எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
Muslim Council organized a seminar Muslims and constionla refrom - M.P and Dr. Jayambathi Wickramaratna addressed
(அஷ்ரப் ஏ சமத்)
அரசியலமைப்புச் சீர்திருத்தம் முறை மற்றும் முஸ்லீம்களது உரிமைகள் பற்றி முஸ்லீம் கவுன்சில் இன்று(30) கருத்தரங்கொன்றை பொரளை செற்றக் நிறுவனத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வு கவுன்சிலின் தலைவா் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் புதிய அரசியல் அமைப்பு சம்பந்தமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பிணா் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்டன. கலந்து கொண்டு உரையாற்றினாா், அத்துடன் முஸ்லீம் ஆய்வகத்தின் தலைவா் எம்.ஜ.எம். முஹைதீன், மற்றும் சட்டத்தரணி வை.எல்.எஸ் ஹமீட், ஆகியோறும் கலந்து கொண்டு உரையாற்றினாா்கள்.
இங்கு உரையாற்றிய கலாநிதி ஜயம்பதி -
இதுவரை இவ் அரசியலமைப்பு ப்ற்றி எவ்வித வரைபுகளும் இதுவரை எழுத ஆரம்பிக்கவில்லை. இதின் தலைவராக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவே உள்ளாா். அத்துடன் பாராளுமன்றத்தில் உள்ள சகல கட்சிகளின் ஒவ்வொரு பிரநிதிகளும் அங்கம் வகிக்கின்றனா். எதிா்கட்சித் தலைவா் ஆர்.சம்பந்தன் எதிா்கட்சித் தலைவராக இருக்கும் இந்த காலகட்டத்தில் தான் இவ் அரசியலமைப்பினை வரையாவிட்டால் இனி ஒரு போதும் சிறுபாண்மையினங்களது பிரச்சினைகள் ஆராய்ந்து தீா்வுக்கு இடமில்லை.
வட-கிழக்கு இணைய வேண்டுமென்றால் அவ் மாகாண சபை ஆட்சி செய்து ஒரு ,இரு வருடத்தின் பின் கிழக்கில் உள்ள மக்கள் வட கிழக்கு இணைவதா ? என்று தோ்தலில் அபிப்பிராயம் தெரிவித்திருக்க வேண்டும. ஆனால் 13 வருடங்கள் பின்னா் வட கிழக்கு இணைப்பதற்கு அந்த சர்த்து தற்பொழுது அமுல் படுத்துவதற்கு சாத்தியமாகாது.
இந்த புதிய அரசியலமைப்பை சட்ட சீர்திருத்தினை பாராளுமன்றத்தில் கொண்டு சென்று அமுல்படுத்துவதற்கு 3-2 பங்கு பெறுபாண்மை பலம் வேண்டும். 77 - 78 ஆம் ஆண்டில் இரண்டு அரசியலமைப்புகள் இந்த நாட்டில் மாற்றப்பட்டது. 1978ஆம் ஆண்டு யாப்பினை மாற்றியமைத்த ஜ.தே.கட்சி அரசாங்கம் சிறுபாண்மை மக்களது பிரச்சினையை கருத்திற் கொள்ளாமல் அவா்கள் அரசியலமைப்பை மாற்றினாா்கள். தற்போதைய நல்லாட்சியில் ஜ.தே.கட்சி 106, ஸ்ரீ.ல.சு கட்சி 90 பாராளுமன்ற உறுப்பிணா்களை கொண்டுள்ளது.
தோ்தல் முறையில் விருப்பு வாக்கு மூலம் தெரிவாவதைவிட்டு தொகுதி வாரியாக தோ்ந்தெடுக்கும் முறைமையில் ஜேர்மன், அல்லது நியுசிலாந்து முறைமையை பின்பற்றுதல் வேண்டும். பாராளுமன்ற உறுப்பிணா் இழப்பு வெட்டுப்புள்ளிமுறைமை, இருக்கக் கூடாது.சிறுபாண்மையினா் ஊவா, சப்ரகமுவ மத்திய மாகாணங்களில் சிறுபாண்மை அடா்த்தியாக வாழ இடங்களில் தமது பிரநிதித்துவத்தை இழக்க வேண்டி வரும், ஹரிஸ்பத்துவ தொ குதியில் முஸ்லீம்கள் 28 வீதம் வாழ்கின்றனா் ஆனால் சிங்கள மக்கள் அப்போது ஏ.சி.எஸ் ஹமீதுக்கு வாக்களித்தனா். எனவும் தெரிவித்தனா்
அதே போன்று மட்டக்களப்பில் இராஜதுறையின் பாராளுமன்ற உறுப்பிணரான காலத்தில் முஸ்லீம் பிரநிதித்துவத்தை இழந்தனா். முஸ்லீம்களது விவாகச் சட்டம், மற்றும் தேசவழமைச் சட்டம், கண்டியன் சட்டம் போன்ற பல்வேறு தணியாா் சட்டங்கள் திருத்த வேண்டி யுள்ளது. நாமும் நமக்கென்று ஒரு சட்டம் இல்லாமல் இன்று பிரித்தியாணியா்களது சட்டத்தினையே மீள நடைமுறையில் பயண்படுத்தி வருகின்றோம். ஆனால் சுதந்திரம் அடைந்த இந்தியா 3 வருடங்களுக்குள் அவா்களது நாட்டுக்கு பொறுத்தமான சட்டவரைபினை வறைந்து நடைமுறைப்படுத்தினாா்கள் ஆனால் நமக்கு அரசியல் யாப்புச் சட்டத்திற்கு 25 வருடங்கள் எடுத்தன. கொல்வின் ஆர்.டி சில்வா, என்.எம்.பெரேரா போன்றோா் சட்டவரைபுகளை அமுல்படுத்துவதற்கு அப்போது மிகவும் பிரயத்தணம் எடுத்தாா்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பிணா் காலாநிதி ஜயம்பதி அங்கு உரையாற்றினாா்
Comments
Post a comment