NDPHR முகைதீன் பாவா போதையில் இருந்திருக்க வேண்டும்


ஓய்வுபெறப்போவதை அறிவிக்குமாறு என்னிடம் கூறியவேளை முகைதீன் பாவா போதையில் இருந்திருக்க வேண்டும்! அஹமட் புர்க்கான்
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தலைவர் ஓய்வுபெறப்போவதாக என்னால் வெளியிட்ட கருத்து தவறான தகவல் எனவும் ஊடகங்களை இதுவிடயத்தில் தவறாக பயன்படுத்தியதாக கட்சியின் முன்னாள்தலைவர்- முகைதீன் பாவா அவர்கள் வெளியிட்டுள்ள கருத்தை யாரும் நாம்பவேண்டாம் என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் அஹமட்புர்கான் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கட்டார் நாட்டில் இருந்து தனது தொழில் நிமிர்த்தமான பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய சகோதரர் முகைதீன் பாவா அவர்கள் தனக்கு நெருக்கமான குடும்ப உறவினரான ஐ.தே.க யின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியுடன் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களை இரகசியமாக சந்திந்து அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அமைசின் கீழ் வரும் அரச கூட்டுத்தாபனம் ஒன்றில் உயர் பதவிக்கான நியமனத்தை பெற்று பணியாற்றிவருவது தொடர்பில் கசிந்த விடயத்தின் அடிப்படையில் சகோதரர் முகைதீன் பாவா அவர்களுக்கு எதிராக ஒலுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாக தீர்மானித்து கட்சியின் உயர்சபை அழைப்பும் விடுத்திருந்தது.
NDPHR நிறைவேற்றுக்குழு மற்றும் மத்தி குழுவின் அழைப்பை ஏற்றுவந்த முகைதீன் பாவா அவர்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களுடனும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடனும்  தான் உடன்படிக்கை செய்ததாகவும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியானது தொடர்ந்து வரும் காலங்களில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் (acmc) கட்சியுடன் இணக்க அரசியலில் ஈடுபடும் என தான் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் அவர் கூறியிருந்தார். அதன் போது உயர்சபை உறுப்பினர்களாகிய எங்களிடம் எந்த அறிவிப்பும் விடுக்காமல் இது பற்றி கலந்தாலோசனை செய்யாமல் தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றும் அதிகாரம் சகோதரர் முகைதீன் பாவா அவர்களுக்கு  இல்லையெனவும் அவ்வாறு நடந்து கொண்டது மிகப்பெரிய தவறு எனவும் சகோதரர்  முகைதீன் பாவா அவர்களுக்கு உயர் சபையினர் மிக காரசாரமாக தமது விசனத்தை தெரிவித்தனர்.மேலும் வேறு ஒரு கட்சியுடன் இணையும் போது கூட்டு ஒப்பந்தம், பேச்சுவார்த்தை, இணக்ப்பாடுகள் குறித்து எதுவிதமான கலந்துரையாடல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் குறித்த அமைச்சரையும் அவரது கட்சியையும் பலப்படுத்த தாங்களுடைய சுயநலத்துக்காக ஒட்டுமொத்த கட்சியையும் அடகுவைப்பது கண்டிக்கத்தக்கது எனவும் சுட்டிக்காட்டினர். மட்டுமல்லாமல் கட்சியின் உயர்சபையை புறக்கணித்து தன்னிச்சையாக கட்சியின் கொள்கைக்கு முரணாக சகோதரர் முகைதீன் பாவா அவர்களுக்கு  வழங்கப்பட்ட அந்தஸ்தை தவறாக பயன்படுத்தி செயல்பட்டது தொடர்பில் உயர்சபை ஏக மனதாக முடிவு செய்து சகோதரர் முகைதீன் பாவா அவர்களை கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தியும் இருந்தது. அதுமாத்திரமின்றி கட்சியின் உள்ளக விடயம் என்பதால் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க வேண்டாம் எனவும் கட்சியின் உயர்சபை என்னை கேட்டுக் கொண்டது.
அதன் பிற்பாடு சகோதரர் முகைதீன் பாவா அவர்கள் சிலநாட்களாக கட்சியின் செயற்பாடுகளில் எந்தவிதமான தலையீடும் இன்றி இருந்தார். நெற்று திடீரென்று அதாவது (17.102016) மதியம் 1.43pm அளவில் என்னை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தான் கௌரவமாக கட்சியில் இருந்து நீங்கிக் கொள்ளப்போவதாகவும் தான் ஓய்வு பெறப்போவதாக அறிவிக்குமாறும் என்னை கேட்டுக் கொண்டார்.அதனடிப்படையிலேயே கட்சியின் ஊடகப் பேச்சாளர் என்கிற வகையில் சகோதரர் முகைதீன் பாவா அவர்கள் ஓய்வு பெறப்போவதாக நான் அறிவித்தேன்.
ஆனால், சகோதரர் முகைதீன் பாவா அவர்கள் நான் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல் பிழையானது மறுப்பறிக்கை கொடுத்திருப்பது. அவருடைய நாகரீகம் அற்ற செயற்பாடாகவே கருதவேண்டி இருக்கிறது. அல்லது எனக்கு தொலைபேசி மூலம் கதைத்த நேரம் அவர் போதையில் இருந்திருக்க வேண்டும்.
என்னிடம் அவ்வாறு கூறிவிட்டு பின்னர் நான் கூறவில்லை என்ற அவரது பொய்யான குற்றச்சாட்டானது. ஊடகங்களும்  பொதுமக்களும் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சீர் குழைத்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி தான் செய்த முரணான காரியத்தை நியாப்படுத்து அவரின் பச்சோந்தி அரசியல் செயல்பாடாகவே நோக்க வேண்டிய நிலை எங்கள் உருவாகியுள்ளது.
எனவே பொதுமக்களின் முன் இப்படியான சுய நல அரசியல் செய்பவர்களை எங்கள் கட்சிக்குள் இருப்பவராக இருந்தாலும் அவர் கட்சியின் தலைவராகவே இருந்தாலும் மக்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்த தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஒருபோதும் பின்னிக்காது எனவும் மக்கள் இப்படிபட்டவர்களிடம் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். மட்டுமின்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸோடு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இணைந்து எச்சந்தர்ப்பத்திலும் செயற்படவில்லை எனவும் எதிர்காலத்தில் அப்படி இணைந்து செயற்படும் எண்ணம் எமக்கு இல்லை எனவும் திட்டவட்டமாக கூறிக்கொள்கிறேன் என்றார்.

Comments

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்