள்ளனர்.

2015 தொடக்கம் சிறிலங்காவில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு எதிராக 132 வன்முறைச் சம்பவங்களும் முஸ்லீம்களுக்கு எதிராக 141 வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக ‘இனப் பாரபட்சங்களைக் களையும் ஆணைக்குழுவிற்கு’ கூட்டு சிவில் சமூகத்தால் 2016 ஆகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மதத் தலங்கள் மீதான தாக்குதல்கள், சிறுபான்மை மத சமூகங்கள் மீதான தாக்குதல்கள் போன்றனவும் இந்த வன்முறைச் சம்பவங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை காலமும் இவ்வாறான தாக்குதல்களில் ஈடுபட்ட எவருக்கும் தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்பது மிகவும் மோசமான ஒரு செய்தியாகும்.

‘சிறிலங்காவில் வாழும் அனைத்துக் குடிமக்களும் சமமாகவும், பாரபட்சமற்ற வகையிலும், மதசுதந்திரத்துடனும், தத்தமது மதங்களை சுதந்திரமாக வணங்குவதற்குமான உரிமையைக் கொண்டுள்ளனர் என நாட்டின் அரசியல் சாசனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் வாழும் மத மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தால் மேற்கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பௌத்த பிக்குகளே தலைமை தாங்குகின்றனர். ஆனால் இவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக சிவில் சமூகக் குழுக்கள் தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு அறிக்கையிட்டுள்ளனர். எனினும் இவ்வாறான வசைமொழிகளையும் இனவாதக் கருத்துக்களையும் கூறும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக சிறிலங்கா சட்டத்தின் கீழ் எவ்வித தண்டனைகளும் வழங்கப்படவில்லை’ என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவேல் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெறும் பாரபட்சங்களுக்கு எதிராகவும் பௌத்த பிக்குகள் உட்பட இனவாதம் மற்றும் வசைமொழி பேசுபவர்களை இனங்கண்டு அவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும் என கத்தோலிக்க மற்றும் இந்து மத தமிழ்க் குழுக்கள் அழைப்பு விடுத்துள்ள போதிலும் இது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

சிறிலங்காவானது தற்போது பல பத்தாண்டு கால உள்நாட்டு யுத்தத்தின் பாதிப்புக்களிலிருந்து தன்னை மீட்டெடுத்து வருகிறது. உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள அதிலிருந்து மீண்டெழுந்தவர்கள் இனிவருங் காலங்களில் நம்பிக்கையுடன் வாழ்வதற்கேற்ற வகையில் சட்டங்களும் நிறுவகங்களும் செயற்பட வேண்டிய காலகட்டமாகும்.

ஆனால் இனிவருங் காலங்களில் அதாவது போருக்குப் பின்னான முதலாவது தலைமுறையினர் சிறிலங்காவின் ஆட்சிப்பீடத்திற்கு வரும்போது என்ன நடக்கும் என்பதற்கு இவ்வாறான இனவாத பௌத்த சிங்களவர்களால் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் முதலாவது சமிக்ஞையாக  உள்ளது.

இஸ்லாமிய அரசு என அழைக்கப்படும் ‘ISIS’ உடன் இணைவதற்காக சிறிலங்காவைச் சேர்ந்த 32 முஸ்லீம்கள் சிரியாவிற்குப் பயணம் செய்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியிருந்தார்.

‘இந்த 32 முஸ்லீம்களும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இவர்கள் படித்த மற்றும் செல்வந்த முஸ்லீம் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் எனவும் ராஜபக்ச தெரிவித்தார்.

இந்த நாட்டில் ISISதொடர்பாக பாரியதொரு அச்சம் காணப்படுகிறது. இந்த நாட்டிலும் இவ்வாறானதொரு தீவிரவாதத்தை விதைக்க யாராவது முற்பட்டால் அதனை நாம் இன்றிலிருந்து தடுத்து நிறுத்த வேண்டும். இந்த நாட்டுச் சட்டமானது பௌத்த பிக்குகளுக்கோ அல்லது சாதாரண மக்களுக்கோ வேறுபட்டதல்ல’ என விஜயதாச ராஜபக்ச தெரிவி
த்திருந்தார்.

சிறிலங்கா முஸ்லீம் பேரவை நீதி அமைச்சரின் இந்தக் கருத்தை முற்றிலும் நிராகரித்தது. ‘நாங்கள் அமைச்சரின் இத்தகைய தவறான கருத்தை ஏற்கமறுக்கிறோம். அமைச்சரின் இந்தக் கருத்தானது ஒரு ஆண்டின் முன்னர் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவர் ISIS உடன் இணைந்து போராடி மரணித்த போது ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்களாகும். இதன் பின்னர் இவ்வாறு எவரும் இந்த அமைப்புடன் இணைந்ததற்கான சாட்சியங்கள் வெளியிடப்படவில்லை. ஆகவே இந்நிலையில் அமைச்சரின் கருத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என முஸ்லீம் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்காவானது தற்போது உள்நாட்டு யுத்தத்திலிருந்து மீண்டு வரும் ஒரு நாடாகும். இந்த நாட்டில் வாழும் பௌத்தர்கள், இந்துக்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லீம்கள் என அனைவரும் இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாவர்.

இந்த மக்கள் உள்நாட்டு யுத்தத்திலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் புதிய சட்டங்களையும் புதிய நிறுவகங்களையும் உருவாக்க முயற்சிக்கின்றன. இவ்வாறானதொரு பயங்கரம் இந்த நாட்டில் மீண்டும் ஏற்படாத வண்ணம் இந்த சட்டங்கள் இருக்க வேண்டும்.

புதிய தலைமுறையினர் ஆட்சிக்கு வரும்போது இவ்வாறான மத மற்றும் இனவாத வேறுபாடுகள் நீக்கப்படும். ஆகவே தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்க சில தீயசக்திகள் முயற்சிக்கின்றன.

ஆங்கிலத்தில்  – JOHN J. XENAKIS வழிமூலம்        – Breitbart மொழியாக்கம்  – நித்தியபாரதி

முக்காடு தலையை மூடியிருப்பதாய் காரணம் காட்டி எங்களில் திறமையானவர்கள் கூட நிராகரிக்கப்பட்டோம்.

-NJ NASEER-

இனவாதத்திற்கு இறையானவர்கள் நாங்கள், பலமுறை எழுத முயன்றும் தோற்றுப்போனோம்.

உணர்வுபூர்வமாக பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்.

உரிமையிருந்தும் உரக்கப்பேச முடியாமல் கண்முன்னே பாரபட்சம் காட்டப்பட்டு நாம் பல சந்தர்பங்களில் நிராகரிக்கப்பட்டோம். உயர்கல்வி கனவு உண்மையானதை எண்ணி சந்தோசப்பட்டதோடு என்னைப் போன்று கல்லூரிக்கு வரும்போது மற்றைய முஸ்லிம் சகோதரிகளும் பல்லாயிரம் கனவுகளோடு உள் நுழைந்தோம். எப்போதும் எந்த சந்தர்பத்திலும் நாம் எமது மார்க்கத்தையோ அல்லது கலாச்சாரத்தையோ விட்டுக் கொடுத்தது இல்லை.ஆண் பெண் வரையறைகளை மீறியதும் கிடையாது.

கல்வி இருக்கின்ற இடத்தில் பண்பாடு இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கின்றேன். ஆனால் பண்பாடு கல்வியால் வந்தது அல்ல என்பதை இங்கு கண்டு கொண்டேன், மனிதாபிமானமும் கூடவே. முன் உதாரணமாக திகல வேண்டியவர்களே இங்கு இனவாதம் போதிக்கின்றார்கள் என்றால் அவரகளுடைய சமூகத்தின் இளைய தலைமுறையின் நடவடிக்கை பற்றி நான் கூறவேண்டியதில்லை.

முக்காடு தலையை மூடியிருப்பதாய் காரணம் காட்டி எங்களில் திறமையானவர்கள் கூட நிராகரிக்கப்பட்டோம். காரணம் முக்காடு எம் கண் அசைவை மறைத்து விட்டதாம். முக்காடு போட்டது எம் தலைக்கு மட்டுமே கண்களுக்கு அல்ல.

>நாங்கள் முன் வரிசையில் உட்கார வேண்டியதில்லை என்பதை அவர்களே தீர்மானித்து விட்டார்கள்.

>அபாயவை காணும் போதெல்லாம் அவர்களுக்கு பேய் உலகத்தை காண்பதாய் இருக்கின்றதாம்.கலாச்சாரம் கல்லூரிக்குல் வேண்டாம் என்று பகிரங்கமாய் கூறி விட்டார்கள்.

>ஒவ்வொரு விரிவுரையின் போதும் ஏச்சுக்கள் மட்டுமே மிஞ்சிப் போனது

>எப்போதும் வெறுப்பை மட்டுமே  எங்கள் மீது உமிழ்கின்றார்கள்.

>பதில் தெரிந்தும் நிர்ப்பந்தத்தின் பேரில பதில்  கூற முடியாமல் தவித்தோம்.

ஜனநாயக நாட்டில்  அரசாங்க கல்வி நிலையத்தில் கலாச்சார உடை அணிய உரிமை இன்றி தவிக்கின்றோம். முதல் வரிசை வேண்டாம் இரண்டாம் வரிசையில் கூட உட்கார  உரிமை இன்றி தவிக்கின்றோம்.முக்காடு எம் அறிவை மறைக்கவில்லை அவயங்களை மாத்திரம் தான் மறைக்கின்றது.ஆனால் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். நாம் அவர்களோடு ஒருபோதும் பிரச்சனைப் படவில்லை.அவர்கள் கேட்டபோதெல்லாம் உதவினோம்.சிரிக்கும் போதெல்லாம் சிரித்தோம்.இப்போதெல்லாம் அந்த சிரிப்பில் பொய் இருப்பதாய் உணர்கின்றோம்.நாம் அவர்களுடைய உணர்வுகளை காயப்படுத்தவில்லை.ஆனால் இந்த நிமிடம் வரை காயப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம்.

எமது மார்க்கத்தை கொச்சைப்படுத்துவதும் உடையை கொச்சைப்படுத்துவதும் அவர்களுக்கு பொழுதுபோக்காய் போய்விட்டது.எங்களுக்கு  மனங்களில் ஆறாத வடுக்களையும் ரணங்களையும் ஏற்படுத்தி விட்டது.இன்றுவரை எங்களை மாணவர்களாய் பார்க்கவில்லை முஸ்லீம்கள் என்ற முறையில் மாத்திரமே பார்கின்றார்கள்.முடிவாய் நான் கேற்கின்றேன்.

>கலை நிகழ்ச்சிகளும் வைபவங்களும் வரும்போது பணம் எனும் பெயரில் சமத்துவம் பார்க்கின்றவர்கள் எமது உரிமைகளில் சமத்துவம் பார்க்கத் தவறியது ஏன்??

>இலங்கை ஜனநாயக நாட்டில் முஸ்லிம்களாக பிறந்தற்காய் அடிப்படை உரிமைகள் கூட இல்லையா?

>இனவாதம் என்கின்ற கொடிய நோய்க்கு பலியானது இவங்கையின் நாளைய எதிர்காலமான மாணவர்களுமா?

>எங்களுக்கே உரிமைகள் பறிபோன நிலையில் வரும் தலைமுறையின் உரிமைகளை யாரிடம் போய்க் கேற்பது?

>எமக்காகா குரல் கொடுப்பவர்கள் யார்?வரும் தலைமுறையை காப்பவர்கள் யார்?

இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்குன்றான் என்ற ஒரு நம்பிக்கையில் மாத்திரமே பல சவால்களுக்கு மத்தியிலும கல்லூரியில் எம் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை இரு அமைச்சர்களும் அதிரடி மறுப்பு


24.11.216
கௌரவ வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள், அண்மையில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் இன விரோத செயல்களை எதிர்த்தும், அதனைக் கண்டித்தும் பேசியதோடு; 1000 வருடங்களுக்கு மேலான சிங்கள - முஸ்லிம் நட்புறவுக்கு பங்கம் விளைவிக்க இடம்கொடுக்க முடியாதென்றும், சகல விதமான தீவிரவாதங்களை கண்டித்தும், சிங்கள – முஸ்லிம் இன நல்லுறவு உறுதியான முறையில் கட்டி எழுப்பப்பட வேண்டுமெனவும் பாராளுமன்றத்தில் துணிந்து உண்மைகளை எடுத்துக் கூறி உரையாற்றியமைக்கு முஸ்லிம்கள் சார்பாக எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்தோடு, சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கௌரவ ராஜித சேனாரத்ன அவர்கள், நேற்று (23.11.216) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவுக்கும் செய்தியாளர்கள் மாநாட்டில், ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்றும், இலங்கையர்கள் 32 பேர் ஐ.எஸ். இல் உள்ளார்கள் என வெளியிடப்பட்ட கருத்து எவ்வித ஆதரமுமற்றதாகும் என்றும், பொறுப்போடும் உறுதியோடும் கூறியதோடு, வெளிநாடுகளில் இருந்துவரும் முஸ்லிம் விரிவுரையாளர்கள் எவ்வித சட்டவிரோதமான செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனவும் வற்புறுத்தி பகிரங்கமாகக் கூறியதற்கும் அதன் மூலம் சமூகங்களுக்கிடையில் ஏற்படவிருந்த பதட்டத்தை நீக்கியதற்கும் முஸ்லிம் சமூகம் சார்பாக எங்களுடைய இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எஸ்.சுபைர்தீன்
செயலாளர் நாயகம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்.

இலவன்குளப்பாதையைபுனரமைத்துமீண்டும்திறந்துவிடுங்கள் – பாராளுமன்றத்தில்அமைச்சர்ரிஷாட்கோரிக்கைசதிமுயற்சியினால்இடைநிறுத்தப்பட்டஇலவன்குளப்பாதையைபுனரமைத்துமீண்டும்திறந்துவிடுங்கள்பாராளுமன்றத்தில்அமைச்சர்ரிஷாட்கோரிக்கை
-ஊடகப்பிரிவு
சுயநலம்கொண்டவர்களின்சதிமுயற்சியினால்இடைநிறுத்தப்பட்டபுத்தளம்இலவன்குளப்பாதையைமீண்டும்புனரமைக்கநடவடிக்கைஎடுத்துகொழும்புபுத்தளம் - சங்குபிட்டிவழியாகயாழ்ப்பாணத்திற்குசெல்லும்மக்களின்பயணத்தைஇலகுபடுத்துமாறுஅமைச்சர்ரிஷாட்பதியுதீன்இன்று (23)மாலைபாராளுமன்றில்கோரிக்கைவிடுத்தார்.
அமைச்சர்களானலக்ஷ்மன்கிரியெல்ல, மகிந்தசமரசிங்கஆகியோரின்அமைச்சின்கீழானகுழுநிலைவிவாதத்தில்அவர்உரையாற்றும்போதேஇந்தக்கோரிக்கையைவிடுத்தார்.
இலவன்குளப்பாதையைபுனரமைப்பதன்மூலம்சுமார் 120கி. மீற்றர்பயணத்தூரத்தில்குறைவுஏற்படுகின்றது. இதன்மூலம்மக்களுக்குநன்மைஏற்படுவதுடன்நாட்டின்பொருளாதாரமேம்பாட்டிற்கும்அதுஉதவுமெனஅமைச்சர்கூறினார்.
பாராளுமன்றத்தில்அமைச்சர்ரிஷாட்உரையாற்றும்போதுமேலும்கூறியதாவது,
உயர்கல்வி, மற்றும்வீதிஅபிவிருத்திஅமைச்சர்லக்ஷ்மன்கிரியெல்லவைஎன்அரசியல்வாழ்வில்நான்ஒருபோதுமேமறக்கமுடியாது. அவர்தனதுஅமைச்சுக்களைதிறம்படநடாத்திவருகிறார். இலங்கையின்பாதைஅபிவிருத்தியில்அவர்மேற்கொண்டுள்ளபணிகள்பாராட்டத்தக்கது.
நமதுநாட்டின்பல்கலைக்கழகங்களில்முஸ்லிம்மாணவர்கள்சிலஇடர்பாடுகளைசந்தித்தபோதுஅந்தமாணவர்களின்பிரதிநிதிகளைகொழும்பில்அவரதுஅமைச்சுக்குஅழைத்துநாங்கள்குறைபாடுகளைவெளிப்படுத்திகலந்துரையாடியபோதுபல்கலைக்கழகஉபவேந்தர்களையும்அங்குவரவழைத்துஅவற்றுக்கானதீர்வைப்பெற்றுத்தந்தார். அத்துடன்தென்கிழக்குபல்கலைக்கழகத்தில்பொறியியல்பீடம்மூடப்படும்அபாயம்ஏற்பட்டபோதுஅந்தவிடயத்தைநாம்அவரிடம்சுட்டிக்காட்டியபோதுஅதற்கும்தீர்வைப்பெற்றுத்தந்துபொறியியல்பீடத்தைதொடர்ந்தும்இயங்கவழிசெய்தார். இவற்றைநான்நன்றியுணர்வுடன்இங்குநினைவுகூர்கின்றேன்.
புத்தளம்மாவட்டம்மீனவத்தொழிலைபெரிதும்நம்பியிருக்கும்மாவட்டம். எனவேநவீனமீன்பிடித்தொழிலைஊக்குவிப்பதற்குஏதுவாகவயம்பபல்கலைக்கழகத்தில்கடற்றொழில்நீரியல்வளபீடமொன்றைஉருவாக்குமாறுவேண்டுகோள்விடுக்கின்றேன். இந்தமாவட்டத்தின்கற்பிட்டி, கண்டக்குடா, ரெட்பானா, பள்ளிவாசல்துறை, முசல்பிட்டி, முதலைப்பாளி, ஆளங்குடாபோன்றகடற்கரைப்பிரதேசங்களைமையப்படுத்திஇந்தப்பீடத்தைஅமைக்குமாறுவேண்டுகிறேன். இதனால்மீனவத்தொழிலில்ஒருநவீனமாற்றத்தைகாணமுடியுமெனநம்புகின்றேன். அதேபோன்றுபுத்தளம்மாவட்டத்தில்சுற்றுலாத்துறைக்குப்பேர்போனகற்பிட்டியைமையமாகக்கொண்டுவயம்பபல்கலைக்கழகத்தின்சுற்றுலாமற்றும்விருந்தோம்பும்பண்புகல்விப்பீடத்தைஆரம்பித்துசுற்றுலாத்துறையைமென்மேலும்வளர்ச்சிபெறசெய்வதற்குஉதவுமாறுவேண்டுகிறேன்.
மர்ஹூம்அஷ்ரப்பினால்இனஒற்றுமையைக்கருத்திற்கொண்டுமுன்னாள்ஜனாதிபதிசந்திரிக்காபண்டாரநாயக்காவின்அனுசரணையில்அமைக்கப்பட்டதென்கிழக்குபல்கலைக்கழகம்இன்றுஅந்தபிரதேசமாணவர்களின்உயர்கல்விவளர்ச்சியில்பெரிதும்பங்களித்துவருகின்றது. முன்னாள்உபவேந்தர்களானஎம்எல் காதர், ஹுஸைன்இஸ்மாயில்மற்றும்கலாநிதிஇஸ்மாயில்ஆகியோர்இந்தபல்கலைக்கழகத்தில்சிறந்தகல்விப்பணிசெய்தனர். தற்போதுபேராசிரியர்நாசிம்துணைவேந்தராகபணியாற்றுகின்றார்.  முன்னாள்உபவேந்தர்கலாநிதிஇஸ்மாயிலுக்குகடந்தகாலங்களில்பல்வேறுஅநீதிகள்இடம்பெற்றுள்ளன. இவற்றைநிவர்த்திசெய்துஅவருக்குநீதியைப்பெற்றுக்கொடுக்குமாறுவேண்டுகோள்விடுக்கின்றேன்.
நான்பிரதிநிதித்துவப்படுத்தும்மன்னார்மாவட்டத்திலும்மீன்பிடித்தொழில்மேலோங்கியிருக்கின்றது. எனவேசிறியதீவானமன்னார்மாவட்டகடலோரபிரதேசங்களைமையமாகக்கொண்டுயாழ்பல்கலைக்கழகத்தில்கடற்றொழில்நீரியல்வளபீடமொன்றைஅங்குஅமைக்குமாறும்வேண்டுகின்றேன்.
உயர்கல்விஅமைச்சின்கீழானஇலங்கைஉயர்தொழில்நுட்பகல்விநிறுவனத்தின்கீழ்பல்வேறுகற்கைநெறிகள்பயிற்றுவிக்கப்படுகின்றன. அதேபோன்றுகடற்றொழில்நீரியல்வளகற்கைநெறியொன்றையும்ஆரம்பிப்பதுமிகவும்பொருத்தமானதெனநான்கருதுகின்றேன்.
வவுனியாவில்இருக்கும்பல்கலைக்கழகஉபபிரிவுக்குவேண்டியவசதிகளைசெய்துகொடுக்குமாறும்யாழ்பல்கலைக்கழகவளர்ச்சிக்குமேலும்உதவிகளைநல்குமாறும்இந்தஉயர்சபையில்கேட்கின்றேன்.அதேபோன்றுமுன்னர்ஆரம்பிக்கப்பட்டதுபோன்றுநாட்டின்பலபாகங்களில்பல்கலைக்கழககல்லூரிகளைஅமைக்குமாறும்வேண்டுகின்றேன்.
அமைச்சர்மகிந்தசமரசிங்கவும்தனதுஅமைச்சைமிகவும்சிறந்தமுறையில்மேற்கொண்டுசெல்கின்றார். அவரதுஅமைச்சின்கீழ்வரும்சிலிண்டெக்நிறுவனத்திற்குஅதிகநிதிஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையின்விஞ்ஞானிகள்பலர்பணியாற்றும்இந்தநிறுவனம்எதிர்காலத்தொழில்நுட்பஅறிவைமேம்படுத்துவதற்கானபலநடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளமைமெச்சத்ததக்கதுஎன்றும்அமைச்சர்குறிப்பிட்டார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முன்னேற்றம் குறித்த அபிவிருத்திக் கலந்துரையாடல்
-எம்.வை.அமீர் -


கல்முனை மனித வள அபிவிருத்திக்கான அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் கல்முனை அஷ்ரப்ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்திகட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப்.ரகுமானுக்கும் இடையிலான நட்புறவு ரீதியான அபிவிருத்திக் கலந்துரையாடல் நிகழ்வு 21.11.2016 திங்கட்கிழமை வைத்திய சாலையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி அபிவிருத்திக் கலந்துரையாடல் நிகழ்வில் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சார்பாக அதன் தலைவர் அல்ஹாஜ். எஸ்.அப்துஸ் சமத் செயலாளர் அல்ஹாஜ். எஸ்.எல்.எம்.இப்ராஹீம் மற்றும் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் கல்முனைப் பிராந்தியத்திற்கான  சுகாதார வைத்திய அபிவிருத்திக்கான குழுவின் உறுப்பினர்களான வைத்திய கலாநிதிகள் சிரேஷ்ட வைத்தியர் எம்.எம்.ஜெசீலுல்  இலாஹி, சிரேஷ்ட வைத்தியர் ஏ.எல்.எம். பாரூக், சிரேஷ்ட வைத்தியர் எம்.எச்.எம். ரிஸ்பின், சிரேஷ்ட வைத்தியர் முகம்மது அமீன் போன்றோரும் மற்றும் கல்முனை மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பின் ஏனைய சிரேஷ்ட நிருவாக குழு உறுப்பினர்களும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சார்பாக அதன் வைத்திய அத்தியகட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப்.ரகுமான் மற்றும் அதன் நிருவாக கட்டமைப்பு தலைவர் சிரேஷ்ட வைத்திய கலாநிதி எம்.சி.எம். மாஹிர் மற்றும் ஏனைய வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களும் பங்குகொண்டிருந்தனர்.இந்நிகழ்வில் நிகழ்வில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன

1. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையானது அண்மைக்காலமாக பிராந்திய ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட டெங்கு நோய் பீடிக்கப்பட்ட சிறுவனின் மரணமும் அது தொடர்பிலான உண்மைக்கு புறம்பான செய்திகள், வாதப்பிரதிவாதங்கள் தொடர்பில் மக்களுக்கு யாதர்த்த நிலையை தெளிவுபடுத்தி உண்மையை உலகறியச் செய்யவேண்டியதன் அவசியம்.

2. வைத்தியசாலையைப் பற்றிய பிழையான கருத்துப்பரிமாறல்களும் அதன் அபிவிருத்திக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் விதத்தில் கால்புனர்ச்சியில் சிலர்விடும் அறிக்கைகளுக்கு தக்க பதிலடி வழங்கவேண்டிய அவசியம்.
3.  அம்பாறை மாவட்டத்தின் சிறந்த வைத்தியசாலையாக பெயர் பெற்ற இவ்வைத்தியசாலை இனமத பேதங்களுக்கு அப்பால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருகின்றது குறிப்பிடத்தக்கது இந் நிலையில் அதன் நற்பெயரையும் தரநிர்ணயத்தை உறுதி செய்து மக்களுக்கு தொடர்ச்சியான இன்றியமையாத சேவை வழங்கும் மத்திய கேந்திர நிலையமாக ஆக்குவதற்கான செயற்த்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
4. இப் பிராந்திய மக்களுக்குத் தேவையான விசேட சிகிட்சைப் பிரிவுகளை உருவாக்குதலும் குறிப்பாக நரம்பியல் பிரிவு (Neurology Unit) மற்றும் இருதய சத்திர சிகிட்சைப்பிரிவு (Cardiology Unit), CT Scan Unitஅதற்க்கான நிபுணத்துவமிக்க வைத்திய நிபுணர்களையும் உபகரணங்களையும்  அமைச்சரவை அங்கீகாரத்துடன் கொண்டுவருதல்.
5. வைத்திய சாலையின் அபிவிருத்தியின் சவால்களாக உள்ள விடயங்களை கண்டறிந்து உடன் சீர் செய்தல்
6. வைத்தியசாலையின் அபிவிருத்திக்குத் தடங்கல்களாக உள்ள புறக்காரணிகளை கண்டறிந்து அதை உடன் நிவர்த்தி செய்ய குழு ஒன்றை அமைத்தல்.

7. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்தியின் பங்காளர்களாக பிராந்தியத்தின் பொதுமக்களையும் இணைத்து செயர்ப்படுதல் இந் நிகழ்ச்சித் திட்டத்திற்கு கல்முனை மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பானது தனது பூரண ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் தொடர்ந்து வழங்கும்.

போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு பல்வேறு பட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar